search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் விவகாரம்"

    • நேற்று முன்தினம் ஊரடங்கு பிறப்பித்த நிலையில், 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
    • பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து வன்முறை பரவத் தொடங்கியது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    மணிப்பூரின் படிப்படியாக வன்முறை குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த 5 மாவட்டங்களிலும் இன்று மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காக்சிங், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய மாவட்டங்களில் சாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. தவுபால் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

    இந்த ஊரடங்கு தளர்வு அதிகாரியிடம் உரிய ஒப்புதல் பெறாமல், கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் அல்லது பேரணி போன்றவற்றத்தில் ஈடுபடக்கூடாது என்று அதிகாரப்பூர்வ உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க.வினர் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வருகிறோம்.
    • அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்போம் என ஆர்.எஸ் பாரதி கூறினார்.

    திருச்சி:

    திருச்சியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளார்.

    தி.மு.க.வினர் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வருகிறோம்.

    அண்ணாமலை என்ன கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. இந்த புகாரால் மக்கள் அண்ணாமலைக்கு வேறு வேலையே இல்லையா என நினைப்பார்களே தவிர, தி.மு.க.விற்கு எந்த அவப்பெயரும் ஏற்படாது.

    நாங்கள் எதையும் சந்திக்க தயார். பிரச்சனைகளை திசை திருப்ப அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்போம். என தெரிவித்தார்.

    • இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை.

    மணிப்பூர் மாநிலம், இம்பால் நகரில் குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர். அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்து வரப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    மே 4ம் தேதி தங்கள் சமூகத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாக குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர்.

    இதனால் மணிப்பூரில் கடந்த 4 நாட்களாக பதட்டம் நீடிக்கிறது. பல இடங்களில் வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. சில இடங்களில் பழங்குடி இனத்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் பல கிராமங்களில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் வீடியோ காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில், பெண்களை வீடியோ எடுத்த நபரை கைது செய்து விசாரணை அமைப்புகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன.

    மேலும், வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த அமைப்புகள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    ×