என் மலர்
வழிபாடு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முன்னேற்றம் கூடும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிகளுக்கு உறுதுணைபுரிவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
ரிஷபம்
வசதி வாய்ப்புகள் பெருகும் நாள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
மிதுனம்
கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வது நல்லது, ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
கடகம்
காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
சிம்மம்
ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். செல்வ நிலை உயரும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்கள் ஆர்வத்தோடு உதவி செய்ய முன்வருவர். பழைய கடனில் இருந்து மீள புதிய வழிபிறக்கும்.
துலாம்
அலைபேசி வழியே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இனிமை தரும் விதம் இடமாற்றம் வரலாம்.
விருச்சிகம்
வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
தனுசு
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பயணங்களால் பலன் உண்டு. பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. தொழில் நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
மகரம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிடிவாத குணத்தை தளர்த்திக் கொள்ளவும். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
கும்பம்
குழப்பங்கள் அகலும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை.
மீனம்
முயற்சி கைகூடும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். நவீனப்பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
- ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனை விழா.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-23 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி காலை 11.35 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : மகம் மாலை 4.38 மணி வரை பிறகு பூரம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனை விழா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராமசுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவகோட்டை ஸ்ரீஅரங்கநாதர், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீபெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீவிஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீதிருமறைக் காடர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
திருநெல்வேலி சமீபம் நாலாம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூர் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் அபயபிரதான ஸ்ரீரங்கநாதர், திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-சிந்தனை
மிதுனம்-பெருமை
கடகம்-நன்மை
சிம்மம்-ஆதரவு
கன்னி-பதவி
துலாம்- உயர்வு
விருச்சிகம்-உதவி
தனுசு- வரவு
மகரம்-ஆர்வம்
கும்பம்-பக்தி
மீனம்-நலம்
- அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.
- இந்த மலையில் கொங்கணச் சித்தர் நீண்ட காலம் தங்கி வழிபட்டதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் அலவாய்ப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அலவாய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.
ஒரு காலத்தில் முருகப்பெருமான் மீது அதீத பக்தி கொண்ட பக்தர் ஒருவர், குழந்தை வரம் வேண்டி பழனி முருகனை தரிசிக்க சென்றார். அந்த பக்தரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அலவாய்மலையில் தான் எழுந்தருளி இருப்பதாகவும், தன்னை வழிபட வரும் பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்து கொடுக்கும்படியும், இந்த பணியை செய்து முடிக்கும் தருவாயில் உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் அருளினார்.
இதையடுத்து மகழ்ச்சி அடைந்த அந்த பக்தர், இத்தலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு, முருகப்பெருமான் கனவில் கூறியபடியே பக்தர்களுக்கு வசதியாக படிக்கட்டுகளை அமைத்து கொடுத்தார். இந்த திருப்பணி முடியும் வேளையில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.
இந்த மலையில் கொங்கணச் சித்தர் நீண்ட காலம் தங்கி வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மலை 'கொங்கண மலை' என்றும் அழைக்கப்படுகிறது. கோவிலில் முருகப்பெருமான் கையில் வேல் ஏந்தியபடி அழகுற காட்சி தருகிறார். இவர் சன்னிதிக்கு எதிரில் மயிலும், நந்தியும் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். இங்கு வற்றாத சுனை ஒன்றும் உள்ளது.
கார்த்திகை மாதம் வரும் சோம வாரத்தில் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. கர்ப்பப்பையில் கோளாறு உள்ள பெண்கள் இத்தலம் வந்து முருகனை வழிபட்டு, பின்பு இங்குள்ள சுனை நீரை பருகினால் அவர்களின் குறை சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
- திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்சதீபம்.
6-ந் தேதி (செவ்வாய்)
* சங்கடகர சதுர்த்தி
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தலங்களில் ராப்பத்து உற்சவம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
7-ந் தேதி (புதன்)
* தியாகபிரம்ம ஆராதனை விழா.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருவரங்கம் நம்பெருமாள் தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.
* திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
8-ந் தேதி (வியாழன்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய் காப்பு உற்சவம் ஆரம்பம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்சதீபம்.
* சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
9-ந் தேதி (வெள்ளி)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், கள்ளர் திருக்கோலக் காட்சி, இரவு சந்திர பிரபையில் பவனி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (சனி)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், கண்ணன் திருக்கோலக் காட்சி.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி, திருமோகூர் காளமேகப் பெருமாள், திருச்சேறை சாரநாதர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (ஞாயிறு)
* மதுரை செல்லத்தம்மன் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்து அருளிய காட்சி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (திங்கள்)
* திரைலோக்கிய கவுரி விரதம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், சுந்தரராஜர் திருக்கோலம்.
* மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடிவரும்.
ரிஷபம்
நன்மைகள் நடைபெறும் நாள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
மிதுனம்
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமானம் உயரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள்.
கடகம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். தெய்வ பலம் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருக்கும். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.
சிம்மம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நீண்ட நாட்களாக நிறைவேறாத பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு உண்டு.
கன்னி
யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை இன்று சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வரவேண்டிய தொகை குறிப்பிட்டபடி வந்து சேரும். இருப்பினும் திடீர் செலவுகளை சமாளிக்க அடுத்தவர்களிடம் கைமாத்து வாங்கும் சூழல் உண்டு.
விருச்சிகம்
வருமானம் திருப்தி தரும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்கள் உதவி செய்ய முன்வருவர். வரன்கள் வாயில் தேடி வரும்.
தனுசு
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். நண்பர்கள் பகையாகலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. மனக்குழப்பம் ஏற்படும்.
மகரம்
விரயம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறி செல்லும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர். நல்ல சந்தர்ப்பங்களை நழுவ விடுவீர்கள்.
கும்பம்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும் நாள். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-22 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை நண்பகல் 12.16 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : ஆயில்யம் மாலை 5.02 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம், வழிபாடு
இன்று சங்கடஹர சதுர்த்தி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். ஸ்ரீ வாஞ்சியம் முருகப்பெருமான் பவனி. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. திருத்தணி, வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநாரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை.
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் மூன்றாம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்திய மாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலையில் ஹோமம், அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உண்மை
ரிஷபம்-ஆசை
மிதுனம்-உற்சாகம்
கடகம்-புகழ்
சிம்மம்-லாபம்
கன்னி-ஜெயம்
துலாம்- சிந்தனை
விருச்சிகம்-பக்தி
தனுசு- பாசம்
மகரம்-அன்பு
கும்பம்-களிப்பு
மீனம்-விவேகம்
- இம்மாத அதிகாலையில் வளிமண்டலத்தில் ஓசோன் வாயுவின் அளவு அதிகமாக இருக்கும்.
- மார்கழியில் கோயிலுக்குச் செல்வது தூய காற்றைச் சுவாசித்து உடல் நலம் பெறவே.
மார்கழி மாதம் என்பது ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். ஆனால், பொதுவாக இம்மாதத்தில் திருமணம், வீடு புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பார்கள்.
மார்கழி மாதத்தில் ஏன் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை என்பதற்கான காரணங்களை ஆன்மீகம், அறிவியல் மற்றும் சமூக ரீதியாக இங்கே விரிவாகக் பார்க்கலாம்.
இந்து புராணங்களின்படி, மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். இதில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் அதிகாலை நேரமாகும். அதாவது, பிரம்ம முகூர்த்தம்.
அதிகாலையில் நாம் எப்படி உறக்கத்திலிருந்து எழுந்து இறைவனை வணங்குகிறோமோ, அதேபோல் தேவர்களும் விழித்தெழும் இந்த நேரத்தில் நாமும் வழிபாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பது ஐதீகம்.
திருமணம், கொண்டாட்டம் போன்ற உலகியல் சார்ந்த இன்பங்களை விட இறை சிந்தனைக்கு முன்னுரிமை அளிக்கவே இம்மாதத்தில் சுப காரியங்கள் தவிர்க்கப்படுகின்றன.
அறிவியல் மற்றும் ஆரோக்கியம் ரீதியாக, இம்மாத அதிகாலையில் வளிமண்டலத்தில் ஓசோன் வாயுவின் அளவு அதிகமாக இருக்கும். மக்கள் அதிகாலையில் எழுந்து வீதிகளில் கோலமிடுவதும், கோயிலுக்குச் செல்வதும் இந்தத் தூய காற்றைச் சுவாசித்து உடல் நலம் பெறவே.
சுப நிகழ்ச்சிகள் இருந்தால் மக்கள் இரவு தாமதமாக உறங்கி, அதிகாலைப் பொழுதைத் தவறவிடுவார்கள் என்பதால் அவை தவிர்க்கப்பட்டன.
மார்கழி என்பது "பீடை மாதம்" அல்ல; அது "பீடு" (பெருமை) மிக்க மாதம். இது இறைவனுக்காக ஒதுக்கப்பட்ட மாதம் என்பதால், மனிதர்கள் தங்கள் குடும்ப நிகழ்வுகளைத் தள்ளி வைத்தனர் என்பதே உண்மை.
- சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கோவில் நடைகளை மூடும் பாரம்பரியம் உள்ளது.
- மாற்றங்களை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசன திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணியில் இருந்து மாலை 6.47 மணி வரை சுமார் 3½ மணி நேரம் சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கோவில் நடைகளை மூடும் பாரம்பரியம் உள்ளது.
அதன்படி, மார்ச் மாதம் 3-ந்தேதி காலை 9 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படுகிறது. கோவில் சுத்தி உள்ளிட்ட பரிகாரச் சடங்குகள் முடிந்ததும் இரவு 8.30 மணிக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணம் காரணமாக கோவிலில் மார்ச் மாதம் 3-ந்தேதி நடக்க இருந்த அஷ்டதல பாதபத்மாராதனை சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்காரச் சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசன திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-21 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை நண்பகல் 1.24 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : பூசம் மாலை 5.02 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்பட சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுர சுந்தரி அமபாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அரளாகேசி அம்மன் சமேத ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருக சுந்தரகுசாம்பிகை சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் காலையில் சோமவார சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு பாலாபிஷேகம், அலங்காரம், வழிபாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி. நத்தம் ஸ்ரீ வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சன சேவை. தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-நன்மை
மிதுனம்-மேன்மை
கடகம்-போட்டி
சிம்மம்-வெற்றி
கன்னி-ஆதரவு
துலாம்- தனம்
விருச்சிகம்-நிம்மதி
தனுசு- கவனம்
மகரம்-உற்சாகம்
கும்பம்-பிரீதி
மீனம்-ஆக்கம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பரபரப்பாக செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை உண்டு.
ரிஷபம்
சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேரலாம். வீட்டைப் பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கடகம்
நிதி நிலை உயரும் நாள். நேசம் மிக்கவர்களின் பாசமழையில் நனைவீர்கள். வீடு மாற்றத் தகவல் இனிமை தரும். உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
சிம்மம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அக்கம், பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கடன் சுமை குறைய எடுத்த புது முயற்சி பலன் தரும்.
துலாம்
மகிழ்ச்சி கூடும் நாள். நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
விருச்சிகம்
மகிழ்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். உறவினர்களின் சந்திப்பு உண்டு. வீட்டை சீரமைப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
தனுசு
சங்கடங்களை சந்திக்கும் நாள். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடும். நண்பர்கள் வழியிலும் விரயங்கள் உண்டு.
மகரம்
நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியைமத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.
கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். நெருக்கடி நிலை அகலும். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமைப்படுவீர்கள். பணியில் இருந்த தாமதம் அகலும்.
மீனம்
விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வருமானத்தை விட செலவுகளே அதிகரிக்கும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.
- மேஷம் சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம்.
- ரிஷபம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம்.
மேஷம்
சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய்க்கும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுக்கும் பாக்யாதிபதி குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இதனால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. குடும்ப பிரச்சினைகள் அகலும். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள், துயரங்கள், சங்கடங்கள் விலகும். உங்களை ஏளனமாக அலட்சியமாக நினைத்தவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் உங்களுடைய வளர்ச்சி கூட போகிறது.தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். சுப பலன்கள் அதிகரிக்கும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். உடல் நலம் மிகச் சிறப்பாக இருக்கும். சஷ்டி திதியில் முருகனை வழிபடவும்.
ரிஷபம்
குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று தனம் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவை பார்க்கிறார். குரு ராசி அதிபதியை பார்ப்பதால் வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். விலை உயர்ந்த நவீன ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சமூக ஆர்வ லர்களுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.
மிதுனம்
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் வாரம்.ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எடுக்கும் முயற்சியில் தடையில்லாத வெற்றி கிட்டும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். பண வரவு பல வழிகளில் வரும். கோட்சார கிரகங்கள் அனைத்தும் மிதுன ராசியினருக்கு சாதகமாக உள்ளது. இதனால் ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்க ளையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்று வீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். மூத்த சகோதரம், சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும். தாய் அல்லது தந்தையின் அரசாங்க வாரிசு வேலை கிடைக்கும்.சுவாமி ஐயப்பனை ஆத்மார்த்தமாக வழிபடவும்.
கடகம்
மனக்கவலைகள் குறையும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இது கடக ராசிக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய யோகமான காலமாகும்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். தொழில் முயற்சிகள் நிறைவேறும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றமடையும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவும், பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். மறுமணத்திற்கும் வரன் கிடைக்கும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும்.ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வேலைப் பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
சிம்மம்
நெருக்கடிகள் விலகும் வாரம். ராசி அதிபதி சூரியன் குரு மற்றும் சனி பார்வையில் உள்ளார். தடை, தாமதங்கள் விலகும். மனச் சங்கடங்கள் அகலும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பது எல்லாம் நடக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும்.சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும்.அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலி கமாக ஒத்தி வைப்பது நல்லது.வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. கை,கால், மூட்டு வலியால் சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். முன் கோபத்தை குறைப்பது நல்லது.வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.
கன்னி
பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்தததை ஈடுகட்டுவீர்கள். இது வரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். ஜனன கால ஜாதரீதியாக சாதகமான தசாபுக்திகள் நடந்தால் நன்மையின் அளவை அளவிட முடியாத வளர்ச்சி உண்டு. கண்டகச் சனி பற்றிய பயம் விலகும். பொருளாதார பற்றாக்குறை அகலும். வர வேண்டிய கடன் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடனை திரும்ப செலுத்துவீர்கள்.பெண்களுக்கு பொருளாதாரத்தில் தன் நிறைவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மனம் மகிழும் சம்பவம் நடக்கும். தொழில் உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். அரசு வேலைக்கான முயற்சி கைகூடும்.புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பள்ளி கல்லூரிகள் மூலம் கல்வி சம்பந்தமான சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது.தினமும் திருகோளாறு பதிகம் படிக்கவும்.
துலாம்
தெய்வு அனுகூலமும், அதிர்ஷ்டமும் வழி நடத்தும் வாரம். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.புகழ், அந்தஸ்து, ஆளுமை அதிகரிக்கும். இனம் புரியாத கவலைகள் குறையும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு சுப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சிகள் சித்திக்கும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். ஓயாத உழைப்பால் அசதி மன உளைச்சல் ஏற்படும். விரும்பிய வேலையில் சேர சிபாரிசுக்கு அலைய நேரும். ஆரோக்கியம் சிறக்கும். கொடுத்து வாக்குறுதியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.சங்கடங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் மாற்றும் வல்லமை இறைபக்திக்கு உண்டு என்பதால் சரபேஸ்வரரை வழிபட்டு நலம் பெறவும்.
விருச்சிகம்
ஏற்றமான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் குரு மற்றும் சனியின் பார்வையில் சூரியன் சுக்கிரன் புதனுடன் இணைந்துள்ளார்.கடன் தொல்லை அகலும்.போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். சிலரின் இளைய சகோதரம் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய தொழில் முயற்சிக்கு தேவை யான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். முக்கியமான தேவைகள் நிறைவேறும். பார்த்துச் சென்ற வரனின் முடிவிற்காக காத்து இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.திருமண முயற்சியை ஒரு வாரம் ஒத்தி வைக்கலாம்.வீட்டு வாடகை உயரும். சொத்தை அடமானம் வைத்து சில்லறைக் கடனை அடைப்பீர்கள். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். 4.1.2026 அன்று காலை 9.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்கால் உறவுகளிடம் மன சங்கடம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் புரிதல் குறையும்.வெளி உணவுகளைத் தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கவும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.
தனுசு
முன்னோர்களின் நல்லாசிகள் நிறைந்த வாரம். பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை பலன் தரும். வெளிநாட்டு பயணம் சாதகமாகும். புதிய வாய்ப்புகளால் லாபம் உண்டாகும்.நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும்.வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். திருமணத் தடை அகலும். சொந்த இன, உறவுகளில் வரன் அமையும்.4.1.2026 அன்று காலை 9.43க்கு ஆரம்பித்து 6.1.2026 அன்று பகல் 12.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது. உடன் இருப்ப வர்களால் மனக்குழப்பம், பணியில் சோர்வு ஏற்படும். சனிக்கிழமைகளில் முன்னோர்களை வழிபட குடும்பத்தில் நிம்மதி கூடும்.
மகரம்
நிம்மதியான வாரம்.ராசி அதிபதி சனி வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மறைமுக லாபம் கிடைக்கும். உணவுத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், பங்கு வர்த்தகம், மார்க்கெட்டிங் போன்ற பணியில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும்.பெண்களுக்கு குடும்பப் பணிச்சுமையால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். பெண்கள் கணவரின் உண்மையான அன்பை உணர்வீர்கள். 6.1.2026 அன்று பகல் 12.17 முதல் 8.1.2026 அன்று மாலை 6.39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும்.பேச்சைக் குறைப்பது நல்லது. வேலைப்பளு மிகுதியாகும். மன அமைதி குறையும். வேலை ஆட்களை அனுசரித்துச் செல்லவும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வது வழிபடவும்.
கும்பம்
மகிழ்ச்சிகரமான வாரம். ஏழரைச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சனி உங்களின் ராசி அதிபதி என்பதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.கூலித் தொழிலாளிகளுக்கு தொழில் நெருக்கடி விரைவில் சீராகும். லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் பணக் கஷ்டம்,கடன் பாதிப்பு இருக்காது.சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.கடந்த கால கடன்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் சீராகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். 8.1.2026 அன்று மாலை 6.39க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். முன் கோபத்தை குறைப்பது நல்லது.வியாழக்கிழமை குபேர லட்சுமியை மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவும்.
மீனம்
திட்டம் தீட்டி வெற்றி பெற வேண்டிய வாரம். ஜென்மச் சனியின் காலம் என்பதால் பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம், படிப்பு, நகை வாங்குவது என விரயத்தை சுப செலவாக முதலீடாக மாற்றுவது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊர் விட்டு ஊர் மாற நேரும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். தாய் வழிச் சொத்து விஷயத்தில் உடன் பிறந்தவர்களுடன் சிறு சலசலப்பு ஏற்படும். பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை பஞ்சாயத்து வரை சென்று சாதகமாகும். ஆரோக்கிய குறைபாட்டிற்கு மாற்றுமுறை வைத்தியத்தை நாடுவீர்கள். வார இறுதியில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள். வேலையில் பணி நிரந்தரமாகும். திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை.
- ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் ஊஞ்சலில் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-20 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை பிற்பகல் 2.53 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : புனர்பூசம் மாலை 5.49 மணி வரை பிறகு பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
காஞ்சிபுரம், சமயபுரம், தஞ்சை புன்னைநல்லூர் உள்பட அம்மன் கோவில்களில் சுவாமிக்கு அபிஷேகம்
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் முத்துப் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் ராஜாங்க சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், மதுரை கூடலழகர் கோவில்களில் சிறப்பு அலங்கார சேவை. கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் ஸ்ரீ அனுமனுக்குத் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் அபிஷேகம், ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உழைப்பு
ரிஷபம்-பாராட்டு
மிதுனம்-விவேகம்
கடகம்-தனம்
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-நற்செயல்
துலாம்- பாசம்
விருச்சிகம்-பண்பு
தனுசு- சுகம்
மகரம்-பெருமை
கும்பம்-சுபம்
மீனம்-பயணம்






