search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்ட போக்கோ F5 இந்தியாவில் அறிமுகம்!
    X

    அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்ட போக்கோ F5 இந்தியாவில் அறிமுகம்!

    • 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் போக்கோ F5 ஸ்மார்ட்போன் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
    • போக்கோ F5 மாடல் 2 ஒஎஸ் அப்டேட்கள், 3 ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது.

    போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ F5 ஸ்மார்ட்போனினை நேற்று (மே 9) அறிமுகம் செய்தது. போக்கோ நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த F4 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய போக்கோ F5 மாடலில் 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை போக்கோ F5 பெற்றுள்ளது. புகைப்படங்களை எடுக்க போக்கோ F5 மாடலில் 64MP பிரைமரி கேமரா, OIS, 2x இன் சென்சார் லாஸ்லெஸ் ஜூம், 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் போக்கோ F5 ஸ்மார்ட்போன் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 ஒஎஸ் அப்டேட்கள், 3 ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என்று போக்கோ அறிவித்து இருக்கிறது.

    போக்கோ F5 அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் OLED டிஸ்ப்ளே, 30/60/90/120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 725 580MHz GPU

    8 ஜிபி / 12 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் MIUI4

    டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ லென்ஸ்

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் IP53

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போக்கோ F5 ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக், சேண்ட்ஸ்டார்ம் வைட் மற்றும் எலெக்டரிக் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 16 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

    Next Story
    ×