search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    வேற லெவல் அம்சங்களுடன் விரைவில் இந்தியா வரும் ஒப்போ F23 ப்ரோ 5ஜி
    X

    வேற லெவல் அம்சங்களுடன் விரைவில் இந்தியா வரும் ஒப்போ F23 ப்ரோ 5ஜி

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஒப்போ நிறுவனம் பல்வேறு புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றிருந்த ஒப்போ A98 ஸ்மார்ட்போனும் இதில் அடங்கும். இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் புதிய F23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒப்போ F23 ப்ரோ 5ஜி மாடல் இந்தியாவில் மே 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ. 25 ஆயிரம் அல்லது ரூ. 26 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எத்தனை வேரியண்ட்களில் கிடைக்கும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் F23 மாடல் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. எனினும், இது நடைபெறவேயில்லை.

    ஒப்போ F23 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ F23 ப்ரோ 5ஜி மாடலில் 6.72 இன்ச் LCD ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, 580 நிட்ஸ் பிரைட்னஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 64MP பிரைமரி கேமரா, இரண்டு 2MP லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போனை அதிவேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×