search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள் சோகம்"

    சோழவந்தான் அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சோழவந்தான்:

    சோழவந்தான் அருகே உள்ள அய்யப்பன் நாயக்கன் பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் விஜி (வயது 43) விவசாயி.

    இவரது மகள் லாவண்யா (19). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார்.

    வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் லாவண்யா மட்டும் தனியே இருந்தார். மன உளைச்சலுடன் இருந்த அவர், அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். வெளியே சென்றிருந்த குடும்பத்தினர் வீடு திரும்பியதும் லாவண்யா, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து காடுபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜோதிமுத்து தலைமையில் போலீசார் விரைந்து சென்று லாவண்யா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லாவண்யாவின் சகோதரர், இதே வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அதில் இருந்தே லாவண்யா, மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

    ஒரே வீட்டில் அண்ணன்- தங்கை அடுத்தடுத்து தற்கொலை செய்திருப்பது அந்தப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆரணி அருகே தி.மு.க. பேனர் வைக்கப்பட்டதால் தகராறு ஏற்பட்டு தாலிகட்டும் நேரத்தில் திருமணம் நின்றது. இதனால் மணப்பெண் உறவினரை மணந்தார்.

    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள ராந்தம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். தி.மு.க. பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மகள் சந்தியா. இவருக்கும் அரையாளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். மாப்பிள்ளை வீட்டார் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். மணமக்களை வாழ்த்தி ராஜகோபால் தரப்பினர் தி.மு.க. பேனர் வைத்தனர். தி.மு.க. கட்சி கொடி கட்டியிருந்தனர்.

    நேற்று இரவு மணமக்கள் அழைப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


    இன்று அதிகாலை திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்தது. அப்போது மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த தி.மு.க. பேனரால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. திருமண செலவு எங்களுடையது அதில் மணப்பெண் வீட்டார் எப்படி தி.மு.க. பேனர் வைக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். இது பின்னர் மோதலாக மாறியது. கைக்கலப்பும் ஏற்பட்டது.

    இதனால் திகைத்து போன மணப்பெண் சந்தியா திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பிரச்னை என்றால் இன்னும் பின்னர் என்ன பிரச்னை எல்லாம் ஏற்படுமோ என பயந்தார். இதனால் எனக்கு இந்த திருமணத்தில் விரும்பமில்லை என்று கூறினார்.

    இதனால் மணமகன் வீட்டார் கோபித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

    திகைத்து போன மணப்பெண் வீட்டார் எப்படியும் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என எண்ணினர். ராஜகோபாலின் தங்கை மகன் ஏழுமலை (27) என்பவரிடம் திருமணம் குறித்து பேசினர். அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து ஏழுமலைக்கும் சந்தியாவுக்கும் அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மலேசியாவில் புதுக்கோட்டை வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கே.கே.பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் சார்லஸ் (வயது 40). இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி. மேலும் இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மலேசியாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் மாஸ்டர் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவர் தன் குடும்பத்தை காப்பற்றவும், குழந்தைகளை நன்கு படிக்க வைப்பதற் காகவும், மலேசியாவிற்கு  பிழைப்பு தேடி சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது. ஆனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக  சார்லசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கருதுகின்றனர். தொடர்ந்து இவரது உடலை சொந்த ஊருக்கு உடனடியாக கொண்டு வருவதற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மற்றும் மத்திய, மாநில, அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    ஆலங்குடி, கறம்பக்குடி பகுதியில் மலேசிய நாட்டில் சார்லஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அவரின் உடலை மீட்டு வரவும், அவரின் சாவிற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கையினை உறவினர்கள் முன்வைக்கின்றனர். மலேசியாவில் இறந்த சார்லஸ்சுக்கு உமா என்ற மனைவியும், சர்ச்சின், அபிஷேக் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
    செங்கத்தில் கல்லூரி பஸ் மோதி அதே கல்லூரி மாணவி பலியானார். மாணவியின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    செங்கம்:

    செங்கம் கொட்டாவூர் அண்ணாநகரை சேர்ந்தவர் குமுதா (வயது 19). இவர் புதுப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டின் அருகே வழக்கம் போல் கல்லூரி பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது, மாணவி படிக்கும் அதே கல்லூரி பஸ் அதிவேகமாக வந்து சாலை ஓரம் காத்திருந்த மாணவி மீது மோதியது. இந்த விபத்தில் மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார்.

    விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர், பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர். மாணவியின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்ததும், செங்கம் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    மகள் மாயமானது குறித்து ஊரார் தவறாக பேசிவிடுவார்களோ என்று எண்ணி கட்டிட தொழிலாளி தீக்குளித்து இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பர்வதனஅள்ளி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 38). கட்டிடதொழிலாளி. இவரது மனைவி விமலாராணி (31). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன அவர்கள் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    கடந்த 11-ந்தேதி அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார். தனது மகள் மாயமாகி மீண்டும் திரும்பி வந்ததால் ஊரார் ஏளனமாக பேசி விடுவார்களோ என்று கந்தசாமி மிகவும் மனவருத்தத்துடன் காணப்பட்டார்.

    நேற்று மகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுவதாக பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது. விமலாராணி தனது கணவரிடம் பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி வருமாறு கூறினார். அதற்கு அவர் நான் வீட்டிலேயே இருக்கிறேன். நீ பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி வா என்று கூறி விமலா ராணியை அனுப்பி வைத்தார்.

    உடனே விமலாராணி பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி கொண்டு திரும்பி வந்தார். அப்போது அங்கு உடலில் மண்எண்ணையை ஊற்றி கொண்டு கையில் தீப்பெட்டியுடன் கந்தசாமி நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட விமலா ராணி வேண்டாம் என்று கதறினார். அதற்குள் அவர் உடலில் தீவைத்துக் கொண்டார். 

    இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கந்தசாமியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகள் மாயமானது குறித்து ஊரார் தவறாக பேசிவிடுவார்களோ என்று எண்ணி கட்டிட தொழிலாளி தீக்குளித்து இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தூக்க கலக்கத்தில் கழிப்பறை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.
    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். அவருடைய மகன் விஷ்வத் பாலா (வயது 4). பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த சிறுவன் விஷ்வத் பாலா, கழிப்பறைக்கு சென்றான். தூக்க கலக்கத்தில் இருந்த அவன், படிக்கட்டில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதில் சிறுவனின் பின்தலையில் அடிபட்டு அவன் அலறினான். உடனே சிறுவனின் தாயார் ஓடிவந்து, தலையில் லேசாகத்தான் அடிபட்டுள்ளது என்று நினைத்து தடவி விட்டுள்ளார். தைலமும் தேய்த்துவிட்டதாக தெரிகிறது. பின்னர் சிறுவனை தூங்க வைத்தார்.

    காலையில் எழுந்து பார்த்த போது, சிறுவன் அசைவற்று கிடப்பதை கண்டு அவனுடைய தாயாரும், குடும்பத்தினரும் பதறினர். உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் விஷ்வத்பாலாவை டாக்டர் பரிசோதித்த போது, அவன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மகனை பிணக்கோலத்தில் பார்த்து அவனுடைய தாயாரும், குடும்பத்தினரும் கதறியது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் முதுகுளத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி, உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முதுகுளத்தூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் உடல் அவனுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    அஞ்சுகிராமம் அருகே பெண் என்ஜினீயர் திடீரென மாயமானதால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.
    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கு, அவரது பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

    அப்போது நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பற்றி அவர்களுக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து பெண் வீட்டார் அவரை தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இரு வீட்டாரும் கலந்து பேசி உறவினர்களுடன் சென்று அது பற்றி பேசினார்கள். இருவீட்டாருக்கும் அதில் பூர்ண திருப்தி ஏற்பட்டதால் இந்த திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டது.

    மேலும் பெண் என்ஜினீயருக்கும் அந்த வாலிபருக்கும் மிகவும் சிறப்பாக நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் திருமணத்தை இன்று நடத்து வது என்றும் நாள் குறிக்கப்பட்டது. இதனால் இரு வீட்டாரும் திருமண வேலைகளை தொடங்கினார்கள். திருமண அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இரவு வீட்டில் இருந்த மணப்பெண் திடீரென்று மாயமானார். திருமணம் நடைபெற நாள் நெருங்கிவிட்ட நிலையில் அவர் மாயமானது அந்த குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்கள் தங்கள் மகளை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். நேற்று வரை தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்றும் தெரியவில்லை.

    இதைதொடர்ந்து அவர்கள் மணப்பெண் மாயமானது பற்றி மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். மாப்பிள்ளை வீட்டில் திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட வந்த நிலையில் உறவினர்களும் அவர்களது வீட்டிற்கு வந்திருந்தனர்.

    மணப்பெண் மாயமானது குறித்து அதிர்ச்சி தகவல் கிடைத்ததும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார்கள். மகிழ்ச்சியாக காணப்பட்ட திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. உடனடியாக திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

    இதற்கிடையில் திருமணம் நிறுத்தப்பட்டது பற்றிய தகவல் தெரியாத உறவினர்கள் பலர் இருவீட்டிற்கும் வந்தனர். அதன்பிறகே அவர்களுக்கு மணமகள் மாயம் காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர்களும் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.
    புதுமாப்பிள்ளை மாயமானதால் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்று போனது. இதனால் திருமண வீடு களையிழந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாப்பிள்ளைக்காட்டை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் வினோத் (வயது 27).தனியார் பள்ளி ஆசிரியரான இவர் வீட்டிலும் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார்.

    இந்த நிலையில் வினோத்துக்கும், கரூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இன்று காலை கரபுரநாதர் கோவிலில் திருமணம் நடத்தவும், மாலையில் கிச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மாப்பிள்ளை வீட்டார் நேற்று காலை கரூருக்கு சென்று மணப்பெண்ணை அழைத்து வர தயாராகினர். அப்போது வெளியில் சென்ற வினோத் திடீரென மாயமானார்.அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வினோத்தை அக்கம் பக்கத்தில் தேடினர். எங்கு தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த தகவல் அறிந்த பெண் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று நடைபெற இருந்த திருமணமும் நின்று போனது. திருமண வீடு களையிழந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    வினோத்தின் தாய் இறந்து விட்டதால் அவரது பாட்டி செல்வி தான் வினோத்தை கவனித்து வந்தார். வினோத் மாயமானது குறித்து கிச்சிப்பாளையம் போலீசில் செல்வி புகார் கொடுத்தார். வினோத்தின் தந்தை ராஜமாணிக்கத்திடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை என்று கூறிவிட்டார்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்தும், ஒரு பெண்ணும் காதலித்தாக கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெற இருந்த திருமணம் பிடிக்காமல் அந்த காதலியுடன் அவர் மாயமாகி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து விசாரித்து வரும் போலீசார் அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    தஞ்சை புது ஆற்றில் நண்பர்களுடன் குளித்த வாலிபர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். வாலிபர் இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானம்புசாவடி ஆடக்கார தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 25). இவருக்கு கோகிலா என்ற மனைவியும், நிக்சன் என்ற 3 வயது குழந்தையும் உள்ளது. ஸ்டீபன்ராஜ், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தெருவில் உள்ள ஒரு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் வேலைப் பார்த்து வந்தார்.

    நேற்று காலை ஸ்டீபன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பட்டுக்கோட்டை - விளார் புறவழிச்சாலையில் உள்ள புது ஆற்றங்கரையில் குளிக்க சென்றனர். பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி உற்சாக குளியலில் ஈடுபட்டிருந்தனர். தண்ணீர் அதிகமாக இருந்ததால் சிறிது நேரத்திற்கு பின்னர் ஸ்டீபன் ராஜால் நீந்த முடியவில்லை. அப்போது அவரது நண்பர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் என்று ஸ்டீபன் ராஜை அழைத்துள்ளனர். ஆனால் அவரால் கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் மூழ்கினார். 

    இதைத் தொடர்ந்து ஸ்டீபன்ராஜ் நண்பர்கள் அவரை ஆற்றில் இறங்கி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து தஞ்சை தாலுகா போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். போலீசாரும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய ஸ்டீபன் ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நெய்வாய்க்கால் அருகே ஸ்டீபன்ராஜ் உடல் கரை ஒதுங்கியது. அங்கு சென்று போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புது ஆற்றில் குளிக்க சென்ற போது வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கிணற்றில் நீச்சல் பழகிய போது பெண் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராசிபுரம்:

    சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் தனது மனைவி கோகிலாவுடன் (வயது 23). இவர் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிராமம் புரசல்பட்டியில் உள்ள அவரது உறவினர் பிரகாஷ் வீட்டுக்கு வந்திருந்தார். 

    நேற்று மதியம் அக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முனியப்பன் கோவில் அருகிலுள்ள விவசாயி ஒருவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கோகிலா நீச்சல் பழக சென்றார். அவருடன் கணவர் சுப்பராயன் மற்றும் உறவினர்கள் சென்றனர். கிணற்றின் ஆழம் எவ்வளவு என்பது தெரியாமல் கோகிலா கிணற்றில் இறங்கியபோது தவறி விழுந்து கிணற்று தண்ணீரில் மூழ்கினார். 

    கிணற்றில் 35 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. இதனால் மின் மோட்டார் வைத்து தண்ணீரை வெறியேற்றினார்கள். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கோகிலாவை உடனடியாக மீட்க முடியவில்லை. இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் நிலைய பொறுப்பு அதிகாரி குணசேகரன் தலைமையில் விரைந்து சென்றனர்.  

    அவர்கள் 6 மணி நேரம் போராடி கோகிலாவை இன்று விடியற்காலை 2 மணியளவில் சடலமாக மீட்டனர்.  உறவினர் வீட்டுக்கு வந்த கோகிலா கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    ×