search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி - ப்ளிப்கார்ட் விலை எவ்வளவு தெரியுமா?
    X

    சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி - ப்ளிப்கார்ட் விலை எவ்வளவு தெரியுமா?

    • கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் ரூ. 84 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
    • ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங்ஸ் டேஸ் சேல் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனையில் ஏராளமான சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள், தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

    2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போன் ரூ. 84 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் ரூ. 84 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி வெர்ஷன் விலை ரூ. 88 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    தற்போது இதன் பேஸ் 128 ஜிபி வெர்ஷன் ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. இத்துடன் எஸ்பிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனை சேர்க்கும் பட்சத்தில் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலை ரூ. 42 ஆயிரத்து 649 என்று மாறிவிடும்.

    2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 சாம்சங் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஃப்ளிப் போன் ஆகும். பிரீமியம் மடிக்கக்கூடிய சாதனமாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலுக்கு அப்போது வேறு எந்த ஸ்மார்ட்போனும் மாற்றாக விற்பனைக்கு கிடைக்கவில்லை. இன்று இந்த ஸ்மார்ட்போனிற்கு ஒப்போ, விவோ போன்ற பிராண்டுகளின் மாடல்கள் போட்டியாக உள்ளன.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலில் 6.7 இன்ச் FHD+ டைனமிக் 2X AMOLED இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், 1.9 இன்ச் AMOLED ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர், அட்ரினோ 660 GPU, 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 10MP செல்ஃபி கேமரா, 3300 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×