search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் தவிப்பு"

    • அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன.
    • போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி ரெயில்வே மேம்பாலத்தில்நேற்றிரவு அரசு பஸ் பழுதடைந்து நடு வழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    பண்ருட்டி பகுதி வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து இருந்து பண்ருட்டி வழியாக சென்னைக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு வந்தது. அதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரெனபழுதானது.

    இதனை தொடர்ந்து நடுவழியில் அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் தவித்தனர்.

    • ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

    சேலம்:

    விபத்துகளில் சிக்கும் டிரைவர்கள் மீது 10 ஆண்டுகள் சிறை, 7 லட்சம் அபராதம் என்ற மத்திய அரசின் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை குறைக்க வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்த வேண்டும், ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆட்டோ டிரைவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை முதல் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை இயக்காமல் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சேலத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் இன்று ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    மேலும் ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர். இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

    பள்ளி மாணவிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களில் சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டனர். மேலும் ஆட்டோக்களில் அலுவலகங்களுக்கு செல்வோரும் கடும் அவதி அடைந்தனர்.

    • விமானத்தின் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து புதுடெல்லி, புனே, மும்பை நகரங்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.
    • விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து பயணிகள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சேவைகளாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று உள்நாட்டு சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து மேற்கண்ட விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து வேறு விமானங்கள் மூலமோ அல்லது தொடர் விமானங்கள் மூலமோ பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இன்று காலை 74 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    அப்போது விமானத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் ஏற்றப்பட்ட பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து விமானம் புறப்படும் நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இருந்து வந்தது. ஏற்கனவே இந்த விமானத்தின் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து புதுடெல்லி, புனே, மும்பை நகரங்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்ட றியப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் எப்போது புறப்படும்? என்றும், தற்போது சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் என்ன செய்ய இருக்கிறார்கள்? என்பது குறித்தும் இதுவரை பயணிகளுக்கு விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

    • பஸ் வெளித்தோற்றத்தில் புதிய ஆம்னிபஸ் போல காட்சியளித்தாலும் உள்ளே ஏறும் பயணிகளுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது.
    • வெகு தூரம் அமர்ந்து செல்லும் இருக்கைகள் சேதம் அடைந்தும் உள்ளிருக்கும் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்து கழக பனிமனையில் இருந்து தினந்ேதாறும் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை உடைசலான நிலையில் இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இருக்கை சேதம்அடைந்தும், கம்பிகள் துரு பிடித்தும் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. உள்ளூர் பஸ்கள் என்றால் சில மணி நேரத்தில் பயணிகள் இதனை பொறுத்துக் கொண்டு தங்கள் இடத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் ெதாலைதூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் இதே நிலையில் இருப்பதால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    கம்பத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் காலை 6.50க்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் வெளித்தோற்றத்தில் புதிய ஆம்னிபஸ் போல காட்சியளித்தாலும் உள்ளே ஏறும் பயணிகளுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது.

    வெகு தூரம் அமர்ந்து செல்லும் இருக்கைகள் சேதம் அடைந்தும் உள்ளிருக்கும் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளது. தூக்கத்தில் அந்த கம்பியில் இடித்தால் பயணிகளின் தலையை இருக்கை பதம் பார்த்து விடும். இதனால் தூங்காமலேயே பயணம் செய்யும் நிலை உள்ளது. தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் இடைநில்லா பஸ்களையாவது தரமான முறையில் பராமரித்து இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மதுரை,பெரியகுளம், கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்வதில்லை.
    • பஸ் நிலையம் முன்பே பயணிகளை நிறுத்தி இறக்கி விட்டு செல்கிறார்கள். இவ்வாறு செல்வதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பஸ் நிலையம் நிலக்கோட்டை மையப் பகுதியான இடத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழமையான தாலுகாவில் நிலக்கோட்டையும் ஒன்று. கோட்டை பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமப் பகுதிகளில் இருந்து நிலக்கோட்டைக்கு பூ மார்க்கெட் பூ விற்பதற்கும்,

    அன்றாட வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். நிலக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.

    இவ்வாறு வரும் பஸ்களில் திண்டுக்கல் பஸ் மட்டுமே நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்கிறது.மதுரை,பெரியகுளம், கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்வதில்லை.

    பஸ் நிலையம் முன்பே பயணிகளை நிறுத்தி இறக்கி விட்டு செல்கிறார்கள். இவ்வாறு செல்வதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பஸ்நிலையம் தெரியாமல் அலையும் சூழல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து பஸ்களும் நிலக்கோட்டை பஸ்நிலையத்தினுள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • கடலூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தினமும் புதுச்சேரிக்கு சென்று வருவது வழக்கம்.
    • அதிகாலையில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் எதுவும் செல்லவில்லை.

    கடலூர்:

    கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காகவும், மருத்துவமனைகளுக்கும், வேலைக்காகவும் ஆயிரக்கணக்கானோர் தினமும் புதுச்சேரிக்கு சென்று வருவது வழக்கம். புதுச்சேரி யூனியன் பிரதே சத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று புதுச்சேரி முழுவதும் பந்த் போராட்டம் அறிவித்தனர்.

    அதன்படி இன்று அதிகாலையில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் எதுவும் செல்லவில்லை. புதுச்சேரிக்கு செல்ல கடலூர் பஸ் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அந்த சமயத்தில் ஒரே ஒரு தனியார் பஸ் மட்டுமே வந்து புதுச்சேரிக்கு கிளம்பியது. இதைத் தொடர்ந்து பல பஸ்கள் வரும் என்று எதிர் பார்த்திருந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு மேல் கடலூர் டெப்போவில் இருந்து பயணிகளின் எண்ணிக்கைக் ஏற்ப பஸ்கள் வரவழைக்கப்பட்டு புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

    இந்த பஸ்கள் புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு செல்லவில்லை. பயணிகள் அனைவரும் புதுச்சேரி இந்திராகாந்தி சிலை பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடப்பட்டனர். மேலும், கடலூரில் இருந்து இயக்க ப்படும் அரசு பஸ்களை தமிழக பகுதிகளில் போலீ சார் கண்காணித்து வருகி ன்றனர்.  இது தவிர ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், குமாரமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து கடலூருக்கு வரும் தனியார் நிறுவன தொழிலாளர்களும் பஸ்கள் இயக்கப்படாததால் பாதிக்கப்பட்டனர்.

    • சேத்தியாதோப்பு நோக்கி தடம் எண் 2 என்ற அரசு பஸ் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சேத்தியாதோப்பு நோக்கி புறப்பட்டது.
    • பயணிகள் கீழே இறங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சேத்தியாதோப்பு நோக்கி தடம் எண் 2 என்ற அரசு பஸ் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சேத்தியாதோப்பு நோக்கி புறப்பட்டது. அப்போது விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகே வரும்போது பஸ்சில் இருந்த கியர் ராடு உடைந்தது. இதனால் பஸ்சை இயக்க முடியாமல் டிரைவர் நடு ரோட்டிலேயே நிறுத்தினார்.

    இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கீழே இறங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனையடுத்து அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் விருத்தாசலம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவித்து மாற்று பஸ் ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பி வைத்தனர். பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்ற அரசு பஸ்சால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • திண்டுக்கல் - நிலக்கோட்டைக்கு அரசு பஸ் சேவை குறைக்கப்பட்டுள்ளது
    • இதனால் கடந்த 2 மாதங்களாக மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சிலுக்குவார்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, பிள்ளையார்நத்தம், முசுவனூத்து, மைக்கேல்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள், அரசு, தனியார் வேலைக்கு செல்பவர்கள் திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சில் சென்று வருகின்றனர். மேலும் பூ மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள் இந்த அரசு டவுன் பஸ்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்த அரசு பஸ் சேவை வெகுவாக குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. மேலும் கிராமங்களுக்கு செல்ல நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து அரசு பஸ் வராததால் தனியார் பஸ்களில் செல்லும் நிலை உள்ளது.

    கடந்த 2 மாதமாகவே இதே நிலை நீடித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் போதுமான பஸ் சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை.
    • ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ரெயில் நிலையத்தில் மின் விளக்குகள் எரியாததால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.உடுமலை ரெயில் நிலையம் பிளாட் பார்ம் 1 மற்றும் 2 நடை பாதைகளில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இங்கு வரும் பெண்கள், குழந்தைகள், இருட்டாக உள்ளதால், ஒரு வித அச்சத்துடன் வெளியில் வர வேண்டியுள்ளது. எனவே, மின் விளக்குகள் எரியவும், சமூக விரோத செயல்களை தடுக்கவும் ெரயில்வே துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ×