என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் மது பாரில் இடம் பிடிக்கும் தகராறில் வாலிபர் கொலை
    X

    தெலுங்கானாவில் மது பாரில் இடம் பிடிக்கும் தகராறில் வாலிபர் கொலை

    • பாரில் இருக்கை பிடிப்பது சம்பந்தமாக தனுஷ் கவுட் மற்றும் கேசவ் இடையே போட்டி ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவை கைது செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கஜுல ராமா ரத்தை சேர்ந்தவர் தனுஷ் கவுட் (வயது 22). மூசாப்பேட்டையை சேர்ந்தவர் கேசவ். இருவரும் தனித்தனியாக குகட் பள்ளி மெயின் ரோட்டில் உள்ள பாரில் மது குடிக்க சென்றனர்.

    அப்போது மதுபான பார் முழுவதும் கூட்டம் நிரம்பியது. மது குடித்துக் கொண்டு இருந்த ஒருவர் பாரில் இருந்து வெளியே சென்றார்.

    அப்போது பாரில் இருக்கை பிடிப்பது சம்பந்தமாக தனுஷ் கவுட் மற்றும் கேசவ் இடையே போட்டி ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கேசவ் பீர் பாட்டிலை உடைத்து தனுஷ் கவுட் வயிற்றில் சரமாரியாக குத்தினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர் தனுஷ் கவுட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவை கைது செய்தார்.

    Next Story
    ×