search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரங்கம்"

    • பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    சென்னை:

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டுக்காக வந்து உள்ளனர்.

    அதில் 450-க்கும் மேற் பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

    நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற மாநாட்டில் முதல் நாளிலேயே ரூ.5½ லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், டி.வி.எஸ். வின் பாஸ்ட் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழிலை தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    மேலும் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக காலணி தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, போக்குவரத்து விமான உதிரி பாகங்கள், ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை தளவாடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு எலக்ட்ரானிக்ஸ், வேளாண் உணவு, பொறியியல் மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அமர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில் வல்லுநர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    இன்று 2-ம் நாள் மாநாட்டில் பெரிய தொழில் அதிபர்கள் மட்டுமின்றி சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட் பகுதிகளில் தொழில் நடத்தும் குறு-சிறு தொழில் அதிபர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வருகை தந்துள்ளனர்.

    இதற்காக குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் மின் வாகனம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், ஜவுளி வாகன உற்பத்தி, வீட்டு உபயோகப் பொருட்கள், விண்வெளி தொழில் நுட்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.

    இதில் 20 நிறுவனங்கள் தமிழக அரசால் முதலீட்டு உதவி செய்யப்பட்டதாகும். மேலும் 10 நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுபவையாகும். இதை முதலீட்டாளர்களும், பொது மக்களும் பார்வையிட்டனர்.

    முதலீட்டாளர்கள் முன்னிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி விளக்கங்களை கூறினார்கள். இதற்கான அமர்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறு-சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஆகியோர் முன்னிலையில் இன்றும் தொழில் அதிபர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

    இன்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்து நிறைவு பேருரை நிகழ்த்துகிறார். அப்போது அவரது முன்னிலையில் மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்போது எத்தனை லட்சம் கோடிக்கு முதலீடுகள் வரப் பெற்றுள்ளன என்ற தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணெலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றியதுடன் அந்த இடத்தில் அடிக்கல் நாட்டி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

    திருவட்டார்:

    பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவட்டார் வட்டம், குல சேகரம் பேரூராட்சி செருப்பாலூர் கல்லடிமா மூடு பகுதியில் பொதுப்ப ணித்துறைக்கு சொந்தமான 4.83 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ஒப்படைக்கப் பட்டதைத் தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணியை முதல்-அமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதையடுத்து செருப்பாலூர் கல்லடிமா மூட்டில் மினி விளையாட்டரங்கம் அமையவுள்ள இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றியதுடன் அந்த இடத்தில் அடிக்கல் நாட்டி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பத்மநாபபுரம் தொகு திக்குட்பட்ட கல்லடி மாமூட்டில் மினி விளை யாட்டரங்கம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த தமிழக முதல்-அமைச்சருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் நன்றி தெரி வித்துக்கொள்கி றேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே நாகர்கோ வில் சட்டமன்ற தொகுதியில் அண்ணா விளை யாட்டரங்கம் உள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளிலும் மினி விளையாட்டரங்கங் கள் அமைய உள்ளன.

    இதில் முதற்கட்டமாக பத்மநாபபுரம் தொகு திக்குட்பட்ட குல சேகரம் கல்லடிமாமூட்டில் அமைக் கப்படுகிறது. அடுத்த கட்டமாக குளச்சல் தொகுதியில் அமைக்கப்படும். அதனை தொடர்ந்து கிள்ளியூர், விளவங்கோடு, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும். குறிப் பிட்ட ஒரு இடத்தை மையமாக கொண்டு இந்த அந்த விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படாமல் அனைத்து பகுதி மக்க ளுக்கும் பயன் கிடைக்க வேண்டுமென்பதற்காக இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செய்தித்தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட் வரவேற்றார். குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸ் நன்றி கூறினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், திருவட்டார் தாசில்தார் முருகன், மாவட்ட அரசு வக்கீல் ஜான்சன், குலசேரம் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், குலசேகரம் பேரூராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ஜே.எம்.ஆர். ராஜா, கலை இலக்கிய பகுத்தறிவு அணி தலைவர் ஜெஸ்டின் பால்ராஜ், குலசேகரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜெபித் ஜாஸ், வட்டார காங்கிரஸ் பொருளாளர் ஜேம்ஸ் ராஜ் மற்றும் குலசேகரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நினைவரங்கம் அமைக்க தமிழக அரசு ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

    கோவை,

    கோவை பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.பழனிச்சாமி, முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகிய முன்னோடிகளுக்கு உருவச்சிலை மற்றும் நினைவரங்கம் அமைப்பது என்று தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து சின்னாம்பாளையம் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் உருவச்சிலைகள் மற்றும் நினைவரங்கம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக செய்தி மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவர் சின்னாம்பாளையம் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் உருவச்சிலைகள் மற்றும் நினைவரங்கம் அமைக்கும் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்கு பாடுபட்ட முக்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களுக்கு அரசு சார்பில் மணி மண்டபம் மற்றும் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களுக்கு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம், ரூ.4.30 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இது 2 அடுக்கு மாடிகள் உடைய கட்டிடமாக அமையும். அங்கு உள்ள கீழ்த்தளத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடத்து வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    மேல்த ளத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனம் குறித்து இன்றைய தலைமுறையினர் அறியும்வகையில் திட்டப்பணிகள் அடங்கிய மாதிரி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்பிறகு உருவச்சிலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறி உள்ளார்.

    • 1.1 கி.மீ. தொலைவுள்ள நடைப்பயிற்சி பாதை, நுழைவுவாயில் வளைவு ஆகியவை கட்டப்பட்டன.
    • இவற்றை நாளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் ஸ்கேட்டிங் தளம் உள்ளிட்டவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறாா்.

    இந்த விளையாட்டரங்க–த்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்கேட்டிங் தளம், இரு கையுந்து பந்து தளங்கள், 1.1 கி.மீ. தொலைவுள்ள நடைப்பயிற்சி பாதை, நுழைவுவாயில் வளைவு ஆகியவை கட்டப்பட்டன.

    இவற்றை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.

    இதையொட்டி, அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா , ஸ்ரீகாந்த்,

    மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நேர்முக தேர்வு நடைபெறும்.
    • 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.18,000 வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு இந்தியா திட்ட நிதியுதவியில் துவக்கநிலை பளுதூக்குதல் பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் அமைக்கப்படவுள்ளது.

    விளையாடு இந்தியா மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனைபடைத்த 40 வயதுக்குட்பட்ட பளுதூக்குதல் வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்ப டவுள்ளார்.

    விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாகவும், தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

    சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம்வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்க ளுக்கிடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.18,000/- வழங்கப்படும். இது நிரந்தரப் பணி அல்ல.

    முற்றிலும்த ற்காலிகமானதாகும். இதன் அடிப்டையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.

    இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) வருகிற 3-ந்தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் என்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

    தகுதி வாய்ந்த விண்ணப்பதா ரர்களுக்கு நேர்முகத் தேர்வு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

    உடற்தகுதி, விளையாட்டு த்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

    தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட அலுவலக தொலைபேசி எண்.04362-235 633 என்ற எண்ணிலும் மற்றும் கைபேசி எண்.7401703496 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகின்றார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கையுந்து பந்து விளையாட்டிற்கு மாணவ- மாணவிகளுக்கு வருகிற 13-ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ.டேவிட்டேனியல் வெளியிட்டுள்ள செய்திகுறி ப்பில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக வருங்காலங்களில் ஏப்ரல்-2023 முடிய நடை பெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு கொள்ள உள்ள தமிழக அணிக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்திட உத்தேசிக்கப் பட்டுள்ளது.

    ேமலும் தேர்வு போட்டிகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

    வளை கோல்பந்து விளையாட்டிற்கு (மாணவர்கள் மட்டும்) 13.12.22 அன்று அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் சிவகங்கையிலும், கையுந்து பந்து விளையாட்டிற்கு மாணவ- மாணவியர்களுக்கு 13.12.22 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்னை–யிலும், கால்பந்து விளையாட்டிற்கு (மாணவிகள் மட்டும்) 13.12.22 அன்று ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் சென்னையிலும், 0 விளையாட்டிற்கு மாணவ-மாணவிகளுக்கு 14.12.22 அன்று ஜவஹர் லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்னையிலும் நடைபெற உள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை 7 மணிக்கு நடைபெறும்.

    இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்ள தகுதிகள், வயது வரம்பு 1.1.2004 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.

    ஆதார் கார்டு 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதி சான்றிதழ், நகராட்சி / கிராம நிர்வாக அலுவலரிட் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் (ஜனவரி 2012 ஆம் ஆண்டிற்குள்ளும் 5 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்).

    தேர்வு போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து தேர்வு போட்டியில் பங்கு கொள்ள வேண்டும்.

    எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், திறமையும் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேற்கண்ட மாநில அளவிலான தேர்வு போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட பிரிவு அலுவலக தொலைபேசி எண் 04362-235633 என்ற எண்ணிலும் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைபேசி எண் 7401703496 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
    • வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் மாதிரிபுகைப்படத்தினை அரசுக்கு அளித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 6.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடரில், 2021- 2022ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, வீரபாண்டிய கட்டபொம்மனை நயவஞ்சகமாகத் தூக்கிலிட்ட ஆங்கிலேயருக்குப் பாடம் புகட்டும் வகையில் தஞ்சையிலிருந்து திருப்பூர் மாவட்டம் தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆண்ட்ரூ கேதிஷ் என்ற ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர்நாயக்கர் நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில் அவருக்கு உருவச்சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூ.2 கோடியே 60லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

    மேலும் மேற்படி அரங்கம் மற்றும் சிலை அமைத்திட ஏதுவாக, 2021-2022ம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டத் திட்ட மதிப்பீட்டினை திருப்பூர் கலெக்டர் மேலொப்பத்துடன் அனுப்பி வைக்குமாறும், முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற ஏதுவாக, ஐந்து மாதிரி வரைபடங்களையும் அனுப்பி வைக்குமாறும் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல முதன்மைதலைமைப் பொறியாளரிடமும் (கட்டடங்கள்) கேட்டுக்கொள்ளப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு திருப்பூர் மாவட்டத்தில் உருவச்சிலையும், அரங்கமும் அமைத்திட நிர்வாக அனுமதியளித்து ஆணை வெளியிடப்பட்டது.

    இந்தநிலையில் 2021-2022-ஆம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ரூ.2,60,00,000 (ரூ. 2கோடியே 60லட்சம் மட்டும்) திட்ட மதிப்பீட்டினை அனுப்பி வைத்து, அத்திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.திட்ட மதிப்பீட்டில் உள்ளடக்கியுள்ள முக்கிய பணிகளின் விவரம் பின்வருமாறு:-

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை வட்டம், தளி-2 கிராமம், மஜரா திருமூர்த்தி நகர், பொதுப்பணித்துறை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள 0.80.98 ஹெக். நிலத்தினை தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு அரங்கம் அமைத்திடவும்,உருவச்சிலையினை உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தின் முன் பகுதியில் அமைத்திட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு முன்நுழைவு அனுமதி வழங்கியும் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கரின் வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதிரிபுகைப்படத்தினை, இணைத்தனுப்பி தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளார்.மேலும் திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.2.53,26,974 க்கு நிதியொப்பளிப்பு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • பூச்சந்தை பகுதியில் நவீன வசதிகளுடன் பூச்சந்தை வளாகம் அமைக்க வேண்டும்.
    • மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம் , தஞ்சை தொகுதிக்குட்பட்ட இடங்களில் நிறைவேற்ற வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் போக்குவரத்திற்கு இடையூறாகவும் அதிக விபத்துகள் ஏற்படும் காரணத்தாலும்அ ப்பாலத்தை மேரீஸ் கார்னரிலிருந்து ராமநாதன் ரவுண்டானா வரை நீட்டிக்க வேண்டும்.

    தஞ்சை சட்டமன்ற தொகுதியில் ஆண்,பெண் இருபாலரும் பயிலும் வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும். தஞ்சைகாட்டுத்தோட்டம் பகுதியில்ர அரசுவேளாண்கல்லூரி அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை செய்யும் வசதி அமைத்து தர வேண்டும். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நவீன அரிசி ஆலை அமைத்து தர வேண்டும்.

    மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

    தஞ்சை பெரிய கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் சோழன் சிலை அருகே பேருந்து நிறுத்தம் அமைத்து பெரிய கோவில் எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படி சாலை அமைத்து, தற்சமயம் சாலையாக உள்ள தடத்தை மக்கள் நடந்து செல்லும் பாதையாகவும், வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்த வேண்டும்.

    சி.இ.ஓ, டி.இ.ஓ, பி.ஓ.அலுவலக கட்டிடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை வளாகம் அமைத்து தர வேண்டும்.

    பூக்காரத் தெரு பூச்சந்தை பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய (குளிரூட்டப்பட்ட) பூச்சந்தை வளாகம் அமைக்க வேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி

    மற்றும் முழுமையான தமிழ் வழி பொறியியல் கல்லூரி அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஒப்பந்தபுள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
    • 65 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    மதுரை

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மதுரை மாவட்டம் புகழ் பெற்றது. இங்கு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 'மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டவரும் கண்டு களிக்க வசதியாக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படும்" என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியது. அப்போது அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இதற்கிடையே மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஒப்பந்த புள்ளியை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

    அதன்படி 'மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு, 4 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று கோரப்பட்டு உள்ளது.

    ×