search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman engineer missing"

    பெண் என்ஜினீயர் மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி வயலூர்ரோடு அம்மையப்பநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் தீபா (வயது 23), சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதனால் வேலையை விட்டு வருமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் தீபா சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளார்.

    பின்னர் வீட்டில் இருந்த அவர் சோகத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அஞ்சுகிராமம் அருகே பெண் என்ஜினீயர் திடீரென மாயமானதால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.
    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கு, அவரது பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

    அப்போது நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பற்றி அவர்களுக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து பெண் வீட்டார் அவரை தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இரு வீட்டாரும் கலந்து பேசி உறவினர்களுடன் சென்று அது பற்றி பேசினார்கள். இருவீட்டாருக்கும் அதில் பூர்ண திருப்தி ஏற்பட்டதால் இந்த திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டது.

    மேலும் பெண் என்ஜினீயருக்கும் அந்த வாலிபருக்கும் மிகவும் சிறப்பாக நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் திருமணத்தை இன்று நடத்து வது என்றும் நாள் குறிக்கப்பட்டது. இதனால் இரு வீட்டாரும் திருமண வேலைகளை தொடங்கினார்கள். திருமண அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இரவு வீட்டில் இருந்த மணப்பெண் திடீரென்று மாயமானார். திருமணம் நடைபெற நாள் நெருங்கிவிட்ட நிலையில் அவர் மாயமானது அந்த குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்கள் தங்கள் மகளை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். நேற்று வரை தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்றும் தெரியவில்லை.

    இதைதொடர்ந்து அவர்கள் மணப்பெண் மாயமானது பற்றி மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். மாப்பிள்ளை வீட்டில் திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட வந்த நிலையில் உறவினர்களும் அவர்களது வீட்டிற்கு வந்திருந்தனர்.

    மணப்பெண் மாயமானது குறித்து அதிர்ச்சி தகவல் கிடைத்ததும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார்கள். மகிழ்ச்சியாக காணப்பட்ட திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. உடனடியாக திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

    இதற்கிடையில் திருமணம் நிறுத்தப்பட்டது பற்றிய தகவல் தெரியாத உறவினர்கள் பலர் இருவீட்டிற்கும் வந்தனர். அதன்பிறகே அவர்களுக்கு மணமகள் மாயம் காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர்களும் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.
    ஆரணி அருகே வீட்டில் இருந்த பெண் என்ஜினீயர் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் பெண் என்ஜினீயரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆரணி அருகே உள்ள காரணி கிராமம் போலாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 48) விவசாயி ஆவார். இவரது மூத்த மகள் கம்யூட்டர் என்ஜினீயர் கவிதா (வயது 23) ஆவார்.

    தச்சூர்கூட்டுச்சாலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று காலை தினகரன் தனது மனைவியுடன் வயல்வெளிக்கு சென்றார். வீட்டில் கவிதா மற்றும் தினகரனின் இளைய மகள் கீர்த்தனா மட்டும் இருந்தனர். மாலை வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த கவிதாவை காணாவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கவிதாவை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் காணாமல்போன தனது மகளை கண்டு பிடித்து தருமாறு தினகரன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.  

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண் என்ஜினீயரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும், பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து  வருகின்றனர்.  வீட்டில் இருந்த பெண் என்ஜினியர் காணாமல் போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×