என் மலர்tooltip icon

    வழிபாடு

    weekly rasipalan 4.1.2026 to 10.1.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
    X

    weekly rasipalan 4.1.2026 to 10.1.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    • மேஷம் சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம்.
    • ரிஷபம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம்.

    மேஷம்

    சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய்க்கும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுக்கும் பாக்யாதிபதி குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இதனால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. குடும்ப பிரச்சினைகள் அகலும். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள், துயரங்கள், சங்கடங்கள் விலகும். உங்களை ஏளனமாக அலட்சியமாக நினைத்தவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் உங்களுடைய வளர்ச்சி கூட போகிறது.தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். சுப பலன்கள் அதிகரிக்கும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். உடல் நலம் மிகச் சிறப்பாக இருக்கும். சஷ்டி திதியில் முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று தனம் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவை பார்க்கிறார். குரு ராசி அதிபதியை பார்ப்பதால் வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். விலை உயர்ந்த நவீன ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சமூக ஆர்வ லர்களுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.

    மிதுனம்

    தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் வாரம்.ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எடுக்கும் முயற்சியில் தடையில்லாத வெற்றி கிட்டும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். பண வரவு பல வழிகளில் வரும். கோட்சார கிரகங்கள் அனைத்தும் மிதுன ராசியினருக்கு சாதகமாக உள்ளது. இதனால் ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்க ளையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்று வீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். மூத்த சகோதரம், சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும். தாய் அல்லது தந்தையின் அரசாங்க வாரிசு வேலை கிடைக்கும்.சுவாமி ஐயப்பனை ஆத்மார்த்தமாக வழிபடவும்.

    கடகம்

    மனக்கவலைகள் குறையும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இது கடக ராசிக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய யோகமான காலமாகும்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். தொழில் முயற்சிகள் நிறைவேறும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றமடையும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவும், பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். மறுமணத்திற்கும் வரன் கிடைக்கும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும்.ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வேலைப் பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    சிம்மம்

    நெருக்கடிகள் விலகும் வாரம். ராசி அதிபதி சூரியன் குரு மற்றும் சனி பார்வையில் உள்ளார். தடை, தாமதங்கள் விலகும். மனச் சங்கடங்கள் அகலும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பது எல்லாம் நடக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும்.சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும்.அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலி கமாக ஒத்தி வைப்பது நல்லது.வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. கை,கால், மூட்டு வலியால் சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். முன் கோபத்தை குறைப்பது நல்லது.வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.

    கன்னி

    பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்தததை ஈடுகட்டுவீர்கள். இது வரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். ஜனன கால ஜாதரீதியாக சாதகமான தசாபுக்திகள் நடந்தால் நன்மையின் அளவை அளவிட முடியாத வளர்ச்சி உண்டு. கண்டகச் சனி பற்றிய பயம் விலகும். பொருளாதார பற்றாக்குறை அகலும். வர வேண்டிய கடன் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடனை திரும்ப செலுத்துவீர்கள்.பெண்களுக்கு பொருளாதாரத்தில் தன் நிறைவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மனம் மகிழும் சம்பவம் நடக்கும். தொழில் உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். அரசு வேலைக்கான முயற்சி கைகூடும்.புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பள்ளி கல்லூரிகள் மூலம் கல்வி சம்பந்தமான சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது.தினமும் திருகோளாறு பதிகம் படிக்கவும்.

    துலாம்

    தெய்வு அனுகூலமும், அதிர்ஷ்டமும் வழி நடத்தும் வாரம். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.புகழ், அந்தஸ்து, ஆளுமை அதிகரிக்கும். இனம் புரியாத கவலைகள் குறையும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு சுப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சிகள் சித்திக்கும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். ஓயாத உழைப்பால் அசதி மன உளைச்சல் ஏற்படும். விரும்பிய வேலையில் சேர சிபாரிசுக்கு அலைய நேரும். ஆரோக்கியம் சிறக்கும். கொடுத்து வாக்குறுதியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.சங்கடங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் மாற்றும் வல்லமை இறைபக்திக்கு உண்டு என்பதால் சரபேஸ்வரரை வழிபட்டு நலம் பெறவும்.

    விருச்சிகம்

    ஏற்றமான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் குரு மற்றும் சனியின் பார்வையில் சூரியன் சுக்கிரன் புதனுடன் இணைந்துள்ளார்.கடன் தொல்லை அகலும்.போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். சிலரின் இளைய சகோதரம் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய தொழில் முயற்சிக்கு தேவை யான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். முக்கியமான தேவைகள் நிறைவேறும். பார்த்துச் சென்ற வரனின் முடிவிற்காக காத்து இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.திருமண முயற்சியை ஒரு வாரம் ஒத்தி வைக்கலாம்.வீட்டு வாடகை உயரும். சொத்தை அடமானம் வைத்து சில்லறைக் கடனை அடைப்பீர்கள். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். 4.1.2026 அன்று காலை 9.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்கால் உறவுகளிடம் மன சங்கடம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் புரிதல் குறையும்.வெளி உணவுகளைத் தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கவும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    தனுசு

    முன்னோர்களின் நல்லாசிகள் நிறைந்த வாரம். பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை பலன் தரும். வெளிநாட்டு பயணம் சாதகமாகும். புதிய வாய்ப்புகளால் லாபம் உண்டாகும்.நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும்.வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். திருமணத் தடை அகலும். சொந்த இன, உறவுகளில் வரன் அமையும்.4.1.2026 அன்று காலை 9.43க்கு ஆரம்பித்து 6.1.2026 அன்று பகல் 12.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது. உடன் இருப்ப வர்களால் மனக்குழப்பம், பணியில் சோர்வு ஏற்படும். சனிக்கிழமைகளில் முன்னோர்களை வழிபட குடும்பத்தில் நிம்மதி கூடும்.

    மகரம்

    நிம்மதியான வாரம்.ராசி அதிபதி சனி வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மறைமுக லாபம் கிடைக்கும். உணவுத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், பங்கு வர்த்தகம், மார்க்கெட்டிங் போன்ற பணியில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும்.பெண்களுக்கு குடும்பப் பணிச்சுமையால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். பெண்கள் கணவரின் உண்மையான அன்பை உணர்வீர்கள். 6.1.2026 அன்று பகல் 12.17 முதல் 8.1.2026 அன்று மாலை 6.39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும்.பேச்சைக் குறைப்பது நல்லது. வேலைப்பளு மிகுதியாகும். மன அமைதி குறையும். வேலை ஆட்களை அனுசரித்துச் செல்லவும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வது வழிபடவும்.

    கும்பம்

    மகிழ்ச்சிகரமான வாரம். ஏழரைச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சனி உங்களின் ராசி அதிபதி என்பதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.கூலித் தொழிலாளிகளுக்கு தொழில் நெருக்கடி விரைவில் சீராகும். லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் பணக் கஷ்டம்,கடன் பாதிப்பு இருக்காது.சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.கடந்த கால கடன்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் சீராகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். 8.1.2026 அன்று மாலை 6.39க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். முன் கோபத்தை குறைப்பது நல்லது.வியாழக்கிழமை குபேர லட்சுமியை மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவும்.

    மீனம்

    திட்டம் தீட்டி வெற்றி பெற வேண்டிய வாரம். ஜென்மச் சனியின் காலம் என்பதால் பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம், படிப்பு, நகை வாங்குவது என விரயத்தை சுப செலவாக முதலீடாக மாற்றுவது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊர் விட்டு ஊர் மாற நேரும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். தாய் வழிச் சொத்து விஷயத்தில் உடன் பிறந்தவர்களுடன் சிறு சலசலப்பு ஏற்படும். பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை பஞ்சாயத்து வரை சென்று சாதகமாகும். ஆரோக்கிய குறைபாட்டிற்கு மாற்றுமுறை வைத்தியத்தை நாடுவீர்கள். வார இறுதியில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள். வேலையில் பணி நிரந்தரமாகும். திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    Next Story
    ×