என் மலர்
வழிபாடு
- கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம்.
- 21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம்.
தீர்க்க சுமங்கலியாக ஆசீர்வதிக்கும் விரதம்... கேதார கெளரி விரதம். தாலி பாக்கியத்தைத் தந்தருளும் விரதம், தாலி பலம் தரும் விரதம், கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம், குடும்பத்தில் ஒற்றுமையை மேம்படுத்தித் தரும் விரதம் என்றெல்லாம் கேதார கெளரி விரதத்தை போற்றுகின்றனர் பெண்கள்.

உமையவள் கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கேதார கௌரி விரதம் என்றும் போற்றுவார்கள். கௌரிதேவியாகிய உமையவள் மேற்கொண்ட விரதம் என்பதால் கேதார கௌரிவிரதம் என்று இந்த விரதம் சொல்லப்பட்டது.
இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பார்கள். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். இந்த நாட்களிலும் விரதம் மேற்கொள்வார்கள்.
தேய்பிறை அஷ்டமியில் துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் எனப்படும்! குறிப்பாக, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பார்கள். மிக மிக முக்கியமாக, இந்த நாளில்தான் விரதம் மேற்கொள்வார்கள் பெண்கள்.

கேதார கௌரி விரதத்தை, சுமங்கலிகள் கடைப்பிடிக்க வேண்டும். ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் குளக்கரைகளிலும் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜித்து வந்தார்கள் அந்தக்காலத்தில்! ஆலமரத்தடியிலும் பூஜை செய்து பிரார்த்தனை செய்துகொண்டார்கள்.
விரத நாளில், ஸ்ரீவிநாயகப் பெருமானை வழிபட்டு, பிருங்கி, கௌதம முனிவர்களை வணங்கி சிவபூஜையைத் துவங்க வேண்டும். 14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும்.
21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம். நம்மால் முடிந்தவற்றைக் கொண்டும் நைவேத்தியம் செய்யலாம். பூஜையில் முக்கிய அங்கமாகத் திகழ்வது நோன்புச்சரடு. சிவனாரையும் சக்தியையும் மனதாரப் பிரார்த்தித்து, நோன்புச்சரடு கட்டிக்கொள்வார்கள் பெண்கள். வயது முதிர்ந்த சுமங்கலிகள், மற்ற பெண்களுக்கு, சுமங்கலிகளுக்கு நோன்புச்சரடைக் கட்டிவிடுவார்கள்.

கேதார கௌரி விரதத்தை, ஆத்மார்த்தமாகவும் முறையாகவும் செய்தால், பிரிந்த தம்பதி ஒன்றுசேருவார்கள். தாம்பத்யம் சிறந்து விளங்கும். மாங்கல்ய பலம் பெருகும். தீர்க்க சுமங்கலியாக வாழலாம். கணவரின் ஆயுள் நீடிக்கும்.
மாங்கல்யம் காத்தருளும் கேதார கெளரி நோன்பு இருந்து சிவ சக்தியை வழிபடுவோம்.
- இன்று அமாவாசை, கேதாரி கவுரி விரதம்.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-15 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அமாவாசை திதி (6.21-க்கு பிறகு பிரதமை திதி
நட்சத்திரம்: சுவாதி அதிகாலை 4.13 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரைமாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
இன்று அமாவாசை, கேதாரி கவுரி விரதம். வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் உற்சவ சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவனந்தபுரம் சிவன், திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. திருநெல்வேலி காந்திமதி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா.
- இன்று தீபாவளி பண்டிகை. சுபமுகூர்த்த தினம்.
- ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திருக்கு குருவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-14 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி மாலை 4.28 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: சித்திரை நள்ளிரவு 1.55 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று தீபாவளி பண்டிகை. சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மன் ஊஞ்சலில் காட்சி. வள்ளியூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச்சாற்று வைபவம். சோழவந்தான் சமீபம் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திருக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உறுதி
ரிஷபம்-நன்மை
மிதுனம்-தெளிவு
கடகம்-பக்தி
சிம்மம்-லாபம்
கன்னி-நிம்மதி
துலாம்- மதிப்பு
விருச்சிகம்-இன்பம்
தனுசு- நற்செயல்
மகரம்-இன்பம்
கும்பம்-உற்சாகம்
மீனம்-உதவி
- குபேரருக்கு வியாழக்கிழமை பூஜை செய்வது உகந்தது ஆகும்.
- தீபாவளி தினத்தில் குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் செல்வம் செழித்தோங்க குபேர பூஜை செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். பணம் உள்ளிட்ட செல்வம் செழிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமின்றி, வீட்டில் தீமைகள் விலகி நன்மைகள் பெருகி மகிழ்ச்சி பெருக வேண்டும் என்பதற்காக இந்த பூஜை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. பொதுவாக குபேரருக்கு வியாழக்கிழமை பூஜை செய்வது உகந்தது ஆகும். குபேரரை தனியாக மட்டுமின்றி லட்சுமியுடன் சேர்த்து பூஜை செய்வது மிகவும் சிறப்பானது ஆகும்.

குபேர பூஜையை பொதுவாக அமாவாசை திதி இருக்கும் நேரத்தில் தான் செய்ய வேண்டும். தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி மாலை 4.29 மணிக்கு அமாவாசை திதி தொடங்குகிறது.
அமாவாசை திதியானது நவம்பர் 1-ந்தேதி மாலை 6.25 மணி வரை உள்ளது. நவம்பர் 1-ந்தேதி கவுரி விரதமும் வருகிறது. தீபாவளி தினத்தில் குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.
தீபாவளி நாளில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவது வழக்கம் ஆகும். அவ்வாறு அசைவம் சாப்பிடுபவர்கள் அடுத்த நாள் குபேர பூஜை செய்வது நல்லது. ஏனென்றால் அடுத்த நாள் மாலை வரை அமாவாசை திதி இருப்பதால் அன்றைய தினம் செய்யலாம். ஆனாலும், தீபாவளி நாளிலே லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது ஆகும்.
குங்குமம், மகாலட்சுமி படம், குபேரர் படம், 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் ஒரே மாதிரியான 9 அல்லது 108 நாணயங்கள், மலர்கள் (தாமரை இருந்தால் சிறப்பு), துளசி, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, அட்சதை ஆகியவை பூஜைக்கு தேவையான பொருட்கள் ஆகும்.

குபேரருக்கு உரிய வட திசையில் சிறிய மனை வைக்க வேண்டும். அதில் குபேரர் சிலை வைக்க வேண்டும். குபேரர் படம் அல்லது சிலையை வடக்கு நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும்.
மனைப்பலகையின் ஒரு ஓரத்தில் குபேர யந்திரம் வரையப்பட்டிருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து இருக்க வேண்டும்.
பின்னர் குல தெய்வத்தை வழிபட்டு விட்டு குபேர மற்றும் லட்சுமியை வணங்கி மகாலட்சுமியின் 108 போற்றிகளையும் கூறி குங்குமம், மலர்கள் அல்லது அட்சதை தூவி அர்ச்சனை செய்ய வேண்டும்.
லட்சுமி குபேர பூஜையின் பிரசாதத்தை மட்டும் நாம் சாப்பிட வேண்டும். மறுநாள் பூஜையில் பயன்படுத்திய நாணயங்களை எடுத்து ஒரு துணியில் கட்டி உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பீரோ ஆகிய இடத்தில் வைக்க வேண்டும்.
- முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்.
- பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டுக் கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகரவிளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாமல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. அதற்கான பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு மந்திரி வாசவன் கூறியிருப்ப தாவது:-
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் சரிபார்க்கப்படும் போது ஆதார் அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
அவர்களின் பதிவு எப்படி செய்யப்பட வேண்டும்? என்பதை காவல்துறையும், தேவசம்போர்டும் கூட்டாக முடிவு செய்யும். அது தொடர்பான முடிவு நவம்பர் 10-ந்தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்.
பதினெட்டாம்படியில் ஒரு நிமிடத்தில் 70 முதல் 75 பக்தர்கள் வரை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல்லில் ஒரே நேரத்தில் 15,500 வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். பம்பை வரை சிறிய வாகனங்கள் செல்ல கோர்ட்டின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
பம்பையில் இருந்து சபரி மலைக்கு ஏறிச்செல்லும் பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.
மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் மின் கழிப்பறைகள் வசதி செய்யப்படும். யாத்திரை காலங்களில் 13,600 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம்.
- 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார்
சிவபெருமானும், பார்வதியும் வீற்றிருக்கும் இடம், கயிலாய மலை. அங்கே சிவ-பார்வதியை தரிசிப்பதற்காக, அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து செல்வார்கள். அவர்களில் பிருங்கி முனிவர் ஒருவர். ஆனால் அவர் சிவ-பார்வதியை இணைத்து வணங்காமல், சிவனை மட்டுமே வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதனால் வருத்தம் கொண்ட பார்வதி, அதுபற்றி சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு ஈசன், "தேவி.. பிருங்கி முனிவருக்கு, எந்த பாக்கியங்களும் தேவையில்லை. அவருக்கு மோட்சம்தான் விருப்பம். எனவேதான் அவர் என்னை மட்டும் சுற்றி வந்து வழிபடுகிறார்" என்று விளக்கம் அளித்தார்.
சிவபெருமான் சொன்ன விளக்கத்தில், பார்வதிக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே அவர் பிருங்கி முனிவரிடமே, "உன் தேகத்திற்கு தேவையான சக்தி அனைத்தும் நான் வழங்கியவை. ஆனால் என்னை வழிபட மறுக்கிறாய். அப்படியானால் சக்திக்கு தேவையான ரத்தம், தசை, நரம்பு போன்றவற்றை திருப்பிக்கொடு" என்றார்.
பிருங்கி முனிவரும் அப்படியே செய்தார். இதனால் எலும்பும், தோலும் மட்டும் கொண்டு வலுவிழந்து தடுமாறினார். சிவபெருமான் அவருக்கு கைத்தடி ஒன்றை வழங்கி நிற்கச் செய்தார்.
இதனால் கோபம் கொண்ட பார்வதி, கயிலாயத்தை விட்டு பூலோகம் வந்தார். அப்படி அவர் வந்து சேர்ந்த இடம் ஒரு நந்தவனம். அந்த நந்தவனம், 12 ஆண்டுகளாக மழை இன்றி வறண்டு காணப்பட்டது.
பார்வதி தேவி வந்ததும் மழை பெய்து, அந்த நந்தவனம் புத்துயிர் பெற்றது. பல அரிய பூக்கள் பூத்தன. அதன் வாசத்தை நுகழ்ந்து அங்கு வந்த வால்மீகி முனிவர், அம்பிகையை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது பார்வதி தேவி, "முனிவரே.. நான் மீண்டும் ஈசனுடன் சேருவதற்கு, அனைத்து விரதங்களையும் விட மேலான விரதம் ஒன்று வேண்டும். அப்படியொரு விரதம் இருக்கிறதா?" என்று கேட்டார்.
அதற்கு வால்மீகி முனிவர், "தாயே.. இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு 'கேதாரீஸ்வரர் நோன்பு' என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்" என்றார்.
அதன்படி அம்பிகை, அந்த விரதத்தை முறை தவறாமல் கடைப்பிடித்தார். இதையடுத்து விரதத்தின் 21-ம் நாள் அன்று, தேவ கணங்கள் சூழ அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் சென்றார். அம்பிகையே விரதம் இருந்த காரணத்தால், இது 'கேதார கவுரி விரதம்' என்று அழைக்கப்படுகிறது.

விரதம் இருப்பது எப்படி?
கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது.
தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும். நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவ-பார்வதியாக வழிபடப்படுகின்றது.
இந்த விரதம் இருப்பவர்கள், தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்பார்கள். 21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து உற்றார், சுற்றார் சூழ சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர்.
இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும். இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது.

ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி, பட்டு வஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும்.
மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு இறைவனின் 16 நாமங்களைச் சொல்லி தூப, தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

பின்னர் அம்மி குழவியை நன்கு சுத்தம் செய்து பலவித அலங்காரங்களை அதற்கும் செய்து வில்வம், தும்பை போன்ற விசேஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ நாமம் செய்து பூஜிக்க வேண்டும். தூப, தீப ஆராதனைகள், நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.
- இன்று இரவு நான்காம் ஜாமத்தில் நரக சதுர்த்தி ஸ்நானம்.
- மாத சிவராத்திரி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-13 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி பிற்பகல் 2.22 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: அஸ்தம் இரவு 8.48 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று இரவு நான்காம் ஜாமத்தில் நரக சதுர்த்தி ஸ்நானம். மாத சிவராத்திரி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவனந்தபுரம், திருவட்டாறு கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம். பிள்ளைலோகாச்சாரி யார் உற்சவம் ஆரம்பம். வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம். வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-உதவி
மிதுனம்-பயணம்
கடகம்-தாமதம்
சிம்மம்-சாந்தம்
கன்னி-வெற்றி
துலாம்- புகழ்
விருச்சிகம்-நன்மை
தனுசு- பரிவு
மகரம்-வெற்றி
கும்பம்-நட்பு
மீனம்-சிறப்பு
- ஆனித்தேரோட்டமும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
- இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
நெல்லை:
நாயன்மாா்களால் பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ந்தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 10 நாட்களாக தினமும் காலை, மாலை நேரங்களில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடும் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லை யப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். முதலில் மூலவா் காந்திமதிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றுது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, காப்பு கட்டி திருஷ்டி கழித்தனா். அதன்பின் மாலை மாற்றும் வைபவம் என திருமண சடங்குகள் நடைபெற்றன.
சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுத்ததும் பக்தா்களின் ஹரஹர சிவசிவ கோஷங்கள் முழங்க மங்கல இசை இசைக்க திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு நலுங்கு இட்டு பாலும், பழமும் கொடுத்து சப்தபதி பொரியிடுதல் போன்றவை நடைபெற்றன. வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
பொங்கல், கேசரி, பிரசாத பைகள் உள்ளிட்டவை வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
அதனை தொடா்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், அறங்காவல் குழுவினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனர்.
- திரயோததி திதியை, 'எம தீபாவளி' என்று போற்றுகிறார்கள்.
- பூஜை அறையில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
தீபாவளிக்கு முன்தினமான திரயோததி திதியை, 'எம தீபாவளி' என்று போற்றுகிறார்கள். இந்த நாளில் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையின் அளவில் வீட்டின் பூஜை அறையில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அதோடு எம தீப தானமும் வழங்கலாம். அது என்ன எம தீப தானம் என்கிறீர்களா ?.. அதாவது பித்தளை குத்துவிளக்கு அல்லது வெள்ளி குத்துவிளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபம் ஏற்றிய குத்துவிளக்குகளை யாருக்காவது தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை துதியை திதி சிறப்புக்குரியது. ஏனெனில் ஒரு முறை இந்த திதியின் தினத்தில், எமதர்மன் தன்னுடைய சகோதரியான யமுனையின் வீட்டில் விருந்து சாப்பிடச் சென்றார்.
விருந்து சாப்பிட்டு முடித்ததும், தன் சகோதரிக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை வழங்கினார்.
அப்போது யமுனை, ஐப்பசி வளர்பிறை துதியை திதி அன்று, சகோதரிகளின் வீட்டில் விருந்து சாப்பிடும் சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்ற வரத்தை எமதர்மனிடம் இருந்து பெற்றாள்.
அதன்படி இந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கும் பெண்களின் சகோதரர்களுக்கு, நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறும்.
- மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
- தீபாவளி தினத்தில் மட்டும் வெந்நீரில் நீராடலாம்.
தீமை என்னும் இருளை நீக்கி, மனதில் தூய்மை எண்ணங்களை பரவச் செய்யும் தினமே 'தீபாவளி'. தீபங்களை வரிசைப்படுத்தி வைத்து வழிபாடு செய்யும் நாளாக இதனை போற்றுகிறோம்.

நரகாசுரன் என்னும் அசுரனை அழித்த தினத்தையே தீபாவளியாக கொண்டாடுவதாக புராணங்கள் சொல்கின்றன. அந்த நரகாசுரனையே, மனதின் தீமைகளோடு ஒப்பீடு செய்கிறார்கள்.
இரண்யாசுரன் என்ற அசுரன், பூமியை கடலுக்கு அடியில் மறைத்து வைத்தான். அதை மீட்பதற்காகவே மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்தார். இரண்யாசுரனை அழித்து, பூமியை தன் இரு கொம்புகளுக்கு இடையில் வைத்து தூக்கிக் கொண்டு கடலில் இருந்து மேலே வந்தார்.
அப்போது வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனே 'நரகாசுரன்'. பிரம்மாவிடம் இருந்து பல வரங்களைப் பெற்ற நரகாசுரன், 'தன் தாயாலேயே அழிவு வரவேண்டும்' என்ற வரத்தையும் பெற்றிருந்தான். அந்த வரத்தால் தனக்கு அழிவே இல்லை என்று நரகாசுரன் நம்பினான்.
ஆனால் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்தார்.
இந்த நிலையில் பிரம்மனிடம் இருந்து வரத்தைப் பெற்ற நரகாசுரன், மூவுலகங்களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கினான். அவன் அசாமில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு தன்னுடைய ராஜ்ஜியத்தை நடத்தி வந்தான்.
அவனது துன்பத்தால் துவண்டு போன தேவர்களும், முனிவர்களும், மக்களும், கிருஷ்ணரிடம் தங்களின் குறைகளை போக்கும்படி வேண்டினர்.
அவர்களுக்கு உதவ நினைத்த கிருஷ்ணர், சத்யபாமாவையும் உடன் அழைத்துக் கொண்டு, நரகாசுரன் ஆட்சி செய்த இடத்திற்குச் சென்றார். அவனது ராஜ்ஜியத்தின் காவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்து நகருக்குள் நுழைந்தார்.

போருக்கான சங்கை முழங்கினார். சங்கொலி கேட்டு கோட்டையில் இருந்து வெளியே வந்த நரகாசுரன், தன் சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழைந்த கிருஷ்ணனை கண்டு ஆத்திரமடைந்தான். அவருடன் போரிட்டான். அப்போது நரகாசுரன் எய்த அம்பு ஒன்றால் தாக்கப்பட்டது போல நடித்து, தேரில் சாய்ந்து விழுந்தார் கிருஷ்ணர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சத்யபாமா தன்னுடைய கணவருக்காக, நரகாசுரனுடன் போரிட்டு அவனை வதம் செய்தாள். நரகாசுரன் பெற்ற வரத்தின்படியே, தன் தாயின் கரத்தாலேயே அழிவை சந்தித்தான்.
இந்த கதையில் 4 கோட்டைகளை உடைத்தெறிந்து, 5-வது கட்டமாக நரகாசுரனின் நகருக்குள் கிருஷ்ணன் நுழைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இது பஞ்சபூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கு இறைவன் அருள்பாலிப்பதை உணர்த்துகிறது.
இதில் 'கிரி துர்க்கம்' நிலத்தையும், 'அக்னி துர்க்கம்' நெருப்பையும், 'ஜல துர்க்கம்' நீரையும், 'வாயு துர்க்கம்' காற்றையும் குறிப்பதாகும். பஞ்ச பூதங்களில் 4 இங்கு கூறப்பட்டுள்ளதால் 5-வதான ஆகாயமும் சேர்ந்தே வரும்.
நரகாசுரனை வதம் செய்த பின்னர் பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவுக்கு, மகனை இழந்த துக்கம் ஏற்பட்டது. அதே நேரம் 'மகன் இறந்தது தன் ஒருத்திக்கான துக்கம் மட்டுமே. ஆனால் அவனுடைய இறப்பு, மக்களுக்கான மகிழ்ச்சி' என்பதை புரிந்து மனதைத் தேற்றினாள்.
இருந்தாலும், அவள் கண்ணனிடம், "என் மகனை இழந்த துக்கம் எனக்கு இருந்தாலும், உலக மக்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக்கூடாது. அன்று எல்லோரும் கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினாள்.
அதன்படியே தீபாவளி பண்டிகையின்போது, அனைவரும் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்பாக எழுந்து நீராட வேண்டும். அதிகாலையில் நீர் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், தீபாவளி தினத்தில் மட்டும் வெந்நீரில் நீராடலாம் என்று சொல்லப்பட்டது.
அன்றைய தினம் மாலையில் வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரை தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
- 31-ந்தேதி தீபாவளி பண்டிகை.
- 1-ந்தேதி அமாவாசை.
29-ந்தேதி (செவ்வாய்)
* பிரதோஷம்.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் அதிகாலை திருக்கல்யாணம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
30-ந்தேதி (புதன்)
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்
* சமநோக்கு நாள்.
31-ந்தேதி (வியாழன்)
* தீபாவளி பண்டிகை.
* முகூர்த்த நாள்.
* திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றுதல்.
* சமநோக்கு நாள்.
1-ந்தேதி (வெள்ளி)
* அமாவாசை.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா.
* வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் உற்சவ சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
2-ந்தேதி (சனி)
* மதுரை பழமுதிர் சோலை முருகப்பெருமான் மகா அபிஷேகம், அன்ன வாகனத்தில் பவனி.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஊஞ்சல் உற்சவ சேவை,
* வள்ளியூர் முருகப்பெருமான் பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
3-ந்தேதி (ஞாயிறு)
* குமாரவயலூர் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.
* வள்ளியூர் முருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்திலும், இரவு வெள்ளி மயில் வாகனத்திலும் வீதி உலா.
* பழமுதிர்சோலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்திலும், இரவு வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியர் தங்க ரதத்திலும் பவனி.
* சமநோக்கு நாள்.
4-ந்தேதி (திங்கள்)
* சிக்கல் சிங்காரவேலர் காலை மோகன அவதாரம், இரவு தங்க மயில் வாகனத்தில் பவனி.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* திருவட்டாறு சிவபெருமான் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
- இன்று பிரதோசம்.
- தென்காசி, கடையம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-12 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி நண்பகல் 12.20 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: உத்திரம் இரவு 8.48 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பிரதோசம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். தென்காசி, கடையம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். நெல்லை ஸ்ரீசுவாமி ஸ்ரீ அம்பாள் புஷ்பப் பல்லக்கில் பட்டணப் பிரவேசம். இரவு ஊஞ்சலில் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வரும் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-திடம்
கடகம்-கவனம்
சிம்மம்-பரிசு
கன்னி-பாசம்
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-வரவு
தனுசு- தெளிவு
மகரம்-பக்தி
கும்பம்-லாபம்
மீனம்-செலவு






