என் மலர்
வழிபாடு
- ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி.
- வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.
ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி
இறைச்செய்தியின் ஆரம்ப வெளிப்பாடும், இந்த பிரபஞ்சத்தில் உலகப்பொதுமறையாம் திருமறை திருக்குர்ஆன் இறங்கிய துவக்கமும், இறை அழைப்பின் அழகிய ஆரம்பக்கட்டமும் புனித ரமலானில்தான் அரங்கேறியது.
'ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக்கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது.' (திருக்குர்ஆன் 2:185)
நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயதை நெருங்குவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே அவர்களின் மனம் தனிமையை விரும்பியது. மக்காவில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் உள்ள நூர் மலையில் அமைந்துள்ள ஹிரா குகைக்குச் சென்று அங்கே இறைவனுக்காக தவம் மேற்கொண்டார்கள். பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயதை நிறைவு செய்தபோது அவர்களுக்கு நபித்துவ பட்டம் கிடைத்தது.
ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 21. திங்கட்கிழமை கி.பி.610 ஆகஸ்டு 10-ம் தேதி முதன்முதலாக இறைச்செய்தி இறங்கியது.
'ஆயிஷா (ரலி) கூறினார்: 'நபி (ஸல்) அவர்களுக்குத் தொடக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்த கனவு கண்டாலும் அது அதிகாலைப்பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர், தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் பல இரவுகள் அங்கே தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். அந்த நாள்களுக்கான உணவை தம்முடன் கொண்டு செல்வார்கள். உணவு தீர்ந்ததும் மனைவி கதீஜாவிடம் திரும்புவார்கள்.
இந்த நிலை ஹிரா குகையில் இறைச்செய்திவரும் வரை நீடித்தது. ஒருநாள் வானவர் தோன்றி, ஓதும் என்றார். அதற்கு நபியவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றார்கள்.
'அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு மீண்டும் 'ஒதும்' என்றார். 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றேன். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. மூன்றாவது முறை கட்டியணைத்து விட்டு 'படைத்தவனாகிய உமது இரட்சகனின் திருப் பெயரால் ஒதும்! அவனே மனிதனை கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்து படைத்தான். ஒதும் உம் இரட்சகன் கண்ணியமிக் கவன்' என்றார். (திருக்குர்ஆன் 96:1,2,3, நூல்:புகாரி)
இதுதான் உலகில் முதலில் இறங்கியதிருக்குர்ஆனின் இறைச்செய்தியாகும். இறைச்செய்தியின் வகைகள்:
1) உண்மையான கனவு. இதுதான் இறைச் செய்தியின் தொடக்கம்.
2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண் முன் தோன்றாமல் உள்ளத்தில் இறைச்செய்தியை போடுவது.
3) வானவர் ஓர் ஆடவரின் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) மனதில் நிலை நிறுத்திக்கொள்வார்கள்.
4) வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.
5) வானவர் இறைவன் படைத்த உண்மை தோற்றத்தில் நபி (ஸல்) முன் தோன்று வார்.
6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. இது நபியவர்களின் விண்ணுலகப் பயணத்தில் தொழுகை கடமையாக்கப்பட்ட போது நடந்தது.
7) வானவரின்றி நேரடியாக அல் லாஹ்வே பேசுவது. இது மூஸா (அலை) அவர்களுக்கு இந்த உலகத்திலேயே கிடைத்தது. நபி (ஸல்) அவர்களுக்கு விண்ணுலகப் பயணத்தின் மூலம் ஏற்பட்டது.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ஆஞ்சனேயர், ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 4 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி பின்னிரவு 3.17 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: மிருகசீர்ஷம் இரவு 9.53 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பரமக்குடி ஸ்ரீ அன்னை முத்தாலம்மன் உற்சவம் ஆரம்பம். திருச்சுழிய சுவாமி ஸ்ரீ அம்பாள் குதிரை வாகனத்தில் திருவீதியுலா சென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கிருஷ்ணாவதாரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-பெருமை
கடகம்-நலம்
சிம்மம்-புகழ்
கன்னி-மேன்மை
துலாம்- உவகை
விருச்சிகம்-தேர்வு
தனுசு- வரவு
மகரம்-பாராட்டு
கும்பம்-உழைப்பு
மீனம்-ஓய்வு
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
- மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 3 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி பின்னிரவு 3.32 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: ரோகிணி இரவு 9.37 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. சென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் திருவீதிஉலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சிறப்பு திரவார திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-குணம்
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-இன்பம்
கடகம்-பணிவு
சிம்மம்-பக்தி
கன்னி-ஓய்வு
துலாம்- நன்மை
விருச்சிகம்-தெளிவு
தனுசு- உதவி
மகரம்-பரிவு
கும்பம்-பாசம்
மீனம்-புகழ்
- சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
- திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரகதகல்லால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சிறுவாபுரி கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு, நிலம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பக்தர்களின் நீண்டநாள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மேலும் இந்த கோவில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த கோவில் என்றும் கூறப்படுகிறது. இதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்களின் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிக்கி திணறி வருகிறார்கள்.
இதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்தி ருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை நிலவிவருகிறது. ரூ.100 சிறப்பு கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து செல்கிறார்கள்.
இதேபோல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதிலும், வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சிறுவாபுரி-புதுரோடு சாலையிலும், சிறுவாபுரி-அகரம் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே செவ்வாய்க்கி ழமை மற்றும் விழா காலங்களில் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரையில் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-
சிறுவாபுரி கோவிலில் முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் விடியற்காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு போதுமான அளவு குடிநீர் வசதி, நிழல் தரும் பந்தல் வசதி, தேவையான கழிவறை வசதி தேவையான அளவு இல்லை.
மேலும், கோவிலுக்கு செல்லும் வழியையும், தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வழியையும் ஒவ்வொரு வாரமும் மாற்றி, மாற்றி அமைப்பதால் பக்தர்கள், முதியவர்கள், பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்வதிலும், வெளியே வருவதிலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
சாலையின் இருபுறமும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர். காவல்துறையினரும், வருவாய் துறையினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஒருவருக்கு, ஒருவர் ஒத்துழைப்பு இல்லாததால் சாலை ஓரம் உள்ள கடைகளை அப்புறப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.
இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் விழா காலங்களில் பக்தர்கள் தரிசன நேரத்தை அதிகரித்தால் கூட்ட நெரிசல் ஏற்படாது. வாகன நெரிசலை தவிர்க்க கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்து போக்கு வரத்தை சரிசெய்யவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- பங்குனி உத்திர விழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர்:
திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் உத்திர விழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா இன்று காலை 9 மணிக்கு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் காலை, மாலை உற்சவர் சோமாஸ்கந்தர் பல்வேறு வாகனத்தில் திருவலாங்காட்டில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
விழாவின் 7ம் நாளான 21-ந்தேதி கமலத்தேர் விழா நடக்கிறது. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி இரவு வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைப்பெறுகிறது. 24-ந்தேதி இரவு தீர்த்தவாரி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி செய்து வருகின்றனர்.
- இருவருக்கு ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும்.
- ஒருவர் கஷ்டப்பட்டாலும் இன்னொருவர் குடும்பத்தை நடத்துவார்.
பொதுவாக ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்ப்பது நல்லது. ஒரே ராசி - ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யும் போது கோச்சார நிலைப்படி இருவருக்கு ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும்.
பையனுக்கு, அஷ்டமத்தில் குரு வந்தால் பெண்ணிற்கும் அந்த நேரத்தில் குரு அஷ்டமத்தில் வரும் (காரணம் இருவரும் ஒரே ராசி அல்லது நக்ஷத்திரம் என்பதால்) அதே போல ஏழரைச் சனியும் இருவருக்கும் வந்தால் சேர்ந்தே வரும். இதனால் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். திக்கு முக்காடி போய்விடுவார்கள். ஏனெனில் கணவருக்கு மோசமான கோச்சார கிரக நிலை இருந்தால் மனைவிக்கு அந்த சமயத்தில் சுபமான அல்லது மிதமான கோச்சார பலன் இருத்தல் அவசியம்.
அப்போது தான் கொஞ்சமாவது சிரமப்படாமல் ஒருவர் கஷ்டப்பட்டாலும் இன்னொருவர் குடும்பத்தை நடத்துவார். இதனால் தான் ஒரே ராசியிலோ ஒரே நட்சத்திரத்திலோ திருமணம் செய்யக் கூடாது என்கின்றனர் பெரியவர்கள்.
- நான்கு பொருத்தத்திற்கு கீழ் போனால் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம்.
- தோஷம் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை நினைத்தபடி இருக்காது.
சிலர் ஜோதிடரை சந்தித்து 10 -ல் எது முக்கிய பொருத்தம் என்று கேட்பது உண்டு. ஆனால், ராமர் சீதைக்கு கூட எனது கணக்கில் எட்டு பொருத்தம் தான் காட்டுகிறது. ஆக நாம் யாருக்குமே பத்து பொருத்தம் என்பது அதிர்ஷ்டம்தான். ஆனால் குறைந்தது நான்கு பொருத்தமாவது இருத்தல் அவசியமாம். நான்கு பொருத்தத்திற்கு கீழ் போனால் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம். பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம்.
எனினும் ஏன் பல திருமணங்கள் வெற்றி அடைவது இல்லை?
அனைத்து பொருத்தங்களும் பார்த்து தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எனினும் திருமணம் நிலைக்காமல் போக பல காரணங்கள் உண்டு. நிறைய பேர் என்ன செய்கிறார்கள் என்றால், ஒரு ஜோதிடரை அணுகி நட்சத்திர அடிப்படையில் பொருத்தம் உள்ளதா என்று மட்டும் பார்த்து விட்டு அவசர கதியில் திருமணத்தை முடித்து விடுகிறார்கள். ஆனால் ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தை ஆராய மறந்து விடுகிறார்கள்.
ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் லக்கனம் மற்றும் இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த வரனை எடுப்பதை விட எடுக்காமல் இருப்பது நல்லது. காரணம் அது ராகு-கேது தோஷம். இந்த மாதிரி தோஷம் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை நினைத்தபடி இருக்காது. திருமண வாழ்க்கை அதிக சோதனை நிறைந்து இருக்கும். அதே போல ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் இருத்தல் நல்லது அல்ல. ஆக இவை எல்லாம் ஒரு காரணம்.
இன்னொரு காரணம் திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த நாளில் சந்திராஷ்டமம் இருத்தல் கூடாது. அதே போல ஒரு குறிப்பிட்ட சுப லக்கினத்தில் (நல்ல நேரத்தில்) திருமணம் செய்வார்கள். இந்நிலையில் அந்த நேரத்திற்கு உரிய லக்கினத்திற்கு அதிபதி நீச்சம் அல்லது லக்னத்திற்கு 6,8,12 இல் மறைந்தோ அல்லது வக்கிரம் அடைந்தோ இருக்கக் கூடாது. இது ரொம்ப முக்கியம்.
இதேபோல ராகு தசையில் திருமணம் செய்வது, முடிந்தவரை ஆண், பெண் இருவரில் யாருக்கு ராகு தசை இருந்தாலும் அல்லது நடந்தாலும் சம்மந்தியாக வரும் நபரை பற்றி நன்கு விசாரித்து பின் திருமணம் செய்யவும். ஆக, இனி பெற்றோர்கள் மேற்படி இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பிள்ளைகளின் இல்லறம் என்றும் இனிக்கும்.
- கணப் பொருத்தம் - மங்களம் உண்டு.
- மகேந்திரப் பொருத்தம் - செல்வம் விருத்தியாகும்.
திருமணப் பொருத்தம் என்பது ஆண், பெண் என இரு பாலரின் நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டு அவை இரண்டிற்கும் எந்த அளவிற்கு ஒத்துப்போகும் என்பதை கணக்கிடுவதே ஆகும்.
ஒரு காலத்தில் 22 பொருத்தங்கள் பார்க்கப்பட்டது பிறகு காலத்தின் மாற்றதால் 22 என்ற இந்த எண்ணிக்கை மெல்லக் குறைந்து 12 பொருத்தம் பார்த்தால் போதும் என்ற நிலை வந்தது இன்றைய காலத்தில் 10 பொருத்தங்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது.
பத்து பொருத்தங்கள்
1. தினப் பொருத்தம் - ஆயுள், ஆரோக்கியம் மேம்படும்.
2. கணப் பொருத்தம் - மங்களம் உண்டு.
3. மகேந்திரப் பொருத்தம் - செல்வம் விருத்தியாகும்.
4. ஸ்த்ரீ தீர்க்கம் - செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும்.
5. யோனி கூடம் - கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும்.
6. ராசிப் பொருத்தம் - வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும்.
7. ராசி அதிபதி பொருத்தம் - கரு சீக்கிரத்தில் உண்டாகும்.
8. வசியப் பொருத்தம் - கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள்.
9. ரஜ்ஜுப் பொருத்தம் - கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள்.
10. வேதை பொருத்தம் - தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
- வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
- நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று முன்தினம் காலை கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
மதியம் 12.30 மணியளவில் கோவிலில் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி எதிரே கொடிமரத்தில் கொடியிறக்கம், இரவு சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து 12-வது நாளான நேற்று இரவு 10 மணியளவில் பல்லக்கு சேவை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
13-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரே உள்ள பள்ளியறையில் சாமி-அம்பாளுக்கு ஏகாந்த சேவை நடத்தப்படுகிறது.
- 74-வது திருஏடு வாசிப்பு விழா.
- நாளை மறுநாள் பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை நெட்டியான்விளையில் அய்யா வைகுண்டர் பதி உள்ளது. இங்கு 192-வது அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 74-வது திருஏடு வாசிப்பு விழா ஆகியவை நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் திருஏடு வாசிப்பு, விளக்கவுரை, உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்து வருகிறது.
8-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, விளக்க உரை, இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, சுருள் வைப்பும் சாமிதோப்பு தலைமை பதியை சேர்ந்த பால் பையன் தலைமையில் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு சமய வகுப்பு மாணவ மாணவிகளின் நாடகம் நடக்கிறது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பால் வைப்பு, 3.30 மணிக்கு பணிவிடை, 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகமும், 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடை, 8.30 மணிக்கு உகப்படிப்பும் நடக்கிறது.
18-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு பள்ளி உணர்த்தல் 9.30 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
- தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் புகழ்பெற்றதும், பழமைவாய்ந்ததுமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும், மறுநாள் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 12-ந்தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவாக வந்து அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அங்காளம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மன், சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத்தொடர்ந்து பனை, புளி, காட்டுவாகை, சவுக்கு உள்ளிட்ட மரங்களைக்கொண்டு புதிதாக கோவிலின் மேற்கு வாசலில் தேர் வடிவமைக்கப்பட்டது. அந்த தேருக்கு பலவித பூக்களால் ஆன மாலைகள், பனங்குலை, தென்னங்குலை, ஈச்சங்குலை, வாழை மரங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.
பின்னர் கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மனை பூசாரிகள் பம்பை, மேள, தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினர். அதன் பிறகு ஊரின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்தவுடன் அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவிந்தா... அங்காளம்மா... ஈஸ்வரி தாயே என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், பக்தர்களின் வெள்ளத்தில் கோவிலைச்சுற்றி அசைந்தாடியபடி நிலைக்கு வந்தது.
தேர் சென்ற வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றையும், சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் ஆகியவற்றையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதுமட்டுமின்றி சில பக்தர்கள், திருநங்கைகள் பலவித அம்மன் மற்றும் சித்தாங்கு வேடமணிந்தும், கையில் தீச்சட்டி ஏந்தியும், நாக்கு, தாடைகளில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மன், வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது.
- சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகவும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாகவும் அமைந்த சுவாமி நெல்லையப்பர் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று பங்குனி மாதம் பிறந்ததை யொட்டி அதன் ஒரு நிகழ்வாக இன்று பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதையொட்டி அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிப்பட்டம் வீதிஉலா நடைபெற்றது. கொடிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதும் சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து கொடி மரத்துக்கு மாப்பொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
விழாவில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளன்று ஆலயம் உருவான வரலாற்றுத் திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா வும், 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழாவும் நடைபெறும்.






