என் மலர்

  நீங்கள் தேடியது "தொழிலாளி"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் கிச்சிப்பாளையத்தில் இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி தொழிலாளி இறந்து கிடந்தார்.
  • மேலும் அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை.

  சேலம்:

  சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 50), தொழிலாளியான இவர் நேற்றிரவு குடி போதையில் வீட்டில் தூங்கினார்.

  இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற ேபாலீசார் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிறிஸ்டோபர் ஜாண் என்பவரின் வீட்டு நாய், யேசுராஜனை கடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது.
  • கிறிஸ்டோபர் ஜாண், தன்னை தாக்கியதாக மண்டைக்காடு போலீசில் யேசுராஜன் புகார்

  கன்னியாகுமரி :

  திங்கள்நகர் அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் யேசுராஜன் (வயது36), கட்டிட தொழி லாளி. இவர் மண்டைக்காடு அருகே காளிவிளையில் வசிக்கும் தங்கையை பார்த்து வர சென்றார். அப்போது கிறிஸ்டோபர் ஜாண் என்பவரின் வீட்டு நாய், யேசுராஜனை கடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது.

  இதனால் இருவருக்கு மிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.இதில் கிறிஸ்டோபர் ஜாண், தன்னை தாக்கியதாக மண்டைக்காடு போலீசில் யேசுராஜன் புகார் செய்தார். போலீசார் கிறிஸ்டோபர் ஜாண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவகாசி அருகே பள்ளி மாணவர், தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
  • வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சிவகாசி

  சிவகாசி வெல்லம்சா மியார் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீமுருகன். இவரது மகன் ஸ்ரீராம் கார்த்திகேயன் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர்ச்சி முடிவுகள் வெளியானது.

  இதில் ஸ்ரீராம் கார்த்திகேயன் தோல்வியடைந்ததாக தெரிகிறது. இதனால் அவர் விரக்தியுடன் காணப்பட்டார்.

  இந்த நிலையில் ஸ்ரீமுருகன் தனது மகனை அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் சேர்த்தார்.

  தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து யாருடனும் சரியாக பேசாமல் இருந்த ஸ்ரீராம் கார்த்திகேயன் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (32). கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டது.

  சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட, வினோத்குமார் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமணத்திற்கு பெண் அமையாததால் மன வருத்தம் அடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • வெள்ளகோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  வெள்ளகோவில் :

  வெள்ளகோவில் அருகே உள்ள சிவநாதபுரம், அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35) . விசைத்தறி தொழிலாளி .இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

  பல இடங்களில் பெண்பார்த்தும் அமையாததால் மன வருத்தம் அடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் 3ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தாயார் லட்சுமி (வயது68) வேலைக்கு சென்று விட்டார். பிறகு இரவு வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் விட்டத்தில் கயிறு போட்டு மகன் மணிகண்டன் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதைப்பார்த்த தாயார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெ.ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முத்துச்சாமி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மாகாளிப்பட்டி என்ற ஊரில் 2.80 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார்.
  • நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்கக்கோரி முத்துச்சாமி, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்தார்.

  கரூர்:

  கரூர் தோைகமலை அருகே உள்ள அ.உடையபட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 40). இவர் சொந்தமாக செருப்பு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மாகாளிப்பட்டி என்ற ஊரில் 2.80 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். அதில் 18 சென்ட் நிலம் குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

  இதனால் நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்கக்கோரி முத்துச்சாமி, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் இதுவரை நிலத்தை யாரும் வந்து அளந்து தரவில்லை என கூறப்படுகிறது. பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நில அளவையர் சிவராதா (49) என்பவரை பார்ப்பதற்காக முத்துச்சாமி வந்துள்ளார்.

  அப்போது முத்துச்சாமி என்னுடைய நிலத்தை அளந்து தனிப்பட்ட பட்டா மாறுதல் தர வேண்டும் என கூறி, சிவராதாவை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் முத்துச்சாமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோகனூர் அருகே உள்ள வலையபட்டி ஊராட்சி குரும்பப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி கூலித்தொ ழிலாளி விபத்தில் பலியானார்.
  • நாமக்கல்-திருச்சி ரோட்டை கடக்க முயன்ற போது விபத்து.

  நாமக்கல்:

  மோகனூர் அருகே உள்ள வலையபட்டி ஊராட்சி குரும்பப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 63), கூலித்தொ ழிலாளி. இன்று இவர் தனது மொபட்டில் வலை யபட்டியில் உள்ள மருந்து கடைக்கு, மருந்து வாங்க சென்று கொண்டிருந்தார். நாமக்கல்-திருச்சி ரோட்டை கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த டாரஸ் லாரி ஒன்று கிருஷ்ணமூர்த்தியின் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

  இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி தாமரைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 5 வருடத்துக்கு முன்பு சங்கவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

  கோவை:

  கோவை கிணத்துக்கடவு சேரன் நகரை சேர்ந்தவர் அரவிந்த் பிரான்சிஸ் (வயது 27). கூலி தொழிலாளி.

  இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு சங்கவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் அரவிந்த் பிரான்சிசுக்கு குடிப்பழக்கம் உள்ளது.

  இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் அரவிந்த் பிரான்சிஸ் தனது மனைவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.

  சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் இருந்து எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

  இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்நிலையில் நேற்று காலை வெங்கடேசன் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். நேற்று மதியம் திடீரென வெங்கடேசன் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். வெங்கடேசனை தற்கொ–லைக்கு தூண்டியதாக மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

  ஈரோடு:

  ஈரோடு கருங்கல்பாளையம், சிந்தன் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (42). பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வெங்கடேசன் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். நேற்று மதியம் திடீரென வெங்கடேசன் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  அப்போது டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  அப்போது போலீசாரிடம் அவர்களது உறவினர்கள் கூறும்போது,

  சம்பவத்தன்று இரவு வெங்கடேசன் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது உறவினர் மாரிமுத்து என்பவர் மது குடிப்பதற்கு அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் மாரிமுத்து தரக்குறைவாக பேசியுள்ளார்.

  அதன் பின் வெங்கடேசன் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டிற்கும் வந்த மாரிமுத்து மீண்டும் தரகுறைவாக பேசி உள்ளார். இதனால் மன உளைச்சலில் வெங்கடேஷ் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

  இதையடுத்து மாரிமுத்துவை பிடிக்க 2 தனிப்படை அமைக்க ப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். வெங்கடேசனை தற்கொ–லைக்கு தூண்டியதாக மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மது குடித்து விட்டு வீட்டில் தினமும் மனைவியிடம் தகராறு
  • சேத மதிப்பு 2 ஆயிரம் ரூபாய்

  கன்னியாகுமரி :

  புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆரிஸ் (வயது 63), தொழிலாளி. அதே பகுதியில் வசிப்பவர் வேதமணி மகன் சிசில். இவர் மது குடித்து விட்டு வீட்டில் தினமும் மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.

  இதனால் அவரது மனைவி பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கு காரணம் ஆரிஸ் என நினைத்த சிசில் சம்பவ தினம் ஆரிசின் வீட்டு காம்பவுண்ட்க்குள் புகுந்து அவரை கம்பியால் தாக்கி, வீட்டின் வெளியில் உள்ள சில பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளார். சேத மதிப்பு 2 ஆயிரம் ரூபாய் என தெரிகிறது. படுகாயமடைந்த ஆரிஸ் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சரக்குவேன் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர்- 6 தொழிலாளிகள் காயமடைந்தனர்.
  • விபத்து தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  திருமங்கலம்

  தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பிரானூர் பாடர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் விக்னேஷ் (20), சரக்கு வேன்டிரைவர். இவர் நேற்று பக்கத்து ஊரான மேலூர் கதிரவன் காலனியைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளர்கள் 6 பேருடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காண்டை கிராமத்திற்கு சரக்குவேனில் புறப்பட்டார்.

  எம்.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள கல் பாலத்தில் வந்தபோது திடீரென சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் விக்னேஷ், தொழிலாளர்கள் ராமரத்தினசாமி(52), ரகு(35), செல்லப்பா(42), சுப்பிரமணி(52), நல்லையா(47), பால்பாண்டி(48) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பேரையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
  • வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்

  நாகர்கோவில் :

  நாகர்கோவில் வடசேரி போலீசார் அறுகுவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் அவர் சுயம்பு லிங்கம் என்ற கட்டலிங்கம் (வயது 45) என்பதும், அவர் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான சுயம்பு லிங்கம் மீது கஞ்சா வழக்கு உள்பட மொத்தம் 18 வழக்குகள் உள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேச்சேரி அருகே 3 பெண்களை திருமணம் செய்த தொழிலாளி திடீர் தற்கொலை செய்துகொண்டார்.
  • சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  மேட்டூர்:

  சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள கொப்பம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 70). இவருக்கு 3 மனைவிகள். எனினும் தற்போது அவர்களுடன் சேர்ந்து வாழாமல் தனியாக வசித்து வந்தார்.

  இவருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் தனியாக வசித்து வந்த சேட்டு கடந்த 22-ந்தேதி வீட்டின் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  பின்பு அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

  இதுகுறித்து சேட்டுவின் சகோதரி பழனியம்மாள் மேச்சேரி போலீசில் புகார் செய்தார். மேச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  ×