search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஆண்ட்ராய்டு 14 - எந்தெந்த போன்களுக்கு கிடைக்கும் தெரியுமா?
    X

    அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஆண்ட்ராய்டு 14 - எந்தெந்த போன்களுக்கு கிடைக்கும் தெரியுமா?

    • கூகுள் நிறுவனம் நேற்று நடத்திய I/O 2023 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.
    • கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கூகுள் நிறுவனத்தின் I/O 2023 நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்று ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ். ஆனால் இதை பற்றி கூகுள் பெரிதாக எதையும் கூறவில்லை. மாறாக புதிய ஒஎஸ் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று மட்டும் அறிவித்தது. இதோடு ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் சில அம்சங்கள் பற்றி அறிவித்தது. புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.

    பின் ஏப்ரல் மாதம் இந்த ஒஎஸ்-இன் முதல் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டது. தற்போது தகுதியுடைய ஸ்மார்ட்போன்களில் இதனை பயனர்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம். அந்த வகையில் ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் சில அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். மேலும் எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் இது வழங்கப்படும் என்றும் பார்ப்போம்.

    ஆண்ட்ராய்டு 14 அம்சங்கள்:

    மேஜிக் கம்போஸ்: மெசேஞஸ் பை கூகுள் செயலியில் வழங்கப்படும் புதிய அம்சம் இது. இதனை பயன்படுத்தி பயனர்கள், தங்களது உரையாடல்களை அழகாக்க முடியும். பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு ஏற்ற பதில்களை இந்த அம்சம் பரிந்துரை செய்யும். மேலும் மேஜிக் போன்று அவற்றை மாற்றவும் செய்யும்.

    ஃபைண்ட் மை டிவைஸ்: ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் செய்யப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது. இதை கொண்டு ஹெட்போன்கள், டேப்லட்கள் மற்றும் பல்வேறு சாதனங்களை கண்டறிய வைக்க முடிவு செய்துள்ளது. இதை கொண்டு பயனர்கள் பல்வேறு சாதனங்களை டிராக் செய்வதோடு, அவற்றை பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். வேறு யாரும் டிராக் செய்தாலும், எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த அம்சம் அப்டேட் செய்யப்படுகிறது.

    லாக் ஸ்கிரீன் கஸ்டமைசேஷன்: ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் பயனர்கள் தங்களது லாக் ஸ்கிரீனை புதிய ஷாட்கட்கள் மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட கடிகாரங்களை கொண்டு கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களின் கைப்பேசியை சுவாரஸ்யமானதாக மாற்றலாம். இத்துடன் பயனர்கள் மோனோக்ரோமடிக் கலர் பயன்படுத்தி பார்க்கலாம். இதனை விரும்புவோர் போனின் இண்டர்ஃபேஸ் முழுக்க செட் செய்துகொள்ளலாம்.

    எமோஜி: எமோஜி வால்பேப்பர் கொண்டு அதிகபட்சம் 14 வித்தியாசமான எமோஜி, ஏராளமான பேட்டன்கள் மற்றும் நிறங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தனித்துவம் மிக்க வால்பேப்பரை ஹோம் மற்றும் லாக் ஸ்கிரீனில் செட் செய்து கொள்ளலாம். இதில் பயன்படுத்தப்படும் எமோஜிக்களை தொடும் போது அவை பாவணைகளை வெளிப்படுத்தும்.

    சினிமேடிக் வால்பேப்பர்கள்: சினிமேடிக் வால்பேப்பர் அம்சம் கொண்டு பயனர்கள் எவ்வித போட்டோக்களையும் 3டி படமாக மாற்றி, மோஷன் எஃபெக்ட்களை வழங்க முடியும். பின் இவற்றை பேக்கிரவுண்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்பார்கில் ஐகான் பட்டனை க்ளிக் செய்து பாரலாக்ஸ் எஃபெக்ட்-ஐ புகைப்படங்களுக்கு கொடுக்கலாம்.

    ஆண்ட்ராய்டு 14 பீட்டா பில்டுகளை பெற இருக்கும் ஸ்மார்ட்போன்கள்:

    சியோமி 12T, சியோமி 13, சியோமி 13 ப்ரோ, சியோமி பேட் 6

    விவோ X90 ப்ரோ

    டெக்னோ கேமான் 20 சீரிஸ்

    ரியல்மி

    ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப்

    ஒன்பிளஸ் 11

    நத்திங் போன் 1

    லெனோவோ டேப் எக்ஸ்ட்ரீம்

    ஐகூ 11

    Next Story
    ×