ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஒப்பந்தபுள்ளி வெளியீடு

மதுரை அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஒப்பந்தபுள்ளி வெளியிடப்பட்டுள்ளது. 65 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஒப்பந்தபுள்ளி வெளியீடு
Published on

மதுரை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மதுரை மாவட்டம் புகழ் பெற்றது. இங்கு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 'மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டவரும் கண்டு களிக்க வசதியாக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படும்" என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியது. அப்போது அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதற்கிடையே மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஒப்பந்த புள்ளியை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

அதன்படி 'மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு, 4 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று கோரப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com