search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரரைப் போற்று"

    • தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா.
    • இவர் தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகிறார்.

    2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றார்.


    மாதவனுக்கு விருந்தளித்த சுதா கொங்கரா

    தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. இவருக்கு சமீபத்தில் கையில் காயம் ஏற்பட்டு ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் மாதவனுக்கு ஒன்பது வகையான உணவுடன் விருந்தளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளார். இதற்கு சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் மாதவன் நடிக்கவுள்ளாரா..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார், 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.


    சூரரைப் போற்று

    2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.


    சுதா கொங்கரா - ஜி.வி.பிரகாஷ்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் படத்தின் பாடல்கள் ரெக்கார்ட் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இயக்குனர் சுதா கொங்கராவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் பல விருதுகளை குவித்துள்ளது.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்ததோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது.

     

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று

    இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் 8 விருதுகளை குவித்துள்ளது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது.

     

    சார்ப்பட்டா பரம்பரை

    சார்ப்பட்டா பரம்பரை

    மேலும் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கு சிறந்த நடிகர் (ஆர்யா), சிறந்த பாடலாசிரியர் (அறிவு), சிறந்த துணை நடிகர் (பசுபதி) ஆகிய 3 விருதுகளை இப்படம் கைப்பற்றியுள்ளது.

    • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.

    இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

    குழந்தைகளுடன் சூர்யா-ஜோதிகா

    குழந்தைகளுடன் சூர்யா-ஜோதிகா

     

    இதையடுத்து 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகாவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

     

    குடும்பத்துடன் சூர்யா-ஜோதிகா

    குடும்பத்துடன் சூர்யா-ஜோதிகா

    இந்நிலையில் இதுகுறித்து சூர்யா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு அதனுடன் இரு புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில், என்றும் நன்றியுள்ளவள் சுதா! வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது அன்பான ரசிகர்களுக்காக!! என்று பதிவிட்டுள்ளார். அவர் இணைத்துள்ள அந்த புகைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா பெற்று கொண்ட பதக்கத்தை சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் தாய் லஷ்மி குமாரி இருவரின் கழுத்தில் அணிய வைத்து அழகு பார்த்துள்ளனர். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறனர். 

    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார், 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.


    சூர்யா - அக்‌ஷய்குமார்

    2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் உள்ள மூன்று பாடல்களின் ரெக்கார்டிங் முடிவடைந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • 68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
    • 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'சூரரைப் போற்று' திரைப்படம் ஐந்து பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


    சூரரைப் போற்று

    இதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் சிறந்த திரைக்கதைக்கான விருது ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்கரா இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிறந்த பியூச்சர் ஃபிலிம் 'சூரரைப் போற்று' படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து,  படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

    • சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருந்த சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் ரீமேக்கில் பட பெயரை வைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருந்த சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தில் அக்‌ஷய்குமார் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு பெயர் வைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று

    ஊடகங்கள் ஆளுக்கு ஒரு பெயரை யூகத்தின் அடிப்படையில் வெளியிட்டு வருகின்றனர். இது பற்றி தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா கூறியதாவது, படத்திற்கு உரிய நாளில் தலைப்பு அறிவிக்கப்படும் அதற்குள் வதந்தியான பெயர்களை கூற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். 

    ×