என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஐபோனில் உள்ளதை போன்ற டிஸ்ப்ளே - வேற லெவலில் உருவாகும் சாம்சங் ஃபோல்டபில் போன்?
    X

    ஐபோனில் உள்ளதை போன்ற டிஸ்ப்ளே - வேற லெவலில் உருவாகும் சாம்சங் ஃபோல்டபில் போன்?

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல்.
    • புதிய கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி Z ஃப்ளிப் 5 ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி புதிய கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் தாக்கத்திற்கு சவால் விடும் வகையில் மேம்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் ஸ்மார்ட்போன் லாக் ஸ்கிரீனில் நேரம், விட்ஜெட்கள் மற்றும் வால்பேப்பரை குறைந்த பிரைட்னசில் காண்பிக்கும்.

    கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் இந்த ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் குறைந்தபட்சம் 1Hz ரிப்ரெஷ் ரேட்டில் இயங்கும். இதன் காரணமாக லோ-பவர் மோடிலும் இந்த அம்சம் இயங்கும். பயனர் ஸ்மார்ட்போனை லாக் அல்லது அப்படியே வைத்தல், சிறிது நேரத்தில் இந்த அம்சம் லாக் ஸ்கிரீன் வால்பேப்பர் பிரைட்னசை குறைத்து நேரம், கடிகாரம் அல்லது எந்த விட்ஜெட்டையும் காண்பிக்கும்.

    ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மோட் மூலம் பயனர்கள் வால்பேப்பரை மறைத்துக் கொண்டு, நோட்டிஃபிகேஷன்களை செயலிழக்க செய்யலாம். முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களில் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் 25 வாட் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்றுவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

    Next Story
    ×