என் மலர்tooltip icon

    வழிபாடு

    • முருகனை திருமணம் செய்வதற்காக தெய்வானை தவம் இருக்கிறாள்.
    • 3 நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார்.

    கந்தசஷ்டி திருவிழாவின் 7-ம் திருநாளான, சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

    சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவில் திருக்கல்யாணம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப்பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள்பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது.

    மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார். அடுத்த 3 நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிபடுத்துகின்றனர்.

    • சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, 108 யுகம் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான்.
    • 6 குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.

    படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களை பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான்.

    அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களை பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான்.

    இதைத்தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுஉருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த 4 பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

    காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கி சென்று சிவபெருமானை நோக்கி தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களை பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களை பெற்றனர்.

    இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, 108 யுகம் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், என கேட்டான்.

    பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தை பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மை போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

    அசுரர்களின் இந்த கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது 6 நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றில் இருந்து தோன்றிய 6 தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான்.

    அந்த தீப்பொறிகள் ஆறும் 6 குழந்தைகளாக தோன்றின. அந்த 6 குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் 6 குணங்களை குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப்பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த 6 குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு 6 முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப்பெருமானாகத் தோன்றினர்.

    இத்திருவுருவை பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த 6 குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன். முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார்.

    திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும்போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் 5 நாட்களில் அழித்தார். 6-ம் நாள் எஞ்சியவன் சூரபத்மன் தான்.

    தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல.

    ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த 7 பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான்.

    மிகப்பெரிய அலைகளுடன் முருகனை பயமுறுத்திப் பார்த்தான். உடனே 100 அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனை கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

    முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்.

    சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகா

    ருண்ய மூர்த்தியான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வை

    தாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

    கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

    • திதி தேவதை பிரம்ம தேவனின் மானச புத்ரி.
    • முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது.

    சஷ்டி என்பவள் ஒரு திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். சஷ்டி எனும் திதி தேவதையானவள் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள்.

    இவள் பணி அதோடு மட்டும் நின்று போவதில்லை. மாதர்களுக்கு கரு உருவாக்குபவள், உருவாக்கிய கருவை உடனிருந்து காப்பவள், அக்கரு சிறப்பாக வளர உதவி புரிபவள், பிறந்த அந்த சிசுக்களை பலாரிஷ்ட தோஷங்கள் ஏற்படாமல் காப்பாற்றுபவள்.

    திதி தேவதை பிரம்ம தேவனின் மானச புத்ரி. முன்பொரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றபோது இவள் தேவர்கள் சேனையின் பக்கம் இருந்து உதவி புரிந்ததால் தேவசேனையென்றும் ஓர் பெயர் பெற்றாள். (இந்திரனின் மகளாகப் பிறந்து முருகப் பெருமானை திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்த தெய்வானை என்பவள் வேறு இவள் வேறு) அப்போது அந்த தேவசேனைகளின் பதியாகத் திகழ்ந்த (தேவசேனாபதி) முருகனுக்கு இந்த திதி தேவதையான சஷ்டி தேவி மிகவும் பிரியமுடையவளாக திகழ்ந்தாள். அதனால்தான் முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது.

    • திருச்செந்தூர் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பானகம் உள்ளிட்ட பானங்களை வழங்கி மகிழ்வார்கள்.
    • ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் தரிசனம் செய்ய தவறமாட்டார்கள்.

    திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் கந்த சஷ்டி விழா அனைத்துக்கும் சிகரமாக போற்றப்படுகிறது. கந்தன் தனது பிறப்பின் நோக்கமான சூரனை வென்று அவனை ஆட்கொண்ட இடம் இத்தலம் ஆகும். சூரனுக்கும் முருகனுக்கும் யுத்தம் நடந்ததை மெய்ப்பிக்கும் வகையில் கோவில் அருகில் நீண்ட கடற்கரை பகுதி அமைந்துள்ளது.

    மலைகளில் கோவில் கொள்ளும் விளக்கம் கொண்ட முருகன் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் சந்தன மலைமீது எழுந்தருளி உள்ளார். மூலவர் இருக்கும் பகுதி குடைவரை கோவிலாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதியை மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெருமாள் சன்னதியில் காணலாம். கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறு விதமான விரதங்களை மேற்கொள்வார்கள்.

    சிலர் மவுன விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உணவு உண்பார்கள். சிலர் பழங்கள் மற்றும் பழச்சாறு குடித்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த ஆறு நாட்களும் கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பாலசுப்பிரமணிய சுவாமி முன்பு சிறப்பு ஹோமங்கள் நடைபெறும். பின்னர் சாமி சண்முக மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.

    கந்தசஷ்டி கவசம் கந்தகுரு கவசம் கோவில் வளாகத்தில் ஒலிக்கும். கந்தசஷ்டி விழா கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக அமையும். ஆண்டுதோறும் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளமாக உள்ளனர். சஷ்டி விரதம் இருப்பதற்காக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகள் என உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.

    திருச்செந்தூர் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பானகம் உள்ளிட்ட பானங்களை வழங்கி மகிழ்வார்கள். சிலர் கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட முருகன் பாராயண நூல்களை அச்சிட்டு பக்தர்களுக்கு வழங்குவார்கள். 24 மணி நேரமும் பக்தர்கள் முருகனின் நாமத்தை உரைத்தபடி இருப்பார்கள். செந்தூர் கடல்அலையும் ஓம் ஓம் என்று மந்திரம் இசைத்துக் கொண்டே இருக்கும். கடலில் குளித்து வந்தால் கவலைகள் எல்லாம் கரைந்து மறைந்து விடும்.

    ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் தரிசனம் செய்ய தவறமாட்டார்கள். அந்த அளவுக்கு முருகன் அவர்களை ஆட் கொண்டு விடுவார். மதுரையில் சிவபெருமான் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார். அதே போல திருச்செந்தூரில் முருகனின் திருவிளையாடல் பல நிகழ்ந்துள்ளன.

    திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் ஒரு அற்புதமான நிலையில் அமைந்து உள்ளது. கடலை எல்லையாகக் கொண்ட இக்கோவிலை மக்களின் பாதுகாப்பு அரண் என்றே கூறலாம்.

    • திருச்செந்தூர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்
    • கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது.

    திருச்செந்தூர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் பலர் விரதம் இருக்க தொடங்கினர்.

    வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கோவில் வளாகத்தில் 18 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்து வருகிறது.

    இதுதவிர யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை அடுத்தடுத்து நடந்து வருகிறது.

     

    திருச்செந்தூரில் நேர்த்திக்கடனுக்காக பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து வந்த பக்தர்கள்.

    கந்தசஷ்டி திருவிழாவையொட்டி நேற்று சில பக்தர்கள் சிவன், பார்வதி, கிருஷ்ணர், விநாயகர், முருகர், நாரதர் உள்ளிட்ட சாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது.

     

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை காணலாம்.

    சூரசம்ஹாரத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    7-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.

    மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கிறார். அதன்பிறகு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-10 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி மறுநாள் விடியற்காலை 4.35 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : மூலம் காலை 11.30 மணி வரை பிறகு பூராடம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா, சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். சஷ்டி விரதம். சகல சுப்பிரமணியசாமி கோவில்களிலும் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

    கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-பக்தி

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-ஓய்வு

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-பரிவு

    தனுசு- லாபம்

    மகரம்-செலவு

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-புகழ்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    குறைகள் அகலக் குமரனை வழிபட வேண்டிய நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    ரிஷபம்

    நேசம் அதிகரிக்க ஈசனை வழிபட வேண்டிய நாள். பாசம்மிக்கவர்கள் பகையாகலாம். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசியில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படும்.

    மிதுனம்

    கவலைகள் அகலக் கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

    கடகம்

    யோகமான நாள். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைந்த பொருள் கைக்கு வந்து சேரும். வருமானம் பெருக வழி அமைத்துக் கொள்வீர்கள்.

    சிம்மம்

    சுகங்கள் வந்து சேர சுப்ரமணியரை வழிபட வேண்டிய நாள். தனவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். கடன் பிரச்சனைகள் அகலும்.

    கன்னி

    யோகமான நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொலைதூரத்தில் இருந்துவரும் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

    துலாம்

    சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    விருச்சிகம்

    வளர்சசி கூட வடிவேலனை வழிபட வேண்டிய நாள். எதிர்பார்த்த வரவு உண்டு. நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். முயற்சியில் வெற்றி கிட்டும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    தனுசு

    செல்வநிலை உயர்ந்து சிந்தை மகிழும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். மருத்துவச் செலவு குறையும். வருமானம் திருப்தி தரும்.

    மகரம்

    பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். பிற இனத்தாரின் ஒத்துழைப்போடு காரியங்களைச் செய்வீர்கள். விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.

    கும்பம்

    சந்தோஷம் அதிகரிக்க சண்முகநாதரை வழிபட வேண்டிய நாள். எடுத்த முயற்சி எளிதில் கைகூடும். வரன்கள் வாயில் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.

    மீனம்

    வருமானம் அதிகரிக்க வழியமைத்துக் கொள்ளும் நாள். வளர்ச்சி கூடும்.குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

    • மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.
    • கந்தசஷ்டி விழாவையொட்டி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர்.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் அக். 22-ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (அக்.27) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக, பெரியநாயகியம்மன் கோவிலில் 6 அடி உயரம், 4 அடி அகலத்தில் 4 விதமான சூரன்களை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. திருச்செந்தூரில் சூரன் உருவத்தில் தலையை மட்டும் மாற்றி மாற்றி சூரசம்ஹாரம் நடைபெறும்.

    ஆனால் பழனியில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் சூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் என 4 திசைகளிலும் தனித்தனியாக சூரன்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சூரசம்ஹாரத்தையொட்டி, நாளை (அக்.27) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.

    பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் நடைபெற்ற சூரன்களை தயார் செய்யும் பணி.

    மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.

    பிற்பகல் 3 மணிக்கு சின்னக் குமாரசுவாமி அசுரர்களை வதம்புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சன்னதி அடைக்கப்படும். தொடர்ந்து திரு ஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும். இதையொட்டி நாளை காலை 11.30 மணிக்கு அனைத்து தரிசன கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும். படிப்பாதை, ரோப் கார் மற்றும் வின்ச் ரெயிலில் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    விழாவின் நிறைவாக நாளை மறுநாள் (அக்.28) காலை 10.30 மணிக்கு மேல் மலைக்கோவிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கும், இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகியம்மன் கோவிலில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    கந்தசஷ்டி விழாவையொட்டி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் பஸ் நிலையம், அடிவாரம், மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். 

    • ரிஷபம் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாரம்.
    • சிம்மம் செயல்பாடுகளில் நிலவிய தடைகள் அகலும் வாரம்.

    மேஷம்

    அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். இது விபரீத ராஜ யோகத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்ப உறவுகளிடம் நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தன வரவு தாராளமாக இருக்கும்.கடன் தொல்லைகள் குறையும். சேமிப்பு உயரும். பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தை பெற்றுத்த ரும். அதிர்ஷ்ட பொருள் வரவு ஏற்படும். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.வியாபார சூட்சுமங்களை புரிந்து செயல்படுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். படித்து முடித்த இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்கு வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். கணவரின் ஆரோக்கிய கேட்டால் வருந்திய பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிடம் வலிமையாக இயங்கினால் வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழல் உருவாகும். வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். சஷ்டியன்று இளநீர் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சம் அடைந்தாலும் ராசியை செவ்வாயும் புதனும் பார்க்கிறார்கள்.வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துவங்குவீர்கள்.வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். பங்குதாரர்கள் ஆதரவால் தொழிலில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியும். அரசின் நலத்திட்டங்களால் ஆதாயம் உண்டாகும்.பூர்வீக நிலம் சம்பந்தமாக சகோதரருடன் கருத்து வேறுபாடு வரலாம்.உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். அண்டை அயலாருடன் நல்லி ணக்கம் உண்டாகும்.மழையால் ஏற்பட்ட சேதத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். விருப்ப விவாகம் நடைபெறும். பொருளாதாரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும். 28.10.2025 அன்று இரவு 10.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் குழந்தைகளை சிரத்தையோடு கண்காணிக்கவும்.புதிய எதிரிகள் தலை தூக்குவார்கள். சஷ்டி திதி அன்று முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மிதுனம்

    கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் ஆட்சி பலம் பெற்ற 6ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளார்.உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஏற்றமான பலன் கிடைக்கும்.புதிய தொழில் வாய்ப்புகள், முயற்சிகள் மன நிறைவு தரும். அரசு வேலைக்கு முயற்சியில் வெற்றி உண்டாகும். சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். நீண்ட காலமாக விற்க முடியாத சொத்துக்கள் விற்கும். குலதெய்வம், முன்னோர்க ளின் நல்லாசி கிடைக்கும். சிலருக்கு அரசின் இலவச வீட்டுமனை கிடைக் கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நன்மையை தரும்.தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். 28.10.2025 அன்று இரவு 10.14 மணி முதல் 31.10.2025 காலை 6.48 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் வீண் மனக்கவலை, முக்கிய பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் தடை, தாமதம் போன்ற அசவுகரியங்கள் இருக்கும். சஷ்டி திதியில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    கடகம்

    வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசியில் குரு உச்சம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி என உலவுகின்ற கிரக நிலை ஓரளவு உதவிகரமாக உள்ளது. நிறைந்த அறிவு, திறமை இருந்தும் சாதிக்க முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப் பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.கூட்டுத் தொழிலில் திருப்பம் உண்டாகும். சிலர் பழைய வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடுவார்கள். பழைய கடன்களை யும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். பெற்றோர் வழியில் சில உதவிகள் கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும். 31.10.2025 காலை 6.48 மணி முதல் 2.11.2025 அன்று பகல் 11.27 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பிடிவாதத் தினை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும்.கந்த சஷ்டியன்று வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    சிம்மம்

    செயல்பாடுகளில் நிலவிய தடைகள் அகலும் வாரம்.ராசிக்கு 4ம்மிடமான சுகஸ்தானத்தில் செவ்வாய் புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இது சிம்ம ராசிக்கு இழந்த இன்பங்களை மீட்டுத் தரும் அமைப்பாகும்.மனதில் புத்துணர்வு உண்டாகும்.தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். தாய் வழி சொத்தில் நிலவிய சர்ச்சைகள் அகலும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும். மாணவ-மாணவிகளுக்கு படிக்கும் ஆர்வம் கூடும். அஷ்டம சனியை மீறி சில நல்ல பலன்கள் நடக்கும். அஷ்டமச்சனியின் காலமே சொத்துக்க ளில் முதலீடு செய்வதற்கு உகந்த நேரமாகும். கடன் பிரச்சனைகளை கட்டுப்படுத்து வீர்கள். புத்திரப் பிராப்த்தம் உண்டாகும்.உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும்.2.11.2025 அன்று பகல் 11.27 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்ப தால் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.மன சஞ்சலத்தை கட்டுப்படுத்த வேண்டும். உறவுகளிடம் பொறுமையை கடைபிடிப்பதால் நல்லிணக்கம் உண்டாகும். கந்த சஷ்டி அன்றுநெய் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    கன்னி

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி புதன் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்தில் 3ம் அதிபதி செவ்வாயுடன் குருவின் பார்வையில் சேர்க்கை பெற்றுள்ளார். போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற கூடிய வகையில் தைரியமும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். தாய் வழிச் சொத்தில் சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும்.மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.இது வரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்குச் செல்ல நேரும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு மிகைப்படுத்தலான நன்மைகள் உண்டு.ஜாமீன் சார்ந்த பிரச்சினைகள் நீங்கும். வீடு வாகனங்களை பழுது நீக்கம் செய்வீர்கள். நல்ல வேலை கிடைக்கும். திருமணத்தடை அகலும்.மறு விவாக முயற்சிகள் சாதகமாகும். லவுகீக வாழ்வில் நாட்டம் மிகும். கந்த சஷ்டி அன்று தயிர் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    துலாம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசியில் நீச்ச சூரியன். ராசி அதிபதி நீச்சம் என முக்கிய கிரகங்கள் சுமாராக உள்ளது.மன சஞ்சலம் அதிகரித்து உச்ச கட்ட கோபத்தை வெளிக்காட்டுவீர்கள். வேலையில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சிறப்பாக இருந்தாலும் சேமிக்க முடியாத நிலை உருவாகும்.லாபம் நிற்காது அல்லது வருமானம் குறைவுபடும். மாணவ- மாணவிகள் கல்வியில் ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.காதலர்கள் பெற்றோரின் நல்லாசியுடன் திருமணம் செய்வது உத்தமம்.சில தம்பதிகள் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம்.தந்தை வழியில் சில பொருள் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.சிலர் முன் கோபத்தால் உறவுகளை பகைத்துக் கொள்வார்கள். அதனால் மன சஞ்சலம் ஆரோக்கியக் கேடு உண்டாகும்.ஆத்மார்த்தமான முருகன் வழிபாட்டால் உங்கள் ஜாதக ரீதியான தோஷங்களையும் சாபங்களையும் தீர்க்க முடியும்.

    விருச்சிகம்

    தன வரவில் தன்னிறைவு உண்டாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றுள்ளார். 8,11ம் அதிபதி புதனுடன் குரு பார்வையில் சேர்ந்து உள்ளார்.திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். இழந்த அனைத்து சுகங்களையும் மீட்டுப்பெறுவீர்கள்.எதிலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் நன்மதிப்பை பெறுவீர்கள். வர வேண்டிய பணங்களில் ஏதேனும் தடை தாமதங்கள் இருந்தால் இந்த வாரத்தில் முயற்சி செய்யலாம். கடன் பிரச்சனைகள் குறையும்.புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். திறமை வெளிப்படும். வழக்குகள் சாதகமாகும்.சமுதாய அந்தஸ்து நிறைந்த பெரியோர்களின் நட்பு கிடைக்கும்.பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன கனவு நனவாகும்.தாய் வழி முன்னோர்களிட மிருந்து நில, புலன், பணம் கிடைக்கும். கந்த சஷ்டி அன்று செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து முருகனை வழிபடவும்.

    தனுசு

    தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார்.எதிர்பார்த்த செயல்கள் நன்மையில் முடியும்.தடைபட்ட சில செயல்கள் தாமாக நடக்கும். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரியில் ஏற்பட்ட மனசங்கடங்கள் அகலும். மாநில, மாவட்ட அளவிளான போட்டி பந்தயங்களில் கலந்து வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினர் ஏற்றம் பெறுவர். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டு. திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடக்கும்.வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். ஆரோக்கி யத்தில் அதிக கவனம் தேவை.சிலருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.கந்த சஷ்டி அன்று 36 முறை கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபடவும்.

    மகரம்

    குரு பலத்தால் காரியம் சாதிக்க வேண்டிய வாரம்.ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியன் நீச்சமாக உள்ளார்.சூரியனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் நீச்சம். மகர ராசியினருக்கு தற்போது குரு மற்றும் செவ்வாயின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. இதனால் திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வீடு மாற்றம் ஊர் மாற்றம் ஏற்படும்.புதிய வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். இளைய சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். அடமான நகை களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். அசை யும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து பொலிவு பெறச் செய்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும்.திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் தலைக்கு வந்த அனைத்தும் தலைப்பாகையோடு சென்று விடும். கந்த சஷ்டி அன்று முருகனை வழிபட்டு தேவையற்ற எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    கும்பம்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் யோகமான வாரம். தொழில் ஸ்தானத்தில் 3,10ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 5,8ம் அதிபதியான புதனுடன் குரு பார்வையில் இருப்பதால் பண வரவு அமோகமாக இருக்கும்.அடிப்படைத் தேவைகளுக்கு திணறியவர்களுக்கு கூட சரளமான பண புழக்கம் உண்டாகும். குலத் தொழிலில் பங்குதாரராக இணைவீர்கள்.அல்லது குலத்தொழில்களை எடுத்து நடத்து வீர்கள்.இழந்த பதவி தேடி வரும்.உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. உடன் பிறந்தவர்கள் மூலமாக வருமான உயர்வுக்கான பாதை தென்படும். பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள். காதல் கல்யாண கனவுகள் நனவாகும்.சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.கந்த சஷ்டி அன்று சந்தன அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    மீனம்

    விடா முயற்சிகள் வெற்றி தரும் வாரம்.ராசியில் உள்ள சனிக்கு குரு மற்றும் சுக்ரனின் பார்வை உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகமாகும். இது வரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள். வெளிவட்டார செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். தொழிலை இழுத்து மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்று விடலாமா? என்று நம்பிக்கை இழந்து இருந்தவர்கள் கூட வாழ்வில் செட்டிலாக்கி விடும் வகையில் மாற்றமான நல்ல சுப பலன்கள் உண்டாகும். வீடு, நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.சொத்துக்கள் விற்பனையின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும். வாரிசு களுக்கு விரும்பிய அரசு வேலை கிடைக்கும். சிறை தண்டனை அனுபவிப்பவர்களுக்கு நன் நடத்தை காரணமாக விடுதலை கிடைக்கும். ஆன்மீகப் பெரியவர்கள் நட்பு கிடைக்கும்.கந்த சஷ்டி அன்று மஞ்சள் அபிஷேகம் செய்து முருகனை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.

    • தேரானது அசைந்தாடியபடி 4 வீதிகளையும் வலம் வந்தது.
    • வேல் வாங்கும் போது வேலவனின் திருமுகத்தில் முத்து, முத்தாய் வியர்வை அரும்பும் அற்புத நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடுவர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளுக்கு இணையான இக்கோவிலில் தான் சூரசம்ஹாரத்திற்கு முருகப்பெருமான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், கச்சியப்பர், சிதம்பர முனிவர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 22-ந்தேதி காப்பு கட்டுதல், ரஷாபந்தனம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் சிங்காரவேலவர் ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்றது.

    விழாவின் 5-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக காலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலவர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா.. அரோகரா.. கோஷம் முழங்க தேரை வடம் பிடித்தனர். தேரானது அசைந்தாடியபடி 4 வீதிகளையும் வலம் வந்தது.

    பின்னர், இரவு 8 மணிக்கு அன்னை வேல் நெடுங்கண்ணி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. வேல் வாங்கும் போது வேலவனின் திருமுகத்தில் முத்து, முத்தாய் வியர்வை அரும்பும் அற்புத நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடுவர்.

    • சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • கடற்கரையில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் 5-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

    பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்ட பத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    பின்னர் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மகா தீபாராதனைக்கு பின் மதியம் 2மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்தி நாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

    முதலில் யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவதாக சிங்கமும், மூன்றாவதாக தன்முகம் (சூரன்), நான்காவது சேவலாக மாறிய சூரனை வதம் செய்கிறார்.

    பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்கு பிறகு சுவாமி, அம்பாள் கிரிப் பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.



    கந்தசஷ்டி விழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து கோவிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் நாளை சூரசம்ஹாரத்தை காண பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். இதனால் திருச்செந்தூரில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளிக்கிறது.

    சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கடற்கரையில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சி நேரலை செய்யப்பட உள்ளது.

    7-ம் திருவிழாவான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார். அங்கு மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி ராஜகோபுரம் அருகில் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் ரதோற்சவம்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-9 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பஞ்சமி பின்னிரவு 3.22 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : கேட்டை காலை 9.08 மணி வரை பிறகு மூலம்

    யோகம் : மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மனுக்கு அபிஷேகம்

    குமாரவயலூர் ஸ்ரீ முருகப் பெருமான் சிங்கமுகா சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல். இரவு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு. சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் ரதோற்சவம். இரவு உமாதேவியாரிடம் சக்தி வேல் வாங்குதல். திருவனந்தபுரம், திருவட்டாறு கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி வரும் காட்சி. ஐயடிகள் காடவர் கோன் குரு பூஜை. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-தனம்

    கடகம்-ஆர்வம்

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-ஊக்கம்

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- நிறைவு

    மகரம்-தெளிவு

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-பயணம்

    ×