search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "ப சிதம்பரம்"

  • மைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர்.
  • பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார்.

  பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர்.

  கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு மந்திரி சபையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

  இந்நிலையில், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதனையடுத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

  "நாளை முதல் வரும் 14ம் தேதி வரை பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும் அவருக்கு வாக்களித்த வாரணாசி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.

  இவை எல்லாம் நல்லதுதான். ஆனால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  • நிர்மலா சீதாராமன், குமாரசாமி உள்பட 71 மத்திய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
  • பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  புதுடெல்லி:

  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜ.க. இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

  இதையடுத்து, ஜானதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிர்மலா சீதாராமன், குமாரசாமி உள்பட 71 மத்திய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  இந்தியக் குடிமகன் என்ற முறையில் நேற்றுப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான புதிய மத்திய அரசுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பாராளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி தருக! என பதிவிட்டுள்ளார்.

  • நமது கொள்கைகள் ஏழைகளை நோக்கியதாக மாற்றுதவன் மூலம் சமத்துவ சமுதாயத்தை உருகாக்க முடியும்.
  • நமது நாட்டின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஏழைகளுக்கு ஆதரவாக இல்லை.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் எம்.பி. வீரேந்திரகுமார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் 'உள்ளடக்கிய வளர்ச்சி கட்டுக்கதையும், யதார்த்தமும்' என்ற தலைப்பில் ப.சிதம்பரம் பேசியதாவது:-

  ஒருவருக்கொருவர் பிரதிபலிக்கும் பொருளாதார மற்றும் சமூக படிநிலைகளை நாம் புரிந்து கொண்டு நமது கொள்கைகளை அடிமட்டத்தில், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு மாற்றியமைக்காவிட்டால் நம்மை சமத்துவ சமூகம் என்று அழைக்க முடியாது. சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியமாகும்.

  தற்போதைய சமூகம் சமமானதாகவோ நியாயமானதாகவோ இல்லை. முதலாளித்துவ மற்றும் பணக்கார நாடுகள் சமத்துவ சமூகங்களை உருவாக்கியுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வியை உலகளாவியதாகவும், இலவசமாகவும் மாற்றுவதன் மூலம் சமத்துவ சமூகங்களை உருவாக்க முடியும்.

  பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மழலையர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, சிறிய நோய் முதல் பெரிய அறுவை சிகிச்சை வரை இலவசம். எனவே நமது கொள்கைகள் ஏழைகளை நோக்கியதாக மாற்றுதவன் மூலம் சமத்துவ சமுதாயத்தை உருகாக்க முடியும்.

  ஆனால் நமது நாட்டின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஏழைகளுக்கு ஆதரவாக இல்லை. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கே வழங்கி உள்ளனர். நம் நாட்டின் கொள்கைகள் ஏழைகளுக்கு முன்னோடியாக இல்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இது போன்று பல உதாரணங்களை கூற முடியும்.

  இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

  • ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளது.
  • டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?

  2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரதமர் மோடியிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

  இதுதொடர்பாக பா.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  2014 மற்றும் 2019 க்கு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியது என்று மாண்புமிகு பிரதமர் கூறினார்.

  பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டால், அதற்கான தரவு அவரிடம் இருக்கும் என்று உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

  அதனால், மாண்புமிகு பிரதமரிடம் சில கேள்விகளை கேட்கிறேன்.

  * தயவு செய்து அந்த அறிக்கையின் தரவு மற்றும் தரவுகளின் ஆதாரத்தை பொதுவில் வெளியிடுவீர்களா?

  * 2019ம் ஆண்டுடன் அதை ஏன் நிறுத்த வேண்டும்? 2019 முதல் 2024 வரை என்ன நடந்தது ?

  * ஒரு துறையில் மட்டும் 6 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றால், 2014- 2019ல் உருவாக்கப்பட்ட மொத்த பணிகளின் எண்ணிக்கை என்ன?

  * பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் 42 சதவீதம் ஏன்? டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?

  * ஐஐடியில் 2024ம் ஆண்டின் வகுப்பில் 38 சதவீதம் பேர் ஏன் இன்னும் வேலைகளில் சேர்க்கப்படவில்லை? ஐஐடி பட்டதாரிகள் டிஜிட்டல் பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்படுகிறார்களா?

  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • வயது முதிர்வின் (77 வயது) காரணமாக நவீன் பட்நாயக் ஓய்வுபெற வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
  • பா.ஜ.க. ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித் ஷா மகிழ்ச்சியாக இருப்பார் எனத் தெரிகிறது.

  புதுடெல்லி:

  ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 77 வயதாகும் நவீன் பட்நாயக், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வுபெற வேண்டும். பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் ஒடியா மொழிப் பேசும் வாலிபரை முதல்வராக்குவோம் என கூறினார்.

  இது தொடர்பாக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்து வெளியிட்டுள்ள பதிவில்,

  வயது முதிர்வின் (77 வயது) காரணமாக நவீன் பட்நாயக் ஓய்வுபெற வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார். ஒருவேளை பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் மோடிக்கு (73 வயது 7 மாதங்கள்) விடுக்கப்பட்ட அறிவுரையா?

  பா.ஜ.க. ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித் ஷா மகிழ்ச்சியாக இருப்பார் எனத் தெரிகிறது. அவர் எதிர்க்கட்சித் தலைவராவார் என கூறியுள்ளார்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • புல்டோசர் அரசியலை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் அறிமுகம் செய்து வைத்தார்.
  • பா.ஜ.க. அரசுக்கு எதிராக விமர்சனங்களை கூறும் பொதுமக்களின் சொத்துகளை இடித்து அகற்றுவதற்காக பயன்படுத்தினர்.

  சென்னை:

  பிரதமர் நரேந்திர மோடி வடமாநிலங்களில் 5-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய கருத்துகள் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை புல்டோசர் கொண்டு இடித்து விடுவார்கள் என்று பேசினார்.

  இந்த பேச்சு எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் இந்த பேச்சு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கூறுகையில்,

  புல்டோசர் அறம் என்பது உத்தரபிரதேச முதல்வரின் அடையாளமாக இருக்கலாம். ஆனால் காங்கிரசுக்கோ, இந்தியா கூட்டணிக்கோ இதில் முற்றிலும் உடன்பாடு கிடையாது.

  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, மூன்றாம் தரமாக மலிவான முறையில் அரசியல் செய்வது, சட்டவிரோத சோதனைகள் நடத்துவது, அரசுத் துறைகளை பயன்படுத்தி பறிமுதல் செய்வது, தவறான முறையில் நபர்களை கைது செய்வது, காவல்துறை, சிறைத்துறை மரணங்கள் ஆகியவற்றிக்கு முடிவு கட்டப்படும் என உறுதியளிக்கிறேன்.

  ராமர் கோவில் புல்டோசர் கொண்டு இடித்து அகற்றப்படும் என்ற இந்தியா கூட்டணியின் மீதான பிரதமர் மோடியின் தவறான குற்றச்சாட்டுக்கு இதுதான் எங்களது உறுதியான பதிலாகும் என்றார்.

  அதேபோல் உத்தரபிரதேசத்தில் உள்ள பாரபங்கி என்ற இடத்தில் பிரதமர் மோடி பேசுகையில், புல்டோசரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தியா கூட்டணி கட்சியினர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார்.

  இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், முன்பு பிரசாரத்தின் போது பிரதமரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேசுகையில், பா.ஜ.க. 370 இடங்களில் இருந்து 400 இடங்கள் வரை பிடிக்கும் என தெரிவித்தனர். தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் இருவரும் பேசும் போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

  புல்டோசர் அரசியலை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் அறிமுகம் செய்து வைத்தார். பா.ஜ.க. அரசுக்கு எதிராக விமர்சனங்களை கூறும் பொதுமக்களின் சொத்துகளை இடித்து அகற்றுவதற்காக பயன்படுத்தினர். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கண்டித்த போதிலும் கூட புல்டோசர் அரசியலை அவர்கள் கைவிட தயாராக இல்லை.

  பிரதமர் மோடியின் புல்டோசர் அரசியல் குறித்த பேச்சு மிகவும் தரம் தாழ்ந்த ஒன்றாகும் என்றார்.

  • 2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.
  • ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும்.

  புதுடெல்லி :

  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

  மோடி சர்கார் போய்விட்டது. சில நாட்களாக பிஜேபி சர்கார் தான். அதுவும் நேற்றிலிருந்து என்.டி.ஏ., சர்கார்.

  ஏப்ரல் 19 முதல் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா?

  ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரசின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

  நன்றி, பிரதமரே! எனக்கூறியுள்ளார்.

  மற்றொரு பதிவில்,

  நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் காங்கிரசுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.

  2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.

  கர்நாடகாவில் நேற்று தேர்தல் நடந்த 14 தொகுதிகளில், 2019ல் காங்கிரஸ் தனது 1 மதிப்பெண்ணில் இருந்து பெரும் முன்னேற்றம் அடையும்.

  ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும் என பதிவிட்டுள்ளார்.

  • 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது.
  • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது.

  திருவனந்தபுரம்:

  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  தேர்தல் முடிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

  இந்தியாவின் மிகப்பெரிய சவால் வேலையின்மை. சிலர் இதை குறைத்து மதிப்பிடுகின்றனர். இது மிகப்பெரிய பிரச்சனையாகும். எனது அனுபவத்தில் இவ்வளவு அதிகமான வேலையின்மை விகிதம் இருந்தது இல்லை. பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. பட்டதாரிகளின் வேலையின்மை 42 சதவீதமாக உள்ளது.

  14 நாட்களில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உருவாக்கியது. அது தேர்தல் அறிக்கை என்று பெயரிடப்படவில்லை. அதை மோடியின் உத்தரவாதம் என்கிறார்கள்.

  பா.ஜ.க. நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சியாக இருக்காது. அது ஒரு வழிபாடாக மாறிவிட்டது. அந்த வழிபாடு நரேந்திர மோடியை வணங்குகிறது. இந்தியாவில் அந்த வழிபாடு வலுப்பெற தொடங்கியதும் சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும்.

  மோடி மீண்டும் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பை திருத்தலாம். 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பேசாமல் இருக்கிறது.

  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பாராளுமன்ற முதல் அமர்விலேயே குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

  இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.
  • இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி.

  காரைக்குடி:

  பாராளுமன்ற தேர்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நான் உறுதியோடு நம்புகிறேன். நட்டாவும், அமித்ஷாவும் காரைக்குடிக்கு வரவில்லை, அவர்கள் வராமல் வருகை ரத்தானதற்கு காரணம் அனைவருக்கும் தெரியும்.

  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத் தன்மை காப்பாற்றப்படும். பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.

  இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி. அமலாக்கத்துறை என்பது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும்.

  இவ்வாறு அவர் கூறினார்.