என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஃபிரெஷ்-ஆக புது நிறத்தில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி S23
    X

    ஃபிரெஷ்-ஆக புது நிறத்தில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி S23

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

    சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய லைம் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிளாக்ஷிப் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன்- கிரீம், கிரீன், லாவண்டர் மற்றும் ஃபேண்டம் பிளாக் என்று நான்குவித நிறங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் புதிதாக லைம் நிறத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அதன்படி விரைவில் கேலக்ஸி S23 லைம் நிற வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதை சேர்க்கும்பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் மொத்தத்தில் ஐந்து நிறங்களில் கிடைக்கும்.

    ஃபிளாக்ஷிப் தர அம்சங்களை கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி, 6.1 இன்ச் Full HD+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலையை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கேலக்ஸி S23 புதிய லைம் நிற வேரியண்டின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.

    Next Story
    ×