என் மலர்
மொபைல்ஸ்

ரெட்மி ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் தள்ளுபடி - புதிய விலை எவ்வளவு தெரியுமா?
- ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் LCD, Full HD+ ஸ்கிரீன் உள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 11 மாடல் தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது விலை குறைப்பை தொடர்ந்து ரெட்மி 11 பிரைம் மாடல் ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது. ரெட்மி 11 பிரைம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என்று இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.
சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாக Mi ஸ்டோரில் ஐசிஐசிஐ வங்கி கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 2500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போனை ரூ. 8 ஆயிரத்து 499 விலையிலேயே வாங்கிட முடியும்.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் LCD ஸ்கிரீன், Full HD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், P2i கோட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இவைதவிர மெமரி கார்டு ஸ்லாட், ஐஆர் பிலாஸ்டர், 3.5mm ஹெட்போன் ஜாக், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 வழங்கப்பட்டு இருக்கிறது.






