search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surya Worship"

    • மஞ்சள் தூள் வைத்துக் கொண்டு நீராடுவது சம்பிரதாயம்.
    • நீராடிய பிறகு சூரியனுக்கு அர்க்கியம் தருவது விசேஷம்.

    ரத சப்தமி அன்று காலையில், சுமங்கலிகள் ஏழு எருக்கம் இலைகளை (தலை மீது 3, வலது புஜத்தில் 2, இடது புஜத்தில் 2 ) அட்சதை மற்றும் மஞ்சள் தூள் வைத்துக் கொண்டு நீராடுவது சம்பிரதாயம். ஆண்கள் எருக்கம் இலைகளில் அட்சதை மட்டுமே வைத்து நீராட வேண்டும். நீராடிய பிறகு சூரியனுக்கு அர்க்கியம் தருவது விசேஷம். நீராடும்போது கீழ் கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைச் சொல்வது நன்மை தரும்.

    ஸப்த ஸப்தப்ரியே தேவி ஸப்த வோதைக தீபிகே

    ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்

    யதா ஜன்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸி ஜன்மஸி

    தன்மே சோகஞ்ச மோஹஞ்ச மாகரீ ஹந்தஸப்தயீ

    ஏதத் ஜன்ம க்ருதம் பாபம் யத்ச ஜன்மாந்த ரார்ஜிதம்

    மனோவாக்காய ஜம் பாபம் ஜ்ஞாதாஜ்ஞாதேச புன

    சூரிய அர்க்கியமும்.. மந்திரமும்..

    சூரியனுக்கு அர்க்கியம் கொடுக்கும்போது, வலது கையில் அட்சதை, பூ, சந்தனம், குங்குமம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, பாலும் தண்ணீரும் கலந்த நீரை ஒரு கிண்ணத்தில் இடது கையால் எடுத்து, வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றும் நீரானது, ஒரு நல்ல தட்டில் (பித்தளை அல்லது செப்பு) விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் கீழே சொல்லியுள்ள மந்திரத்தை சொல்லவும்.

    ஸப்த ஸப்திவஹ ப்ரீத ஸப்தலோக ப்ரதீபன்

    ஸப்தமீ ஸஹிதோதேவ க்ருஹாணார்க்யம் திவாகர

    திவாகராய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்

    இதி ஸப்த விதம் பாபம் ஸ்நாநான் மே ஸப்தஸப்திதே

    ஸப்தவ்யாதி ஸமாயுக்தம் ஹர மாகரி ஸப்தமி

    ×