search icon
என் மலர்tooltip icon

    கணினி

    20mm அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட சோனி ZV-1F Vlog கேமரா இந்தியாவில் அறிமுகம்!
    X

    20mm அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட சோனி ZV-1F Vlog கேமரா இந்தியாவில் அறிமுகம்!

    • சோனி நிறுவனத்தின் புதிய Vlog கேமரா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • கையடக்க அளவில் கிடைக்கும் புதிய சோனி கேமராவில் 20mm அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது.

    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Vlog கேமராவை அறிமுகம் செய்தது. புதிய சோனி ZV-1F Vlog கேமரா கையடக்க அளவில் Vlog செய்வோர் மற்றும் கிரியேட்டர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கும் சோனி ZV-1F Vlog கேமராவின் வொவென் ஃபேப்ரிக்குகளும் தாவரம் சார்ந்தே பயன்படுத்தப்பட்டு உள்ளன. புதிய Vlog கேமரா GP-VPT2BT ஷூடிங் க்ரிப் மற்றும் வயர்லெஸ் ரிமோட் கமாண்டர், வெளிப்புற மைக்ரோபோன் உள்ளிட்டவைகளுடன் இணைந்து இயங்கும் வசதி கொண்டிருக்கிறது.

    மேலும் இதில் 7.5 செ.மீ. அளவில் எல்சிடி டச் டிஸ்ப்ளே, பொக்கே ஸ்விட்ச் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பேக்கிரவுண்ட் பொக்கே மற்றும் ஃபோக்கஸ் இடையே சீராக மாற்றிக் கொள்ளலாம். முன்னதாக 2022 அக்டோபர் மாத வாக்கில் ZV-1F மாடலை சோனி அறிவித்த நிலையில், தற்போது இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய சோனி கேமராவில் 20.1MP ரெசல்யுஷன் கொண்ட எக்ஸ்மோஸ் RS CMOS சென்சார், ஜெய்ஸ் ஆப்டிக்ஸ், அதிக தரமுள்ள ஆடியோ பதிவு செய்யும் வசதி, விண்ட் ஸ்கிரீன், டைரக்ஷனல் 3 கேப்ஸ்யுல் மைக் உள்ளது. புதிய சோனி ZV-1F Vlog கேமராவின் விலை ரூ. 50 ஆயிரத்து 690 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் சோனி ZV-1F Vlog கேமராவின் விற்பனை அனைத்து சோனி செண்டர்கள், ஆல்ஃபா ஃபிளாக்ஷிப் ஸ்டோர்கள், சோனி அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள், ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் முன்னணி மின்சாதன விற்பனை மையங்களில் நாளை (ஏப்ரல் 6) முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.

    Next Story
    ×