என் மலர்
நீங்கள் தேடியது "Ration Shops"
- பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் பழனிச்சாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வராமல் விற்பனையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் திருப்பூர் மாவட்ட பொதுவிநி யோகத் திட்ட துணை பதிவாளர் பழனிச்சாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கணபதிபா ளையம், கரைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் எடை கருவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சரியான அளவில் உள்ளதா ? என ஆய்வு செய்தார். பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும். குறைபாடுகள் இருந்தால் உடனடியாக அதனைக் கிடங்கிற்கு திருப்பி அனுப்பி தரமான பொருட்களை பெற்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
எந்த ஒரு குடும்ப அட்டைதாரருக்கும் உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வராமல் விற்பனையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் பருப்பு பொருட்களின் மாதிரிகளை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் படி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
- கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை காலை வழங்குகிறார்.
- குலசேகரன்பட்டினத்தில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைக்கிறார்.
உடன்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்குகிறார்.
பகுதிநேர ரேஷன் கடைகள்
மாலை 4.30 மணிக்கு உடன்குடி ஒன்றியம் வெள்ளாளன் விளையிலும், மாலை 5 மணிக்கு செட்டியா பத்துஊராட்சி மன்றம் சிவலூரிலும் பகுதிநேர ரேஷன் கடைகளை திறந்து வைக்கிறார். மாலை 5.30 மணிக்கு வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி உதிர மாடன்குடியிருப்பில் புதிய அங்கன்வாடி கட்டி டங்களை திறந்து வைக்கிறார். மாலை 6 மணிக்கு குலசேகரன்பட்டினத்தில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைக்கிறார். 18-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு கருங்குளம் ஒன்றியம் ராமானுஜம் புதூர் கால்நடை வளர்ப் போர்க்கான முகாமில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 8,15,484 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
- புதிய பகுதி நேர நியாய விலைக்கடையானது வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பாப்பினி ஊராட்சி பச்சாபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடையை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 8,15,484 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. வரதப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ள காங்கேயம் வட்டத்தில் 2 முழு நேர விலைக்கடைகளும் தற்போது பச்சாபாளையம் பகுதி நேர நியாய விலைக்கடையுடன் சேர்த்து மொத்தம் 2 முழு நேர நியாய விலைக்கடை மற்றும் 1 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் சேர்த்து மொத்தம் 3 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
வரதப்பம்பாளையம் முழு நேர நியாய விலைக்கடையில் 746 குடும்ப அட்டைகளில் 140 குடும்ப அட்டைகளை பிரித்தும் பாப்பினி முழு நேர நியாய விலைக்கடையில் 848 குடும்ப அட்டைகளில் 289 குடும்ப அட்டைகளை பிரித்து 429 குடும்ப அட்டைகளுடன் பச்சாபாளையத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பகுதி நேர நியாய விலைக்கடையானது வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுசங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும்.
- பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், "சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும்.
தற்போது பரிசோதனை முயற்சியாக, நகர்புறத்தில் ஒரு கடையிலும், கிராமப்புறத்தில் ஒரு கடையிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ள நிலையில், விரைவில் டெண்டர் விடப்பட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். அதுவரை பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
- நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படுகிறது.
- நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காளம்பாளையத்தைச் சோ்ந்த ஜீவானந்தம் என்பவா் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூரை அடுத்த பொங்குபாளையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு விநியோகிக்கப்படும் அரிசியில் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, பொங்குபாளையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பழைய முறைப்படி விற்பனை முனைய எந்திரத்தில் அரிசி, இதர பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- புதிய நடைமுறையால் ரசீது எழுதுவது, பொருட்கள் வினியோகத்தில் காலதாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் :
தமிழகத்தில் 34,790 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 2 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 605 ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் முன்னுரிமை கார்டுக்கு (பி.எச்.எச்.,) அனைத்து பொருட்களும், முன்னுரிமை அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுக்கு (பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய்.,), 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது. முன்னுரிமையற்ற கார்டுக்கு (அரிசி அட்டை) அனைத்து பொருட்களும், (சர்க்கரை அட்டை) அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும், பொருட்களில்லா அட்டை என 5 வகைகள் உள்ளன.
இந்த 5 வகை கார்டுகள் அடிப்படையிலேயே பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசி பிரிக்கப்படாமல் ஒரே மாதிரியாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அரிசியின் அளவை தனித்தனியாக பிரித்து பில் போட்டு பொதுமக்களுக்கு வழங்கும் முறை கடந்த 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி அரிசி வினியோகிக்கும் போது ஒதுக்கீடு பிரித்து வழங்கும் வகையில் இரண்டு ரசீதுகள் போடப்படுகிறது.
பி.எச்.எச்., கார்டுகளில் பெரியவர் ஒருவருக்கு மொத்த ஒதுக்கீடு 12 கிலோ அரிசி. இதில் மத்திய அரசின் ஒதுக்கீடான 5 கிலோ, மாநில ஒதுக்கீடு 7 கிலோவுக்கு தனித்தனியாக ரசீது போட வேண்டும். ஒரு பெரியவர், ஒரு குழந்தை உள்ள கார்டுக்கு மத்திய அரசு 10 கிலோ, மாநில அரசு 4 கிலோ, இரு பெரியவர் உள்ள கார்டுக்கு மத்திய அரசு 10 கிலோ, மாநில அரசு 6 கிலோவும்,இரு பெரியவர், ஒரு குழந்தைக்கு 15 கிலோ மத்திய அரசும், 3 கிலோ மாநில அரசும் ஒதுக்கீடாக உள்ளது.
3 பெரியவர்கள் உள்ள கார்டுக்கு மத்திய அரசின் 15 கிலோவும், மாநில அரசுடையது 5 கிலோ மற்றும் இதர பொருட்களும் உள்ளன. 4 பெரியவர் கார்டுக்கு 20 கிலோ, 5 பெரியவருக்கு 25 கிலோ, 6 பெரியவருக்கு 30 கிலோ , 7பெரியவருக்கு 35 கிலோ அரிசி மத்திய அரசு வழங்குகிறது. இந்த கார்டுகளுக்கு மாநில அரசு வாயிலாக இதர பொருட்கள் மட்டும் வழங்கப்படுகிறது.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களது கார்டுகளுக்கு மத்திய அரசு சார்பில் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
இதுவரை மத்திய அரசின் ஒதுக்கீடு குறித்து மக்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்த புதிய நடைமுறையால் மத்திய அரசின் ஒதுக்கீடு மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த புதிய நடைமுறையால் ரசீது எழுதுவது, பொருட்கள் வினியோகத்தில் காலதாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன், துணை செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், பழைய முறைப்படி விற்பனை முனைய எந்திரத்தில் அரிசி, இதர பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- கடந்த 1ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்ய புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி இந்த கார்டுகளுக்கு மத்திய அரசு வழங்கும் அரிசிக்கு தனி ரசீதும், மாநில அரசு வழங்கும் அரிசி மற்றும் இதர பொருட்களுக்கு தனி ரசீது என இரண்டு ரசீதுகள் போட வேண்டியுள்ளது.ரேஷன் கடைகளில் உள்ள எந்திரத்தில் பதிவு செய்து பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சர்வர் பிரச்சினை ஏற்பட்டால் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால் பொதுமக்கள், கடை ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அரசு பழைய நடைமுறையில் ரசீது வழங்க வேண்டும் என்றனர்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது
- முதல் அமைச்சர் அறிவுரைப்படி படி இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடையில் தர ப்படுகிறது
ஈரோடு,
பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வந்தனர். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து இன்று தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க ப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 845 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 ரேஷன் அரிசி அட்டைதாரர்களாக உள்ளனர்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி னார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு கொல்லம்பாளை யம் வண்டிக்காரன் பேட்டை பகுதியிலுள்ள சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்கன்வாடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்ட முதல்- அமைச்சர் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 6 அடி கரும்பு, ரூபாய் ஆயிரம் கார்டுதா ரர்களுக்கு வழங்க உத்தர விட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 868 முழு நேர நியாய விலை கடைகளும் 319 பகுதிநேர கடைகள் உள்ளன. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 7.65 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன்கள் ஜனவரி 3 முதல் 8 வரை வழங்க ப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பி ற்காக தரமான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் அறிவுரைப்படி படி இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடையில் தர ப்படுகிறது. அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று பாது காப்பாக பரிசுத்தொகை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதில் கணேசமூர்த்தி எம்.பி, மேயர் நகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்று வரு கின்றனர். பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி- சேலையும் வழங்கப்பட்டு வருகிறது.
- ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
- இதற்கான டோக்கன் வீடு, வீடாக சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு:
பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்து ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இதற்கான டோக்கன் வீடு, வீடாக சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 845 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
இவர்களில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 ரேஷன் அரிசி அட்டைதாரர்களாக உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கனை வழங்கி வருகின்றனர். டோக்கனில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப் பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் ரேஷன் அட்டைதாரர்கள் வந்து பொங்கல் தொகுப்புகளை பெற்று செல்லலாம் என்று கூறியுள்ளனர். இது குறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் அதற்கென்று தனியாக தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டிருந்தது.
வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டது. இன்றுடன் டோக்கன் வழங்கும் பணி நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைக்கிறார்.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு கடைகளிலும் சுமார் 200 பேர் வரை பொங்கல் தொப்புக்குகளை வாங்கி செல்ல டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு கார்டுகளின் எண்ணி க்கையின் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சர்க்கரை ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. கரும்பு அனுப்பும் பணியும் நடந்து முடிவடைந்து விட்டது. அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட சமயத்தில் பல்வேறு காரணங்களுக்காக டோக்கன் விநியோகம் செய்ய முடியாத அரிசி அட்டைதாரர்கள் வருகிற 13-ந் தேதி அன்று அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டை கொண்டு வந்து பொங்கல் தொகுப்பினை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- யாருக்கும் பொங்கல் பரிசு பொருள்-பணம் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும் என்பதற்காக வருகிற 13-ந்தேதி ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு-ரூ.1000 ரொக்கம், முழு கரும்பு வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்கும் பொதுமக்கள் அனைவருக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. யாருக்கும் பொங்கல் பரிசு பொருள்-பணம் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும் என்பதற்காக வருகிற 13-ந்தேதி ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
- விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்
- பொது விநியோகத் துறை தகவல்
வேலுார்:
வேலுார் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 699 ரேசன் கடைகள் உள்ளன.
ரேசன் பொருட்கள் பெற வேண்டுமென்றால் அதற்கு ஸ்மார்ட் கார்டு அவசியம். கார்டில் உள்ள குடும்ப உறுப் பினர்களில் ஒருவர் கட்டாயம் விரல் கை வைத்தால் மட்டுமே ரேசன் பொருட்களை வாங்க முடியும். முதியோர்கள் கடைகளுக்கு செல்லும் போது கைரேகை வைக்கும் கருவியில் பல நேரங்களில் கைரேகையை ஏற்று கொள்வது இல்லை.
இதனால் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பல முறை முயற்சி செய்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். ரேசன் கடையில் உள்ள கருவி கைரேகையை ஏற்றுக் கொள்ளாததால் சிலரால் பொருட்களை வாங்க முடியாத நிலையும் உள்ளது.
முதியோர்கள் வசதிக்காக பொது விநியோகத் துறை ஒரு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
அதன்படி மூத்த குடிமக்கள் மட்டும் இருக்கும் ரேசன் கார்டுகளுக்கு பொருட்களை வாங்க நண்பங்களையோ அல்லது உறவினர்களையோ நியமித்து கொள்ளலாம். இதற்காக ஒரு விண்ணப்ப படிவம் வட்டார வழங்கல் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.
அதில் ரேசன் கார்டு எண், உறுப் பினர்கள் விவரம், செல்போன் எண், என்ன காரணத்திற்காக பொருட்களை பெற முடியவில்லை. அத்தியா வசிய பொருட்களை பெற நியமிக்கப்படும் பெயர், ரேசன் கார்டு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வட்டார வழங்கல் அதிகாரியின் சான்று பெற்று ரேசன் கடையில் வழங்க வேண்டும்.
அவர்கள் நியமிக்கும் நபர் ஸ்மார்ட் கார்டுடன் ரேசன் பொருட்களை வாங்க வரும்போது பதிவு செய்ய பட்ட செ ல்போனுக்கு. ஓ.டி.பி வரும்.
அதை அவர்கள் கூறினால் ரேஷன் பொருட்கள் மூத்த குடி மக்கள் நியமித்த நருக்கு வழங்கப்படும் என தெரிவித்தனர்.