search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vennandur"

    • வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
    • வீடு, வீடாக சென்று சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இந்தப் பேரணியில் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, பழந்தின்னிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி வெங்கடேஸ்வரன், துணைத்தலைவர் நல்லதம்பி, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வீடு வீடாகச் சென்று சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதேபோல் வெண்ணந்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை தொடர்பான விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வெண்ணந்தூர் அருகே கடும் வெயில் காரணமாக ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வெண்ணந்தூர்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ளது கல்கட்டானூர் ஏரி. இந்த ஏரியில் கட்லா, ரோகு, பட்டை, கெளுத்தி போன்ற மீன்கள் குத்தகைதாரர்கள் மூலம் வளர்க்கப்பட்டு வருகிறது.

    ஏரியில் நீர்மட்டம் குறைந்ததாலும், வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் இருப்பதாலும் தண்ணீர் வெப்பமானது. இதனால் அந்த ஏரியில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன. இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஏரிக்கு சென்று செத்து மிதந்த மீன்களை பார்த்து வேதனை அடைந்தனர்.

    சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீர் மணிமுத்தாறு வழியாக ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, ஓ.சவுதாபுரம் சுற்றுவட்டார பகுதி ஏரிகளை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து தண்ணீர் கல்கட்டானூர் ஏரியை வந்து சேருகிறது. கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைந்து ஏரியில் நீர்மட்டம் குறைவாக இருந்தது.

    தற்போது கல்கட்டானூர் சின்ன ஏரியில் வளர்க்கப்பட்ட மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முற்றிலும் வற்றி மீன்கள் அனைத்தும் செத்து போகும் அபாயம் உள்ளது. மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    கிணற்றில் நீச்சல் பழகிய போது பெண் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராசிபுரம்:

    சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் தனது மனைவி கோகிலாவுடன் (வயது 23). இவர் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிராமம் புரசல்பட்டியில் உள்ள அவரது உறவினர் பிரகாஷ் வீட்டுக்கு வந்திருந்தார். 

    நேற்று மதியம் அக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முனியப்பன் கோவில் அருகிலுள்ள விவசாயி ஒருவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கோகிலா நீச்சல் பழக சென்றார். அவருடன் கணவர் சுப்பராயன் மற்றும் உறவினர்கள் சென்றனர். கிணற்றின் ஆழம் எவ்வளவு என்பது தெரியாமல் கோகிலா கிணற்றில் இறங்கியபோது தவறி விழுந்து கிணற்று தண்ணீரில் மூழ்கினார். 

    கிணற்றில் 35 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. இதனால் மின் மோட்டார் வைத்து தண்ணீரை வெறியேற்றினார்கள். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கோகிலாவை உடனடியாக மீட்க முடியவில்லை. இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் நிலைய பொறுப்பு அதிகாரி குணசேகரன் தலைமையில் விரைந்து சென்றனர்.  

    அவர்கள் 6 மணி நேரம் போராடி கோகிலாவை இன்று விடியற்காலை 2 மணியளவில் சடலமாக மீட்டனர்.  உறவினர் வீட்டுக்கு வந்த கோகிலா கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    ×