search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை கூட்டம்"

    • சட்டம், ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவர் அவையில் இருந்து வெளியேறியவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

    வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை சாலிகிராமத்தில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்பில் ஈடுபட்ட பெண் காவலரிடம் தி.மு.க.வினர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனர். தவறு செய்த கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். 2 நாட்கள் கழித்துதான் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

    தவறு செய்தவர்கள் கையும் களவுமாக பிடிபட்ட போதிலும் அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தியபிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. கூறியுள்ளார்.

    தமிழகத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. சாமான்ய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு, வெளிநாட்டில் இருந்து கடல் வழியாக போதைப்பொருள் வருகிறது.

    கஞ்சா, கோகைன், பவுடர் உள்ளிட்ட பல்வேறு வடிவத்தில் போதை பொருள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். எங்கள் கருத்தை சட்டசபையில் வேண்டும் என்றே பதிவு செய்ய மறுக்கிறார்கள்.

    சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவதாக கூறுகிறார். ஆனால் அவ்வாறு செயல்படாதது வருத்தம் அளிக்கிறது.

    தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் என தினமும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தோம்.

    இளைஞர்களின் எதிர்காலம் சீரழியக்கூடாது என்பதற்காகத்தான் எங்கள் கருத்தை பதிவு செய்ய வந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பு தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என தெரிவித்தார்.
    • எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதியுங்கள், நான் பதில் சொல்ல தயார், ஓடி ஒளிய மாட்டேன்.

    தமிழக சட்டசபையில் இன்று 11.30 மணியளவில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசினார்.

    அப்போது அவரது மைக் 'ஆப்' செய்யப்பட்டிருந்தது. அவர் பேசுவதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படவில்லை.

    சபாநாயகர் அப்பாவு, எடப்பாடி பழனிசாமியை பார்த்து நீங்கள் அமருங்கள். உங்களுக்கு நேரம் தனியாக ஒதுக்கப்படும். அப்போது பேசுங்கள். உரிமை மீறல் ஒன்று வந்துள்ளது. அதன் பிறகு உங்களுக்கு பேச அனுமதி தருகிறேன் என்று கூறினார்.

    இந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்கட்சி தலைவரை முதலில் பேச அனுமதி அளியுங்கள். உரிமை மீறலை அப்புறம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சபாநாயகர், அனுமதித்தார். இதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது என்று பேச தொடங்கினார்.

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளது என்று பொத்தாம் பொதுவாக கூறுவது எந்த வகையில் நியாயம்? எந்த பிரச்சினையில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு தான் பேச வேண்டும். இப்படி பேசக் கூடாது. எந்த ஆதாரமும் இல்லாமல் பேசக்கூடாது என்றார்.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, எதிர்க்கட்சி தலைவரை பேச விடுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தான் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போயிருந்தது. அதற்கான பட்டியல் உள்ளது. எதிர்க் கட்சி தலைவர் இப்படி பேசினால் நானும் பேசுவ தற்கு தயாராக உள்ளேன்.

    அதே நேரத்தில் பத்திரிகை செய்தியை அடிப்படையாக வைத்து அவர் பேசுவதற்கு அனுமதி அளிக்க கூடாது என்றார்.

    இந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒன்று பட்ட குரலில் பேசிக்கொண்டே இருந்தனர்.

    சபாநாயகர் அப்பாவு: இதுபோன்ற விஷயங்களை பேசும் போது அரசின் கவனத்தை ஈர்த்து தான் பேச வேண்டும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு உங்களிடம் (சபாநாயகர்) உரிய அனுமதி பெற்று தான் பேச முடியும். எதிர்க்கட்சி தலைவர் பேசினால், நானும் பேச தயாராக உள்ளேன். எங்கேயும் ஓடி ஒளிய மாட்டேன்.

    சபாநாயகர்: இன்று காலையில் உறுப்பினர் வேலுமணி நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் சில பிரச்சினைகள் குறித்து பேசுவார் என்று தெரிவித்து இருந்தார்.

    எடப்பாடி பழனிசாமி: இந்த அவையில் எதிர் கட்சி தலைவர் பேசுவதற்கு உரிய அனுமதியை நீங்கள் தருவதில்லை. அப்படியே நான் பேசினாலும் அதனை பதிவு செய்ய மாட்டீர்கள். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

    சபாநாயகர்: நீங்கள் குறிப்பிடும் சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது. கோர்ட்டிலும் அந்த வழக்கு விவகாரம் நிலுவையில் உள்ளது. அதைப்பற்றி இங்கே பேச அனுமதிக்க முடியாது.

    (அந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனை வரும் எழுந்து நின்று ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பி னார்கள். இதனால் அவை யில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது).

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவரை பேச விடுங்கள். அப்போது தான் அவர் என்ன பேசுகிறார் என்பது தெரியும்.

    எடப்பாடி பழனிசாமி: முதல்-அமைச்சர் பேசுவ தற்கு அனுமதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். என்னை பேச அனுமதிப்ப தில்லை. இது வருத்தம் அளிக்கிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் சபாநாயகரை பார்த்து இது போன்று பேசுவது மரபல்ல.

    சபாநாயகர்: அரசின் கவனத்தை ஈர்த்து தான் குறிப்பிட்ட பிரச்சினை பற்றி பேச முடியும்.

    எடப்பாடி பழனிசாமி:-நான் பேசுவது மக்கள் பிரச்சினை.

    சபாநாயகர்:-மக்கள் பிரச்சினை பற்றி உங்கள் கட்சி உறுப்பினர்கள் ஏற்கனவே, நிறைய பேசி விட்டனர். இன்று எந்த பிரச்சினை பற்றி பேசப் போகிறீர்கள் என்று நீங்கள் சொல்லவில்லை.

    எடப்பாடி பழனிசாமி:-வேண்டுமென்றே பேச அனுமதி மறுக்கிறீர்கள்.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்:-நான் எதிர்க் கட்சி தலைவராக இருந்த போது அப்போதைய சபா நாயகர் தனபாலிடம் உரிய அனுமதி பெற்றே இது போன்ற நேரங்களில் பேசி இருக்கிறேன்.

    எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.):-அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு எப்போதுமே உரிய அனுமதியை வழங்கி இருக்கிறோம்.

    (இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தனது மைக்கில் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் அவர் என்ன பேசுகிறார் என்று கேட்கவில்லை. அவரது மைக் ஆப் செய்யப்பட்டு இருந்தது).

    இதற்கிடையே சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவை பேச அழைத்தார். அவர் எழுந்து பேசிக் கொண்டு இருந்தார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய் தனர்.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இது போன்று ஓடி ஒளியக் கூடாது. என்ன பேசுகிறோம் என்பதை இங்கிருந்து கேட்க வேண்டும்" என்றார்.

    ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறினார்கள்.

    இதைதொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் விளக்கம் அளித்து சட்டசபையில் பேசினார்.

    அப்போது, "அ.தி.மு.க. ஆட்சியில் தான் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து இருந்தது" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    • சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரம் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நடத்துவது மரபாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (திங்கட்கிழமை) சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளது.

    முதல் நாள் கவர்னர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதற்காக அவர் காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு வருவார். 9.50 மணி அளவில் சட்டசபை வளாகத்தில் அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் இருவரும் மரபுபடி பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள்.

    பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்குள் அழைத்து செல்லப்படுவார். அவருக்கு முன்னதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து இருப்பார்கள்.

    கவர்னர் வந்ததும் அவர்கள் அனைவரும் எழுந்து வணக்கம் தெரிவிப்பார்கள். பதிலுக்கு கவர்னர் வணக்கம் தெரிவித்து விட்டு அமருவார். அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும்.

    கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பார். அவர் உரையாற்றி முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தமிழாக்கத்தை வாசிப்பார். அதுவரை கவர்னர் சபையில் அமர்ந்து இருப்பார்.

    வழக்கமாக கவர்னர் உரை புத்தகமாக தயாரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முதல் காகிதம் இல்லாத உரையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கணினி திரையில் உள்ள உரையை கவர்னரும், சபாநாயகரும் பார்த்து படிப்பார்கள். கவர்னர் உரை முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவியை மரபுபடி வழியனுப்பி வைப்பார்கள்.

    அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள்.

    10-ந் தேதி சட்டசபை கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது. எனவே சட்டசபை 11, 12-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் 13-ந்தேதி வரை நடத்துவதற்கு முடிவு செய்வார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டசபை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம்.
    • திமுகவின் ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன.

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேற்றி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும், அவையில் பங்கேற் அதிமுகவினருக்கு ஒரு நாள் முழுக்க தடை விதித்தார்.

    இந்நிலையில், வெளியேறிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார். சட்டசபை வேறு கட்சி வேறு. 62 அதிமுக எம்எல்ஏக்களால் எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமார் தேர்வு செய்யப்பட்டவர். ஆர்.பி.உதயகுமார் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவிகளுக்காக முன்பே கடிதம் கொடுக்கப்பட்டது

    ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்ற தீர்ப்பே உள்ள நிலையில் அதை சபாநாயகர் மதிக்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்களை கொண்ட எதிர்க்கட்சியாக உள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்பதுதான் மரபு.

    நேற்று வரை சரியான முடிவு எடுக்காமல் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.

    எங்களது கருத்துகளை நியாயமாக தெரிவித்தும் சபாநாயகர் எங்களுக்கு முறையான பதில் கூறவில்லை.

    திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டசபை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ளாத திமுக தலைவர் ஸ்டாலின் கொள்ளைபுறம் மூலமாக பழிவாங்குகிறார்.

    திமுகவின் ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • பேரவை வளாகத்தில் இருந்தும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

    சபாநாயகர் உத்தரவின்பேரில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டதை அடுத்து, வெளியேற்றப்பட்டனர்.

    இதையடுத்து, அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதனால் தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களை பேரவை வளாகத்தில் இருந்தும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

    • சட்டசபையில் பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • எம்ஏல்ஏக்கள் முழக்கம் எழுப்பி வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகதத்தில் சட்டசபை கூட்டம் கூச்சல் குழப்பத்திற்கு இடையே தொடங்கியது.

    இதற்கிடையே, எதிர்க்கட்சி துணைத் தலைவர் சர்ச்சை நீடிக்கும் நிலையில் பேரவையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அருகருகே அமர்ந்துள்ளனர்.

    கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையின் இன்றைய அலுவலில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், சட்டசபையில் பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எம்ஏல்ஏக்கள் முழக்கம் எழுப்பி வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    ×