search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mariamman temple"

    • மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.
    • மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது செல்லாண்டி அம்மன், மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.

    செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு இந்து அறநிலைத்துறை அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் 2 கோவிலிலும் கும்பாபிஷேக பணிகள் தொடக்க விழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகத்தில் செல்லியாண்டி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா நடத்துவது பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    அப்போது கட்டளைதாரர்கள், ஊர் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு கோவில் திருப்பணி நடைபெறும் காரணத்தால் மாசி திருவிழா நடத்த வேண்டாம் என ஒரு மனதாக முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து பவானி நகரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடி உடலில் சேறு பூசி பல்வேறு வகையான வேடங்களில் அணிந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்குத்தெரு மாரியம்மன் கோவில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள மூலவருக்கு பக்தர்கள் மற்றும் கட்டளை தாரர்கள் கும்பாபிஷேக விழா குழுவினர் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    பவானி நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த மாசி திருவிழா ரத்து செய்யப்பட்டதால் தொடர்ந்து பவானி நகரம் களை இழந்து காணப்பட்டது.

    • கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • தற்போது நுழைவு வாயில்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வேகமாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கோட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து இன்று வருவாய்த்துறையினர் மற்றும் இந்து அறநிலைத்துறை மற்றும் திருத்தண்டர் சபை நிறுவனர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அந்த ஆய்வின் போது கோவிலின் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டிடங்களின் தன்மை தொடர்பாகவும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், கோவிலில் ஒவ்வொரு திருவிழாவின்போதும் பல்லாயிரம் பேர் பொங்கல் இடுவார்கள். ஆனால் கோயிலில் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக பக்தர்கள் வெளியேறும் வகையில் வாசல்கள் பெரிய அளவில் முன்பு இருந்தது.

    தற்போது நுழைவு வாயில்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வேகமாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. கட்டிடங்கள் இடிந்து விடும் நிலையில் உள்ளதால் விபத்து சூழல் உள்ளது.

    எனவே இதுகுறித்து வருகிற 15-ந் தேதி அறிக்கையாக தயாரித்து சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிப்போம். பின்னர் கோர்ட் உத்தரவு படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கல் விழா காலை தொடங்கி நடந்தது.
    • பக்தர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து மாரியம்மனை வழிபாடு செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் காங்கேயம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 15 நாள் பொங்கல் வைபோகம் சிறப்பாக கொண்டாடப்படும் . இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதல் நிக ழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து 25-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வந்தது.

    கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், கம்பத்திற்கு வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.

    வேண்டுதல்காரர்கள் அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தி வந்தனர். தினமும் இரவு மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா காட்சியும் நடந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இன்று பொங்கல் விழா காலை 7 மணிக்கு தொடங்கி நடந்தது.

    பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தி பரவ சத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் கோவில் தலைமை பூசாரி வாசுதேவன், புலவர் அறிவு, மற்றும் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • விழா நாட்களில் தினசரி காலையிலும், மாலையிலும் வழக்கமான பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
    • நிறைவு நாளான நேற்று இரவு பூஜையை தொடர்ந்து அம்மனின் பூஞ்சப்பரபவனி தொடங்கியது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலில் தசரா திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.

    விழா நாட்களில் தினசரி காலையிலும், மாலையிலும் வழக்கமான பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஒவ்வொரு நாளும் கிருஷ்ணராகவும், சுப்பிரமணியராகவும், மகாலட்சுமியாகவும், பராசக்தியாகவும், அன்னபூரணியாகவும், சரஸ்வதியாகவும் அம்பாளின் காட்சியருளல் நடந்தது. நிறைவு நாளான நேற்று இரவு பூஜையை தொடர்ந்து அம்மனின் பூஞ்சப்பரபவனி தொடங்கியது. முக்கிய வீதிகளின் வழியாக சென்ற சப்பரபவனி இன்று காலையில் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதாகிருஷ்ணன், தங்கப்பாண்டியன் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 9-ம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடக்கிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை மகிமை பண்டுக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    முன்னதாக அம்மனுக்கு பால் பன்னீர் தேன் இளநீர் போன்ற 16-வகை அபி ஷேகங்கள் நடத்தப்பட்டு தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. அதிகாலை 3 மணி அளவில் கொடி யேற்று விழா சிறப்பாக நடை பெற்றது. ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

    முதல்நாள் விழாவில் இன்று மாலையில் அம்மன் குடை சப்பரத்தில் எழுந் தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு இன்னிசை கச்சேரி நடை பெற்றது. 9-ம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடக்கிறது. நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர்.
    • கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி போலீசார் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 30 வருடங்களாக பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.

    இந்நிலையில் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் திருவிழா நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர். இதனால் இருதரப்பினரையும் அழைத்து ஆர்.டி.ஓ.மற்றும் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பினரும் சமாதானம் அடையவில்லை.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி போலீசார் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை பட்டியலின மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பெரிய மாரியம்மனை தரிசிப்பதற்காக கோவிலுக்குள் தாம்பூல தட்டு மற்றும் நீதிமன்ற உத்தரவு நகலுடன் நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அவர்கள் அம்மனை வழிபட விடுங்கள் என கூறி கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவர்களிடம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது, அதனால் யாரையும் அனுமதிக்க முடியாது என கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜி மற்றும் ஆர்.டி.ஓ. சரவணன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • உலக நன்மை வேண்டி வண்டுறை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    • 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று.

    மாரியம்மனுக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவிலின் எதிர்புறத்தில் 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    • பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமி–ழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரி–யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதா–கும். ஆண்டுதோறும் நடை–பெறும் இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருக் கன்குடி மாரியம்மன் கோவி–லில் குவிவார்கள்.

    இங்கு தென் மாவட்டங் களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து லட்சக்க–ணக்கான பக்தர்கள் பாத–யாத்திரையாக வந்து அம் மனை தரிசித்து, அக்கி–னிச் சட்டி, மாவிளக்கு, பறவை காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த் திக்கடன்களை செலுத்தி–னார்கள். பக்தர்களின் வச–திக்காக சிறப்புப் பேருந்து–களும் இயக்கப்பட்டன

    இதையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெற்ற உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி இன்று மாலை இருக்கன்குடி மேல–மடை குடும்புகள் தலைமை–யில் இருக்கன்குடி கீழத்தெரு பொதுமக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப் பிலை கொடி கட்டுவார் கள். இதில் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட் டுப்பட்டி என்.மேட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகா–தார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விழா ஏற்பாடுகளை விருதுநகர் அறநிலையத் துறை கோவில் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) வளர் மதி, பரம்பரை அறங்கா–வலர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • இடைச்செருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது.
    • இந்த ஆண்டும் முத்து மாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் முத்து மாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் மேலதாலங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு போட்டும், தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக செய்யப்பட்டு தீபாதனை நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கீழக்கரை

    மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட கற்பூர வலசை கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    தொடர்ந்து புனித நீர் குடங்களை கோவில் விழா கமிட்டியினர், கிராம முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். அப்போது கருடன் வானில் வட்டமிட, மேளதாளத்துடன், வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி பட்டணம் காத்தான் ஊராட்சி தலைவர் எம். சித்ரா மருது, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர், அ.தி.மு.க. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    • சுந்தர விநாயகர், முத்து மாரியம்மன், பாலமுருகன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • முதற்கால யாக பூஜை, மகா பூர்ணாஹுதி, விக்னேஸ்வர பூஜை மற்றும் 4-ம் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஏரிப்பாக்கம்-நத்தமேடு கிராமத்தில் உள்ள சுந்தர விநாயகர், முத்து மாரியம்மன், பாலமுருகன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கணபதி ஹோமம், முதற்கால யாக பூஜை, மகா பூர்ணாஹுதி, விக்னேஸ்வர பூஜை மற்றும் 4-ம் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து  கலச புறப்பாடு நடைபெற்று, முத்துமாரியம்மனுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இவ்விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இரவு முத்துமாரியம்மன் சாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது.

    தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்தனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த கோவிலில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் 3 உண்டியல்களை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறந்து பணம், நகைகள் கணக்கிடப்படும்.  ஒரு உண்டியல் அன்னதான திட்டத்திற்காக   பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை ஒவ்வொரு மாதமும் 25-ந் தேதிகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் திறந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அன்னதானம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவிலுக்கு வந்த திருடர்கள் கண்காணிப்பு காமிராக்களை  வேறு திசையில் திருப்பி விட்டு உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர்.   

    அப்போது அன்னதான உண்டியலை தவிர மற்ற 3 உண்டியல்களுக்கும் அலாரம் இணைப்பு கொடுக்கப்பட்டு  இருந்தது. இதனால் அந்த உண்டியல்களை உடைத்தால் மாட்டி விடுவோம் என கருதி  அன்னதான உண்டியலை மட்டும் உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள்  கொள்ளையடித்தனர்.

    காலையில் கோவிலுக்கு வந்த பூசாரிகள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை  கண்டு அதிகாரிகளுக்கும், போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.   சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த அதிகாரிகள்,  கொள்ளையடிக்கப்பட்ட  அன்னதான உண்டியல் கடந்த 25-ந்தேதி திறக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டது. 

    இதனால்  தற்போது பெரிய அளவில் காணிக்கை பணம் இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.

    அலாரம் இணைக்கப்பட்டு இருப்பதால் மற்ற 3 உண்டியல்களில் உள்ள பணம், நகை தப்பியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கொள்ளை சம்பவம் குறித்து  அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×