search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதி பெயர்"

    • சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்களின் நினைவாக அல்லது சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டது.
    • சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்கள் இளைஞர்களிடையே பிரச்சினைகளை உருவாக்கும்.

    திருப்பூர் :

    பெயர்களில் சாதி அடையாளத்தைப் பயன்படுத்துவதை தமிழ்நாடு முற்றிலும் ஒழித்துவிட்டது. ஆனால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள சாலைகளில் ெதரு பெயர் பலகைகளில் இன்னும் சாதி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலகைகள் அகற்றப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    இது குறித்து பல்லடம் நுகர்வோர் விழிப்புணர்வு பேரவை தலைவர் கே.வி.எஸ்.மணிகுமார் கூறியதாவது:-பல்லடத்தில் சாதி பெயர்களை கொண்ட தெருப் பலகைகளின் பெயர்கள் உள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்களின் நினைவாக அல்லது சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டது.

    அந்தக்காலங்கள் போய்விட்டன. சமூக நீதி மற்றும் சமூக சீர்திருத்தங்கள் பற்றி பேசுகிறோம் .ஆனால் சாதி பெயர்களை காட்ட அனுமதிக்கிறோம். சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்கள் இளைஞர்களிடையே பிரச்சினைகளை உருவாக்கும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக தெரு பலகைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க கோரி வருகிறோம். பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பல தெரு பெயர்களில் சாதி பெயர்கள் உள்ளன. வார்டு இரண்டில்பட்டியல் சாதி சமூகத்தை குறிக்கும் தெரு உள்ளது.இதே வார்டில் மற்றொரு சாதி பெயருடன் முடிவடையும் பல தெருக்கள் உள்ளன.இந்த பெயர்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. எனவே சாதி பெயர்களை அகற்ற வேண்டும் என்றார்.

    இதுகுறித்து பல்லடம் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தெருக்களின் பெயர்களை மாற்ற நகராட்சிக்கு அதிகாரம் இல்லை. அனைத்து கவுன்சிலர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்துவோம். சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஒரு முன்மொழிவை அனுப்புவோம். அவர்கள் இந்த விஷயத்தில் முடிவு செய்வார்கள் என்றார்.

    ×