என் மலர்
வழிபாடு
- அர்ச்சனை என்பது இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று.
- கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூறப்படுகிறது.
நமது பாவங்களையும், பிரச்சனையும் தீர்க்க கூடிய ஒரே சக்தி கடவுளுக்கு மட்டும் உள்ளது. அதனால் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவோம். கடவுளுடைய வழிபாட்டில் பல விதங்கள் உள்ளது.

சில பேர் அமைதியாக பிரதிப்பார்கள். சில பேர் அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை எல்லாம் கூறுவார்கள். இப்படி அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை கூறுவதால் கடவுளுடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று ஆகும். பூக்களாலும், குங்குமத்தாலும் இறைவனுக்கு உகந்த நாமாக்களால் அர்ச்சனை செய்து அவரின் கருணைக்கு பாத்திரமாவது நமது வழிபடும் முறையாகும்.
இந்த பதிவில் அர்ச்சனை செய்வதற்கான காரணத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
கோவிலில் சென்று அவர்களுடைய கஷ்டத்தை கூறுவதால் கடவுள் அருள்புரிவார் என்று நம்பப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அர்ச்சனை செய்து அவர்களுடைய கஷ்டத்தை கூறி வழிபடுவதன் மூலம் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது
அர்ச்சனை என்பது ஒருவரது பிறந்த நாள், திருமண நாள் அல்லது ஏதேனும் தொழில் தொடங்கும்போது இது போன்ற சிறப்பு மிக்க நேரங்களில் செய்யப்படுவது ஆகும்.
மக்கள் தங்களுக்கு வாழ்வில் முக்கியமான நாள்கள் என்று கருதும் நாள்களில் கோவிலுக்குச் சென்று அர்ச்சனைக்கு கொடுக்கிறார்கள். சில பேர் பலன்களை கொடுத்திருந்தால் அர்ச்சனை செய்து நன்றியை செலுத்துவார்கள், சில பேர் பலன்களை கொடுப்பதற்காக அர்ச்சனை செய்து வேண்டி கொள்வார்கள்.
அர்ச்சனை செய்பவர்கள் இரண்டு விதமாக செய்வார்கள், ஒன்று அவர்கள் பெயர் மற்றும் ராசியை வைத்து அர்ச்சனை செய்வார்கள். இதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்.

அவர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் வைத்து அர்ச்சனை செய்தால் அவரை கடவுளுக்கு அறிமுகம் செய்கிறார்கள். அதாவது ஒரு பெயரிலையே பல பேர் இருப்பார்கள். பெயர், ராசி,நட்சத்திரம், லக்னம் கூறி நான் தான் வந்துள்ளேன், எனக்கு அருள் வழங்க வேண்டும் என்று கூறுவதாகும்.
ஒரு சிலர் சாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறுவார்கள், இதுவும் ஒரு வகையான அர்ச்சனை தான். கடவுளுக்கு பல பெயர்கள் இருக்கிறது. கடவுள் இல்லா ஊர் என்று இருக்கிறதா.! உங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்தால் நீங்கள் மட்டும் தான் நல்லா இருப்பீர்கள். அதுவே கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யும் போது அவரால் படைக்கப்பட்ட நாமும் நலமாக வாழ்வோம் அதனால் தான் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்கின்றோம்.
- இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
- டெல்லியில் வருகிற 7-ந்தேதி பொது விடுமுறை.
புதுடெல்லி:
சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
3-வது நாளில் சூரிய உதயத்திற்கு முன்பே நீர் நிலைகளில் திரளும் பக்தர்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு பக்தி பாடல்களை பாடி பிரார்த்தனை செய்வார்கள். இதையொட்டி டெல்லியில் வருகிற 7-ந்தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
- கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- சூரசம்ஹாரம் 7-ந்தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. சூரபத்மனை வதம் செய்த பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

இந்த நிலையில் சுமார் 2,200 கி.மீ தொலைவில் உள்ள குஜராத்தில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்ட மயில் இறகுகள் அங்கு மாலையாக வடிவமைக்கப்பட்டு விமானம் மூலம் திருச்செந்தூர் எடுத்துவந்து கந்த சஷ்டி விழாவில் ஜெயந்திநாதருக்கு அணிவிக்கப்பட்டது.
- 7-ந்தேதி கந்த சஷ்டி விழா.
- 8-ந்தேதி சுவாமி சுப்பிரமணியருக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம்.
5-ந்தேதி (செவ்வாய்)
* சிக்கல் சிங்காரவேலவர் வேணுகோபாலன் திருக்கோலம், இரவு வெள்ளி ரிசப வாகனத்தில் பவனி.
* குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.
* சமநோக்கு நாள்.
6-ந்தேதி (புதன்)
* மதுரை பழமுதிர்சோலை முருகப்பெருமான் காலை சப்பரத்தில் பவனி.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவ கொடியேற்றம்.
* கீழ்நோக்கு நாள்.
7-ந்தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் மாலையில் சூரசம்கார விழா.
* சிக்கல் சிங்காரவேலவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
8-ந்தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* வள்ளியூர் முருகப்பெருமான் கோ ரதத்திலும், இரவு பல்லக்கிலும் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
9-ந்தேதி (சனி)
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் சேவை,
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
10-ந்தேதி (ஞாயிறு)
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் கருட வாகனத்தில் பவனி.
* சிக்கல் சிங்காரவேலவர் விடையாற்று உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
11-ந்தேதி (திங்கள்)
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ரக்சா பந்தனம்.
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் அனுமன் வாகனத்தில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
- இன்று சதுர்த்தி விரதம்.
- ஐயடிகள் காடவர்கோன் குரு பூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-19 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி இரவு 10.29 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: கேட்டை காலை 9.06 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சதுர்த்தி விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். குமாரவயலூர் ஸ்ரீ முருகப்பெருமான் கஜமுகாசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல். சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் பவனி. ஐயடிகள் காடவர்கோன் குரு பூஜை. சோலைமலை ஸ்ரீ முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகன பவனி. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஊக்கம்
ரிஷபம்-ஈகை
மிதுனம்-பண்பு
கடகம்-நட்பு
சிம்மம்-ஆக்கம்
கன்னி-ஆதரவு
துலாம்- சுகம்
விருச்சிகம்-பெருமை
தனுசு- சாதனை
மகரம்-போட்டி
கும்பம்-நற்செயல்
மீனம்-வெற்றி
- மண்டல பூஜை அடுத்தமாதம் 26-ந்தேதி நடக்கிறது.
- ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்தமாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடக்கிறது.
இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள்(16-ந்தேதி) முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறும். பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை தேவசம் போர்டு செய்தது.
அதன் ஒரு பகுதியாக சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
அரசின் இந்த முடிவால் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று கூறி ஸ்பாட் புக்கிங் அடிப்படையிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டது.
பக்தர்களின் இந்த கோரிக்கை தொடர்பாக கேரள மாநில அரசு ஆலோசித்து வந்தது. இந்நிலையில் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்பாட் புக்கிங் மூலமாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதற்காக பம்பை, எரிமேலி, பீர்மேடு உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மையங்கள் செயல்படும் என்றும், அந்த மையங்களில் ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள சான்றுகளை காண்பித்து அனுமதி பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
- நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
- 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
கந்த சஷ்டி திருவிழா 3-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
3-ம் நாளான இன்று பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரங்களில் அங்க பிரதட்சனை செய்தும், பஜனை பாடல்கள் பாடியும், கோலாட்டம் ஆடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. சூரபத்மனை வதம் செய்த பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் தேரோட்டம்.
- சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் காலையில் மோகனாவதாரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-18 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை இரவு 10.11 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: அனுஷம் காலை 7.57 மணி வரை பிறகு கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
மதுரை அருகே உள்ள சோலைமலை ஸ்ரீமுருகப் பெருமான் யானை வாகனத்தில் பவனி வரும் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். வள்ளியூர் ஸ்ரீ முருகப்பெருமான் காலையில் கேடயச் சப்பரத்திலும் இரவில் பூங்கோவில் சப்பரத்திலும் பவனி. திருவட்டாறு ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் தேரோட்டம். சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் காலையில் மோகனாவதாரம். குமாரவயலூர் ஸ்ரீ முருகப் பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-நட்பு
கடகம்-அனுகூலம்
சிம்மம்-நிம்மதி
கன்னி-யோகம்
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-நிம்மதி
தனுசு- சிந்தனை
மகரம்-பெருமை
கும்பம்-பொறுமை
மீனம்-ஊக்கம்
- 2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
- 7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது.

காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனையும் நடைபெற்று பின்னர் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

திருவிழாவின் தொடக்கமாக கோவில் தக்கார் அருள் முருகனிடம் தாம்பூல தட்டு வழங்கிய காட்சி.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30-க்கு விஸ்வ ரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடை பெறுகிறது.
மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.
பின்னர் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபி சேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும்-தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
பக்தர்கள் விரதம் இருப்பதற்காக கோவில் வெளி கிரி பிரகாரங்களில் 18 இடங்களில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பரப்பளவில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியதையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் அங்கு குவிந்து வருகிறார்கள்.
நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர்.
தற்காலிக குடில்களிலும், கோவிலுக்கு சொந்தமான விடுதிகள், தனியார் விடுதிகள், திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள மடங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் கடற்கரையிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி விரதத்தை தொடங்கி உள்ளனர்.
சஷ்டி திருவிழாவையொட்டி நடைபெறும் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதி, தற்காலிக பஸ் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவைகள் சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கடலில் புனித நீராடி வருவதால் கடலோர காவல் படையினரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காவல்துறை சார்பில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இன்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராள மானோர் திரண்டனர். இன்று காலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- இன்று கோவர்த்தன விரதம்.
- கந்தசஷ்டி விரதம் இன்று தொடக்கம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-16 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை இரவு 8.06 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: விசாகம் நாள் முழுவதும்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
இன்று கோவர்த்தன விரதம். குமார வயலூர் முருகப் பெருமான் விழா. சிக்கல் சிங்கார வேலவர் விழா. கந்தசஷ்டி விரதம் இன்று தொடக்கம். மதுரை பழமுதிர் சோலை முருகப்பெருமான் மகா அபிஷேகம், அன்ன வாகனத்தில் பவனி. திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஊஞ்சல் உற்சவ சேவை. வள்ளியூர் முருகப்பெருமான் பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பண வரவு
ரிஷபம்-ஊக்கம்
மிதுனம்-நன்மை
கடகம்-கண்ணியம்
சிம்மம்-லாபம்
கன்னி-தெளிவு
துலாம்- தன்னம்பிக்கை
விருச்சிகம்-பயிற்சி
தனுசு- பாசம்
மகரம்-முயற்சி
கும்பம்-ஓய்வு
மீனம்-பணிவு
- கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திரு விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா முதல் நாளான நாளை அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார்.
7 மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது.
மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு ஜெயந்தி நாதருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க தேரில் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது.
காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 க்கு விஸ்வரூபம் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.
காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும்,12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று பின் மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் பல்வேறு அபிஷேக பொருட்க ளால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.
பின்னர் சந்தோஷ் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30-க்கு விஸ்வரூபம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது.
தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது.
இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
8-ம்திருவிழா இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும் அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.
9,10,11 ஆகிய திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவமும் 12-ம் திருவிழா மாலை 4.30மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

விரதம் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே 18 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பாதுகாப்பிற்கு உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- மரணம் என்பது மனிதனால் கற்பனை செய்ய முடியாத உண்மை.
- மரணம் பற்றி கருடபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
மரணம் என்பது மனிதனால் கற்பனை செய்ய முடியாத உண்மை. ஒரு மனிதன் எவ்வாறு இறக்கிறான். அவனது இறக்கும் போது என்ன நடக்கும் மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பது யாரும் தெரியாது. ஒரு மனிதன் இறக்கும் போது அவனது உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையே போராட்டம் நடக்கும் என்று கருட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிலநேரங்களில் ஆன்மா உடலை விட்டு அவ்வளவு சுலபமாக வெளியேற் முடியாது. ஆன்மா உடலை விட்டு வெளியேறும் போது அது உடலில் ஏதோ ஒரு புள்ளியில் வெளியேறலாம். ஒட்டுமொத்தமாக உயிர் பிரிவது என்பது ஆன்மா மூலாதார சக்கரத்தில் இருந்து வெளியேறுகிறது என்றும் அதனால் தான் ஆன்மா மீண்டும் உள்ளே நுழைவதை தடுக்க இறந்தவரின் கால் கட்டை விரல்கள் கட்டப்படுகின்றன. சிலநேரங்களில் ஆன்மா கண்கள், மூக்கு, வாய் வழியாக வெளியேறுகிறது.
உடல் மிகவும் பலவீனமாக இருந்தாலும் ஒரு நபர் மரணப்படுக்கையில் இருந்தாலும், ஆன்மா உடலை விட்டு வெளியேற சிரமப்படும். அதேபோல பலரும் பல நாட்கள் படுக்கையில் கிடந்தாலும், முடிக்கப்படாத வேலைகள் எஞ்சியிருப்பதாக ஆன்மா உணரும் போது உடலை விட்டு உயிர் பிரியாது.
கருடபுராணத்தின்படி இறப்பு என்பது ஒரு உயிர் இந்த உலகில் பிறந்த நோக்கம் முடிந்த பின்னர் ஆன்மா அந்த உடலில் இருந்து வெளியேறுவதை குறிக்கிறது.

ஆன்மா பிரிந்த பிறகும் அதாவது ஒரு மனிதன் இறந்த பிறகும் பல நாட்கள் இறந்தவரை சுற்றிக் கொண்டு இருக்கும். இதனால் தான் பல நாட்கள் காரியம் செய்து, உரிய மந்திரங்கள் கூறி ஆன்மா அலையாமல் இருக்க பித்ரு லோகத்துக்கு செல்ல காரியங்கள் செய்யப்படுகிறது.






