search icon
என் மலர்tooltip icon

    கணினி

    இணையத்தில் லீக் ஆன பிக்சல் வாட்ச் 2 விவரங்கள்!
    X

    கூகுள் பிக்சல் வாட்ச் - கோப்புப்படம்

    இணையத்தில் லீக் ஆன பிக்சல் வாட்ச் 2 விவரங்கள்!

    • பிக்சல் வாட்ச் 2 மாடலில் சாம்சங் நிறுவனத்தின் எக்சைனோஸ் 9110 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
    • கூகுள் I/O 2023 நிகழ்வில் பிக்சல் 8 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் 2 மாடல்களின் பிரிவியூ வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேட் பை கூகுள் நிகழ்வில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. தற்போது கூகுள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய பிக்சல் வாட்ச் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் பிக்சல் 8 சீரிஸ் வெளியீட்டின் போதே அறிவிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    புதிய பிக்சல் வாட்ச் 2 மாடலில் சாம்சங் நிறுவனத்தின் எக்சைனோஸ் 9110 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக பிக்சல் வாட்ச் மாடலுக்கான டீசர் கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்தது. அதன்படி அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் பிக்சல் 8 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் 2 மாடல்களின் பிரிவியூ வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    கூகுள் பிக்சல் வாட்ச் - கோப்புப்படம்

    கூகுள் பிக்சல் வாட்ச் 2 மாடல் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ வெளியீட்டுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி வாட்ச் மாடலில் வழங்கப்பட்டு இருந்த சாம்சங் எக்சைனோஸ் 9110 பிராசஸர் புதிய பிக்சல் வாட்ச் 2 மாடலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் ஸ்மார்ட்வாட்ச்-க்கு நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும்.

    மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், பிக்சல் 7a கடந்த சில நாட்களுக்கு முன்பே இபே வலைதளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×