என் மலர்
நீங்கள் தேடியது "relatives worry"
செங்கம்:
செங்கம் கொட்டாவூர் அண்ணாநகரை சேர்ந்தவர் குமுதா (வயது 19). இவர் புதுப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டின் அருகே வழக்கம் போல் கல்லூரி பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது, மாணவி படிக்கும் அதே கல்லூரி பஸ் அதிவேகமாக வந்து சாலை ஓரம் காத்திருந்த மாணவி மீது மோதியது. இந்த விபத்தில் மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார்.
விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர், பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர். மாணவியின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்ததும், செங்கம் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.






