என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • வி நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை பயனர்களுக்கு தினசரி டேட்டா பலன்களை வழங்குகிறது.
    • 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய வி சலுகை சற்றே குறைந்த விலையில் கிடைக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இடையே வி நிறுவனம் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக வி நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கனிசமாக குறைந்து கொண்டே வருகிறது.

    இதனிடையே போட்டியை எதிர்கொள்ளும் வகையில், வி நிறுவனம் தற்போது புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 181 விலையில் கிடைக்கும் புதிய பிரீபெயிட் சலுகை தினசரி பலன்களை வழங்குகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகையுடன் கூடுதலாக இதனை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது அதிக டேட்டா பெற முடியும்.

     

    வி நிறுவனத்தின் புதிய ரூ. 181 பிரீபெயிட் சலுகை 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் மறுநாள் தான் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஏற்கனவே ரிசார்ஜ் செய்த சலுகையில் அன்றாட டேட்டாவை விரைந்து தீர்ப்போருக்காக புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ரூ. 181 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா தவிர வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. முன்னதாக வி நிறுவனம் டேட்டா, வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கும் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருந்தது. இவற்றின் விலை முறையே ரூ. 289 மற்றும் ரூ. 429 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    • ஐஃபால்கன் பிராண்டின் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதி கொண்டுள்ளது.
    • புதிய ஐஃபால்கன் ஆண்ட்ராய்டு டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டிசிஎல் நிறுவனத்தின் ஐஃபால்கன் பிராண்டு இந்திய சந்தையில் புதிதாக 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மூன்று புறமும் பெசல் லெஸ் டிசைன், வைடு வியூவிங் அனுபவம் வழங்குகிறது.

    மேலும் இதில் HDR, டைனமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் அல்காரிதம், 24 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவாட் கோர் 64-பிட் பிராசஸர், G31MP2 GPU, 1 ஜிபி ரேம், 8 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது.

     

    ஐஃபால்கன் S53 அம்சங்கள்:

    32 இன்ச் 1366x768 பிக்சல் FHD LED ஸ்கிரீன், HDR 10

    குவாட்கோர் 64-பிட் பிராசஸர்

    G31MP2 GPU

    1 ஜிபி ரேம்

    8 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு டிவி 11

    வாய்ஸ் ரிமோட்

    வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0

    2x HMDI 2.0 (1xARC), 1x USB, S/PDIF

    AV இன்புட், 1x ஈத்தர்நெட்

    24 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டால்பி ஆடியோ

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐஃபால்கன் S53 32 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இந்த டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகை, அதிகபட்சம் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அசத்தலான வங்கி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போனுடன் நார்ட் பட்ஸ் 2 மாடலை சில நாட்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் நார்ட் CE 2 லைட் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 11 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனிற்கு வங்கி தள்ளுபடி அறிமுக சலுகையாக வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய நார்ட் CE 3 லைட் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரத்து 999 மதிப்புள்ள ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் CE இலவசமாக வழங்கப்படும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.

     

    ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் அறிமுக சலுகைகள்:

    ஒன்பிளஸ் வலைதளம், அமேசான், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பார்ட்னர் ஸ்டோர்களில் புதிய நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் CE இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் மாடலை ஒன்பிளஸ் வலைதளம் அல்லது ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்-இல் ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வாங்குவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வாங்கும் போது ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேஸ்டல் லைம் மற்றும் க்ரோமேடிக் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கார்டு, மாத தவணை மற்றும் நெட் பேங்கிங் பயன்படுத்தும் போது ரூ. 1000 வங்கி தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.

     

    ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி அம்சங்கள்:

    6.72 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 3048/50/60/90/120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13.1

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • போக்கோ நிறுவனத்தின் புதிய போக்கோ C சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    • போக்கோ C51 ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய போக்கோ C51 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போக்கோ C51 மாடலில் 6.52 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை கூடுதலாக விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. போக்கோ C51 மாடலின் பின்புறம் லெதர் போன்ற டிசைன், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

    போக்கோ C51 அம்சங்கள்:

    6.52 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர்

    IMG PowerVR GE8320 GPU

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன்

    டூயல் சிம் ஸ்லாட்

    8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    டெப்த் கேமரா

    5MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ

    பின்புறம் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய போக்கோ C51 ஸ்மார்ட்போன் பவர் பிளாக் மற்றும் ராயல் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏப்ரல் 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ. 700 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதுதவிர அறிமுக சலுகையாக போக்கோ C51 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையின் போது ரூ. 7 ஆயிரத்து 799 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    • இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
    • இந்தியா பிரீமியம் ஸ்மார்ட் டிவி பிரிவில் சோனி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    இந்திய ஸ்மார்ட் டிவி சந்தை கடந்த ஆண்டில் மட்டும் 28 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மூன்றாவது காலாண்டு வாக்கில் பண்டிகை காலத்தை ஒட்டி பல்வேறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டதே விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என ஆய்வு நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் தெரிவித்து இருக்கிறது.

    இதுதவிர குறைந்த விலையில் கிடைக்கும் பெரிய அளவிலான டிவி மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பும் விற்பனை வளர்ச்சிக்கு காரணம் ஆகும். டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் பண்டிகை கால விற்பனைக்கு பின் ஸ்மார்ட் டிவி விற்பனை வருடாந்திர அடிப்படையில் இரண்டு சதவீதமாக இருந்தது. 2022 ஆண்டு ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்துள்ளது. ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் 11 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

     

    சியோமியை தொடர்ந்து சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் போன்ற பிராண்டுகள் வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் அடுத்தத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 2022 ஆண்டில் ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் பிராண்டுகள் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதுதவிர சோனி நிறுவனம் பிரீமியம் பிரிவில் பலரும் தேர்வு செய்யும் பிராண்டாக உள்ளது.

    2022 ஆண்டில் மட்டும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களில் 99 சதவீத யூனிட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். சில பிராண்டுகளின் உயர் ரக ஸ்மார்ட் டிவி மாடல்கள் மட்டுமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களில் 96 சதவீதம் எல்இடி டிவிக்கள் ஆகும், இவற்றில் பெரும்பாலும் மீடியாடெக் சிப்செட்களே வழங்கப்பட்டுள்ளன.

    டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் சியோமி, சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் உள்ளிட்டவை ஸ்மார்ட் டிவி சந்தையில் 42.6 சதவீத பங்குகளை பெற்றுள்ளன.

    • டுவிட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லோகோ சில நாட்களுக்கு முன் அதிரடியாக மாற்றப்பட்டது.
    • டாகி-காயினில் இருந்து தற்போது டுவிட்டர் லோகோ மீண்டும் பழைய லோகோவிற்கே மாற்றப்பட்டு விட்டது.

    டுவிட்டர் நிறுவனத்தின் நீலப் பறவை லோகோ சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்டது. அனைவருக்கும் நன்கு பழகிப் போன டுவிட்டர் லோகோ டாகி-காயின், அதாவது ஷிபா இனு லோகோ-வாக மாற்றப்பட்டது. தற்போது டாகி-காயினுக்கு பதில் மீண்டும் பழையபடி நீலப் பறவை லோகோ மாற்றப்பட்டுவிட்டது. அடிக்கடி டுவிட்டர் லோகோ மாற்றப்படுவதற்கான கராணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    டாகி-காயின் முதலீட்டாளர்கள் எலான் மஸ்க்-கிற்கு எதிரான வழக்கு தொடர்ந்ததே இந்த முடிவுக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. முட்டாள்கள் தினத்தை ஒட்டி எலான் மஸ்க் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எந்த காரணமாக இருந்த போதிலும், டுவிட்டர் தளத்தில் தற்போது மீண்டும் நீலப் பறவை லோகோ வழங்கப்பட்டு விட்டது. டுவிட்டரை ரிலோட் செய்யும் போது பழையபடி நீலப் பறவை லோகோ திரையில் தோன்றுகிறது.

     

    சில நாட்களுக்கு முன்பு தான் டுவிட்டர் நிறுவன லோகோ மாற்றுவதவாக எலான் மஸ்க் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். டுவிட்டர் லோகோவுக்கு மாற்றாக டாகி-காயின் லோகோ இடம்பெற்றது. மூன்று நாட்களுக்கு டுவிட்டர் லோகோ டாகி-காயினாக இருந்த நிலையில், தற்போது டுவிட்டர் தளத்தில் மீண்டும் நீலப் பறவை லோகோ காணப்படுகிறது. டுவிட்டர் தளத்தின் லோகோ அதன் வெப் வெர்ஷனில் மட்டுமே மாற்றப்பட்டது.

    டுவிட்டர் மொபைல் வெர்ஷனில் நீலப் பறவை லோகோ மாற்றப்படாமலேயே இருந்தது. டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து, இதனை லாபகரமாக மாற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க். தற்போது அதன் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாக குறைந்துவிட்டது.

    • மசாஜ் செய்யும் போது இந்த அம்சம் கொண்டு மனதை இளைப்பாறச் செய்யும் இசையை கேட்டு அனுபவிக்கலாம்.
    • போன் கண்டக்ஷன் தொழில்நுட்பம் அதிக தெளிவான ஆடியோவை மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாமல், கேட்க செய்கிறது.

    ஹூவாய் நிறுவனம் பிலிப்ஸ் ஸ்மார்ட் ஐ மசாஜரை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐ மசாஜர் அதிநவீன விப்வேவ் வைப்ரேஷன் வேவ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த மசாஜரில் 14 பெரிய காண்டாக்ட்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் நுன்னிய அதிர்வுகளை ஏற்படுத்தும் மைக்ரோ-வைப்ரேஷன் மோட்டார் உள்ளது. இவை கண்களை சுற்றி முழுமையான மசாஜ் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.

    பிலிப்ஸ் ஸ்மார்ட் ஐ மசாஜரில் ஹாட் கம்ப்ரெஸ் அம்சம் உள்ளது. இது கண்களின் வடிவம் கொண்ட இரண்டு மெட்டல் மசாஜ் ஹெட்களை கொண்டு கண்களை சுற்றி வெப்பத்தை பாய்ச்சும். இந்த வழிமுறை மென்மையான வெப்பம் மற்றும் சவுகரியமான மசாஜை வழங்குகிறது. இந்த மசாஜரில் உள்ள போன் கன்டக்ஷன் தொழில்நுட்பம் மண்டை ஓடு வழியே ஒலியை பாச்சுகிறது. மசாஜ் செய்யும் போது இந்த அம்சம் கொண்டு மனதை இளைப்பாறச் செய்யும் இசையை கேட்டு அனுபவிக்கலாம்.

     

    இதன் போன் கண்டக்ஷன் தொழில்நுட்பம் அதிக தெளிவான ஆடியோவை மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாமல், கேட்க செய்கிறது. அந்த வகையில், இந்த சாதனம் கொண்டு மசாஜ் மற்றும் பொழுதுபோக்கு என இருவித பயன்களையும் பெற முடியும். பயனர் முகத்தில் மிக கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் பிலிப்ஸ் ஸ்மார்ட் ஐ மசாஜர் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதில் உள்ள துணி மிக மென்மையாக இருப்பதோடு, 180 டிகிரி வரை மடிக்கக்கூடியது ஆகும்.

    ஒட்டுமொத்தத்தில் 245 கிராம் எடை கொண்டிருக்கும் பிலிப்ஸ் ஸ்மார்ட் ஐ மசாஜர் தற்போதைய ஸ்மார்ட்போன்களை விட மிக குறைந்த எடை கொண்டுள்ளன. இந்த மசாஜரை ஹார்மனி ஒஎஸ் ஸ்மார்ட்போன்களில் ஹாங்மெங் சிலான் ஆப் உடன் ப்ளூடூத் மூலம் இணைத்துக் கொள்ளலாம். பிலிப்ஸ் ஸ்மார்ட் ஐ மசாஜரின் விலை 749 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 915 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் தளத்தில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 7 விலை ரூ. 59 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. போட்டி நிறுவன மாடல்களுடன் ஒப்பிடும் போது பிக்சல் 7 விலை சற்று அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில், ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 7 மாடலுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பிக்சல் 7 (8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ. 56 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுதவிர அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 7 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    இதன் மூலம் பிக்சல் 7 விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாறிவிடுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ஸ்னோ, அப்சிடியன் மற்றும் லெமன்கிராஸ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    கூகுள் பிக்சல் 7 அம்சங்கள்:

    6.3 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கூகுள் டென்சார் G2 பிராசஸர்

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    50MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    11MP செல்ஃபி கேமரா

    5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    4700 எம்ஏஹெச் பேட்டரி

    30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • டிண்டரில் அறிமுகமான பெண்ணிடம் சிக்கிய நிதி ஆலோசகர், தான் ஏமாற்றப்படுவதை அறியாமல் மோசடியில் சிக்கியுள்ளார்.
    • டிண்டர் மோசடியில் ஏமாற்றப்பட்ட நபருக்கு 55 வயது என்று தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    பொது மக்கள் இணையத்தில் பணம் இழப்பது சமீப காலங்களில் பெருமளவு அதிகரிக்க துவங்கி விட்டது. இந்த வரிசையில் தற்போது நிதி ஆலோசகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். இத்தாலியை சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர் டேட்டிங் வலைதள சேவையான டிண்டரில் சுமார் HK14 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 கோடியை இழந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. டிண்டரில் அறிமுகமான பெண்ணிடம் சிக்கிய நிதி ஆலோசகர், தான் ஏமாற்றப்படுவதை அறியாமல் மோசடியில் சிக்கியுள்ளார்.

    டிண்டர் மோசடியில் ஏமாற்றப்பட்ட நபருக்கு 55 வயதாகிறது என சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஹாங்காங்கின் மேற்கு மாவட்டத்தில் வசிக்கும் நபருக்கும் சிங்கப்பூரை சேர்ந்த பெண் முதலீட்டு புரோக்கருக்கும் டிண்டரில் மேட்ச் ஏற்பட்டதே, இந்த மோசடியின் ஆரம்பப் புள்ளி.

     

    கடந்த பிப்ரவரி மாதம் டிண்டரில் மேட்ச் ஆனதைத் தொடர்ந்து நிதி ஆலோசகர் மற்றும் முதலீட்டு புரோக்கர் இருவரும் வாட்ஸ்அப்பில் உரையாடலை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் டேட்டிங் ஆன்லைனில் ஜோராக நடந்து வந்துள்ளது. டேட்டிங்கை தொடர்ந்து டிண்டரில் அறிமுகமான பெண் ஆலோசனையை கேட்டு மார்ச் 6 ஆம் தேதியில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி வரை பல்வேறு வலைதளங்களில் நிதி ஆலோசகர் முதலீடு செய்து இருக்கிறார்.

    இவ்வாறு பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 22 தனித்தனி பரிவர்த்தனைகளில் நிதி ஆலோசகர் HK 14.2 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 கோடி வரை முதலீடு செய்து இருந்தார். இவரின் முதலீடுகளுக்கு நிச்சயம் லாபம் கிடைக்கும் என பெண் வலியுறுத்தி வந்துள்ளார். பெண் கூறியப்படி தனக்கு லாபம் கிடைக்காததை அடுத்து சந்தேகம் அடைந்த நிதி ஆலோசகர், காவல் துறை உதவியை நாடினார். அப்போது காவல் துறையினர் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை அந்த நபர் அறிந்து கொள்கிறார்.

    காவல் துறையினர், முதலீட்டாளர்களை ஏமாற்ற பல்வேறு போலி வலைதளங்கள் அதிக லாபம் கொடுப்பதாக கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதை தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் போலி வலைதளங்களை நம்பி எவ்வித முதலீடுகளையும் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

    முதலீட்டு ஆலோசகர் பின்னணி குறித்து முழு விசாரணை செய்ய வேண்டும்.

    அதிக லாபம் கொடுப்பதாக கூறுவோரிடம், அதிக கேள்விகளை கேட்க வேண்டும். இவ்வாறு கூறுவோர் நிச்சயம் ஏமாற்றும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

    மிக முக்கியத்துவம் வாய்ந்த நிதி விவரங்களை கேட்கும் பட்சத்தில், அதிக கவனமுடன் இருப்பது அவசியம் ஆகும். நேரடியாக சந்திக்காத யாருக்கும் பணம் அனுப்ப வேண்டாம்.

    நேரில் சந்திப்பதை பல்வேறு காரணங்களை கூறி தவிர்ப்போரிடம் கவனமாக இருப்பது அவசியம் ஆகும். 

    • சுவிட்சர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கூகுள் நிறுவன ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொழிற்சங்க உறுப்பினர்கள், கூகுள் நிறுவனம் பிரச்சினைகளை தவிர்க்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.

    இங்கிலாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள், அந்நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு உலகம் முழுக்க சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது. இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் உள்ள கூகுள் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்து கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநீக்கம் தொடர்பான பிரச்சினைகளை கூகுள் நிறுவனம் தவிர்த்து விட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தின் பாங்ராஸ் சதுரங்க அலுவலகத்தின் வெளியில் போராட்டம் நடத்தப்பட்டது.

     

    சர்வேதச பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவர் என கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அலுவலகத்தில் பணியாற்றி வருவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனம் ஊழியர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

    எனினும், இது போன்ற பேச்சுவார்த்தைகளில் தொழிற்சங்க நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளாமல் இருப்பதை கூகுள் உறுதிப்படுத்தி வருகிறது. ஊழியர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. முன்னதாக சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் போர்டபில் சாதனம் உலகளவில் பிரபலமான கேமிங் சாதனமாக விளங்கியது.
    • சோனி உருவாக்கி வரும் புதிய கையடக்க சாதனம் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

    சோனி நிறுவனம் முற்றிலும் புதிய கையடக்க பிளேஸ்டேஷன் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கையடக்க பிளேஸ்டேஷன், Q லைட் பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சோனியின் புதிய கேமிங் ஹார்டுவேர் பிளேஸ்டேஷன் 5 சார்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

    புதிய Q லைட் சாதனம் கையடக்க பிளேஸ்டேஷன் போன்றே செயல்படும். இது பிளேஸ்டேஷன் 5 ரிமோட் பிளே அம்சத்தில் இயங்குகிறது. இந்த சாதனம் அதிகபட்சம் 1080 பிக்சல் தரத்தில் நொடிக்கு 60 ஃபிரேம் வேகத்தில் கேம் ஸ்டிரீம் செய்யும். ஆனால் இவ்வாறு செய்ய சீரான இணைய இணைப்பு அவசியம் ஆகும். தோற்றத்தில் Q லைட் பார்க்க பிளேஸ்டேஷன் 5 கண்ட்ரோலர் போன்றே காட்சியளிக்கிறது.

     

    எனினும், இதில் 8 இன்ச் LCD டச் ஸ்கிரீன், அடாப்டிவ் ட்ரிகர்கள் உள்ளன. தற்போது இந்த Q லைட் சாதனத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளதாக இன்சைடர் கேமிங் தெரிவித்து இருக்கிறது. இது சோனி பிளேஸ்டேஷன் 5 கழற்றக்கூடிய டிஸ்க் டிரைவ் வெளியீட்டை தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. Q லைட் வெளியீட்டை தொடர்ந்து பிளேஸ்டேஷன் 5 ப்ரோ அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    கடந்த ஆண்டு சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் விஆர் 2 சாதனத்தை அறிமுகம் செய்து இருந்தது. இது மெல்லிய டிசைன் மற்றும் அதிக சவுகரியத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் தான் புதிதாக கழற்றக்கூடிய டிஸ்க் டிரைவ் பிளேஸ்டேஷன் 5, வயர்லெஸ் இயர்போன், ஹெட்செட் மற்றும் Q லைட் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    • நாய்ஸ் நிறுவனத்தின் புதிய HRX ஸ்ப்ரிண்ட் ஸ்மார்ட்வாட்ச் அசத்தல் டிசைன், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் கொண்டிருக்கிறது.
    • நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் மாடலில் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக HRX ஸ்ப்ரிண்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. நாய்ஸ் கலர்ஃபிட் ஐகான் 3 வெளியீட்டை தொடர்ந்து புதிய HRX ஸ்ப்ரிண்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய HRX ஸ்ப்ரிண்ட் மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட டயல், ப்ளூடூத் காலிங் வசதி போன்ற அம்சங்கள் உள்ளது. 1.91 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் அசத்தலான டிசைன், கியூஆர் கோட், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களை கொண்டிருக்கும் நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது. புதிய HRX ஸ்ப்ரிண்ட் கொண்டு பயனர்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை டிராக் செய்து கொள்ள முடியும். இத்துடன் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், இன்-பில்ட் கேம்ஸ், அதிகபட்சம் பத்து காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இவைதவிர மேம்பட்ட நாய்ஸ் ஹெல்த் சூட் கொண்டு ஹார்ட் ரேட் மாணிட்டர், SpO2 டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர், மன அழுத்தம் டிராக் செய்யும் வசதி, மூச்சு பயிற்சி உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் வசதியை வழங்குகிறது. இன்-பில்ட் ப்ரோடக்டிவிட்டி சூட் கொண்டு அன்றாட ரிமைண்டர்கள், வானிலை விவரங்கள், இதர ஸ்மார்ட் அலர்ட் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் அம்சங்கள்:

    1.91 இன்ச் 240x296 பிக்சல் டிஸ்ப்ளே

    150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

    ப்ளூடூத் 5.2

    பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    240 எம்ஏஹெச் பேட்டரி

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ஹார்ட் ரேட், SpO2, அக்செல்லோமீட்டர்

    நாய்ஸ் ஹெல்த் சூட்

    IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்

    நாய்ஸ் ஃபிட் ஆப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் மாடலின் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மிந்த்ரா, அமேசான் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் நடைபெறுகிறது. புதிய நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் மாடல் விண்டேஜ் பிரவுன் மற்றும் ஜெட் பிளாக் ஸ்டிராப் ஆப்ஷன்களிலும், ஆக்டிவ் புளூ, ஆக்டிவ் பிளாக் மற்றும் ஆக்டிவ் கிரே என மூன்று வித ஸ்போர்ட் ஸ்டிராப் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

    ×