என் மலர்
நீங்கள் தேடியது "பாமக"
- கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.
- துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.
சென்னை:
துரோகிகள் இருக்கும் வரை ஒன்றிணைய முடியாது என அன்புமணி கூறியிருந்தார். இதற்கு, ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேற தயார் என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.மணி கூறியிருப்பதாவது:-
* பா.ம.க. நிறுவனர் ராமதாஸை கொல்லுங்கள் என பதிவிட்டவரை கூப்பிட்டு அன்புமணி பாராட்டினார்.
* ராமதாசுடன் இருப்பவர்களை துரோகி என அன்புமணி அவமானப்படுத்துகிறார்.
* கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.
* அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியைக் கூட மிக கடுமையாக அன்புமணி விமர்சித்தார்.
* வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுத்தது நான்தான் என்றும் அன்புமணி அவதூறாக பேசினார்.
* ஆட்சி மாற்றம் காரணமாக 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு நான் எப்படி காரணமானேன்.
* ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேறத் தயார். நானும் எனது குடும்பத்தினரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.
* ராமதாஸ், அன்புமணி இணைவதற்காக பா.ம.க.விலிருந்து விலகுவதுடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யவும் தயார்.
* துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறத் தயார் என்று கூறினார்.
- அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.
- அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.
சென்னை:
பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். மேலும் அவர், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஜி.கே.மணி கூறியதாவது:-
* அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
* அன்புமணி மத்திய அமைச்சராக கூடாது என உறுதியாக இருந்தவர் ஜெ.குரு.
* அன்புமணியின் செயல்பாடுகளால் கண்ணீர் வடித்தார் ராமதாஸ்.
* ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியிருக்கிறார். அன்புமணி மனசாட்சியோடு பேச வேண்டும்.
* அன்புமணியால் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது.
* என் அப்பாவுக்கு அடுத்ததாக உங்களை நினைக்கிறேன் என கூறியவர் அன்புமணி.
* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு நான் காரணம் என பேசியிருக்கிறார் அன்புமணி.
* பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே.
* மனதளவில் கூட துரோகம் நினைக்காத என்னை துரோகி என்று அன்புமணி பேசுகிறார். இது மிகவும் வருத்தமாக உள்ளது.
* அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.
* அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.
* அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாசிடம் பேசினேன்.
* மாவட்டந்தோறும் அன்புமணியை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினேன்.
* தந்தையையும், மகனையும் பிரித்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் அன்புமணி பேசுகிறார்.
இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.
- துப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.
- மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாளையங்கோட்டை பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்று முன்னேற வேண்டிய வயதில் மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.
மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவிகள் மீதான இந்த நடவடிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது மாணவிகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதித்துவிடும்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி, அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், கல்வித்துறையும் மேற்கொள்ள வேண்டும்.
மது அருந்தியதற்காக மாணவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி மாணவிகளுக்கு மது விற்பனை செய்தவர்கள் மீதோ அல்லது அவர்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்தவர்கள் மீதோ என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து இத்தகைய நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக திகழும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?
ஒரு மாணவர் அவரது வீட்டில் இருந்து இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மதுக்கடைகளை கடந்து தான் செல்ல வேண்டிய நிலையை தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களுமே மக்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கைக்கெட்டும் தொலைவில் மது கிடைக்கும் போது, பதின் வயதினருக்கே உரிய சாகச மனநிலை மதுவை சுவைத்துப் பார்க்கத் தூண்டும்.
இதுதான் மாணவச் செல்வங்கள் பதின் வயதில் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை தி.மு.க. அரசு செய்தாக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவது தான் அந்த பரிகாரம் ஆகும். அதை உடனடியாகச் செய்து இளம் தலைமுறையினரை அரசு காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழா இன்று நடைபெற்றது
- தற்போது பாமக கட்சி ராமதாஸ் தரப்பு அன்புமணி தரப்பு என்று 2 கோஷ்டிகளாக உள்ளது.
பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சென்னையில் ஏ.கே.மூர்த்தி இல்லத் திருமண விழாவில் நேருக்கு நேர் சந்தித்த அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் வணக்கம் வைத்து கொண்டனர்.
தற்போது பாமக கட்சி ராமதாஸ் தரப்பு அன்புமணி தரப்பு என்று 2 கோஷ்டிகளாக உள்ளது. என்னையும், ராமதாசையும் பிரித்தது ஜி.கே.மணிதான் தான் என்று அன்புமணி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்புமணி சார்பில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் வழக்கறிஞர் பாலு பனையூர் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.
- திராவிட இயக்கங்களுக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் த.வெ.க. கருத்து அமைந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க. சார்பில் வருகிற 17-ந்தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
போராட்டத்தில் பங்கேற்குமாறு த.வெ.க. தலைவர் விஜய்க்கு டாக்டர் அன்புமணி கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தை அன்புமணி சார்பில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் வழக்கறிஞர் பாலு நேற்று பனையூர் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.
இதுகுறித்து வழக்கறிஞர் பாலு அளித்த பேட்டியில், "த.வெ.க. முதல் மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய அமைப்பாக த.வெ.க. இருக்கிறது. திராவிட இயக்கங்களுக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் த.வெ.க. கருத்து அமைந்துள்ளது.
எனவே இந்த போராட்டத்தில் த.வெ.க. கலந்து கொள்ள நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம் என கூறினார்.
இதையடுத்து பா.ம.க. போராட்டத்தில் த.வெ.க. பங்கேற்குமா? என த.வெ.க. தரப்பில் நிர்வாகி ரகுவிடம் கேட்டபோது, பா.ம.க. போராட்டத்தில் பங்கேற்க த.வெ.க.விற்கு வந்த அழைப்பு கடிதத்தை கட்சி தலைவர் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம்.
கட்சி தலைவர் விஜய் பா.ம.க. கடிதம் குறித்து பரிசீலித்து த.வெ.க. பங்கேற்பது பற்றி முடிவு செய்வார் என்று கூறினார்.
- உறுதியாகும் தவெக-பாமக கூட்டணி?
- திமுக தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாமக நீண்டநாட்களாக வைத்து வருகிறது. இதனை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி பாகம மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்க உள்ளது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெகவிற்கு அழைத்து விடுத்துள்ளது பாமக. இதற்கான அழைப்பு கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு இன்று வழங்கினர்.
மேலும் தவெக சார்பில் விஜய் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பலரும் தவெக-பாமக கூட்டணி அமைய அதிக வாய்ப்புகள் உருவாகி வருவதாக கருத்துகள் தெரிவித்து வருகின்றன.
டிசம்பர் 17 அன்று சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுகவைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பாமக அழைப்பு அனுப்பியுள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன.
- வருகிற 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான திசம்பர் 20-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி.
- அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், இடையில் நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) கூட்டமைப்பு சார்பாக கடந்த 08.12.2025 முதல் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதற்கான நடவடிக்கைகளில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டிருந்த நிலையில் அதற்கு முதல் நாளான 07.12.2025 அன்று இரவிலிருந்தே போராட்டத்திற்கு புறப்படத் தயாரான நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்த செயல் கண்டிக்கத்தக்கது.
அதையும் மீறி பேருந்துகள், தொடர் வண்டிகள் மூலமாக சென்னை சென்ற ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் ஆங்காங்கே வழிமறித்து கைது செய்துள்ளனர். அத்தனை தடைகளையும் தாண்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூடிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அங்கிருந்து நுங்கம்பாக்கத்திற்கு பேரணியாக புறப்பட்டபோது அங்கும் வந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதன் பிறகு டிட்டோ-ஜாக் உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால் 3 நாட்களாக போராட்டக் குழுவிடம் அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, கோரிக்கைகள் குறித்து உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. இதனால் நாளை (12.12.2025) அடையாள வேலை நிறுத்தமும், மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர். மேலும் ஜனவரி மாதம் 6-ம் தேதியிலிருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி. அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை. தற்போது ஆட்சி முடியும் தருவாயில் உள்ளதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.
அதுபோல் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற அடிப்படையில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பதும், தகுதி உயர்த்துவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும் என்பதும், வட்டார அளவிலான பதிவு மூப்பு பதவி உயர்வு என்று இருந்ததை மாநில அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என மாற்றியதால் அவர்களின் குடும்ப சூழல் பாதிக்கும் என்பதால் மீண்டும் வட்டார் அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளாகும். மேலும் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியில் காலியாக உள்ள 30,000-த்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அவர்களுக்கான கோரிக்கைகள் மட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்குமானதாகும்.
எனவே ஆசிரியர் பணியிடம் காலி ஆகாமல் இருக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் உடனடியாக தலையிட்டு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
- அருள், ஜி.கே.மணி போன்றோர் சொல்லும் பொய்களை பா.ம.க.வினர் நம்ப வேண்டாம்.
- அய்யா ராமதாஸ் பெயரில் வரும் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவருக்கே தெரியாது.
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:
* என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார்.
* சூழ்ச்சி செய்து அப்பா-பிள்ளையை பிரித்தது ஜி.கே.மணிதான்.
* ஜி.கே.மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள்.
* டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு தோற்றுவிட்டது, ஆனால் வெற்றி பெற்றதாக ராமதாசிடம் பொய் சொல்லி உள்ளனர்.
* அருள், ஜி.கே.மணி போன்றோர் சொல்லும் பொய்களை பா.ம.க.வினர் நம்ப வேண்டாம்.
* அய்யா ராமதாஸ் பெயரில் வரும் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவருக்கே தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க.வை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் தி.மு.க.வுக்கு கிடையாது.
- தைலாபுரம் தோட்டத்தை தி.மு.க. கட்டுப்பாட்டில் எடுத்து விட்டது.
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:
* விரைவில் நாம் மிகப்பெரிய மெகா கூட்டணியை அமைக்க இருக்கிறோம்.
* மெகா கூட்டணி முன்பு தி.மு.க. படுதோல்வியை சந்திக்கப் போவது உறுதி.
* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும் தி.மு.க. தான் காரணம்.
* அய்யா ராமதாசை சுற்றி தீய சக்திகளும், தி.மு.க.வின் கைக்கூலிகளும் இருக்கிறார்கள்.
* பா.ம.க.வை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் தி.மு.க.வுக்கு கிடையாது.
* பா.ம.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது தி.மு.க.
* தி.மு.க.வினர் சூழ்ச்சி செய்து வன்னியர்களையும் பட்டியலின மக்களையும் ஒன்றுசேர விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
* தைலாபுரம் தோட்டத்தை தி.மு.க. கட்டுப்பாட்டில் எடுத்து விட்டது.
* எவ்வளவோ அசிங்கங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.
* துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்கப்போவது கிடையாது.
* ராமதாஸ் குழந்தை மாதிரி, அவருக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவருக்கு 87 வயதாகி விட்டது.
* டெல்லியில் 30 பேர் போராட்டம் நடத்திவிட்டு 3,000 பேர் கலந்து கொண்டதாக ராமதாசிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள்.
* நான் நடத்தும் கூட்டங்களில் கூட்டம் குறைவாக இருப்பதாக ராமதாசிடம் தவறான தகவல்களை சொல்லி வருகிறார்கள்.
* இன்னும் 3 மாதத்தில் யார் யார் சிறைக்கு செல்ல போகிறார்கள் என பார்த்துக்கொண்டிருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லி காட்ட வேண்டியுள்ளது.
- தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கட்சிக்கு சொந்தம் கொண்டாடி இருவரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். ஆனால் தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்டு மாதம் வரை அன்புமணி தான் பா.ம.க. தலைவர் என கூறியது. தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராமதாஸ் தரப்பிரனர் டெல்லி தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லி காட்ட வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம். இதில் சம்பந்தமே இல்லாமல் பொய்மூட்டைகளுடன் அன்புமணி தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளது.
கட்சி எங்களுக்கே என்று சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது. கட்சி எங்களுக்கு இல்லை சொல்ல எனக்கு ஒரு பிள்ளை. தேவையென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும். இனி என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்த கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை. என் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது தொடர்பாக புகார் அளித்து எந்த வித நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது.
- தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரியில் பா.ம.க. மூத்த நிர்வாகி இல்ல திருமணத்திற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வருவது போல் இல்லை. தி.மு.க. ஒரு துரும்பை கூட செய்யவில்லை. சிப்காட் தொழிற்சாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகள் வரவில்லை.
தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது. அதற்கு வருகிற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வருகிற டிசம்பர் 17-ம் தேதி எனது தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அதற்கு தி.மு.க.வை தவிர, அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பீகாரில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே காரணம். தமிழ்நாட்டில் சமூக நீதியை மு.க.ஸ்டாலின் குழித் தோண்டி புதைந்துள்ளார்.
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, ஒப்பந்தத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் சமூக நீதி.
தமிழ்நாட்டில் நகாராட்சி துறையில் ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றப்பத்திரிகையை, காவல் துறைக்கு கொடுத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பணிக்கு ரூ.25 லட்சம் வரை ஹவாலா பணம் வந்ததாக 232 பக்கம் அறிக்கை கொடுத்தும் இந்த அரசு விசாரணை நடத்தவில்லை. ஆனால் இந்த செய்தி வெளியானதற்கு விசாரணை நடத்துகிறார்கள். மணல் கொள்ளை நடந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
தொழிலாளர்கள் முதலீடு முழுமையாக வந்ததாக முதலமைச்சரும், அமைச்சரும் பொய்யாக கூறுகிறார்கள். 9 விழுக்காடு தான் முதலீடு வந்துள்ளது. 80 முதலீடு வந்ததாக சொன்னவர்கள். தற்போது 23 சதவீதம் வந்துள்ளது என சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு வராமல், ஆந்திரா, தெலுங்கானாவுக்கு, தொழில் நிறுவனங்கள் செல்கிறது. இதற்கு தி.மு.க.வின், கலெக்சன், கமிசன் கராப்சன் அதிகம் என்பதால், இங்கு வருவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.






