என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சூரசம்ஹாரம் முடிந்த பிறகு ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் நடைபெறும்.
    • சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம்.

    சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் வீரபாகு.

    சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான். சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னி முகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான்.


    இறுதியில் மாயப்போர் முறைகளை செய்ய தொடங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இரு கூறாக சிதைந்தது. ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக்கொண்டார்.

    சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெரு வாழ்வு தந்தருள்கிறார்.

    முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.

    இத்தகைய சிறப்புடைய முருகன்-சூரபத்மன் போர் எப்படி நடந்தது தெரியுமா?

    மொத்தம் 6 நாட்கள் போர் நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும். ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று இங்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

    திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார்.

    ஆறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுரு, வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்ட திக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர்.


    தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதற்காக வள்ளி, தெய்வானை இல்லாமல் முருகப பெருமான் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்.

    முன்னதாக சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்படும் சூரன் திருச்செந்தூர் நகரில் ரத வீதிகளை வலம் வருவான்.

    அப்போது சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை அங்கும், இங்கும் அசைத்தபடி வருவான். சூரன் முன்னே முரசு ஒலித்தபடி செல்வார்கள்.

    சூரன் கடற்கரைக்கு வந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரனும், முருகனும் போர் செய்யும் காட்சியை காண ஒன்று திரண்டு நிற்பார்கள். விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள்.

    இந்த வேளையில் ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத் தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருள்வார். அப்போது இயற்கை காட்சியில் கூட மாற்றங்கள் ஏற்படும்.

    கடல், ஆகாயத்தின் செந்நிறமாக மாறும். கடற்கரையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அசாதாரண அமைதி நிலவும்.

    போர் தொடங்கியதும் சூரனின் சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வரும். பின்னர் சூரன் பல்லக்கு, ஜெயந்தி நாதர் பல்லக்குக்கு முன்பு 3 முறை சென்று பின் வாங்கி செல்லும்.

    இதைத்தொடர்ந்து ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்படும். அது சூரனை சென்று தாக்கும்.

    சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொள்வான். முதலில் யானை முகன் எனும் உருவம் கொண்ட அசுரன் வலமிடமாக சாமியைச் சுற்றி வருவான். முருகன் சார்பாக அர்ச்சகர் அவன் நெற்றியில் குத்தி வீழ்த்துவார்.

    இதைத்தொடர்ந்து உடலில் சிங்கமுகாசுரன் தலை பொருத்தப்படும். சிங்க முகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துவார்கள்.

    அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப்படும். சூரபத்மனும் வீழ்த்தப்படுவான். இந்த போரின் போது பக்தர்கள் எழுப்பும் கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற குரல் விண்ணை அதிர வைக்கும்.

    சூரன் தனது தலை துண்டிக்கப்பட்டதும் வேறு தலையுடன் தோன்றிக் கொண்டே இருப்பான். அவனை ஜெயந்திநாதர், வதம் செய்வதை பக்தர்கள் கண்டுகளிப்பார்கள். போரின் போது ஜெயந்தி நாதருடன் தேவர் படையும், சூரனுடன் அசுரர் படையும் இருப்பது போல் பக்தர்கள் இரண்டு பிரிவாக எதிர் எதிரே வேல் மற்றும் ஆயுதங்களை வைத்து கொண்டு செல்வார்கள்.

    இந்த போரின் போது ஒரு கட்டத்தில் சூரன், விநாயகர் தலையுடன், ஜெயந்தி நாதர் முன்பு தோன்றுவான். அவனது மாயத்தை கண்டு சற்று தடுமாறும் ஜெயந்திநாதர், சூரனின் தந்திரத்தை புரிந்து கொண்டு அவனது யானை தலையையும் துண்டித்து விடுவார். நான்காவது மாமரமும், சேவலும் சூரனின் உடலில் பொருத்தப்படும்.

    மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறந்து விடும். அத்துடன் சூரசம்ஹாரம் முடியும். சூரனை, ஜெயந்தி நாதர் வதம் செய்து சேவலும், மயிலுமாக ஆட்கொள்வார். பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

    சூரசம்கார நிகழ்ச்சி முடிவடைந்ததும் 6 நாட்களாக சஷ்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் கடலில் குளித்து விட்டு விரதத்தை முடித்து உணவு உட்கொள்வார்கள்.

    ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர்.

    சாயா என்றால் நிழல் எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்ஹாரம் நிறைவடைகிறது.


    தெய்வானை திருக்கல்யாணம்:

    சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார்.

    இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்த சஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

    அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப் பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள் பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார்.

    நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார்.

    அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிபடுத்துகின்றனர்.

    • கெட்டவை நீங்க, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது.
    • உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது.

    எத்தனை மந்திரங்கள், பாடல்கள், தோத்திரங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் மிகவும் விரும்பி படிப்பது சஷ்டி கவசமே. இது எளிமையான தமிழ் மொழியில் இருப்பதால் சொல்வதற்கும் எளிமையாக உள்ளது. எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள்.


    கந்த சஷ்டி கவசத்தில் சுவாமிகள் கூறியது போல், நம் நினைவெல்லாம் முருகனாக இருந்தால் அஷ்ட லட்சுமிகள் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். சஷ்டி விரதம் இருப்பதினால் நவகிரகங்களும் நமக்கு நன்மையே செய்யும்.

    இந்த தெய்வ சிந்தனை வருடத்தில் ஒருமுறை, ஒரு நாளோ அல்லது மூன்று நாளோ, இல்லை ஆறு நாளோ இருந்தால், நம் மனதுடன் உடலும் சுத்தமாகிறது.

    சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எளிய உணவை உட்கொண்டு, அதிக வேலை செய்யாமல், மவுனத்துடன் இருப்பதால் உடலில் நச்சுப் பொருட்கள் தானாகவே வெளியேறி நம் உடலும், குடலும் சீராகிறது.

    விரதத்தால் நம் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. மனதில் இருந்து உருவாகும், காம, குரோத அறுவகை கெட்ட குணங்களையும், ஆறுமுகன் எப்படி சூரபத்மனை அழித்தானோ அவ்விதமே நமது குணங்களையும் அழித்து விடுகிறான்.

    கெட்டவை நீங்க, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது. உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது. முருகனது கருணை எங்கும். எப்பொழுதும் பொங்கி வழிகிறது. நமக்கு முருகனிடம் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை காட்டும் உறைகல் தான் இந்த விரதங்கள். நம்மால் இயன்றளவு விரதம் இருக்கலாம். வீட்டிலேயே விரதமிருந்து, ஆறுமுகனை அர்ச்சிக்கலாம். வீட்டில் வசதியில்லாதவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். முடிந்தவர்கள் திருச்செந்தூர் போய் வரலாம்.

    முடியுமளவு, உள்ளத்தூய்மையுடன் முருகப்பெருமானை வணங்கி அவனது அருளைப் பெறலாம்.

    முருகனுக்கு உகந்தமலர்கள்:-

    மல்லிகை, முல்லை, ரோஜா, திருநீற்றுப் பச்சை, சாமந்தி, செவ்வரளி.

    அபிஷேகப் பலன்கள்:-

    மஞ்சள் நீர்- வசீகரம், சந்தனம்- லட்சுமிகடாட்சம், பஞ்சாமிர்தம்- ஜெயம், தயிர்- மக்கட்பேறு, பால்- ஆயுள் விருத்தி, தேன் - இனிய குரல், இளநீர் - யோகம்.

    முருகனை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும். கார்த்திகை விரதம், செவ்வாய் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட செவ்வாய் தோஷங்கள் விலகும்.

    • வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பு.
    • திருச்செந்தூர் தலத்தில் 2 மூலவர்கள் உள்ளனர்.

    சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் திருச்செந்தூர் தலத்துக்கு புறப்பட்டு வந்தார். முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார்.

    அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்னர் வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார்.


    முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்ட தால் இவர், "ஜெயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார்.

    பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திரு ஜெயந்திபுரம்' என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

    கோவில் அமைப்பு

    முருகனுக்குரிய ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாகவும் அமைந்துள்ளன.

    முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

    தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.

    சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

    இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. 130 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

    முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். எனவே பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும்.

    ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

    முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.

    கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    சூரனை வதம் செய்த பிறகு படையினர் தாகம் தீர்க்க கடலோரத்தில் முருகன் வேலால் குத்தி தண்ணீர் வரவழைத்தார். இன்றும் தண்ணீர் வரும் அது, நாழிக்கிணறு எனப்படுகிறது.

    கடலோரத்தில் உள்ள அந்த நாழிக்கிணறு கொஞ்சமும் உப்பாக இல்லாமல் நல்ல தண்ணீராக இருப்பது குறிப்படத்தக்கது. இத்தலத்தில் மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன.

    திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


    திருச்செந்தூரில் சண்முகருக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

    தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர்.

    திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின் போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

    விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிப்பார்.

    பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள், நடராஜர் என ஐந்து உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

    முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக் கோவிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோவிலே ஆகும்.

    இக்கோவில் கடற்கரையில் இருக்கும் "சந்தன மலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது.

    தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

    திருச்செந்தூரில் முருகன் "ஞான குரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது.

    சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.

    இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் இவருக்கு செய்யப்படுகிறது எனவே திருச்செந்தூர் தலத்தில் 2 மூலவர்கள் உள்ளனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள் பிரகாரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் கையில் சக்கராயுதம் இல்லை. அதனை முருகனுக்கு சூரசம்காரம் செய்ய வழங்கி விட்டதாக கூறுகிறார்கள்.

    திருச்செந்தூர் கோவிலில் இலை விபூதி பிரசாதம் மிக விசேஷமானது. பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்பில் பூசிக் கொள்ள சந்தனத்துடன் பிரசாதமாக விபூதியை தருவார்கள். பன்னீர் இலையில் வைத்துத் தொடாமல் போடுவார்கள்.

    விசுவாமித்திர மகரிஷி இங்கு வந்து தரிசித்தார். இலை விபூதி பிரசாதம் பெற்றார். அதைத் தரித்துக் கொண்டார். அவருடைய குன்ம நோய் நீங்கிற்று என்பது புராணம்.

    திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். இதையடுத்து முருகன் அருள் வேண்டி பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்குவார்கள்.

    • வருகிற 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • புஷ்பாபிஷேகத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் மலர்களை கொண்டு வரக்கூடாது.

    திருவனந்தபுரம்:

    சபரிலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.

    இந்த சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது.

    இதற்கிடையே நடப்பு சீசனில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதி, சாலை மேம்பாடு, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகள் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் சபரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு பாதுகாப்பில் அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதாவது, சபரிமலையில் தேவையற்ற பொருட்களால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே சபரிமலையில் நடத்தப்படும் புஷ்பாபிஷேகத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் மலர்களை கொண்டு வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    தற்போது சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரரின் ஆலோசனையின் பேரில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்களது இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் தடை விதித்து உள்ளது.

    மேலும் பம்பை ஆற்றில் பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகள், மாலைகள் உள்ளிட்டவற்றை போட்டு செல்வதற்கும் தடை விதித்துள்ளது.

    • 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.

    அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.


    இதையொட்டி சூரசம்ஹாரத்தை காண்பதற்கு லட்சக்கணக்கானோர் அதிகாலை முதலே கோயில் வளாகத்தை நோக்கி வந்துள்ள வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு கடற்கரைகளில் காத்திருக்கின்றனர்.

    சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இன்று பிற்பகல் சுமார் 6 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக திரண்டிருந்தனர்.

    பாதுகாப்பிற்கு 4500 போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு காமிரா மூலம் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.

    கடலில் புனித நீராடும் பக்தர்கள் வசதிக்காக கடலோர பாதுகாப்பு குழுமம் போலிசார் டி.எஸ்.பி. பிரதாபன் தலைமையில் 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு புறநகர் பகுதிகளில் 9 இடங்களில் சுமார் 7000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் காவல்துறை சார்பில், தயார் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் மற்றும் அதன் அருகில் தற்காலிக பஸ் நிறுத்து மிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு வீரபாண்டியன் பட்டினம் அருகே உள்ள ஜே.ஜே. நகர், அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அருகில் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் பட்டுள்ளது.

    நெல்லை, தென்காசி செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் நெல்லை சாலையில் அன்பு நகர், மற்றும் அரசு டாஸ்மாக் அருகில் சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி நாகர்கோவில் செல்லக்கூடிய பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்து வதற்கு பரமன்குறிச்சி சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் குடோன் அருகிலும் ஆம்னி பஸ்களுக்கும், தற்காலிக பஸ்கள் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பஸ் நிலையங்கள், கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப பாதைகள், வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு மற்றும் லிங்க் மூலம் பெறும் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

    மேலும் அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில் வளாகத்தில் அவசர சிகிச்சைக்கு தற்காலிக மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் மருத்துவர்கள் உள்ளனர். அம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    நாளை இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சகல ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா.
    • பிள்ளை ஸ்ரீ லோகாச்சாரியார் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-21 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி இரவு 9.32 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: பூராடம் காலை 9.55 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சகல ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா. பிள்ளை ஸ்ரீ லோகாச்சாரியார் தேரோட்டம். வள்ளியூர் ஸ்ரீ முருகப் பெருமான் காலை வெள்ளை சாற்றி தரிசனம், மாலை பச்சை சாற்றி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான், சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-ஜெபம்

    மிதுனம்-வரவு

    கடகம்-தாமதம்

    சிம்மம்-நலம்

    கன்னி-அன்பு

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- ஆதரவு

    மகரம்-இன்பம்

    கும்பம்-மேன்மை

    மீனம்-லாபம்

    • தேவர் சன்னதி முன்பு சாயாபி ஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
    • வெள்ளிக்கிழமை சுவாமி குமரவிடங்க பெருமானுக்கு, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 5-வது நாளான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.


    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளுகிறார்.

    அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அங்கு 108 மகா தேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.


    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கு, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரங்களில் அங்க பிரதட்சனை செய்தம், கந்த சஷ்டி கவசம் பாடல்கள் பாடியும், கோலாட்டம் ஆடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் புனித நீராடி விரதத்தை முடித்து கொள்கின்றனர்.

    • முருகப்பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்ப கிடைக்கும்.
    • பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற தலம்.

    காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி திருத்தலம்.


    ஆலய சிறப்புகள்

    பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங் கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார்.

    ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் ஆணவத்தில் இருந்த மன்னன், நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பி வைத்தான். இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்கு சென்றார்.

    அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார். அவன், பல தேசங்களுக்கு திக் விஜயம் செய்து வந்திருந்தான். அவனிடம் "பகீரத மன்னன், தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால் தான் உன்னுடைய திக்விஜயம் முழுமைப் பெற்றதாகும்" என்றார், நாரதர்.'

    இதையடுத்து கோரன், பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனை தோற்கடித்தான். பகீரத மன்னன் தனது ஆணவத்தால், நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட்டிற்குச் சென்றான். அங்கே அவனுக்காக காத்திருந்தார், நாரதமுனிவர்.


    அவரது காலில் விழுந்து தன் தவறை எண்ணி வருந்தி, மன்னித்து அருளும்படி மன்றாடினான். நாரதர் மனம் இரங்கினார். "துர்வாச முனிவரிடம் சென்று முறையிடு. உனக்கு நல்ல வழி பிறக்கும்" என்று ஆசி கூறி அனுப்பினார்.

    பகீரதனும், துர்வாச முனிவரிடம் சென்று, நடந்ததைக் கூறி மனம் வருந்தி, தனக்கு நல்வழி காட்டுமாறு வேண்டி நின்றான். துர்வாச முனிவர். பகீரதனுக்கு சில உபதேசங்களை வழங்கினார்.

    அதன்படி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து, அழியாத பேறு பெற்றான் பகீரதன். அப்படி பகீரதன் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயமே வல்லக்கோட்டை முருகப் பெருமான் திருக்கோவில்.

    வள்ளி-தெய்வானை உடனாய கோடையாண்டவர் என்ற பெயரோடு, இங்கு இறைவன் அருளாட்சி செய்கிறார். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு தீவினைகளை அகற்றி, நல்வினைகளை வழங்கும் அபய கரத்துடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இந்திரனால் அமைக்கப்பட்ட வஜ்ர தீர்த்தம் இங்கு உள்ளது.

    பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற நாள் வெள்ளிக்கிழமை. எனவே இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்புவழிபாடுகள் செய்யப்படுகின்றன.


    வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும், சகல நன்மைகளும் பெறலாம் என்பது நம்பிக்கை.

    ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருண கிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார். ஆகியோர் திருமேனிகள் வரிசையாக உள்ளன. பிரகாரத்தில் விஜய கணபதி, சண்முகர், தேவி கருமாரி, உற்சவர் ஆகியோரது சன்னிதிகள் காணப்படுகின்றன.

    இந்த ஆலயத்தில் கந்தசஷ்டி, மாதாந்திர கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, தமிழ்புத்தாண்டு, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகியவை வெகுவிமரிசையாக நடைபெறும்.

    திருத்தணியில் இருக்கும் மூலவர் ஞான சக்திதார் திருக்கோலமாகும். வள்ளி கல்யாண சுந்தரரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும்.

    பாலசுவாமி

    திருச்செந்தூர், ஆண்டாள்குப்பம், திருக்கண்டியூர் ஆகிய ஆலயங்களில் பாலசுவாமி திருவுருவத்தைத் தரிசிக்கலாம், இவர், உடல் குறைபாடுகளை அகற்றும் சக்தி கொண்டவர் என்று நம்பப்படுகிறது. இவரை வழிபடுபவர்களுக்கு சிறந்த உடல்நலம் கிடைக்கும்.


    தேவசேனாதிபதி

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அமைந்த முருகப்பெருமான் கோவிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில், இந்தத் திருவடிவைக் காணலாம். இவரை வழி பட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.


    பிரம்ம சாஸ்தா

    காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்ம சாஸ்தா திருக்கோலம் உள்ளது. இவரை வழிபட்டால் எல்லா வகையான வித்தைகளும், கைவரப் பெறும். சகலவிதமான கலை அறிவும் கைகூடும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

    கந்தசுவாமி

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலை, பாலதண்டாயுதபாணியின் திருவடிவம் இதுவாகும். இவரை வழிபாடு செய்தால், சகல காரியங்களும் சித்தியாகும்.


    கஜவாகனர்

    யானை மீதோ, யானையை அருகிலோ வைத்தபடி அருளும் முருகப்பெருமானை 'கஜவாகனர்' என்பார்கள். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகிய இடங்களில் இந்த வடிவத்தை காணலாம். இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.

    கிரவுஞ்சபேதனர்

    திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் காணப்படுகிறது. இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும்.

    கார்த்திகேயா

    கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் ஆலயம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில், இவரது திருவுருவம் உண்டு. இவரை வழிபாடு செய்து வந்தால், சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும்.


    குமாரர்

    நாகர்கோவில் அருகில் சிறிய குன்றின் மீது இருக்கும் குமாரக்கோவிலில் இவரது திருவடிவம் இருக்கிறது. அதேபோல் கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்கு பஞ்சலோக விக்கிரகம் உள்ளது. இவரை வழி பட்டால் ஆணவம் அடியோடு நீங்கும்.

    சேனானி

    திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது. இவரை வழி பட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை விலகும்.

    சரவணபவர்

    சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது. தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.


    சக்திதரர்

    திருத்தணிகையில் எழுந்தருளி இருக்கும் மூலவர் திருவடிவம், ஞான சக்திதார் திருக்கோலமாகும். இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.

    சிகி வாகனர்

    மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம் ஆகும். மயில் மீது வீற்றிருக்கும் இந்த முருகனை வழிபட்டால் இன்ப வாழ்வு அமையும்.


    சுப்பிரமணியர்

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைகழி முருகன் கோவில் மூலவர், சுப்பிரமணியர் திருவடிவம் ஆகும். இவர், தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்த பெருவாழ்வை அளிக்கக்கூடியவர்.

    வள்ளி கல்யாண சுந்தரர்

    திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இவரது திருமேனி இருக்கிறது. இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப்பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும்.

    தாரகாரி

    ஹதாரகாசுரன் என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமானுக்கு இந்த திருப்பெயர் ஏற்பட்டது. உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில், இந்த தாரகாரி முருகன் அருள்பாலிக்கிறார்.

    • சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் ரதோற்சவம். இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-20 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி இரவு 10.15 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: மூலம் காலை 9.46 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் ரதோற்சவம். இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல். பிள்ளை ஸ்ரீ லோகாச்சாரியார் பவனி. மாயவரம் ஸ்ரீ கவுரீ மாயூரநாதர் உற்சவம் ஆரம்பம். திருக்கேஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ கொடியேற்று. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் கோவி லில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். திருபெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் அபிஷேகம், அலங்காரம். விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம், அலங்காரம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-சுகம்

    சிம்மம்-லாபம்

    கன்னி-விருத்தி

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- பயணம்

    மகரம்-பாசம்

    கும்பம்-உயர்வு

    மீனம்-கடமை

    • கோயில் மூலவரையே சப்பர பவனியாக எடுத்து வருவதில்லை.
    • தனியாக உற்சவ மூர்த்தியான செம்பு விக்ரகங்கள் ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

    கோவில்களில் இறைவன் திருவீதியுலா வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. கோவில்களில் திருவிழா நடைபெறும் காலங்களில், கோயில் மூலவரையே சப்பர பவனியாக எடுத்து வருவதில்லை. இதற்கென்று தனியாக உற்சவ மூர்த்தியான செம்பு விக்ரகங்கள் அல்லது பிற உலோகங்களுடன் செம்பு கலந்த விக்ரகங்களை சுமந்து வருகிறார்கள்.


    நாம் பயன்படுத்தும் மின்சார வயருக்குள் செம்புக்கம்பி இருக்கிறது. இது மின்சாரத்தை அதிவேகமாக கடத்தி விளக்குகளை எரிய வைக்கிறது, இயந்திரங்களை இயங்க வைக்கிறது. அதுபோல, செம்பு விக்ரகங்களின் அழகு, அப்படியே நம்மை ஈர்த்து பக்தியில் திளைக்க வைக்கிறது.

    செம்பைத் தேய்க்க தேய்க்க அதன் பளபளப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இறைசக்தி என்னும் மின்சாரம் பக்தனை அடைய அடைய, அவன் பேரின்ப நிலையை விரைவாக அடைகிறான். இதற்காகவே, வீதிகளில் சுவாமி பவனி வருவதை உருவாக்கினார்கள் என்பது அறிவியலாளர்களின் கருத்து.


    கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் (முதியோர்கள்), கோயிலுக்குச் செல்லக் கூடாதவர்கள் (தீட்டுப்பட்ட பெண்கள்), மரணம் போன்ற தீட்டுப்பட்ட குடும்பத்தினர்கள், நோய், கர்ப்பகாலம், போன்ற பல காரணங்களால் செல்ல இயலாதவர்கள் என பல்வேறு காரணங்களால் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்களும், வணங்க வேண்டும் என்பதற்காகவே உற்சவரான இறைவன் திருவீதியுலா வருகிறார்.

    தீட்டு பட்டவர்களும் திருவீதியுலா வருகிற உற்சவரான இறைவனை வணங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உலாவரும் இறைவனுக்கு திருஷ்டியை நிவர்த்தி செய்த பின்பே, மீண்டும் ஆலயத்திற்குள் எழுந்தருளச் செய்வார்கள் எனவே உற்சவர் இறைவனை யார் வேண்டுமானாலும் வணங்கலாம். அதற்கு தடை ஏதும் கிடையாது. அதனால், எந்த பாவமும் நேராது.

    • அர்ச்சனை என்பது இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று.
    • கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூறப்படுகிறது.

    நமது பாவங்களையும், பிரச்சனையும் தீர்க்க கூடிய ஒரே சக்தி கடவுளுக்கு மட்டும் உள்ளது. அதனால் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவோம். கடவுளுடைய வழிபாட்டில் பல விதங்கள் உள்ளது.


    சில பேர் அமைதியாக பிரதிப்பார்கள். சில பேர் அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை எல்லாம் கூறுவார்கள். இப்படி அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை கூறுவதால் கடவுளுடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

    அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று ஆகும். பூக்களாலும், குங்குமத்தாலும் இறைவனுக்கு உகந்த நாமாக்களால் அர்ச்சனை செய்து அவரின் கருணைக்கு பாத்திரமாவது நமது வழிபடும் முறையாகும்.

    இந்த பதிவில் அர்ச்சனை செய்வதற்கான காரணத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

    கோவிலில் சென்று அவர்களுடைய கஷ்டத்தை கூறுவதால் கடவுள் அருள்புரிவார் என்று நம்பப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அர்ச்சனை செய்து அவர்களுடைய கஷ்டத்தை கூறி வழிபடுவதன் மூலம் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது

    அர்ச்சனை என்பது ஒருவரது பிறந்த நாள், திருமண நாள் அல்லது ஏதேனும் தொழில் தொடங்கும்போது இது போன்ற சிறப்பு மிக்க நேரங்களில் செய்யப்படுவது ஆகும்.

    மக்கள் தங்களுக்கு வாழ்வில் முக்கியமான நாள்கள் என்று கருதும் நாள்களில் கோவிலுக்குச் சென்று அர்ச்சனைக்கு கொடுக்கிறார்கள். சில பேர் பலன்களை கொடுத்திருந்தால் அர்ச்சனை செய்து நன்றியை செலுத்துவார்கள், சில பேர் பலன்களை கொடுப்பதற்காக அர்ச்சனை செய்து வேண்டி கொள்வார்கள்.

    அர்ச்சனை செய்பவர்கள் இரண்டு விதமாக செய்வார்கள், ஒன்று அவர்கள் பெயர் மற்றும் ராசியை வைத்து அர்ச்சனை செய்வார்கள். இதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்.



    அவர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் வைத்து அர்ச்சனை செய்தால் அவரை கடவுளுக்கு அறிமுகம் செய்கிறார்கள். அதாவது ஒரு பெயரிலையே பல பேர் இருப்பார்கள். பெயர், ராசி,நட்சத்திரம், லக்னம் கூறி நான் தான் வந்துள்ளேன், எனக்கு அருள் வழங்க வேண்டும் என்று கூறுவதாகும்.

    ஒரு சிலர் சாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறுவார்கள், இதுவும் ஒரு வகையான அர்ச்சனை தான். கடவுளுக்கு பல பெயர்கள் இருக்கிறது. கடவுள் இல்லா ஊர் என்று இருக்கிறதா.! உங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்தால் நீங்கள் மட்டும் தான் நல்லா இருப்பீர்கள். அதுவே கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யும் போது அவரால் படைக்கப்பட்ட நாமும் நலமாக வாழ்வோம் அதனால் தான் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்கின்றோம்.

    ×