என் மலர்
ஆன்மிகம்
- மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பானதாக கருதப்படுகிறது நரசிம்ம அவதாரமாகும்.
- மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தை சப்த ரிஷிகள் தரிசிக்க விரும்பினர்.
ஒருவர் வாழ்வில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும், அவையனைத்தும் நரசிம்மரிடம் முறையிடுங்கள்.. அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும்..
ஏனென்றால், நரசிம்மரிடம் நாளை என்பதே கிடையாது. எதுவாயினும் உடனடியாக அந்த நொடியிலேயே தீர்த்து வைப்பவராக இருப்பதால்தான், நரசிம்மர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்..
அப்படிப்பட்ட சக்திவாய்ந்த சோளிங்க நரசிம்ம பெருமான் கார்த்திகையில் கண் திறப்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்..!
உலகை ஆளும் தெய்வசக்தியின் ஒன்றே மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பானதாக கருதப்படுகிற நரசிம்ம அவதாரமாகும்.
சிறுவனாகிய பக்தன் பிரகலாதன், எந்த நேரம், எங்கே இருப்பதாக தன்னை கூறுவானோ என்று கருதி, அவனருகிலேயே நரசிம்மர் உடனிருந்ததாக கூறுவர்.
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் எனது ஹரி என்று பிரகலாதன் கூறுகையில், எந்த இடத்தை கை காட்டுவானோ என்று நரசிம்மர் தயாராக இருந்தாராம்.
அதையடுத்தே கண நேரத்தில் வெளிப்பட்ட நரசிம்மர், இரணியனை வதம் செய் என பிரகலாதனுக்கு அருள்புரிந்தார். இந்நிலையில், பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தை சப்த ரிஷிகள் தரிசிக்க விரும்பினர்.
அதற்காக, சப்த ரிஷிகள் செய்த கடும் தவத்தை கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக ஒரு நாழிகைக்குள் காட்சியளித்தார்.
சப்த ரிஷிகள் தங்களுக்கு கிடைத்த நரசிம்மரின் தரிசனம், பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நரசிம்மரிடம் கோரிக்கை விடுத்தனர்.
சப்த ரிஷிகள் வேண்டியதன்பேரில், அவர்களுக்கு காட்சியளித்தது போன்றே பொதுமக்களுக்கும் தரிசனமளிப்பதாக நரசிம்மர் தெரிவித்தார்.
ஆண்டு முழுவதும் கண் மூடி தியானத்தில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்புரிவதாக கூறினார்.
அதன்படி, கார்த்திகை மாதம் நரசிம்ம பெருமாள் கண் திறந்து தரிசனம் தருகிறார். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சோளிங்கருக்கு வருகை தந்து நரசிம்மரை தரிசித்து செல்கின்றனர்.
- மச்சமுனிக்கு மீண்டும் வடை தின்னும் ஆசை தோன்றிவிட்டது.
- சீடன் கோரக்கரிடம் எனக்கு மேலும் வடை வேண்டும் என கேட்டார்.
கோரக்கர், மச்சமுனியின் சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். குரு சேவையே தன் வாழ்வாக கொண்டார். குருபக்திக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார். ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிச்சை கேட்க சென்றபோது, ஒரு பெண் நெய்யில் பொரித்த வடையை பிச்சையாக இட்டாள்.
அந்த வடையை கோரக்கர் மச்சமுனியிடம் கொடுக்கவே, அவரோ, அதனை உண்டு விட்டு வடையின் ருசியில் மயங்கி விட்டார். மச்சமுனிக்கு மீண்டும் வடை தின்னும் ஆசை தோன்றிவிட்டது. எனவே, சீடன் கோரக்கரிடம் எனக்கு மேலும் வடை வேண்டும் என கேட்டார். குருவே வடை கேட்டுவிட்டாரே.. என்பதற்காக கோரக்கரோ உடனடியாக அந்த பெண்ணிடம் சென்று எனக்கு இன்னும் வடை வேண்டும் என்றார். அந்த பெண்ணோ வடை அனைத்தும் தீர்ந்து விட்டது என்றாள்.
இது எனது குருவின் விருப்பம். 'உயிரை தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்' சுட்டுத்தாருங்கள் தாயே என்றார் கோரக்கர். 'இயலாதப்பா...! எனக்கு முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில் பட்டு விட்டது. நல்ல வேளையாக தப்பித்தேன். இனி ஒருமுறை வடை பொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ உன் கண்களை பிடுங்கியா தருவாய் என கேட்டாள், அந்த பெண்.
அதற்கென்ன தந்தால் போச்சு என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்த பெண்மணி செய்வதறியாது திகைத்தாள். அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட வடை பொரித்து தந்தாள்.
கோரக்கரும், முகத்தை மூடியபடியே வந்து வடையை மச்சமுனியிடம் கொடுத்தார். மச்சமுனியோ வடையை உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மூடியதன் காரணம் அறிய, கோரக்கா.. நான் கேட்ட வடைக்காக உன் கண்களையா தந்தாய் என்று கேட்டு, கோரக்கரை ஆரத்தழுவினார். பின், தனது மகிமையால் மீண்டும் கோரக்கருக்கு கண்களை வரவழைத்து கொடுத்தார்.
- சிவபெருமானின் தீவிர பக்தரான சுந்தரர், திருவாரூரில் இருந்து ஒவ்வொரு ஊராக சென்று கோவில்களில் பாடி வந்தார்.
- கிராம கோவில்களை போலவே இங்கும் குதிரை சுதை சிற்பங்கள் உள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் அமைந்துள்ளது வேடப்பர் திருக்கோவில். முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் முருகப்பெருமான், வேடப்பர் என்ற திருநாமத்துடன் வள்ளி - தெய்வானை சமேதராக அருள்பாலிக்கிறார்.
சிவபெருமானின் தீவிர பக்தரான சுந்தரர், திருவாரூரில் இருந்து ஒவ்வொரு ஊராக சென்று கோவில்களில் பாடி வந்தார். அதன்படி விருத்தாசலம் வந்த சுந்தரர், விருத்தகிரீஸ்வரர் (பழமலைநாதர்) கோவிலுக்கு செல்லவில்லை. அது மிகவும் பழமைவாய்ந்த கோவில். எனவே அங்கு சென்றால் தனக்குரிய பலன் கிடைக்காமல் போகலாம் என்று எண்ணி, அந்த கோவிலை தவிர்த்தார்.

கோவில் தோற்றம்
இதையடுத்து பழமலைநாதர், தன்னை பாடாமல் சென்ற சுந்தரரை எப்படியாவது பாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே, தன்னை வணங்காமல் சுந்தரர் இந்த ஊரை விட்டு வெளியேறுவதை தடுக்குமாறு, தன் மைந்தனான முருகப்பெருமானுக்கு உத்தரவிட்டார். அதன்படி முருகப்பெருமான், மேற்கில் கொளஞ்சியப்பராகவும், தெற்கே பெண்ணாடம் சாலையில் வேடப்பராகவும், வடக்கே கண்டியங்குப்பத்தில் வெண்ணுமலையப்பராகவும், கிழக்கே கோமாவிடந்தலில் கரும்பாயிரம் கொண்டவராகவும் நான்கு புறமும் சுந்தரரை மடக்கினார். பின்பு அவரிடம் இருந்த பொன், பொருளை பறிமுதல் செய்து, அவரை பழமலைநாதரிடம் ஒப்படைத்து பாட வைத்ததாக தல வரலாறு கூறுகிறது.
முருகப்பெருமான், பெண்ணாடம் சாலையில் வேட்டைக்காரனாக (கொள்ளைக்காரன்) மாறுவேடமிட்டு வந்ததால், இத்தல இறைவன் 'வேடப்பர்' என்று அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் கல்வெட்டுகள் எதுவும் இல்லாததால், கோவில் கட்டுமான காலத்தை கண்டறியமுடியவில்லை. கோவிலில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. பிரகாரத்தில் கிராம தெய்வங்களான முனீஸ்வரர் மற்றும் கருப்பசாமி ஆகியோர் காணப்படுகிறார்கள். கிராம கோவில்களை போலவே இங்கும் குதிரை சுதை சிற்பங்கள் உள்ளன. கருவறையை நோக்கி முருகனின் வாகனமான மயிலும், உயர்ந்த பீடத்தில் பலிபீடமும் காணப்படுகின்றன. கோவில் தல விருட்சமாக உகா மரமும், தீர்த்தமாக மணிமுத்தாறு ஆறும் உள்ளன.
கொளஞ்சியப்பர் கோவிலை போல, இக்கோவிலிலும் பிராது கட்டும் வழக்கம் உள்ளது. கோவில், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். விருத்தாசலத்தில் இருந்து பெண்ணாடம் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவார் மணிகண்ட சுவாமி!
- எல்லா செயல்களிலும் துணைநின்று காத்தருளுவார் ஐயப்ப சுவாமி.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவார் மணிகண்ட சுவாமி!
ஐயப்ப வழிபாடு மிக எளிமையானது. இந்த வழிபாட்டுக்குத் தேவை ஒழுக்கம். ஒழுக்கத்துடன் இருந்துவிட்டால் மனதில் அமைதி வந்துவிடும். மனதில் அமைதி குடிகொண்டுவிட்டால், ஆரவாரத்துக்கோ, கர்வத்துக்கோ இடமிருக்காது. கர்வமில்லாதபோது, பக்தி வந்துவிடும். பக்தியின் உச்சபட்ச நிலை என்பதுதான் சரணாகதி. 'உன்னைத் தவிர எனக்கு எவருமில்லை. நீயே எனக்கு கதி' என்று முழுவதும் ஒப்படைத்துவிட்டு செயல்படுகிற புத்தி வந்துவிடும்.
'எனக்கு எப்போ என்ன தரணும்னு அவனுக்குத் தெரியும்யா. அவன் பாத்துக்குவான்' என்று நாம்பாட்டுக்கு நம்முடைய வேலையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருக்கிற மனோநிலை வந்துவிடும்.
''ஐயப்ப விரதத்தின் நோக்கமும் பூஜையின் தாத்பரியமும் அப்படியான சாத்வீக மனநிலைக்கு நம்மை மெல்ல மெல்ல தயார்படுத்துகிற முயற்சிதான்'' என்கிறார்கள்.
ஐயன் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று கொண்டாடுகிறது புராணம்.
தர்ம சாஸ்தா காயத்ரீ:
ஓம் பூதாதி பாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
எனும் தர்மசாஸ்தாவின் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வந்தால், மனோபலம் பெருகும். மனதில் இதுவரை இருந்த தேவையற்ற குழப்பங்களும் கவலைகளும் பறந்தோடும் என்பது உறுதி.
இதேபோல், ஸ்ரீஐயன் ஐயப்ப சுவாமியின் மகா மந்திரம் வலிமை மிக்கது.
பூதநாத ஸதானந்தா
சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
என்கிற ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். குறிப்பாக, புதன்கிழமைகளில் இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும். எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயம் தரும். எல்லா செயல்களிலும் துணைநின்று காத்தருளுவார் ஐயப்ப சுவாமி.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி. அருளும் பொருளும் அள்ளித்தருவார் ஐயப்ப சுவாமி.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-5 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை பிற்பகல் 2.37 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம் : அனுஷம் பிற்பகல் 2.26 மணி வரை பிறகு கேட்டை.
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை
ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கோடி கன்னிகாதானம் தாத்தாசாரியார் திருநட்சத்திர வைபவம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.
லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மனுக்கு அபிஷேகம். திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-சிறப்பு
மிதுனம்-வரவு
கடகம்-உயர்வு
சிம்மம்-ஆதரவு
கன்னி-நன்மை
துலாம்- தெளிவு
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- பரிசு
மகரம்-புகழ்
கும்பம்-சாந்தம்
மீனம்-நன்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
ரிஷபம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்திகள் வந்து சேரும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில்கூட வெற்றி பெறுவீர்கள்.
கடகம்
தொய்வடைந்த தொழிலை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
கன்னி
குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். கூட்டுத் தொழிலில் இருந்த குழப்பங்கள் மாறும்.
துலாம்
முன்னேற்றம் கூடும் நாள். கேட்ட இடத்தில் சலுகைகள் கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
விருச்சிகம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டும்.
தனுசு
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கடன் சுமை குறையும்.
மகரம்
இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
நல்ல வாய்ப்புகள் நண்பர்கள் மூலம் வந்து சேரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய முயற்சி வெற்றி பெறும்.
மீனம்
யோகமான நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த நற்பலன் கிட்டும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் போதுமானதாக இருக்கும். திருமண முயற்சி கைகூடும்.
- வழிபாடு செய்வதற்கு உங்களிடம் ஐயப்பன் திருவுருவப்படம் இருந்தால் அதை வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள்.
- நாம் வீட்டிலிருந்தபடியே எளிமையான முறையில் அவரை இப்படி வணங்கி அவருடைய அருளை பெறலாம்.
கார்த்திகை மாதம் பல தெய்வ வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்பட்டாலும், கார்த்திகை என்றால் பெரிய அளவில் பேசப்படுவது சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது தான். அப்படியான ஐயப்பனை 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி அவருடைய தரிசனத்தை காணுவதே பெரும் பாக்கியம் என்று சொல்லலாம். இந்த ஐயப்பனை மட்டும் நாம் நினைத்த போதெல்லாம் தரிசனம் செய்ய முடியாது. அவரை தரிசனம் செய்வதற்கென கடுமையான விதிமுறைகளும் நேரமும் உண்டு.
இந்த இருமுடி வழிபாட்டை அனைவராலும் செய்ய முடியாது அல்லவா? ஆகையால் ஐயப்பனை வீட்டிலிருந்தபடியே கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை எப்படி வழிபட்டால் நம்முடைய வறுமை நிலை மாறி செல்வ நிலை எட்டலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த வழிபாட்டை கார்த்திகை மாதத்தின் கடைசி நாளில் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாடு செய்வதற்கான காலம் காலை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யலாம்.
இந்த வழிபாடு செய்வதற்கு உங்களிடம் ஐயப்பன் திருவுருவப்படம் இருந்தால் அதை வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள். படம் இல்லை என்றால் பரவாயில்லை தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தையே ஐயப்பனாக பாவித்து வணங்கலாம். அடுத்து ஒரு வாழை இலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முழுவதுமாக பச்சரிசியை மஞ்சள் கலந்து பரப்பி விடுங்கள். அடுத்து ஏழு மண் அகல் விளக்கை எடுத்து பஞ்சு திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு அடுத்து மூன்று சிறிய கிண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கிண்ணத்தில் நெய், மற்றொரு கிண்ணத்தில் மூன்று பழங்கள் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். அது உங்களுக்கு விருப்பமான எந்த பழங்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னொரு கிண்ணத்தில் நைவேத்தியமாக தேங்காய் சாதம் செய்து வைத்து விடுங்கள்.
இப்போது வாழை இலையில் பரப்பி வைத்திருக்கும் அரிசியை பூஜை அறையில் வைத்து அதை சுற்றி நைவேத்தியத்தை வைத்து விடுங்கள். அதன் பிறகு ஏழு அகல் விளக்கை பச்சரிசியை பார்த்தவாறு சுற்றி வைத்து ஏற்றுங்கள். இந்த விளக்குகளை ஏற்றிய பிறகு நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஐயப்பனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த நேரத்தில் சுவாமியே சரணம் ஐயப்பா என்று இந்த வார்த்தையை 108 முறை ஐயப்பனை நினைத்து சொல்லிய பிறகு தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை நிறைவு செய்த பிறகு நைவேத்தியமாக வைத்த பிரசாதத்தை 10 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு முதலில் கொடுங்கள். அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் நைவேத்தியங்களை உண்ணலாம்.
ஐயப்பனை நினைத்து செய்யப்படும் இந்த எளிய வழிபாடு நம்முடைய வாழ்க்கையை மாற்றக் கூடிய அற்புத சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஐயப்பனை காணவும் அவருடைய தரிசனத்தை பெறவும் கோடான கோடி மக்கள் அவரை நாடி சென்று கொண்டிருக்கிறார்கள். நாம் வீட்டிலிருந்தபடியே எளிமையான முறையில் அவரை இப்படி வணங்கி அவருடைய அருளை பெறலாம்.
- ஜோதி வடிவாக காட்சி அளித்த சிவபெருமானே மலையாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
- சிவமும் சக்தியும் ஒன்று என்ற உண்மையை பிருங்கி முனிவர் உணர்ந்தார்.
திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 233-வது தலமாகவும், அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகவும் இக்கோவில் உள்ளது.
ஒருமுறை படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு முடிவு காண, சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றி, எனது அடி அல்லது முடியை எவர் கண்டு வருகிறீர்களோ அவரே உயர்ந்தவர் எனக் கூறினார். இதையடுத்து, விஷ்ணு பகவான் வராக (பன்றி) அவதாரமெடுத்து சிவனின் பாதங்களைக்காண பூமிக்குள் சென்றார். ஆனால் அவரால் காணமுடியவில்லை. அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து, சிவபெருமானின் திருமுடியை கண்டு வர மேலே கிளம்பினார். அவராலும் திருமுடியைக் காண முடியவில்லை.
அப்பொழுது சிவபெருமான் தலையில் இருந்த தாழம்பூவானது கீழே விழுந்தது. அன்னப்பறவையாக மேலே சென்ற பிரம்மா தாழம்பூவிடம், ''நான் சிவபெருமானின் முடியை கண்டதாக கூறுவேன். நீ சாட்சியாக இரு" என்று கூறவே, தாழம்பூவும் சரி என்று ஒப்புக்கொண்டது. சொன்னது போல பிரம்மாவும் சிவபெருமானிடம் தான் முடியைக்கண்டதாக கூறவே, தாழம்பூவும், பிரம்மாவுக்கு சாட்சியாக இருந்தது.
பொய் கூறிய பிரம்மனுக்கு பூமியில் கோவில்கள் கிடையாது என்றும், தாழம்பூவை இனி தனது சிரசில் சூடமாட்டேன் என்று சிவபெருமான் இருவருக்கும் சாபமிட்டார். ஆகையால்தான் தாழம்பூவானது சிவபெருமானுக்கு அணிவதில்லை. சிவபெருமான் ஜோதி வடிவாக பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் காட்சிக்கொடுத்த இடம் திருவண்ணாமலை என்று கூறப்படுகிறது.
ஜோதி வடிவாக காட்சி அளித்த சிவபெருமானே மலையாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அந்த மலை தான் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.
சிறந்த சிவ பக்தரான பிருங்கி முனிவர், பார்வதி தேவியை வணங்காமல் சிவனை மட்டுமே வழிபட்டு வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அதன்படி பார்வதி தேவி, இத்தலத்தில் மீண்டும் சிவபெருமானுடன் இணைய வேண்டி தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவபெருமான், தனது இடது பாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்து, அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். சிவமும் சக்தியும் ஒன்று என்ற உண்மையை பிருங்கி முனிவர் உணர்ந்தார். இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் எடுத்த பெருமையை உடைய தலம் இது.
கோவில் அமைப்பு
இந்த ஆலயம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு மொத்தம் 9 பெரிய கோபுரங்களும், 140-க்கும் மேற்பட்ட சன்னிதிகளும் அமைந்துள்ளன. அதில் 22 விநாயகர் சன்னிதிகளும் அடங்கும். சிலைகள் என்று கணக்கிட்டால் ஆலயம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. 2-ம் பிரகாரத்தில் 63 நாயன்மார்களுக்கு கற்சிலைகளும், வெண்கல சிலைகளும் உள்ளன. இங்கு திரும்பும் திசையெல்லாம் லிங்கங்களை காணலாம்.
கோவிலின் கிழக்கு பகுதியில் 217 அடி உயரத்தில் ராஜகோபுரம் காணப்படுகிறது. மேற்கு பகுதியில் உள்ள கோபுரம் 'பேய்க் கோபுரம்' என்று அழைக்கப்படுகிறது. 'மேலக் கோபுரம்' என்பது 'மேக்கோபுரம்' என்றாகி, பின் நாளடைவில் பேய்க் கோபுரமாக மருவியது. தெற்குக் கோபுரம் 'திருமஞ்சன கோபுரம்' என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. வடக்குக் கோபுரம் 'அம்மணி அம்மன் கோபுரம்' என்றழைக்கப்படுகிறது. அம்மணி அம்மாள் என்ற பக்தை பல தடங்கல்களுக்கு மத்தியில் ஒவ்வொரு வீடாக சென்று பொருள் ஈட்டி வடக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தார். இதன் காரணமாகவே இவ்வம்மையார் பெயரில், அம்மணி அம்மன் கோபுரம் விளங்குகிறது.
பொதுவாக ஆலயங்களில் அம்பாள் சன்னிதி முன்பாக சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னிதியில் சிம்மத்திற்கு பதிலாக நந்தி உள்ளது. ஈசனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்த பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். அவளுக்கு பாதுகாப்பாக நந்தியும் வந்துவிட்டார். இதை பிரதிபலிக்கும் விதமாக உண்ணாமுலை அம்மன் சன்னிதி முன்பு நந்தி உள்ளது.
இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அபிதகுசாம்பாள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள். இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத்தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேளையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது.
இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் என கிட்டத்தட்ட 360 தீர்த்தங்கள் உள்ளன. பிரம்ம தீர்த்த கரையில் கால பைரவர் சன்னிதி உள்ளது. இவரது சிலையானது திருவாசியுடன் ஒரே கல்லில் சுமார் 6 அடி உயரத்துக்கு காணப்படுகிறது. இவர் எட்டு திருக்கரங்களுடன் ஆயுதம் ஏந்தியும், கபால மாலையுடனும் காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமி நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும் இவரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக கருதப்படுகிறது. எனவே இங்கு கிரிவலம் வருவது மிகவும் விசேஷமானது. கிரிவல பாதையின் தூரம் 14 கி.மீ. ஆகும். கிரிவல பாதையில் சன்னிதிகளும், மகான்களின் சமாதிகளும் காணப்படுகின்றன. மேலும், திருவண்ணாமலை மலையை சுற்றி இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் உள்ளன.
கார்த்திகை திருவிழா
திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழா வருகிற 21-11-2025 முதல் 7-12-2025 வரை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. 21-ந் தேதி முதல் நாள் துர்க்கை அம்மன் உற்சவத்துடன் விழா தொடங்குகிறது. 22-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், 23-ந் தேதி விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது. 24-ந் தேதி கோவில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினம், சம்பந்த விநாயகர் சன்னிதியில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. இறைவன் வெள்ளி வாகனத்திலும், சிம்ம வாகனத்திலும் பவனி வருவார்.
25-ந் தேதி தங்க சூரியபிரபையிலும், வெள்ளி இந்திர விமானத்திலும் உலா வருகிறார். 26-ந் தேதி வெள்ளி அன்ன வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 28-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 29-ந் தேதி வெள்ளி ரதத்திலும் பவனி வரும் காட்சி நடைபெறும். 30-ந் தேதி கோவிலில் மகா ரத உற்சவம் நடைபெறுகிறது. டிசம்பர் 1-ந் தேதி பிச்சாண்டவர் உற்சவமும், குதிரை வாகனத்தில் பவனியும் நடக்கிறது. 2-ந் தேதி கயிலாச வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும் உலா வருகிறார்.
3-ந் தேதி அதிகாலையில் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று, பின்பு அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து அம்மன், விநாயகர், முருகன் போன்ற பிற சன்னிதிகளில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.
4-ந் தேதி சந்திரசேகர் தெப்ப உற்சவமும், 5-ந் தேதி பராசக்தி தெப்ப உற்சவமும், 6-ந் தேதி சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இறுதி நாளான 7-ந் தேதி சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருவார்.
தினசரி பூஜை
காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. காலை 5.15 மணிக்கு கோ பூஜை, 5.30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜை, 6 மணிக்கு உஷாகால பூஜை, 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, 11 மணிக்கு உச்சிகால பூஜை முடிந்து, பகல் 12.30 மணிக்கு நடைசாற்றப்படுகிறது. கோவில் மீண்டும் மாலை 3.30 மணிக்கு திறக்கப்படும். 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 9 மணிக்கு அர்த்தஜாம பூஜை, 9.15 மணிக்கு பள்ளியறை பூஜை முடிந்து இரவு 9.30 மணிக்கு நடைசாற்றப்படுகிறது.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. கு
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-4 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை நண்பகல் 12.31 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : விசாகம் காலை 11.53 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீகுருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான், தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-மேன்மை
மிதுனம்-பொறுமை
கடகம்-வரவு
சிம்மம்-அமைதி
கன்னி-ஊக்கம்
துலாம்- ஆதாயம்
விருச்சிகம்-முயற்சி
தனுசு- மாற்றம்
மகரம்-ஆதாயம்
கும்பம்-நிறைவு
மீனம்-பயணம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.
மிதுனம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
கடகம்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வரன்கள் முடிவாகும்.
சிம்மம்
நட்பால் நன்மை ஏற்படும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.
கன்னி
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். மனதில் சந்தோஷம் குடிகொள்ளும்.
துலாம்
யோகமான நாள். கூட்டு முயற்சியில் லாபம் உண்டு. தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பயணத்தால் பலன் உண்டு. சுபகாரியப் பேச்சு முடிவாகும்.
தனுசு
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
மகரம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.
கும்பம்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.
மீனம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த முயற்சிக்கு ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் பலன் உண்டு. தொழில் சீராக நடைபெறும்.
- விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் முறை ‘காணாதிபத்தியம்’ என அழைக்கப்படுகிறது.
- காவிரி நதிக்காக மனம் இரங்கிய விநாயகப்பெருமானும் காக்கை உருவம் கொண்டு கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட்டார்.
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர். இவரை பிள்ளையார், கணபதி, கணேஷா, விநாயகர் என பல்வேறு பெயர்களில் வழிபடுகிறார்கள். விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்ல நேபாள நாட்டிலும் பரவலாக காணப்படுகிறது. விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் முறை 'காணாதிபத்தியம்' என அழைக்கப்படுகிறது.
காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. வைணவர்கள், விநாயகரை 'தும்பிக்கை ஆழ்வார்' என்று அழைப்பார்கள். இவர் கணங்களின் அதிபதி என்பதால் 'கணபதி' என்றும், யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் 'யானைமுகன்' என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்து புராணங்களில் சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும், முருக கடவுளின் அண்ணனாகவும் விநாயகர் வணங்கப்படுகிறார். விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. கணேச புராணம் கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய 4 யுகங்களிலும் 4 அவதாரங்களாக கணபதி அவதரிப்பதாக கூறுகிறது. விநாயகப் பெருமானின் புராணத்துடன் காவிரி டெல்டா பகுதிக்கும் தொடர்பு உள்ளது. காவிரி டெல்டா முழுவதும் பல்வேறு பெயர்களுடன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் விநாயகரை தரிசிக்க முடியும். அந்த வகையில் பிரசித்திப்பெற்ற தலம் கணபதியின் பெயராலேயே அமைந்த கணபதி அக்ரஹாரம் ஆகும். இங்கு மகா கணபதியாக விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த தலம் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ளது.
ஒரு காலத்தில் பஞ்சம் நீங்குவதற்காக இத்தலத்தில் கவுதம மகரிஷி பூஜித்ததாகவும், அதனால் பஞ்சம் நீங்கிய காரணத்தால் இந்த இடம் 'அண்ணகோஷஸ்தலம்' என்று அழைக்கப்பட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. ஒரு சமயம் அகத்திய முனிவரின் தவத்துக்கு, காவிரி ஆற்றின் 'சல சல' என்ற ஆரவார நீரோட்ட சத்தம் இடையூறாக இருந்து, அவரை கோபம் அடைய செய்தது. இதனால் அகத்திய முனிவர், தனது தவ வலிமையால் காவிரியை தனது கமண்டலத்தில் அடக்கிவிட்டார். இதனால் சோழ தேசமானது வளம் குன்றி, பசி, பஞ்சம் ஏற்பட்டு தேவபூஜைகள் நின்று விட, தேவர்கள் எல்லாம் விநாயகப் பெருமானிடம் முறையிட்டனர்.
காவிரி நதிக்காக மனம் இரங்கிய விநாயகப்பெருமானும் காக்கை உருவம் கொண்டு கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட்டார். இதனால் காவிரி ஆறு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி, சோழ வளநாடு விநாயகப் பெருமானால் மீண்டும் வளம் பெற்றது. கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை அகத்திய மாமுனி பின்தொடர்ந்து சென்றபோது இந்த இடத்தில் (கணபதி அக்ரஹாரம்) விநாயகப் பெருமானாக அவருக்கும், காவிரி தாய்க்கும் காட்சி அளித்ததாக தல வரலாறு கூறுகிறது.
இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து காத்தருள்கிறார் மகா கணபதி. இந்த கிராமத்தில் பல குடும்பங்களுக்கு இவர் குல தெய்வமாகவும் விளங்குகிறார். பொதுவாக, முருகனின் வாகனமாகத்தான் மயில் கருதப்படுகிறது. ஆனால் இங்கு கணபதிக்கும் மயில்தான் வாகனமாக திகழ்கிறது. ஆகவே இக்கோவில் மகாகணபதியை 'மயூரிவாகனன்' என்றும் அழைக்கிறார்கள்.
இவ்வூரில் விநாயக சதுர்த்தியை கொண்டாடுவது சற்று வினோதமான வழக்கமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று இந்த ஊர் மக்கள், களிமண்ணில் பிள்ளையார் செய்து, வீட்டில் வைத்து பூஜிப்பது கிடையாது. தங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டை போன்ற நைவேத்தியப் பொருட்களை எடுத்துக் கொண்டு அனைவருமே மகாகணபதி சன்னிதிக்கு வருகின்றனர். கோவிலில்தான் விநாயகர் சதுர்த்தி பூஜை, நைவேத்தியம் எல்லாம் செய்கின்றார்கள்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கணபதி அக்ரஹாரம். தஞ்சை - கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டைக்கு வந்து அங்கிருந்து காவிரி ஆற்றுப்பாலம் வழியாக சென்றால் 3 கி.மீ. தொலைவில் இக்கோவிலை அடையலாம், மகாகணபதியை கண்குளிர தரிசிக்கலாம்.
- நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.
- கொடி மரத்தின் முன்பாக கீழே விழுந்து வணங்க வேண்டும்.
கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபடும்போது, பல விதிமுறைகள் இருக்கின்றன. கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டது என்பதால் ஆகமவிதிப்படி கடைப்பிடிக்கப்படும் சில நியமங்களை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். அதன்படி,
* கோவிலுக்குச் செல்வதற்கு முன் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். உடல் தூய்மையுடன் மனத் தூய்மையும் அவசியம்.
* வெறுங்கையுடன் கோவிலுக்குச் செல்லாமல், பூக்கள், பழங்கள், தேங்காய் அல்லது அபிஷேகப் பொருட்கள் போன்றவற்றை இயன்ற அளவில் எடுத்துச் செல்வது நல்லது.
* கோவிலுக்குள் சென்றதும், முதலில் கோபுர தரிசனம் செய்த பிறகு விநாயகரை வணங்கி செல்ல வேண்டும்.
* கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிய பிறகே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
* சுவாமியை தரிசனம் செய்யும்போது, அந்த தெய்வத்துக்குரிய மந்திரம் அல்லது பாடல்களை பாடி வழிபாடு செய்வது நல்லது. பிறகு அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வணங்க வேண்டும். முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தை மூன்று முறையாவது வலம் வர வேண்டும். நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.
* திருநீற்றை இரு கைகளாலும் வாங்கி கீழே சிந்தாமல் பூச வேண்டும்.
* கோவில் பிரகாரத்தை வலம் வந்ததும், கொடி மரத்தின் முன்பாக கீழே விழுந்து வணங்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்து அல்லது மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்த பிறகே கோவிலில் இருந்து செல்ல வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, முழுமையான பக்தியுடனும், அமைதியான சிந்தனையுடனும் இறைவனை வழிபட்டால், இறையருளைப் பூரணமாகப் பெறலாம்.






