என் மலர்
வழிபாடு
- இன்று பிரதோசம்.
- தென்காசி, கடையம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-12 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி நண்பகல் 12.20 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: உத்திரம் இரவு 8.48 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பிரதோசம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். தென்காசி, கடையம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். நெல்லை ஸ்ரீசுவாமி ஸ்ரீ அம்பாள் புஷ்பப் பல்லக்கில் பட்டணப் பிரவேசம். இரவு ஊஞ்சலில் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வரும் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-திடம்
கடகம்-கவனம்
சிம்மம்-பரிசு
கன்னி-பாசம்
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-வரவு
தனுசு- தெளிவு
மகரம்-பக்தி
கும்பம்-லாபம்
மீனம்-செலவு
- பொதுவாக கன்னி கோவில்களில் மேற்கூரை போட்டு முகடு அமைப்பது இல்லை.
- சப்த கன்னியர் ஆலயங்களை நகர்ப்புறங்களில் காண முடியும்.

மதுராந்தகம்
மதுராந்தகத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஏரிகாத்த ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருந்தபோது அப்போதைய கலெக்டரால் உருவாக்கப்பட்டு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்து இருக்கிறது. இந்த கோவிலிருந்து மதுராந்தகம் ஏரி கலங்கல் செல்லும் வழியில் மதுராந்தகம் கிராம மக்களால் சப்தகன்னிகள் கோவில் உருவாக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலில் ஆடி மாதம் ஐந்தாம் வாரம் அல்லது ஆவணி முதல் வாரம் கோவிலில் பால் குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், பால் அபிஷேகம் செய்தல், சாமி வீதி உலா போன்றவற்றை கிராம மக்கள் ஆண்டு தோறும் செய்து வருகின்றனர்.
மேலும் அமாவாசை நாளில் இக்கோவிலுக்கு வந்து பூஜை செய்தால் நினைத்த காரியம் நடக்கும். நன்மைகள் நடைபெறும் என்று மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது இந்த கோவில்.
மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராமத்தில் குளக்கரையில் அமைந்துள்ள சப்த கன்னிகள் ஆலயத்தில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் விசேஷ வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இதனால் பெண்கள் தங்களுடைய தாலி பாக்கியம், குழந்தை வரம் வேண்டியும் வழிபட்டு வருவதனால் அங்கு கூட்டம் அலை மோதுகிறது.
இதுபோன்று சுற்று வட்டார பகுதிகளில் சித்தாமூர், இலத்தூர், செய்யூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சப்த கன்னிகள் கோவில்கள் அமைந்துள்ளதால் மக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.

மேல்மருவத்தூர்
புற்று மண்டபத்தின் வலப்புறம் சப்த கன்னியர் கோவில் ஒன்று உள்ளது. ஏழு கன்னிக்கும் அமைந்த கோவிலாதலின் இதனைக் கன்னி கோவில் என்றே மக்கள் வணங்குகின்றனர்.
பொதுவாக கன்னி கோவில்களில் மேற்கூரை போட்டு முகடு அமைப்பது இல்லை. அதன்படியே கன்னி கோவிலின் நான்கு புறத்திலும் சுற்றுச்சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது.
அன்னை சப்த கன்னியர் கோவிலைக் கட்டுமாறு தன் பக்தர் ஒருவருக்கு ஆணையிட்டாள். "எந்த குலம் இதுவரை ஆலயத்தின் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லையோ, அக்குலத்தைச் சேர்ந்த நீயே இந்த கோவிலைக் கட்டு.
எந்த சமுதாயம் உன்னைத் தள்ளி வைத்ததோ, அந்த சமுதாயமே நீ கட்டிய கோவிலுக்குள் வந்து வணங்கப் போகிறது பார்" என்றாள் அன்னை. இது சாதி சமயங்களைக் கடந்த சித்தர் நெறி ஆகும். ஆகம விதிகளையெல்லாம் கடந்த ஒரு நெறியைக் கொண்ட கோவில் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

காஞ்சிபுரம்
கிராமப்புற மக்களின் வழிபாட்டுத் தெய்வமான சப்த கன்னியரின் வழிபாட்டு இடங்கள் பெரும்பாலும் நகர்புற பகுதிகளில் காண்பது நகரிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் முற்றிலும் பிரபலமாகாத ஒருசில சப்த கன்னியர் அமைந்துள்ள இடங்களையே நகர்ப்புறங்களில் காண முடியும்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தின் இதயப்பகுதியான காந்தி ரோட்டில் மூலவராக சப்த கன்னியர் அருள் பாலிக்கும் திருக்கோவில் உள்ளது.
காஞ்சிபுரம் காந்தி ரோடு, ரங்கசாமி குளம் பகுதியில் பிரதான சாலையில் சப்த கன்னியரும் வீற்றிருக்கும், ஸ்ரீ ஆகாய கன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோவிலில் 5 தலை நாகம் படம் விறித்தாட அதன் கீழ் சப்த கன்னியர் மூலவராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.
எதிரே திரிசூலத்திற்கு பின்னர் பலிபீடமும் அடுத்து, சப்த கன்னியருக்கு காவலாக சீறி நிற்கும் வேங்கையும் உள்ளது. இத் திருக் கோவிலினை வலம் வரும் போது நவகிரகமும், விநாயகர், முருகர், துர்க்கை, சனிபகவான் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலினுள் ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமையான புற்றுடன் கூடிய வேப்பமரத்தின் கீழ் சப்த கன்னியர்கள் திரு உருவமாக எழுந்தருளி உள்ளனர்.
ஆண்டு தோறும் ஆடிமாதம் முழுவதும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றி வரும் இத்திருக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் அன்னதானம் செய்யப்படுகின்றது.
இத்திருக் கோவிலை பற்றி மேலும் விவரம் வேண்டுவோர் 044-27229159 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

திருத்தணி
அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவில்களாக திருவாலங்காடு, மத்தூர், பெரிய நாகப்பூண்டி, சந்தான வேணுகோபாலபுரம் உள்பட 5 சைவ திருக்கோவில்கள் 7 வைணவ திருக்கோவில்கள், 4 சக்தி கோவில்கள், மடாலயம் என மொத்தம் 27 ஆலயங்கள் உள்ளன. இதில் சப்த கன்னிகைகள் கோவில் என்பது ஒன்று.
இது கோவில் என்று மட்டுமல்லாமல், சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. பக்தியை கலந்து விருந்துகள், விழாக்கள் என பண்டிகை காலம் போல் மக்கள் கொண்டாடி வந்தனர்.
காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளே வந்து செல்ல அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முருகன் கோவிலுக்கு தெற்கே கன்னிகாபுரம் எனும் பகுதியில் அடர்ந்த காடாகவும், பசுமையான சோலையாகவும் அமைந்துள்ளது சப்த கன்னிகையர் கோவில்.
சப்தம் என்றால் ஏழு. சப்த ரிஷிகளால் வசிஷ்டர் முதலிய ஏழு முனிவர்கள் இங்கு அமர்ந்து தியானம் செய்த வண்ணம், முருகக்கடவுளை பூஜித்துள்ளனர். அவர்களால் உருவாக்கப்பட்ட கோவில் தான் சப்த கன்னிக்கோவில் என அழைக்கப்படுகிறது.
இங்கு 7 சுனைகளில் தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. தற்போது நமத்து போய் புதைந்து 6 சுனைகள் காணாமல் போனது. ஆனாலும் பாறைகளின் நடுவே ஒரு சுனையில் மட்டும் வற்றாமல் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது.
மொத்தம் 13 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கிற இந்த பூமியில் நிழல் தரும் மரங்களும், செடி, கொடிகளும், இயற்கையாக சுகம் தரும் காற்றோட்ட வசதிகளும் உள்ளதால், திருத்தணி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களும் பொழுது போக்க இதை பயன்படுத்தி வருகிறார்கள்.
காதணி விழாக்கள், வன போஜனம் என பல நேரங்களில் விருந்தோம்பல் நடப்பதையும் இங்கு பார்க்க முடிகிறது. குறிப்பாக பெண்கள் இந்த சுனை நீரை எடுத்து சமையல் செய்து பொங்கல் வைத்து படையல் இட்டு சப்த கன்னியர்களை வழிபடுகின்றனர்.
ஏழு கன்னிகைகளும் தனித் தனியாக இல்லாமல் ஒரே இடத்தில் கோவில் கொண்டு உள்ளார்கள். தினசரி அம்மன்களுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. கடந்த 21.11.1999-ம் ஆண்டு இக்கோவிலுக்கு திரு குட முழுக்கு நடைபெற்றது.

பிடாரி செல்லியம்மன் கோவில்
வேளச்சேரி பிரதான மெயின் ரோட்டில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட பிடாரி செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. சென்னை மாநகரத்தின் வேதஸ்ரேணி என்கின்ற வேளச்சேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கிராம எல்லை சப்தமாதாவாக ஸ்ரீசாமுண்டீஸ்வரி, ஸ்ரீஇந்திராணி, ஸ்ரீவராகி, ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீபிரம்மி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீகவுமாரி ஆகியோர் தேவதைகளாக எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டியவண்ணம் வரங்களை வாரி வழங்கி வருகிறார்கள்.

மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் உள்ள சப்தகன்னியர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோவில்களில் இருக்கும் சப்தகன்னியர் பீடங்களைவிட வித்தியாசமாக இருக்கும். எல்லா கோவில்களிலும் ஏழுகன்னிகள் மட்டும்தான் இருக்கும்.
ஆனால் மாமல்லபுரத்தில் மட்டும்தான் நடுவில் எல்லைகாக்கும் கருக்காத்தம்மனும் வலது பக்கம் மூன்று கன்னிகளும் இடது பக்கம் நான்கு கன்னியரும் கடற்கரை பகுதியை பார்த்த வண்ணம் இருக்கும் பழங்காலத்து சிலையாக பீடங்களை பார்க்க முடியும்.
1956-ல் தொல்லியல்துறை கையகப்படுத்தும் முன்னர் பல ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுரம் கிராமப்பகுதிகளில் ஆங்காங்கே சப்த கன்னியர் உலா வந்ததை கன்னிப் பெண்கள் பார்த்ததாகவும் பார்த்து பயந்ததாகவும் அதனால் கன்னிப் பெண்களுக்கு ஆபத்து வரக்கூடாது என கருக்காத்தம்மனிடம் வழிபட்டு அம்மனை வடிவமைத்து தற்போது இருக்கும் பீடத்தில் முதலில் வைத்து அதை சப்தகன்னியர்கள் கோவிலாக வழிபட்டு வந்துள்ளனர்.
ஏழு கன்னியர் சிலைகளும் மாமல்லபுரம் கிராம சுற்று பகுதிகளில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு அம்மனுடன் வைத்து வருடாவருடம் ஊர் பூஜை, கன்னிபூஜை என சப்த கன்னிமார்களுக்கான பூஜைகளை செய்து வந்துள்ளனர்.
மாலை 6மணிக்கு மேல் கன்னிப்பெண்களை கோவில் தாண்டிச்செல்ல விடமாட்டார்களாம் . அவ்வளவு பயபக்தி. சப்தகன்னியர் சிலைகள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு ஒரே இடத்தில் வைத்துள்ளதாலும் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் பெயர்களை சின்னமாக வரைந்துள்ளதாலும் இவை பல்லவர் கால சிலைகளாக இருக்கலாம் எனவும் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே சப்தகன்னியர் வழிபாடுகளும் இருந்திருக்க வேண்டும் எனவும் பேசப்படுகிறது.
பண்டைய காலத்தில் நடந்த சப்தகன்னிகள் வழிபாடுகள் பூஜைகள் முன்புபோல் தற்போது நடப்பதில்லை. காரணம் இன்றைய கன்னிப் பெண்களிடம் அந்த ஆர்வம் குறைவாலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டாலும் மாமல்லபுரம் சப்தகன்னியர் கோவில் வெளியே தெரியாமல் இருந்து வருகிறது.

திருப்போரூர்
சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ள செம்பாக்கம் கிராமத்தில் புகழ் பெற்ற அழகாம்பிகை சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கோவில் சப்த கன்னியர் கோவில் ஆகும்.
இங்குள்ள செல்லியம்மன் ஆலயத்தின் துணைக் கோவிலாக விளங்குகிறது. திருமணமாகாத கன்னிப்பெண்கள் இக்கோவிலில் உள்ள சப்த கன்னியர்களை வேண்டி பொங்கல் வைத்து வழிபட்டால் விரைவில் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது ஐதகீம்.
மேலும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வியாபார அபிவிருத்தி பெற இக்கோவிலில் உள்ள சப்த கன்னியர்களை வேண்டி வலம் வந்தால் நினைத்தது விரைவில் கைகூடும் எனவும் சொல்லப்படுகிறது.
இங்குள்ள ஒரு சமூகத்தினரின் குலதெய்வமாக இந்த சப்த கன்னியர் கோவில் உள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பலர் இந்த சப்த கன்னியர் ஆலயத்திற்கு வந்து வேண்டி வழிபட்டு செல்கின்றனர்.
- வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று).
- இன்று ஏகாதசி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-11 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி காலை 10.27 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: பூரம் மாலை 6.22 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று ஏகாதசி. வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று). சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன், பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், தென்காசி ஸ்ரீ உலகம்மை கோவில்களில் திருமண வைபவக்காட்சி. திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வா ருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர், திருமான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மதிப்பு
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-செலவு
கடகம்-அமைதி
சிம்மம்-பரிசு
கன்னி-கவனம்
துலாம்- கவனம்
விருச்சிகம்-சிரத்தை
தனுசு- புகழ்
மகரம்-லாபம்
கும்பம்-பாராட்டு
மீனம்-தெளிவு
- திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது.
- கோவில் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது.
திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது. இந்த ஊரில் அற்புதமாகக் கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநங்கையார் அம்மன்.
பொதுவாகவே, சிவாலயங்களில் சப்தமாதர்களுக்கென ஒரு சந்நிதி இருக்கும். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் பலவற்றிலும் சப்தமாதர்கள் சந்நிதி கொண்டிருப்பார்கள்.

சப்தமாதர்களும் வடக்கு நோக்கியபடி காட்சி தருவார்கள். ஆனால், இங்கே கிழக்கு நோக்கியபடி காட்சி தருவது சிறப்பு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
இந்த கோவிலை கவுமாரி அம்மன் கோவில் என்றும், நங்கையார் கோவில் என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள்..
கோவிலில் மதுரைவீரனும் சந்நிதி கொண்டி ருக்கிறார். ஊருக்கு காவல்தெய்வமாகவும் போற்றப்படுகிற இந்த ஆலயம், சுமார் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்கிறது ஸ்தல வரலாறு.
மணக்கால் நங்கையார் அம்மன் கோவிலுக்கு வந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்தருள்வாள் அம்மன் என்று சிலாகித்து போற்றுகின்றனர் ஊர்மக்கள். பிராகாரத்தில் யானை மேல் அமர்ந்த அய்யனார், குதிரை மீது அமர்ந்தபடி காட்சி தரும் கருப்பண்ணசாமி ஆகியோரையும் தரிசிக்கலாம்.
கருப்பண்ணசாமிக்கும் அவரின் வாகனமான குதிரைக்கும் மாலை சார்த்தி மனமுருக வேண்டிக் கொண்டால், கொடுத்த கடன் தொகை விரைவில் கைக்கு வந்து சேரும் என்கிறார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பமும் பிரிவினைகளும் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்!

தெற்குப் பிராகாரத்தில் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து நிற்கிறது நருவுளி மரம். இந்த மரத்தைச் சுற்றி வந்து, இதன் கொழுந்து இலையைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வந்தால், குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவிலேயே பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
நவராத்திரியின்போது, பத்தாம் நாளில், தயிர்ப்பாவாடை எனும் வழிபாடு இந்த தலத்தில் வெகு பிரசித்தம். அப்போது, அர்த்தமண்டபத்தில் தயிர்சாதத்தைத் தயாரித்து மிகப்பெரிய துணியில் கொட்டிப் பரப்பி வைப்பார்கள். பிறகு, அம்மனுக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதத்தை வழங்குவார்கள்.
இந்த பிரசாதத்தைச் சாப்பிட்டு, அம்மனை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
மாங்கல்ய பாக்கியம் கிடைக்க, மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், வாராக் கடன் வசூலாக, குடும்பப் பிரச்சனைகள் நீங்கவும், கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கவும், பிரிந்த தம்பதி சேரவும் நங்கையார் அம்மனும் சப்தமாதர்களும் அருள்புரிகிறார்கள்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.
- திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் தபசுக் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-10 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி காலை 8.54 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: மகம் மாலை 4.10 மணி வரை பிறகு பூரம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் தீர்த்தம். இரவு தங்க சப்பரத்தில் தபசுக் காட்சி. வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை, தென்காசி ஸ்ரீ உலகம்மை கோவில்களில் திருவீதியுலா. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகனுக்கும், ஸ்ரீசெல்லமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இரக்கம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-இன்பம்
கடகம்-ஆக்கம்
சிம்மம்-பக்தி
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- ஓய்வு
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- பரிவு
மகரம்-லாபம்
கும்பம்-ஆர்வம்
மீனம்-புகழ்
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரானுக்கு பாலபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-9 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி காலை 7.44 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: ஆயில்யம் பிற்பகல் 2.22 மணி வரை பிறகு மகம்
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன், பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில்களில் புறப்பாடு. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மன் தேரோட்டம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரானுக்கு பாலபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-நலம்
மிதுனம்-தனம்
கடகம்-ஆர்வம்
சிம்மம்-வரவு
கன்னி-ஊக்கம்
துலாம்- ஈகை
விருச்சிகம்-போட்டி
தனுசு- முயற்சி
மகரம்-இன்பம்
கும்பம்-நிறைவு
மீனம்-மகிழ்ச்சி
- கந்த சஷ்டி 2-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ந் தேதி நடக்கிறது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறும்.
திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் வருகிற 2-ந் தேதி காலையில் யாக சாலை பூஜையுடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படு கிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலைக்கு புறப்படு கிறார். 7மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது.
மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வேல் வகுப்பு,வீரவாள் வகுப்பு பாடல்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது.
மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை யும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது,
2-ந் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 3,4,5,6 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
3.30மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது.
காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி, 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை ஆகி பின்னர் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் வருகிற 6-ம் திருவிழாவான 7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படு கிறது 1.30 க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.
காலை 6மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும்,12.45 மணிக்கு சண்முக விலாசம் மண்டபத்தில் தீபாராதனைக்கு பின் மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.
பின்னர் சந்தோஷ் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று 108 மகாதேவர் சன்னதியில் சாயாபிசேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 8-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3:30-க்கு விஸ்வரூபம்,4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
அன்று அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், மாலை மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.
8-ம் திருவிழா அன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.9,10,11 ஆகிய திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது.12-ம் திருவிழா அன்று மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், பாவங்கள் நீங்கும்.
- சிவனுக்கு சாத்தப்படும் வெண்ணெய் காப்பு மறுநாள் வரை உருகாமல் இருக்கிறது.
கோவில் தோற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது, திருநெய்வணை என்று அழைக்கப்படும் திருநெல்வெண்ணெய் திருத்தலம். இவ்வாலயத்தின் இறைவன் 'சொர்ணகடேசுவரர்' என்றும், இறைவி 'நீலமலர்கன்னி' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆலய தீர்த்தம், பெண்ணெயாறு. ஆலய தல விருட்சம், புன்னை மரம்.

தல வரலாறு
முன்னொரு காலத்தில் வயல்கள் நிறைந்த இப்பகுதியில் விவசாயம் செழித்திருந்தது. அதனால் மக்கள் அனைவரும் குறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். வசதியான வாழ்க்கை காரணமாக, ஒழுக்கம் தவறியதுடன் இறை வழிபாட்டையும் முழுமையாக மறந்தனர்.
அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவன் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். வருணனிடம் சொல்லி இப்பகுதியில் மட்டும் இடைவிடாத தொடர்மழை பொழியும்படி செய்தார். முதலில் மழையை கொண்டாடியவர்கள், விடாத மழையால் திண்டாடினர்.
தொடர்ந்து பெய்த மழையால் ஊருக்கு மத்தியில் இருந்த பெரிய ஏரி உடைந்து, ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது. விவசாய பயிர்கள் அழிந்தன.
அடுத்தகட்டமாக தங்களது உடமைக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதை புரிந்தவர்கள், அதுநாள் வரை மறந்திருந்த இறைவழிபாட்டை நினைத்து, ஒன்றுகூடி சிவபெருமானை தொழுதனர்.
இதையடுத்து ஒரு வாலிபன் உருவில் அங்கு வந்த சிவபெருமான், ஒவ்வொருவர் வீட்டிலும் வைத்திருந்த நெல் மூட்டைகளை கேட்டுப் பெற்றார். அந்த நெல் மூட்டைகளைக் கொண்டு, ஏரியின் கரையை பலப்படுத்தி வெள்ளத்தைத் தடுத்தார்.
பின்னர் வருணபகவானை அழைத்து மழையை நிறுத்தும்படி பணித்தார். தக்க சமயத்தில் வந்து தங்கள் உடமைகள், பொருள்களை காத்ததுடன், அனைவரின் உயிரையும் காத்த அந்த வாலிபனிடம், "நீதான் எங்கள் தெய்வம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.
அப்போது வாலிபனாக இருந்த சிவபெருமான், "உங்களின் அனைத்து உயர் நிலைக்கும் இறைவனே காரணம். இனிமேல் எந்த சூழ்நிலையிலும் நல்வழியை கைவிடாதபடி வாழுங்கள். அதோடு இறைவனையும் மறக்காதிருங்கள்" என்று கூறினார்.
மேலும் சொர்ணம் நிரம்பிய குடங்களை அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து, 'இழந்த பொருட்களை இதன் மூலம் மீட்டுக்கொள்ளுங்கள்' என்று கூறி அனைவருக்கும் தான் யார் என்பதை காட்டி மறைந்தார்.
பரவசம் அடைந்த மக்கள் அனைவரும் அந்த இறைவனுக்கு அங்கே ஒரு ஆலயம் எழுப்பினர். சிவனே வந்து நெல் மூட்டைகளைக் கொண்டு அணை கட்டிய தலம் என்பதால், இந்த ஊர் 'நெல் அணை' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி காலப்போக்கில் 'நெய்வணை' என்றானதாக சொல்கிறார்கள்.
இத்தல இறைவனுக்கு 'நெல்வணை ஈசர்' என்றும், 'பொற்குடநாதர்' என்றும் பெயர்கள் உண்டாயின. இத்தல ஈசனை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தங்களின் தேவாரப் பாடலால் போற்றியுள்ளனர்.
2 ஆயிரம் ஆண்டு பழமையும், பெருமையும் கொண்ட இக்கோவில் யாரால் கட்டப்பட்டது என்ற குறிப்பு இல்லை. ஆனால் சோழமன்னர்களில் முதலாம் குலோத்துங்கசோழன், விக்கிரமசோழன், பல்லவமன்னர் சகலபுவன சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கதேவர், விஜயநகர மன்னர் கிருட்டிணதேவ மகாராயர் ஆகியோரால் இவ்வாலயத்திற்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.

ஆலய அமைப்பு
ஆலயத்தின் முன்பாக திருக்குளம் உள்ளது. முகப்பு வாசல், அதற்கு முன்பாகவே நந்தி, கொடிமரம், பலிபீடம் உள்ளன. கோவிலின் உள்ளே மகா மண்டபம், அதில் பலிபீடம், நந்தியம்பெருமான் இருக்கின்றனர். இந்த அதிகார நந்தி இரண்டு கால்களையும் இணைத்து கைகூப்பி வணங்குவது போன்ற அமைப்பில் இருக்கிறது.
இடதுபுறமாக விநாயகர் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னிதியின் வாசலுக்கு வெளியே, திருமகளுடன் சங்கு-சக்கரம் ஏந்தியபடி திருமால் வீற்றிருக்கிறார்.
அர்த்த மண்டபத்தில் துவாரபாலகர்கள் காவல்புரிய, கருவறையில் மூலவரான நெல்வணை நாதர், சுயம்பு மூர்த்தியாக சிவலிங்க வடிவத்தில் ருத்ராட்ச பந்தலின் கீழ் அருள்கிறார். பிரமாண்டமான இந்த பந்தலில் 7 ஆயிரத்து 500 ருத்ராட்சங்கள் இருக்கிறது.
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் சுவாமியை வணங்கிய நிலையில் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் நடராஜருக்கு தனிச் சன்னிதியும், உற்சவருக்கான சன்னிதியும் உள்ளன. சூலத்தின் மத்தியில் நின்ற கோலத்தில் உற்சவர் அருள்பாலிக்கிறார்.
சிவமும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீசுவரர் வடிவத்தை இந்த வடிவம் உணர்த்துகிறது. கருவறைக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, கிழக்கில் லிங்கோத்பவர், வடபுறத்தில் துர்க்கை, பிரம்மா வீற்றிருக்கின்றனர். அவர்களுக்கு எதிரில் சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது.
தென்கிழக்கில் செல்வ விநாயகர், தொடர்ந்து வள்ளி- தெய்வானை உடனாய சுப்பிரமணியர் வீற்றிருக்கின்றனர். அடுத்ததாக மகாவிஷ்ணு, கைகூப்பிய கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்தியபடி லட்சுமி நாராயணராக தனிச் சன்னிதியில் அருள்கிறார்.

இவர்கள் இருவரும் கண்களை மூடி தியானத்தில் இருப்பது தனிச்சிறப்பு. இந்தச் சன்னிதிகளுக்கு பின்புறம் பாலமுருகனும், விசாலாட்சி உடனாய விசுவநாதரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி, தனிக்கோவிலாக அமைந்திருக்கிறது. நீலமலர்கன்னி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
இவ்வாலய மூலவருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், பாவங்கள் நீங்கும், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிவனுக்கு சாத்தப்படும் வெண்ணெய் காப்பு மறுநாள் வரை உருகாமல் இருக்கிறது.

மறுநாள் அந்த வெண்ணெயை பக்தர்களுக்கு வழங்க, அவர்கள் வீட்டில் விளக்கேற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கபட்டிருக்கும்.
அமைவிடம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருநெய்வணை திருத்தலம்.
- தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக குறிப்பிடப்படுபவள் துர்க்கை அம்மன்.
- வன துர்க்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்திலும் பிரசித்தம்.
தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக புராணங்களில் குறிப்பிடப்படுபவள், துர்க்கை அம்மன். இந்த அன்னையை ஒன்பது வகை துர்க்கையாக பிரித்து வழிபடுபவர்களும் இருக்கிறார்கள்.
வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, லவண துர்க்கை, தீப துர்க்கை, ஆசுரி துர்க்கை ஆகியோரே, 'நவ துர்க்கை' என்று அழைக்கப்படுகின்றனர்.

வன துர்க்கை:
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் 'கொற்றவை' என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள் வனதுர்க்கை. அகத்திய முனிவரும், ராவணனும் இந்த தேவியை வழிபட்டதாக கூறப்படுகிறது.
ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக, அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்க்கையை வழிபட்டதாகவும் சொல்கிறார்கள்.
வன துர்க்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்திலும் பிரசித்தம். லலிதா சகஸ்ரநாமத்தில் 'மகாவித்யா' என்ற வரி வரும். அது வன துர்க்கையை குறிப்பிடுவதே ஆகும்.
தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கதிராமங்கலம், மயிலாடு துறைக்கு அருகில் உள்ள தருமபுரம் என அபூர்வமாகவே வன துர்க்கை கோவில்கள் காணப்படுகின்றன.

சூலினி துர்க்கை:
துர்க்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். சரபேஸ்வரரின் இறக்கை ஒன்றில் இவள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. சிவனின், உக்ரவடிவ தேவி இவள். திருவாரூர் மாவட்டம் பேரளம் எனும் ஊருக்கு அருகில் உள்ளது, அம்பர் மாகாளம் எனும் பாடல் பெற்ற தலம்.
இங்கே மாகாளி அன்னை, சூலினி துர்க்கையாக காட்சி தருகிறாள். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை மற்றும் ஆடைகளை அணிவிக்கிறார்கள்.

ஜாதவேதோ துர்க்கை:
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவையே முருகனாக மாறின. நெற்றிக் கண்ணில் உருவான தீப்பொறிகளை ஏற்றுக் கொண்டு கங்கை நதியில் சேர்த்ததால் இந்த துர்க்கைக்கு 'ஜாதவேதோ துர்க்கை' என்று பெயர்.
யஜுர் வேதத்தில், துர்க்கா ஸுக்தம் என்ற பகுதி உண்டு. மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸுக்தம் ஜாத வேதஸே என்றே தொடங்குகிறது.

சாந்தி துர்க்கை:
இறை வழிபாட்டால் விளையும் பயன்களில் மிகவும் சிறந்தது உள்ளத்துக்கு கிடைக்கும் அமைதியே ஆகும். 'ஓம் சாந்தி.. சாந்தி..' என்றே வேதங்களும் பிரார்த்திக்கின்றன. தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவச் வழிசெய்பவள் சாந்தி துர்க்கை என்று அழைக்கப்படுகிறாள்.

சபரி துர்க்கை:
ஒரு சமயம் சிவபெருமான் வேடுவன் உருவத்தைத் தாங்கியபோது, பார்வதி தேவி வேடுவப் பெண்ணாக வடிவம் கொண்டு அவருடன் வந்தாள். வேடுவச்சி உருவம் எடுத்த துர்க்கையையே, 'சபரி துர்க்கை' என்று அழைக்கிறார்கள்.

ஜ்வாலா துர்க்கை:
அன்னை ஆதிபராசக்தி பண்டாசுரன் என்ற அசுரனுடன் கடும்போர் புரிந்தபோது, மற்ற எதிரிகள் பார்வதி தேவிக்கு அருகில் வராமல் தடுப்பதற்காகத் துர்க்கை தேவி அக்னி ஜ்வாலையுடன் கூடிய மிகப்பெரிய நெருப்பு வட்டத்தை அமைத்தாள். இந்த செயலை செய்த துர்க்கை தேவியே, 'ஜ்வாலா துர்க்கை' எனப்படுகிறாள்.

லவண துர்க்கை:
ராமாயண காலத்தில் லவணாசுரன் என்றொரு அரசன் இருந்தான். அந்த அசுரனை அழிக்க புறப்பட்ட லட்சுமணன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு வழிபட்ட துர்க்கையே 'லவண துர்க்கை' ஆவாள். லவணாசுரன் அழிவதற்குக் காரணமாக இருந்ததால், இவள் லவண துர்க்கை எனப்பட்டாள்.

தீப துர்க்கை:
தீபமாகிய விளக்கு புற இருளை அகற்றி ஒளி வழங்குகிறது. பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்னும் அக இருளை நீக்கி மெய் ஞானமான ஒளியை வழங்கும் தீபலட்சுமியே 'தீப துர்க்கை' என்று போற்றப்படுகிறாள்.

ஆசுரி துர்க்கை:
பக்தர்களிடம் உள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்துக்கு அழைத்துச் செல்பவள், ஆசுரி துர்க்கை ஆவாள்.
- படை வீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.
- இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் அபிஷேகம் அலங்காரம் வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-8 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: அஷ்டமி காலை 7.06 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: பூசம் நண்பகல் 1 மணி வரை. பிறகு ஆயில்யம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் அபிஷேகம் அலங்காரம் வழிபாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை தலங்களில் திருவீதி உலா. சோளிங்கபுரம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் ஸ்ரீபக்தோசிதப் பெருமாள் திருக்கல்யாணம். கரூர் தோன்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. படை வீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-நலம்
மிதுனம்-லாபம்
கடகம்-பரிவு
சிம்மம்-நன்மை
கன்னி-திடம்
துலாம்- தனம்
விருச்சிகம்-பணிவு
தனுசு- ஆக்கம்
மகரம்-நற்செயல்
கும்பம்-அமைதி
மீனம்-சாதனை
- மாசி மாத பிரதமை உத்தமமானது.
- அமாவாசை, பவுர்ணமி, அடுத்து வரும் நாள் பிரதமை.
அமாவாசை, பவுர்ணமி, அடுத்த நாள் பிரதமை. சித்திரை கார்த்திகை மாத விரதங்கள் விசேஷமானவை. இந்த விரதத்தில் நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.
வலக்கையில் ஜபமாலை, கரண்டி, இடக்கையில் கமண்டலம், உத்தரிணி கொண்டு ஜபம் இருக்க வேண்டும். அன்றைய தினம் விரதமிருந்து பகவானுக்குப் பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும்.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் இரவு பொழுது மட்டும் உணவு அருந்தி விரதமிருக்கலாம். அல்லது நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.
இந்த விரதம் இருப்பதன் மூலம் செழிப்பான வாழ்வு, மரணத்துக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும். மாசி மாத பிரதமை உத்தமமானது. அன்றைய தினம் விரதமிருந்து அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்க வேண்டும்.
பிரதமை திதியை பாட்டிமை என்றும் சொல்வார்கள். பவுர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள்.
பவுர்ணமி முழு மதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன்றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தாலும், பவுர்ணமியாக இருந்தாலும் அடுத்த நாள் பிரதமை திதி.
பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை ஒவ்வொரு கிராமத்திலும் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக அழைப்பார்கள்.
கதிர்வீச்சுக் குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார்கள். இருந்தாலும் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமானது. அன்றைய தினம் எதையும் செய்யக் கூடாது என்பார்கள்.
போர் தொடுத்தல், ஆநிரை கவர்தல் போன்றவை செய்யலாம் என்று கூறுவார்கள். போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம்.
சூரியனும், சந்திரனும் இணைவது அமாவாசை அன்று. இரண்டுமே இயல்பு நிலை மாறுபட்டவை. அவைகள் ஒன்றாக சேரும்போது சீக்கிரமாகவே ஆவி பிரியும்.
அதனால்தான் கிராமங்களில், அமாவாசை, அதற்கு முதல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
அதற்கு காரணம், ஆத்ம காரகன் சூரியனுடன், மனோகாரகன், உடலுக்கான சந்திரன் நெருங்கும்போது உடலின் வலிமை, உணவு உட்கொள்ளும் திறன் குறையும். ஏதோ ஒரு அசவுகரியம் உண்டாகும். திடீர் மாரடைப்பு எல்லாம் உண்டாகும்.
அதனால்தான் உடல்நலம் குன்றி இருப்பவர்கள் பற்றி பேசும்போது, அமாவாசையை தாண்டுமா என்று சொல்கிறார்கள்.
பிரதமை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.
அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் முதலாவது திதி பிரதமை ஆகும். பிரதம எனும் வடமொழிச் சொல் முதலாவது என பொருள்படும்.
15 நாட்களைக் கொண்ட தொகுதியில் முதல் நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள காலம் சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் முதல் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள காலம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் முதல் நாளுமாக இரண்டு முறை பிரதமைத் திதி வரும்.
அமாவாசையை அடுத்துவரும் பிரதமையைச் சுக்கில பட்சப் பிரதமை என்றும், பூரணையை அடுத்த பிரதமையைக் கிருஷ்ண பட்சப் பிரதமை என்றும் அழைக்கின்றனர்.
பிரதமைத் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:
சந்திர ஆண்டுப் பிறப்பு (சந்திரமான யுகாதி) - சித்திரை மாதச் சுக்கில பட்சப் பிரதமை.
சக்திக்குரிய பூஜையாகிய நவராத்திரி பூஜைத் தொடக்கம் - ஐப்பசி மாத சுக்கில பட்சப் பிரதமைத் திதி.
விநாயகருக்கான கார்த்திகைச் சஷ்டி விரதத் தொடக்கம் - கார்த்திகை மாதத் தேய்பிறைப் பிரதமைத் திதி.
- தசமி திதி 'தசஹர தசமி' என்றும் ‘பாவ ஹர தசமி' என்றும் கூறப்படுகிறது.
- தசமி அன்று சேதுவில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது விதியாகும்.
வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் தசமி திதி 'தசஹர தசமி' என்றும் 'பாவ ஹர தசமி' என்றும் கூறப்படுகிறது.
இந்நாளில்தான் 'இலங்கை வேந்தன் ராவணனைக் கொன்ற பாவம் நீங்க ஸ்ரீராமபிரான் மணலில் லிங்கப் பிரதிஷ்டை செய்து, சேதுக் கரையில் வழிபட்டார் என்று ஸ்ரீஸ்காந்தம் என்னும் நூல் கூறுகிறது.
மேலும், வைகாசி சுக்ல பட்ச தசமி திதியானது பத்து வித பாவங்களை போக்கும் என்று பழம் நூல்கள் கூறுகின்றன.
அந்நாளில் சேது என்று போற்றப்படும் ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தத்திலும் கோவிலுக்குள் இருக்கும் புனிதநீர் நிலைகளிலுமே நீராடினால் பாவங்கள் நீங்கி அளவற்ற புனிதம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.

வாக்கினால் செய்வது நான்கு. சரீரத்தால் செய்வது மூன்று, மனத்தால் இழைப்பது மூன்று. ஆக, இந்த பத்து பாவங்களும் தெரிந்தோ, தெரியாமலோ செய்தால் இவைகளைப் போக்கிக் கொள்ள இந்த பாவஹர தசமி உதவுகிறது.
கடுஞ்சொல், உண்மையில்லாத பேச்சு, அவதூறாகப் பேசுவது, அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாக பேசுவது.
நமக்குக் கொடுக்கப்படாத பொருட்களை நாம் எடுத்துக் கொள்வது, அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது, பிறர் மனைவிக்கு ஆசைப்படுவது.
மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது, மனதில் கெட்ட எண்ணங்களை நினைத்தல், பிறபொருட்களிடமும், மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்ளுதல்.
இந்த பத்து பாவங்களும் குறிப்பிட்ட புண்ணிய காலமான வைகாசி அமாவாசைக்குப்பின் வரும் தசமி அன்று சேதுவில் நீராடினால் நீங்கும் என்பது விதியாகும்.
ராமேஸ்வரம் செல்வது என்பது எல்லோராலும் முடியாத காரியம். எனவே அந்தப் புண்ணிய காலத்தில் நீங்கள் வசிக்கும் ஊரின் அருகாமையில் உள்ள புனித நதியிலோ, ஆற்றிலோ குளத்திலோ நீராடலாம்.
நதியிலும், ஆற்றிலும் நீர் இல்லாது போனாலும் சிவபெருமானையும் திருமாலையும் மனதில் நினைத்து 'இனிமேல் பாவங்கள் செய்ய மாட்டேன்' என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு, வடக்கு நோக்கி வீட்டில் குளித்தாலும் பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
இந்த புண்ணிய நாளில் தான் கங்கா தேவி தேவலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள் என்று புராணம் கூறுகிறது. அன்று கங்கா தேவியை நினைத்து நீராடினாலும் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

'வைகாசி அமாவாசைக்குப் பின், பிரதமையிலிருந்து தசமி வரை கங்கை நதியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்' என்று கந்த புராணம் கூறுகிறது.
இந்நாளில் முன்னோர்களுக்குப் பிதுர் பூஜை செய்வது போற்றப்படுகிறது. ஏழைகளுக்கு வஸ்திர தானம், அன்னதானம் செய்தால் கூடுதல் புனிதம் கிட்டுவதுடன் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.






