search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன் - இன்ஃபினிக்ஸ் அசத்தல்
    X

    ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன் - இன்ஃபினிக்ஸ் அசத்தல்

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது.
    • புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் 7 HD ஸ்மார்ட்போன் இந்திய சந்தையின் எண்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 HD மாடலில் 1612x720 பிக்சல் ரெசல்யுஷன் கொண்ட 6.6 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, அதிகபட்சம் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் உள்ள வேவ் பேட்டன் டிசைன் அழகிய தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 196 கிராம் எடை, 8.65mm தடிமனாக உள்ளது. புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 HD மாடலில் ஆக்டா கோர் ஸ்பிரெட்ரம் SC9863A1 பிகாசஸர், 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 2 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12 மற்றும் கேம் மோட், ஐ கேர், ஏஐ கேலரி, வீடியோ அசிஸ்டண்ட், சோஷியல் டர்போ என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 HD அம்சங்கள்:

    6.6 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, அதிகபட்சம் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

    ஆக்டா கோர் ஸ்பிரெட்ரம் SC9863A1 பிராசஸர்

    2 ஜிபி ரேம், 2 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12

    8MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், டூயல் எல்இடி ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    வைபை, ப்ளூடூத் 4.2

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 HD மாடல் பிளாக், ஜேட் வைட், கிரீன் ஆப்பிள் மற்றும் சில்க் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 5 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அறிமுக சலுகையாக புதிய ஸ்மார்ட் 7 HD மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 5 ஆயிரத்து 399 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை மே 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது.

    Next Story
    ×