என் மலர்tooltip icon

    வழிபாடு

    மறுபிறவியை தடுக்க கூறும் சக்தி வாய்ந்த சிவ மந்திரம்
    X

    மறுபிறவியை தடுக்க கூறும் சக்தி வாய்ந்த "சிவ மந்திரம்"

    • பிறவா வரம் வேண்டும் என்பவர்கள் தான் நம்மில் ஏராளம்.
    • உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் நடப்பவராக இருந்தால் அடுத்த பிறவி உண்டா?

    மனிதராக பிறந்தவர்கள் அனைவரும் ஏழு பிறவிகளை எடுப்பார்கள் என்றும், கர்மம் தீரும் வரை பிறப்பு என்பது நிகழும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது.

    ஆனால், ஒரு பிறவிலேயே நாம் படாதபாடு படுகிறோம். இக்காலத்தில் யாரிடமாவது உனக்கு இன்னொரு பிறவி வேண்டுமா என்று கேட்டால் போதும்டா சாமி..! ஆளவிடுங்க என்று தெரித்து ஓடும் சூழல்தான் இருக்கிறது.

    அதனால், மீண்டும் எனக்கு மனிதனாக பிறக்கவே வேண்டாம்.. பிறவா வரம் வேண்டும் என்பவர்கள் தான் நம்மில் ஏராளம்.

    இப்படி பிறவா நிலையை வேண்டுபவர்கள், எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

    முற்பிறவியில் செய்த பாவங்களுக்கான தண்டனைகளை அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்ந்து அனுபவித்து கொண்டே இருக்க வேண்டும். அந்த பிறவியிலும் பாவம் செய்தால், மீண்டும் பிறவி எடுக்க வேண்டும், இது தொடர்கதை ஆகும்..

    எப்பிறவியில் பாவம் செய்யாமல், நேர்வழியில் பக்தி மார்க்கத்துடன் இணைந்து இருக்கிறானோ, அப்பிறவியில் அவனுடைய பிறவி முடிவடைகிறது.

    இறைவனின் விழிகளில் இருந்து நம்மால் தப்பிக்க முடியாது. நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு ஏன் இந்த பிரச்சனை என்று கேட்க முடியுமா? அப்படி நீங்கள் கேட்பவராக இருந்தால், உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் நடப்பவராக இருந்தால் அடுத்த பிறவி உங்களுக்கு கிடையாது.

    மறுபிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள், 108 வில்வ இலைகளில், "ஓம் நமச்சிவாய" என்னும் ஆத்ம சக்தி வாய்ந்த சிவ மந்திரத்தை எழுதி, லிங்கத்திற்கு 108 முறை அர்ச்சனை செய்து வர வேண்டும்.

    கண் குளிர சிவபெருமானை தரிசித்து, மனதார "இப்பிறவி போதும், இனி பிறவா நிலை வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

    48 பிரதோஷங்கள் காளை மாட்டிற்கு அருகம்புல் தானம் செய்பவர்களுக்கு, பிறவா நிலை வரும். இப்பரிகாரங்களை செய்து வந்தால், அப்பிறவியிலேயே அவர்களுக்கு மோட்சம் பக்தி மூலமாக உண்டாகி, மறுபிறவி என்பதே கிடையாது என்பது ஐதீகம்.

    Next Story
    ×