என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஃப்ளிப் போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • புதிய மோட்டோ ஃப்ளிப் போன் மோட்டோரோலா ரேசர் பிளஸ் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் 2023 ரேசர் பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. சீனாவில் விற்பனை செய்வதற்கான சான்றுகளை இந்த ஸ்மார்ட்போன் பெற துவங்கி இருப்பதை அடுத்து விரைவில் இது அந்நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் சீனாவின் CQC சான்றளிக்கும் வலைதளத்தில் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்று இருந்தது.

    அதில் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன், ஃபாஸ்ட் சார்ஞ்சிங் திறன் உள்பட பல்வேறு விவரங்கள் தெரியவந்தது. இந்த வரிசையில், தற்போது மோட்டோ ரேசர் பிளஸ் 2023 விவரங்கள் TDRA மற்றும் கனடாவின் REL வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. TDRA மற்றும் REL வலைதள விவரங்களின் படி மோட்டோரோலா ரேசர் பிளஸ் 2023 மற்றும் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் ஒரே மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன.

    அந்த வகையில், இரு மாடல்களும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். சான்றளிக்கும் வலைதளங்களில் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் இடம்பெறாது. அந்த வகையில், ஏற்கனவே CQC வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் பிளஸ் 2023 மாடலில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என்றும் இதில் அதிகபட்சம் 3640 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மோட்டோ ரேசர் பிளஸ் 2023 மாடலுடன் முதல் முறையாக மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா விவரங்கள் வெளியாகி இருக்கிறது. சீன சந்தையில் மோட்டோ ரேசர் பிளஸ் 2023 மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • புதிய டேப் S9 அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி டேப் S8 அல்ட்ரா மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. டேப் S8 சீரிசில் விலை உயர்ந்த மாடலாகவும், ஃபிளாக்ஷிப் தர அம்சங்களையும் இது கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடல் அளவில் 208.6x326.4x5.5mm இருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி டேப் S8 அல்ட்ரா அளவீடுகளும் இதே போன்றே இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய டேப் S9 அல்ட்ரா மாடலின் எடை அதன் முந்தைய வெர்ஷனை விட 11 கிராம் வரை அதிகரித்து இருக்கும் என தெரிகிறது.

     

    மற்ற அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடலில் 14.6 இன்ச் WQXGA+ 2960x1848 பிக்சல் ரெல்யூஷன் கொண்ட ஸ்கிரீன், சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் ஒவர் கிளாக் செய்யப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் IP சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 11200 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது. இவைதவிர எஸ் பென் சப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஏகேஜி டியுன் செய்த ஸ்பீக்கர்கள், 5ஜி கனெக்டிவிட்டி, அதிநவீன ஒன் யுஐ மென்பொருள் வழங்கப்படலாம். 

    • சோனி நிறுவனத்தின் புதிய Vlog கேமரா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • கையடக்க அளவில் கிடைக்கும் புதிய சோனி கேமராவில் 20mm அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது.

    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Vlog கேமராவை அறிமுகம் செய்தது. புதிய சோனி ZV-1F Vlog கேமரா கையடக்க அளவில் Vlog செய்வோர் மற்றும் கிரியேட்டர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கும் சோனி ZV-1F Vlog கேமராவின் வொவென் ஃபேப்ரிக்குகளும் தாவரம் சார்ந்தே பயன்படுத்தப்பட்டு உள்ளன. புதிய Vlog கேமரா GP-VPT2BT ஷூடிங் க்ரிப் மற்றும் வயர்லெஸ் ரிமோட் கமாண்டர், வெளிப்புற மைக்ரோபோன் உள்ளிட்டவைகளுடன் இணைந்து இயங்கும் வசதி கொண்டிருக்கிறது.

     

    மேலும் இதில் 7.5 செ.மீ. அளவில் எல்சிடி டச் டிஸ்ப்ளே, பொக்கே ஸ்விட்ச் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பேக்கிரவுண்ட் பொக்கே மற்றும் ஃபோக்கஸ் இடையே சீராக மாற்றிக் கொள்ளலாம். முன்னதாக 2022 அக்டோபர் மாத வாக்கில் ZV-1F மாடலை சோனி அறிவித்த நிலையில், தற்போது இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய சோனி கேமராவில் 20.1MP ரெசல்யுஷன் கொண்ட எக்ஸ்மோஸ் RS CMOS சென்சார், ஜெய்ஸ் ஆப்டிக்ஸ், அதிக தரமுள்ள ஆடியோ பதிவு செய்யும் வசதி, விண்ட் ஸ்கிரீன், டைரக்ஷனல் 3 கேப்ஸ்யுல் மைக் உள்ளது. புதிய சோனி ZV-1F Vlog கேமராவின் விலை ரூ. 50 ஆயிரத்து 690 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் சோனி ZV-1F Vlog கேமராவின் விற்பனை அனைத்து சோனி செண்டர்கள், ஆல்ஃபா ஃபிளாக்ஷிப் ஸ்டோர்கள், சோனி அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள், ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் முன்னணி மின்சாதன விற்பனை மையங்களில் நாளை (ஏப்ரல் 6) முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.

    • விவோ நிறுவனத்தின் புதிய T2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.
    • புதிய T2 சீரிசில் T2 5ஜி மற்றும் T2X 5ஜி என இரண்டு ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன.

    விவோ நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து விவோ T2 5ஜி சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இவை அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ T1 5ஜி சீரிசின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய விவோ T2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    புதிய விவோ T2 சீரிசில் விவோ T2 5ஜி மற்றும் விவோ T2X 5ஜி என இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. விவோ T2 ஸ்மார்ட்போன்களின் முதல் டீசரில் FHD+ AMOLED, 1300 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இத்துடன் டிஸ்ப்ளே நாட்ச் உள்ளது. தோற்றத்தில் இது ஐகூ Z7 5ஜி போன்றே காட்சியளிக்கிறது.

     

    அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. விவோ T2X 5ஜி மாடல் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் விவோ T2X 5ஜி மாடலில் FHD+ ஸ்கிரீன், டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என விவோ அறிவித்து இருக்கிறது.

    புதிய விவோ T2 5ஜி மற்றும் விவோ T2X 5ஜி மாடல்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் மற்றும் விவோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் விவோ உறுதிப்படுத்திவிட்டது.

    • விவோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • புதிய விவோ X ஃப்ளிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    விவோ நிறுவனம் முற்றிலும் புதிய ஃப்ளிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஃப்ளிப் போன் மூலம் பிரீமியம் பிரவில் அதிக பங்குகளை ஈர்க்க விவோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விவோ X ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறது.

    இதில் ஸ்மார்ட்போனின் வெளிப்புற டிஸ்ப்ளே காணப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 4 மற்றும் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் போன்ற மாடல்கள் ஃப்ளிப் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், உருவாகி வரும் விவோ X ஃப்ளிப் மாடலின் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

     

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ X ஃப்ளிப் மாடலில் வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது. இதே போன்ற கேமரா மாட்யுல் இதர X சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. கேமரா மாட்யுல் ஸ்மார்ட்போனின் மேல் இடதுபுறத்தில் உள்ளது. மடிக்கப்பட்ட நிலையில், கவர் டிஸ்ப்ளே கேமரா மாட்யுலின் மேல் காணப்படுகிறது.

    விவோ X ஃப்ளிப் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.8 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    HD ரெசல்யுஷன் கொண்ட இரண்டாவது டிஸ்ப்ளே

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென்1 பிராசஸர்

    அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    50MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேரமா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    4400 எம்ஏஹெச் பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    Photo Courtesy: PLAYFULDROID

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்ட் சீரிஸ் இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • ANC, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை இந்த இயர்போனின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

    ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் பட்ஸ் 2 பெயரில் புதிய நார்ட் சீரிஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நார்ட் பட்ஸ் 2 மாடலில் 25db ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.3, ஒன்பிளஸ் ஃபாஸ்ட் பேர், டால்பி அட்மோஸ், 94ms அல்ட்ரா லோ லேடன்சி மற்றும் 12.4 டைட்டானியம் டைனமிக் டிரைவர்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்த இயர்போன்களில் டச் கண்ட்ரோல், IP55 தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இதன் இயர்பட் ஒவ்வொன்றும் 4.7 கிராம் எடை அளவில் உள்ளன. இதனால் இவற்றை காதுகளில் அணிவது சவுகரிய அனுபவத்தை வழங்கும். இயர்பட்ஸ் உடன் மூன்று வித அளவுகளில் சிலிகான் இயர்பிளக் வழங்கப்படுகின்றன.

     

    ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 அம்சங்கள்:

    12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர், பேஸ்வேவ் என்ஹான்ஸ்மெண்ட் அல்காரிதம்

    ப்ளூடூத் 5.3, AAC கோடெக், டால்பி அட்மோஸ், ஒன்பிளஸ் ஃபாஸ்ட் பேர்

    டூயல் கோர் பிராசஸர், 25db ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரண்ட் மோட்

    டூயல் மைக்ரோபோன், ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன்

    மாஸ்டர் ஈக்வலைசர்

    டச் கண்ட்ரோல்

    94ms லோ லேடன்சி, ப்ரோ கேமிங்

    ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP55)

    41 எம்ஏஹெச் பேட்டரி

    480 எம்ஏஹெச் சார்ஜிங் கேஸ்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 மாடல் லைட்னிங் வைட் மற்றும் தண்டர் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், ஒன்பிளஸ், மிந்த்ரா போன்ற வலைதளங்களில் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதவிர ஒன்பிளஸ் எக்ஸ்பீரின்ஸ் ஸ்டோர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பார்ட்னர் ஸ்டோர்களிலும் நடைபெற இருக்கிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய ஒன்பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்ட் CE 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய நார்ட் CE 3 லைட் 5ஜி மாடலில் 6.72 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா உள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 13.1 மூலம் இயங்கும் நார்ட் CE 3 லைட் 5ஜி இரண்டு மென்பொருள் அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா உள்ளது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளது.

     

    ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி அம்சங்கள்:

    6.72 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 3048/50/60/90/120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13.1

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் 5ஜி பேஸ்டல் லைம் மற்றும் க்ரோமேடிக் கிரே என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் விற்பனை ஏப்ரல் 11 ஆம் தேதி அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது. இதுதவிர ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.

    • ட்ரூக் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் டூயல் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் கொண்டிருக்கிறது.
    • இதில் உள்ள 13mm டைட்டானியம் ஸ்பீக்கர் டிரைவர்கள் சினிமா தர ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

    ட்ரூக் நிறுவனத்தின் புதிய குறைந்த விலை இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஸ் வைப் என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் ட்ரூக் பட்ஸ் A1 மாடலை தொடர்ந்து வெளியாகி இருக்கிறது.

    புதிய ட்ரூக் பட்ஸ் வைப் மாடலில் டூயல் நாய்ஸ் கேன்சலேஷன், குவாட் மைக் ENC, ப்ளூடூத் 5.3 உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 13mm டைட்டானியம் ஸ்பீக்கர் டிரைவர்கள் சினிமா தர ஆடியோ அனுபவத்தை ஆழமான பேஸ் மற்றும் தெளிவான ஆடியோவை வெளிப்படுத்துகிறது. இத்துடன் நான்கு பிரீசெட் EQ மோட்கள் வழங்கப்படுகின்றன.

     

    டிரான்ஸ்பேரண்ட் கேஸ் டிசைன் கொண்டிருக்கும் ட்ரூக் பட்ஸ் வைப் டிஜிட்டல் பேட்டரி இண்டிகேட்டர், 48 மணி நேர பிளேடைம், எளிய கனெக்டிவிட்டி மற்றும் இன்ஸ்டண்ட் பேரிங் தொழில்நுட்பம், டேப் டூ கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    ட்ரூக் பட்ஸ் வைப் அம்சங்கள்:

    டிரான்ஸ்பேரண்ட் கேஸ் டிசைன் மற்றும் டிஜிட்டல் பேட்டரி இண்கேட்டர்

    ட்ரூ வயர்லெஸ் இன்-இயர்

    13mm ரியல் டைட்டானியம் டிரைவர்கள்

    40ms அல்ட்ரா லோ லேடன்சி, கேம் மோட்

    டூயல் நாய்ஸ் கேன்சலேஷன்

    அதிகபட்சம் 35db வரையிலான ANC

    பிரீசெட் EQ மோட்கள்: டைனமிக் ஆடியோ, பாஸ் பூஸ்ட், மூவி மோட்

    ப்ளூடூத் 5.3, கோடெக் சப்போர்ட், இன்ஸ்டண்ட் பேரிங்

    40 எம்ஏஹெச் இயர்பட்ஸ்

    300 எம்ஏஹெச் பேட்டரி சார்ஜிங் கேஸ்

    48 மணி நேர பிளேபேக்

    டைப் சி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    குவாட் மைக் ENC

    டச் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்

    IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ட்ரூக் பட்ஸ் வைப் ANC மாடலின் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் உண்மை விலை ரூ. 1699 ஆகும். ட்ரூக் பட்ஸ் வைப் மாடல் அமேசான், ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 சீரிசை புதிதாக எல்லோ நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய ஐபோன் 14 எல்லோ நிறம் வாங்குவோர் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் எல்லோ நிற வேரியண்ட்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. ஐபோன் 14 எல்லோ வேரியண்ட் 128 ஜிபி மாடலுக்கு ரூ. 7 ஆயிரத்து 901 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐபோன் 14 எல்லோ நிற மாடல் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    ஐபோன் 14 எல்லோ நிற வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 71 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ. 4 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    இவற்றை சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 14 எல்லோ நிற வேரியண்டின் விலை ரூ. 11 ஆயிரத்து 901 வரை குறைந்துவிடுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படுகிறது.

    ஐபோன் 14 அம்சங்கள்:

    6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன்

    ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட்

    128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி

    12MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    12MP ட்ரூடெப்த் செல்ஃபி கேமரா

    கிராஷ் டிடெக்ஷன் மற்றும் எமர்ஜன்சி SOS அம்சம்

    ஐஒஎஸ் 16

    ஃபேஸ் ஐடி சென்சார்

    5ஜி, வைபை, ப்ளூடூத்

    டூயல் சிம்

    லைட்னிங் போர்ட்

    • மிகக் குறைந்த விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • நோக்கியா C12 பிளஸ் ஸ்மார்ட்போன் யுனிசாக் பிராசஸர், 2 ஜிபி ரேம், 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

    நோக்கியா C12 பிளஸ் எண்ட்ரி லெவல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா C12 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் இணைகிறது.

    புதிய நோக்கியா C12 பிளஸ் மாடலில் 6.3 இன்ச் HD+ ஸ்கிரீன், யுனிசாக் ஆக்டா கோர் பிராசஸர், 8MP பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5MP செல்ஃபி கேமரா, 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    நோக்கியா C12 பிளஸ் அம்சங்கள்:

    6.3 இன்ச் HD+ ஸ்கிரீன்

    யுனிசாக் ஆக்டா கோர் பிராசஸர்

    2 ஜிபி ரேம்

    32 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    4000 எம்ஏஹெச் பேட்டரி

    வைபை, ப்ளூடூத் 5.2

    மைக்ரோ யுஎஸ்பி

    3.5mm ஹெட்போன் ஜாக்

    ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ்

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் சார்கோல், டார்க் சியான் மற்றும் லைட் மிண்ட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் நோக்கியா C12 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை.

    • ரியல்மி நார்சோ பிராண்டின் புதிய N55 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    • கடந்த சில நாட்களாக N சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியான நிலையில், தற்போது மாடல் பெயர் ஓரளவுக்கு தெரியவந்துள்ளது.

    ரியல்மி நிறுவனம் தனது சமூக வலைதளங்களில் பிராஜக்ட் N பற்றிய டீசர்களை வெளியிட்டு வந்தது. தற்போது தனது அடுத்த தலைமுறை நார்சோ ஸ்மார்ட்போனின் புதிய டீசரை ரியல்மி வெளியிட்டுள்ளது. ரியல்மி நிறுவனம் புதிய பிராஜக்ட் N-க்காக பிரத்யேக மைக்ரோசைட் ஒன்றை தனது வலைதளத்தில் உருவாக்கி இருக்கிறது.

    இதே மைக்ரோசைட் அமேசான் தளத்திலும் இடம்பெற்றுள்ளது. அதன் படி இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரியவந்துள்ளது. புதிய நார்சோ ஸ்மார்ட்போனின் பெயர் விவரங்களை ரியல்மி நிறுவனம் அறிவிக்கவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் புதிதாக N சீரிசில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் நார்சோ N55 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மைக்ரோசைட் விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் டிசைன், டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இதன் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் வலதுபுறத்தில் உள்ளன. இதில் உள்ள பவர் பட்டினேலேயே கைரேகை சென்சார் பொருத்தப்படுகிறது.

    "அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், அதன் முந்தைய வெர்ஷனை விட பிரமாண்டமாக இருக்கும்," என ரியல்மி தெரிவித்துள்ளது. மற்றொரு டீசரில் 64, 90, 33, 16 என ஏராளமான எண்கள் இடம்பெற்றுள்ளன. இவை கேமரா, ரிப்ரெஷ் ரேட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் முன்புற செல்ஃபி கேமராக்களை குறிக்கும் என கூறப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு நார்சோ 50 சீரிசில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வரிசையில், பிராஜக்ட் N ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 12 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிகிறது. வரும் நாட்களில் இதுபற்றிய கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படலாம்.

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் சாட்களை லாக் மற்றும் ஹைட் செய்ய முடியும்.
    • இந்த அம்சம் வழங்கப்பட்டதும், பயனர்கள் சாட்களை கைரேகை சென்சார் மூலம் லாக் செய்யலாம்.

    பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் டெஸ்டிங்கில் உள்ள ஏராளமான புதிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பயனர்கள் பிரைவேட் சாட்-ஐ லாக் மற்றும் ஹைட் (மறைத்து வைத்தல்) செய்யும் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    இது குறித்து WaBetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு 2.23.8.2 அப்டேட்டில் புதிய அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் பயனர்களின் சாட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. எதிர்கால ஸ்டேபில் அப்டேட்களில் இந்த அம்சம் வழங்கப்படும்.

     

    காண்டாக்ட் மற்றும் க்ரூப்-களில் பயனர்களின் மிகமுக்கிய தனிப்பட்ட சாட்களை லாக் செய்ய முடியும். லாக்டு சாட் பட்டியலில் இணைக்கப்பட்டதும், அதனை அதற்கான ஸ்கிரீனில் இருந்து மட்டுமே இயக்க முடியும். சாட் லாக் செய்யப்பட்டால், அதனை பாஸ்வேர்டு அல்லது பயனரின் கைரேகை மூலமாகவே பார்க்க முடியும்.

    ஒருவேளை புதிய அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட்ட மொபைல் போனினை மற்றவர்கள் எடுத்து சாட்களை திறக்க முயற்சித்தாலும், அவர்களால் முழு சாட்களையும் அழிக்காமல் பார்க்க முடியாது. லாக்டு சாட்-இல் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், அவைகளும் பயனர் கேலரியில் தானாக சேமிக்கப்படாது.

    சாட், ஆடியோ சாட், எடிட் மெசேஞ்ச் மற்றும் ஷார்ட் வீடியோ மெசேஞ்ச் உள்ளிட்ட அம்சங்கள் டெஸ்டிங்கில் உள்ளன. மேலும் இவை எதிர்கால அப்டேட்டிலேயே வெளியிடப்பட உள்ளன. புதிய அம்சங்கள் குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

    Photo Courtesy: WABetaInfo

    ×