search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா நைட்ரைடர்ஸ்"

    ஐபிஎல் போட்டியில் இன்று நடக்கும் 43-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். #KKRvsRR #IPL2019
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் 43-வது ‘லீக்‘ ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா அணி 4 வெற்றி 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றது. தோல்வியில் இருந்து மீண்டு 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் அந்த அணி உள்ளது.

    கேப்டன் தினேஷ் கார்த்திக், உத்தப்பா ஆகியோரது ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படும் நிலையில் தினேஷ் கார்த்திக் உள்ளார்.

    ஆந்த்ரே ரஸ்சலின் அதிரடி ஆட்டத்தை மட்டுமே அந்த அணி நம்பி இருக்கிறது. பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஏற்கனவே ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் கொல்கத்தா அணி நம்பிக்கையுடன் உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வென்றால் தான் அந்த அணி தொடர்ந்து வாய்ப்பில் இருக்கும். தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். ராஜஸ்தான் அணி கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. #KKRvsRR #IPL2019
    கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா, தாஹிரின் அபார ஆட்டத்தால் கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி. #IPL2019 #CSKvKKR
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.

    சுனில் நரேன் 2 ரன்னிலும், நிதிஷ் ரானா 21 ரன்னிலும், ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்னிலும், ஆண்ட்ரு ரசல் 10 ரன்னிலும் வெளியேறினர். 

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த கிறிஸ் லின் 51 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 82 ரன்னில் அவுட்டானார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன்களை எடுத்தது.



    சென்னை அணி சார்பில் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    இதையடுத்து 162 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. வாட்சன் 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

    டு பிளசிஸ் 24 ரன்னிலும், அம்பதி ராயுடு 5 ரன்னிலும், கேதார் ஜாதவ் 20 ரன்னிலும், டோனி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 58 ரன்னுடனும், ஜடேஜா 31 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். #IPL2019 #CSKvKKR
    ஐதராபாத் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் போராடி தோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.#IPL2018 #KKR #DineshKarthik
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்னில் ஐதராபாத்திடம் தோற்று இறுதி ஆட்டத்துக்கான வாய்ப்பை இழந்தது.

    இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டனும், சென்னையை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    இந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக ஆடினோம். இந்தப் போட்டியில் தோற்றது சிறப்பானதாக இல்லை. ரன் இலக்கை தொடங்கும் போது எங்கள் பக்கமே ஆட்டம் இருந்தது. ஆனால் சில மோசமான ஷாட்களும் ஒரு ரன் அவுட்டும் எங்களிடம் இருந்து போட்டியை மாற்றி விட்டது.

    நான், ராபின் உத்தப்பா ஆகியோர் நன்றாக ஆடி ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். ஆனால் எனது தவறின் மூலம் வெற்றியை நோக்கி செல்ல முடியவில்லை. கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார்.



    இந்த தொடரில் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர். இது அணிக்கு சிறப்பாக அமையும்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.#IPL2018 #KKR #DineshKarthik
    கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது குவாலிபையருக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. #IPL2018 #KKRvRR
    ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே சுனில் நரைன் அவுட்டானார். அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா தலா 3 ரன்னில் வெளியேறினார்கள். மறுமுனையில் விளையாடிய கிறிஸ் லின் 18 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். ஷுப்மான் கில் சிறப்பாக ஆடி 17 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.



    இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. அந்த்ரே ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ராஜஸ்தான் அணி சார்பில் கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரி ஆர்ச்சர், பென் லாப்லின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 170 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்ய ரகானே, ராகுல் திரிபாதி ஆகியோர் இறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 47 ஆக இருக்கும்போது திரிபாதி 20 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ராகானேவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். 

    ரகானே 46 ரன்னில் அவுட்டானார். அரை சதமடித்த நிலையில் சஞ்சு சாம்சனும் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. பின்னி டக் அவுட்டானார்.

    கிளாசனுடன் கிருஷ்ணப்பா கவுதம் இணைந்தார். 2 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியில் இருந்து வெளியேறியது.

    கொல்கத்தா அணி சார்பில்  பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபையருக்கு தகுதி பெற்றது. #IPL2018 #KKRvRR
    ஐதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. #IPL2018 #SRHvKKR
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    இதற்கிடையே, ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

    இந்நிலையில், இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. #IPL2018 #SRHvKKR
    பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான்- பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ஐதராபாத்துடன் மோதுகிறது. #IPL2018
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டம் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (16 புள்ளி), ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 2 அணி எவை எவை என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (14 புள்ளி) மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய 5 அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன. டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    இன்னும் 4 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. அதாவது 8 அணிக்கும் ஒரு ஆட்டமே உள்ளன. இன்றைய போட்டியின் முடிவில் ஒரு அணி வெளியேற்றப்படும்.

    நாளையுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிகிறது. 43-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணியும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    ரன்ரேட் முக்கிய பங்கு வகிப்பதால் வெற்றி பெறும் அணி நிகர ரன்ரேட்டையும் உயர்த்துவது அவசியமாகும். பெங்களூர் அணியின் ரன்ரேட் +0.26 ஆக உள்ளது. ராஜஸ்தான் நிகர ரன்ரேட் -0.39 ஆகும்.

    பட்லா, பென்ஸ்டோர் ஆகியோர் இங்கிலாந்துக்கு திரும்பியது ராஜஸ்தான் அணிக்கு பாதிப்பே. உள்ளூரில் விளையாடுவது மட்டுமே அந்த அணிக்கு சாதகம். அந்த அணியில் கேப்டன் ரகானே, சஞ்சு சாம்சன், ஆர்சிஷார்ட் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். பெங்களூரை ராஜஸ்தான் 19 ரன்னில் தோற்கடித்து இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    பெங்களூர் அணி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வெற்றியை பெற்று ‘பிளே- ஆப்’ சுற்றில் நீடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. விராட் கோலி, டிவில்லியர்ஸ், மொய்ன்அலி போன்ற அதிரடி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல போராடுவார்கள். பந்து வீச்சில் சாஹல், உமேஷ்யாதவ் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும். 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் அணியை பொறுத்தவரை சம்பிரதாயமான ஆட்டமே. ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அந்த அணி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடைசியாக ஆடிய 2 போட்டியில் தோற்றதால் அந்த அணி வெற்றிக்காக போராடும். கேப்டன் வில்லியம்ஸ், தவான், மனிஷ் பாண்டே, யூசுப்பதான் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், புவனேஸ்குமார், ரஷித்கான், சித்தார்த்கவுல் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 14 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி வெற்றி பெற்றால் தகுதி பெறும்.

    தோல்வி அடைந்தால் நாளை நடைபெறும் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மோசமாக தோற்றால் வெளியேறும் நிலையும் ஏற்படலாம். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக போராடுவார்கள். கிறிஸ் லின், உத்தப்பா, கேப்டன் தினேஷ் கார்த்திக், நரேன், ரஸ்சல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    கொல்கத்தா அணி ஏற்கனவே ஐதராபாத்திடம் 5 விக்கெட்டில் தோற்றது. இதனால் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடும்.

    பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆட்டங்கள் என்பதால் இன்றைய 2 போட்டிகளும் பரபரப்பாக இருக்கும். #IPL2018
    ×