மோட்டார் சைக்கிள் விபத்து- சட்ட கல்லூரி மாணவர் மரணம்

ரெயில் நகர் சந்திப்பு அருகே வந்தபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக லட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்து- சட்ட கல்லூரி மாணவர் மரணம்
Published on

போரூர்:

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது 21). மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக் கழகம் ஒன்றின் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு சட்ட படிப்பு படித்து வந்தார்.

இவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் உடன் படிக்கும் நண்பரான ரோகித் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். ரெயில் நகர் சந்திப்பு அருகே வந்தபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக லட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற லட்சுமிநாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த ரோகித்தை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com