search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை விபத்து"

    • கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது.
    • விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரிஷி கவுதம் (வயது24). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சென்னையில் தங்கி தரமணியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டு இன்று அதிகாலை 5மணி அளவில் பஸ் மூலம் சென்னை திரும்பினார். அசோக் நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் சிக்னல் அருகே பஸ்சில் இருந்து கீழே இறங்கிய ரிஷி கவுதம் பின்னர் 100 அடி சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ரிஷிகவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் ரிஷிகவுதமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • விபத்து குறித்து, அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை அடையாறு எல்.பி ரோட்டில் பின்பக்கமாக சென்ற வேன் மோதியதில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்து குறித்து, அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.

    • ரெயில் நகர் சந்திப்பு அருகே வந்தபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக லட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
    • கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது 21). மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக் கழகம் ஒன்றின் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு சட்ட படிப்பு படித்து வந்தார்.

    இவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் உடன் படிக்கும் நண்பரான ரோகித் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். ரெயில் நகர் சந்திப்பு அருகே வந்தபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக லட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற லட்சுமிநாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த ரோகித்தை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்ட சூர்யா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    • கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா (வயது19). கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்து கோயம்பேடு நூறடி சாலையில் தே.மு.தி.க. அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார்.

    பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக அவ்வழியே வந்த மாநகர பஸ்சில்(எண்48சி) முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினார். அப்போது திடீரென டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதாக தெரிகிறது. இதனால் படிகட்டில் நின்ற சூர்யா எதிர்பாராதவிதமாக கால் தவறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்ட சூர்யா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • வாலிபரின் உயிரை பறித்த கார் அதன் பிறகும் வேகமாக சென்று பச்சையப்பன் கல்லூரி சுவற்றில் மோதி நின்றது.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு 5-வது தெருவை சேர்ந்தவர் திருமகன். டிரைவரான இவர் தனது மோட்டார் சைக்கிளில் இன்று வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே அதிகாலை 5.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் திடீரென தாறுமாறாக ஓடியது. இதில் திருமகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் வேகமாக மோதியது. இதில் திருமகன் தூக்கி வீசப்பட்டு அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

    இதனால் சம்பவ இடத்திலேயே திருமகன் துடிதுடித்து பலியானார். திருமணமான அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வாலிபரின் உயிரை பறித்த கார் அதன் பிறகும் வேகமாக சென்று பச்சையப்பன் கல்லூரி சுவற்றில் மோதி நின்றது. இதைப் பார்த்து சாலையில் சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார் காரை ஓட்டி வந்த நபர் குறித்து விசாரித்தனர். அப்போது 18 வயது கல்லூரி மாணவரான ஸ்ரீசிஜிவ் விக்ரம் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிய அவரும் விபத்தில் காயம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இவர் ஓட்டுனர் உரிமத்துக்காக விண்ணப்பித்திருப்பதும், இன்னும் லைசென்ஸ் எடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக வாலிபர் விக்ரம் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • விபத்தில் உயிரிழந்த விஷ்ணுராம் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
    • கார் மரத்தில் மோதியபோது முன்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த பலூன் விரிந்துள்ளது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இன்று அதிகாலை 3.50 மணி அளவில் மின்னல் வேகத்தில் தாறுமாறாக ஓடிய கார் அங்கிருந்த மரத்தில் மோதி சுக்கு நூறாக நொறுங்கியது.

    இதில் காரை ஓட்டிச்சென்ற விஷ்ணுராம் என்ற வாலிபர் உயிரிழந்தார். அவருடன் காரில் பயணம் செய்த திலீபன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிண்டி போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விபத்தில் உயிரிழந்த விஷ்ணுராம் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். திலீபன் ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இருவரும் தொழில் விஷயமாக சென்னை வந்து உள்ளனர்.

    இந்த நிலையில்தான் இன்று அதிகாலையில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. கார் மரத்தில் மோதியபோது முன்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த பலூன் விரிந்துள்ளது. இருப்பினும் காரை ஓட்டிச் சென்ற விஷ்ணுராம் உயிரிழந்திருக்கிறார்.

    விஷ்ணுராம் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு விஷ்ணுராம் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    • சரவணன் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகே சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது இடிக்காமல் இருப்பதற்காக சரவணன் திடீரென பிரேக் பிடித்தார்.

    அம்பத்தூர்:

    கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையை சேர்ந்தவர் சரவணன்(வயது38). இவர் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது இடிக்காமல் இருப்பதற்காக சரவணன் திடீரென பிரேக் பிடித்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார்? என்பது தெரியவில்லை.

    போரூர்:

    கோயம்பேடு, காளியம்மன் கோவில் சாலையில் கழிவுநீர் வாரிய அலுவலகம் அருகே நேற்று இரவு முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×