என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர் கொலை"
- திருச்சியில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
- கொலை செய்து விட்டு தப்பி ஓடிய டிரைவர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்கிற சக்திகுமார் (வயது 34). இவருக்கு திருமணமாகி மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். 1 வயதில் மகன் உள்ளார். எனவே சக்திகுமார் தனது மகனுடன் வசித்து வந்தார்.
திருவெறும்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32). இவர் கக்கன் காலனி பகுதியில் வசித்து வரும் திருமணமான பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணை இரவில் சந்திப்பதற்காக அடிக்கடி முத்துப்பாண்டி காந்திநகர் பகுதிக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இதை பார்த்த சக்திகுமார் அந்த பெண்ணிடம் சென்று உங்களின் கள்ளக்காதல் விவகாரத்தை உங்களின் உறவினர்களிடம் சொல்லிவிடுவேன்.
சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் என் ஆசைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளார்.
இதுபற்றி அந்த பெண் தனது கள்ளக்காதலன் முத்துப்பாண்டியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று அதிகாலையில் முத்துப்பாண்டி கக்கன் காலனிக்கு அந்த பெண்ணை சந்திப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது அதிக மது போதையில் இருந்த சக்திகுமார், முத்துப்பாண்டியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடை்ந்த முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திகுமாரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த சக்திகுமார் ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய டிரைவர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் திருவெறும்பூர் பகுதியில் நடந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.
- கோபாலின் மனைவி சுசீலாவும், அவரது கள்ளக்காதலன் மாரீஸ்வரன் இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கொலை செய்தனர்.
- இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அன்புச்செல்வன் சிக்கினார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை, லட்சுமி நகர் பகுதியில் கடந்த மே.4ந் தேதி கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோபால்( வயது 35) என்பவரை சிலர் துரத்தி கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், ஆகியோர் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் கோபாலின் மனைவி சுசீலாவும், அவரது கள்ளக்காதலன் மாரீஸ்வரன் இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட, மாரீஸ்வரன், விஜய், மதன்குமார், மணிகண்டன், லோகேஸ்வரன், வினோத், கோபாலின் மனைவி சுசீலா உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்த திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த குட்டி என்கிற அன்புச்செல்வன்(வயது 36) பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் நடமாடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர் சிக்கினார். இதையடுத்து போலீசார் அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- செங்கல்பட்டு அடுத்த வல்லம் பதி கல்பாக்கம் சாலையில் மேலமையூர் அம்மன் கோவில் ஆர்ச் வளைவு உள்ளது.
- கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த வல்லம் பதி கல்பாக்கம் சாலையில் மேலமையூர் அம்மன் கோவில் "ஆர்ச்" வளைவு உள்ளது.
இதன் அருகே சாலை யோரத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தது. ஆனால் உடல் கிடந்த இடம் அருகே எந்த ரத்தக்கறையும் இல்லை.
மர்ம கும்பல் அவரை வேறு எங்கோ வெட்டி கொலை செய்து விட்டு இங்கு சாலையோரம் உடலை வீசி தப்பி சென்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் நேற்று இரவு அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்து சென்ற வாகனங்களை பற்றியும் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை செங்கல்பட்டு அருகே கொலையாளிகள் எரித்து சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? என்ற விபரம் தெரியவில்லை. அவர் நீலநிற லுங்கி மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
- அவரது கையில் ஆங்கிலத்தில் ஏ.எம். என பச்சை குத்தப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபரின் காது மற்றும் தலைப்பகுதியில் பாட்டிலால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் உள்ளது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் நாற்கர சாலையில் இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பால், காசிலிங்கம், மாரியப்பன், தனிப்படை ஏட்டு பிரித்திவிராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.
கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? என்ற விபரம் தெரியவில்லை. அவர் நீலநிற லுங்கி மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
அவரது கையில் ஆங்கிலத்தில் ஏ.எம். என பச்சை குத்தப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபரின் காது மற்றும் தலைப்பகுதியில் பாட்டிலால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் உள்ளது.
மேலும் அவரது உடல் அருகே காலியான பீர்பாட்டில்கள், கோழி இறைச்சி உள்ளிட்டவைகள் கிடந்தன. எனவே நேற்று இரவு நண்பர்கள் சேர்ந்து மது குடித்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் வாலிபரை தாக்கி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காசி ராஜன் அரிவாளால் 3 பேரை தாக்குவதையும், அவர்கள் அரிவாளை பிடுங்கி காசிராஜனை வெட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- சொத்து பிரச்சினை காரணமாகத்தான் தமிழழகன் தனது மகனை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுந்தரலிங்க நகரை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 55), விவசாயி. இவரது மகன் காசி ராஜன் (36), டிரைவர்.
தமிழழகன். காசி ராஜனின் மனைவியிடம் தவறாக நடந்ததாக ஒட்டப்பிடாரம் போலீசில் வழக்கு உள்ளது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் தமிழழகன் தனது மகனுக்கு சொத்துக்களை கொடுக்கவில்லை.
இந்நிலையில் தமிழழகன் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக நேற்று தனது உறவினர்களான ஒட்டப்பிடாரம் கடல்ராஜா (45), காசிதுரை (31) ஆகியோருடன் காரில் தூத்துக்குடி கோர்ட்டுக்கு வந்தார்.
கோர்ட்டு எதிரே காரை நிறுத்திவிட்டு கோர்ட்டுக்கு சென்றார். பின்னர் அவர் காருக்கு வந்த போது அங்கு வந்த காசி ராஜன் அரிவாளால் தமிழழகன், கடல் ராஜா, காசி துரை ஆகிய 3 பேரையும் தாக்கினார்.
சுதாரித்து கொண்ட அவர்கள் அரிவாளை பிடுங்கி காசி ராஜனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று தமிழழகன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
காசி ராஜன் தாக்கியதில் அவர்கள் 3 பேருக்கும் காயம் இருந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே காசி ராஜன் அரிவாளால் 3 பேரை தாக்குவதையும், அவர்கள் அரிவாளை பிடுங்கி காசிராஜனை வெட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தநிலையில் கைதான தமிழழகனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து பிரச்சினை காரணமாகத்தான் தமிழழகன் தனது மகனை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் பெண்களும், ஆண்களுக்கு நிகராக குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் அவர்களுக்கு பல்வேறு வழிகளை காட்டுகிறது.
- தூத்துக்குடியை சேர்ந்த ஒரு இளம்பெண் பேஸ்புக் மூலம் பலருடன் பழகி ரூ.50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஒரு வாலிபரின் கொலைக்கும் காரணமாக இருந்துள்ளார்.
ராஜபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் வளாகத்தைச் சேர்ந்த துரைபாண்டி என்பவர் மகன் மாரிமுத்து (வயது 27). இவர் டிப்ளமோ படித்து விட்டு தனியார் நிறுவனத்தின் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென மாயமான அவர் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கண்மாயில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் 2-வது நிலை போலீஸ்காரராக பணியாற்றும் வில்வதுரைக்கும் (32), மாரிமுத்துவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், வில்வதுரை மற்றும் 2 பேர் மாரிமுத்துவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை சாக்குபையில் வைத்து கட்டி கண்மாயில் வீசி சென்றது தெரியவந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மணிமுத்தாறு போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக விசாரித்த போது, வில்வதுரை தற்போது அங்கு இல்லை என்ற தகவல் கிடைத்தது.
இதற்கிடையே அவர் செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்த போது அவர் நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீசார் நெல்லைக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கிருந்த வில்வதுரையை பிடித்தனர்.
அப்போது அவருடன் தங்கியிருந்த கூட்டாளிகள் இசக்கிராஜா (32), ரவிக்குமார் (29) ஆகியோரும் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. அதுபற்றி போலீசார் கூறியதாவது:-
மாரிமுத்துவுக்கு பேஸ்புக் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த ராகினி (வயது26) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவர் தன்னை பணக்கார வீட்டு பெண் என்று கூறி பழகி வந்துள்ளார். மாரிமுத்துவும், ராகினியும் அடிக்கடி செல்போனில் பேசி தங்கள் நட்பை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் ராகினி தனக்கு அவசரமாக ரூ.5 லட்சம் வேண்டும் என்று மாரிமுத்துவிடம் கேட்டுள்ளார். அதனை நம்பிய மாரிமுத்து உடனடியாக ராகினியின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சம் அனுப்பியுள்ளார்.
அதன்பின்னர் ராகினி, மாரிமுத்துவிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். அவரது செல்போன் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தன்னை ராகினி ஏமாற்றி பணம் பறித்துவிட்டதாக மாரிமுத்து கருதினார். அதனை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டார்.
இந்த நிலையில் மாரிமுத்துவின் உறவினரான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியன் 2-வது நிலை போலீஸ்காரராக பணியாற்றும் வில்வதுரை என்பவருடனும் ராகினி பேஸ்புக் மூலம் பழகி தனது காதல் வலையில் அவரை சிக்க வைத்துள்ளார்.
வில்வதுரை மட்டுமின்றி அவரது உறவினர்கள் இசக்கிராஜா, அவரது மனைவி இளவரசி மற்றும் ரவிக்குமார் ஆகியோரும் ராகினியுடன் அடிக்கடி பேசி வந்தனர். அப்போது வில்வதுரை, ராகினிக்கு ரூ.15 லட்சம் வரை கொடுத்துள்ளார்.
பின்னர் வில்வதுரை மூலம் ஒரு குழுவாக செயல்பட்டு பல்வேறு நபர்களிடம் இருந்து ராகினி லட்ச, லட்சமாக பணம் பறித்துள்ளனர். அவர் ரூ.50 லட்சத்துக்கு மேல் பணம் பறித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த மாரிமுத்து, ராகினிக்கு அடிக்கடி போன் செய்து தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டு வற்புறுத்தி வந்தார்.
இது ராகினிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் இதுபற்றி வில்வதுரையிடம் தெரிவித்து, மாரிமுத்துவை தீர்த்து கட்டும்படி கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து வில்வதுரை, மாரிமுத்துவிடம் ராகினி வாங்கிய பணத்தை திருப்பி தருகிறேன் என்று கூறியுள்ளார். எனவே நீ என்னுடன் வந்தால் பணத்தை பெற்றுகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மாரிமுத்து கடந்த மாதம் 28-ந் தேதி வில்வதுரையுடன், காரில் சென்றார்.
மாரிமுத்துவை காரில் அழைத்து சென்ற வில்வதுரையுடன் கூட்டாளிகளான இசக்கி ராஜா, ரவிக்குமார் ஆகியோரும் சென்றனர். அவர்கள் சங்கரன்கோவில் அருகே ஒரு கண்மாய் பகுதியில் சென்றதும் மாரிமுத்து கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை சாக்கு பையில் போட்டு கட்டி எடுத்துக்கொண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம்-புனல்வேலி செல்லும் சாலையில் வந்ததும் அந்த பகுதியில் உள்ள இரட்டை கண்மாய் பகுதியில் வீசி சென்று விட்டனர். இது தொடர்பாக துப்புதுலக்கிய போலீசார் மாரிமுத்துவை கொலை செய்த வில்வதுரை, இசக்கி ராஜா, ரவிக்குமார், ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் மாரிமுத்து கொலைக்கு மூளையாக செயல்பட்டது ராகினி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகினி எத்தனை பேரிடம் பண மோசடி செய்தார். அவருக்கு பின்னணியில் யார், யார்? உள்ளனர்.
ராகினி சினிமா வில்லி போல் செயல்பட்டது எப்படி? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த இசக்கிராஜா மனைவி இளவரசியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராகினி, இளவரசி ஆகியோர் எவ்வாறு பணமோசடியில் ஈடுபட்டனர் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாரிமுத்து மாயமானது தொடர்பாக அவரது தந்தை துரைப்பாண்டி கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாயமான மாரிமுத்துவுக்கும், வில்வ துரைக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது.
ராஜபாளையம்:
மதுரை சி.எம்.ஆர். சாலையைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேஸ்புக்கில் பேசிக்கொண்டனர். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
மாரிமுத்துவின் காதலியை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வில்வதுரை என்பவரும் பேஸ்புக் மூலம் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வில்வதுரை நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியனில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
ஒரே பெண்ணை 2 பேர் காதலித்து வந்ததால் மாரிமுத்துவுக்கும், வில்வதுரைக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அடிக்கடி இவர்களுக்குள் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாரிமுத்து உயிரோடு இருந்தால் காதலியை திருமணம் செய்து கொள்ள முடியாது என எண்ணிய வில்வதுரை அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி கும்மிடிப்பூண்டியில் வேலையை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்த மாரி முத்துவை, வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள் இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து பேசி யுள்ளனர். பின்பு அவரிடம் வில்வதுரை நைசாக பேசி காரில் வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது காதலியுடன் பழக்கத்தை கைவிடுமாறு மாரி முத்துவிடம் வில்வதுரை கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கண்மாய்க்கு அழைத்து வந்த வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள், மாரிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சியடைந்த வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள் மாரிமுத்துவின் உடலை ஒரு சாக்கு மூட்டை யில் கட்டி காரில் வைத்து செய்வதறியாது ஊர் சுற்றி வந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் இரட்டை கண்மாய் பகுதியில் வந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து சாக்குமூட்டையை கண்மாயில் போட்டுவிட்டு கொலை கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதற்கிடையே மாரிமுத்து மாயமானது தொடர்பாக அவரது தந்தை துரைப்பாண்டி கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாயமான மாரிமுத்துவுக்கும், வில்வ துரைக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் வில்வதுரையை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்துவை நண்பர்கள் உதவியுடன் காரில் கடத்திக்கொண்டு சென்று அடித்துக்கொலை செய்து உடலை கண்மாயில் வீசியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வில்வதுரை, அவரது நண்பர்கள் இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், மாரிமுத்துவின் உடலை வீசியதாக கூறப்பட்ட ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் இரட்டை கண்மாய்க்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் கூறிய இடத்தில் தேடிப்பார்த்தபோது சாக்குமூட்டை கிடந்தது. அதில் மாரிமுத்துவின் உடல் எலும்புக்கூடான நிலையில் கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் விவகாரத்தில் போலீஸ்காரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை கடத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் பசுபதி(வயது 23). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தினமும் வேலையை முடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்புவது வழக்கம். நேற்று வழக்கமாக அவர் செல்லும் வழியில் உள்ள சிவகாமி அம்மன் கோவில் பின்புறம் உள்ள பாழடைந்த வீட்டில் படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பசுபதி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே பணகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பசுபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பசுபதி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் காலி மதுபாட்டில்கள், கஞ்சா பொட்டலங்கள் கிடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கஞ்சா புதைத்துக்கொண்டிருந்த மர்மநபர்கள், போதையில் அந்த வழியாக வந்த பசுபதியை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அருண் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசி அருகே உள்ள கடம்பை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் கமல்ராஜ் (வயது 25). மும்முனி குளக்கரையில் கடந்த மாதம் 24-ந் தேதி காலில் வெட்டு காயத்துடன் கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.
வந்தவாசி டி.எஸ்.பி பொற்செழியன் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், மகாலட்சுமி, ஏட்டுக்கள் முருகன், தட்சணாமூர்த்தி, ஏழுமலை ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஐந்து கண் பாலம் அருகே சப்.இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.
அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் முறையான ஆவணம் காட்டாமல் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இருவரும் ஓட்டி வந்த பைக் கொலையான கமல்ராஜிக்கு சொந்தமானது என தெரியவந்தது,
மேலும் அவர்கள் விளாநல்லூர் கிராமத்தைச்சேர்ந்த சாந்தவேல் (35) வந்தவாசி டவுன் கோட்டை பகுதியை சேர்ந்த சாமுவேல் (25) என தெரியவந்தது. பின்னர் இருவரும் கமல்ராஜை கொலை செய்து மும்முனி குளக்கரையில் வீசி சென்றதை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் 21ந்தேதி 3 பேரும் கிருஷ்ணாவரம் கூட்டுசாலை அருகே அமர்ந்து மது குடித்தோம். அப்போது மதுவில் போதை பொருளை கலந்து சாந்தவேலுக்கு கொடுத்து அவர் மயங்கிய நிலையில் இருந்த போது அவரது பாகெட்டில் இருந்த ரூ.4 ,500 பணத்தை கமல்ராஜ் திருடி விட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த 24ந்தேதி நாங்கள் இருவரும் கமல்ராஜை மது அருந்த அழைத்தோம். ஆயிலவாடி கூட்டுசாலையில் வைத்து மது அருந்தினோம். பணத்தை திருடியது குறித்து கமல்ராஜிடம் கேட்டதற்கு அவர் மறுத்தார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து கமல்ராஜை காலில் மீன் வெட்டும் கத்தியால் வெட்டினோம். பின்னர் பைக்கில் கொண்டு வந்து மும்முனி குளக்கரையில் பொதுமக்கள் பார்க்கும்படி போட்டு சென்றால் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள் என நினைத்து போட்டு சென்று விட்டோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
சாமுவேல், சாந்தவேல் இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அத்திமூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் பாபு (வயது 23). இவர், அந்த பகுதியில் உள்ள அவரது சித்தி இந்திரா (35) என்பவர் வீட்டில் தங்கி வசித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (63). இவருக்கும், பாபுவிற்கும் அந்த பகுதியில் தனித்தனியாக இடம் உள்ளது. இவர்களது இடத்தின் அருகில் ஆறு உள்ளது.
இந்த ஆற்றில் மணல் எடுப்பது தொடர்பாக பாபுவிற்கும், செல்வராஜுக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி அத்திமூர் பகுதியில் பாபுவிற்கும், செல்வராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து செல்வராஜ், அவரது மனைவி குள்ளம்மாள் (55). இவர்களது மகன்கள் சரவணன் (35), ஏழுமலை (33), பழனி (31) ஆகியோர் சேர்ந்து பாபுவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், குள்ளம்மாள், சரவணன், ஏழுமலை, பழனி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு கூறினார். அதில் செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், சரவணன், ஏழுமலை, பழனி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், குள்ளம்மாளிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
இதையடுத்து போலீசார் அவர்களை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.வி. நகரை சேர்ந்தவர் குமரேசன். கடந்த ஜூன்18-ந் தேதி அதே பகுதியில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக நாராயணம் பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த ஆசிக்முகமது, முகமது சேக் அப்துல்லா, குடைபாறைப் பட்டியை சேர்ந்த அசோக்குமார், அவரது தம்பி சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைதான 4 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் வினய் அண்ணன், தம்பி உள்பட 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.