என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தேர்தல் ஆணையத்தை என்ன விலை கொடுத்து வாங்கினார்கள் என தெரியவில்லை - பா.ம.க. எம்.எல்.ஏ அருள்
    X

    "தேர்தல் ஆணையத்தை என்ன விலை கொடுத்து வாங்கினார்கள் என தெரியவில்லை" - பா.ம.க. எம்.எல்.ஏ அருள்

    • அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி பா.ம.க
    • கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை உருவாக்கிய ராமதாஸை ஒரேநாளில் தூக்கி எறிய பார்த்தார்கள்.

    பாமகவின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள், 'தேர்தல் ஆணையத்தை என்ன விலை கொடுத்து வாங்கினார்கள்' என தெரியவில்லை என அன்புமணி தரப்பை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,

    "அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி பா.ம.க. அக்கட்சியின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது" என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது இப்போது இந்த வாதத்தை மாற்றிக் கொள்கிறோம் என தேர்தல் ஆணையமே ஒரு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது. அதற்கு நீதிமன்றம் மாற்றமாட்டோம், பதிவு செய்துகொள்கிறோம் என கூறுகிறது.

    தற்போது தேர்தல் ஆணையத்தை இவர்கள் என்ன விலை கொடுத்து வாங்கினார்கள் என்று தெரியவில்லை. அதன்மூலம் ஒரு பொய்யான அறிக்கையை சமர்பிக்கிறார்கள். மறுசீராய்வு மனு என்பது 30 நாட்களுக்குள் தாக்கல்செய்ய வேண்டும். ஆனால் 72 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் போடுகிறது. இதன் உள்நோக்கம் எங்களுக்கு தெரியவில்லை. கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை உருவாக்கிய ராமதாஸை ஒரேநாளில் தூக்கி எறிய பார்த்தார்கள். அதற்கு நீதிபதி அனுமதி தரவில்லை. நீதிமன்றத்தை விலைக்கு வாங்கமுடியவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தை வாங்கியுள்ளனர்." என தெரிவித்தார்.

    Next Story
    ×