என் மலர்
ஆன்மிகம்
- நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.
- கொடி மரத்தின் முன்பாக கீழே விழுந்து வணங்க வேண்டும்.
கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபடும்போது, பல விதிமுறைகள் இருக்கின்றன. கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டது என்பதால் ஆகமவிதிப்படி கடைப்பிடிக்கப்படும் சில நியமங்களை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். அதன்படி,
* கோவிலுக்குச் செல்வதற்கு முன் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். உடல் தூய்மையுடன் மனத் தூய்மையும் அவசியம்.
* வெறுங்கையுடன் கோவிலுக்குச் செல்லாமல், பூக்கள், பழங்கள், தேங்காய் அல்லது அபிஷேகப் பொருட்கள் போன்றவற்றை இயன்ற அளவில் எடுத்துச் செல்வது நல்லது.
* கோவிலுக்குள் சென்றதும், முதலில் கோபுர தரிசனம் செய்த பிறகு விநாயகரை வணங்கி செல்ல வேண்டும்.
* கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிய பிறகே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
* சுவாமியை தரிசனம் செய்யும்போது, அந்த தெய்வத்துக்குரிய மந்திரம் அல்லது பாடல்களை பாடி வழிபாடு செய்வது நல்லது. பிறகு அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வணங்க வேண்டும். முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தை மூன்று முறையாவது வலம் வர வேண்டும். நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.
* திருநீற்றை இரு கைகளாலும் வாங்கி கீழே சிந்தாமல் பூச வேண்டும்.
* கோவில் பிரகாரத்தை வலம் வந்ததும், கொடி மரத்தின் முன்பாக கீழே விழுந்து வணங்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்து அல்லது மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்த பிறகே கோவிலில் இருந்து செல்ல வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, முழுமையான பக்தியுடனும், அமைதியான சிந்தனையுடனும் இறைவனை வழிபட்டால், இறையருளைப் பூரணமாகப் பெறலாம்.
- கடன் வழங்குவதற்கும், பெறுவதற்கும் ஒப்பந்தம் அவசியமாகும்.
- சாட்சிகள் இல்லாமல் கடன் கொடுக்கல், வாங்கல் நடைபெறக்கூடாது.
மனித வாழ்க்கையில் நன்மையான விஷயங்களில் ஒருவருக்கொருவர் கைகோர்ப்பது தார்மீகப்பலத்தை கூட்டும். ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும். இதைத்தான் திருக்குர்ஆன், நபிமொழிகள் பல இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
திருக்குர்ஆன் (5:2) கூறுகிறது: 'இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள், நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்'. மனித வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தை தக்க வைத்துள்ள கடன், வாழ்வின் ஒரு அங்கமாக உருமாறிப் பல கட்டங்களை கடந்து செல்கிறது. கடன் கொடுக்கல், வாங்கலின் சட்ட வரையறைகளை திருக்குர்ஆன், நபிமொழிகளின் ஒளியில் காண்போம்.
கடன் வழங்குவதற்கும், பெறுவதற்கும் ஒப்பந்தம் அவசியமாகும். இருவருக்கும் கடனுக்கானப் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று தவணைக்கான கால நேரங்கள் நிர்ணயம் செய்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதை, நியாயமானவரைக் கொண்டு எழுதிக்கொள்ளுதல் கட்டாயம்.
தவணை காலம் இருவருக்கும் ஒத்துப்போகும் வேளையில், கடன் பெறுகிறவர் தெளிவான முறையில் எழுத வேண்டும், (அல்லது) கூற வேண்டும். கடன்தொகை பெரிதோ-சிறிதோ, தவணை விஷயங்களில் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும். எந்த வகையிலும் இருவருக்கும் மனபேதங்கள் ஏற்படும் வகையில் வாசகங்கள் இடம் பெறக் கூடாது. எழுதுவதும், கூறுவதும் வாக்குமூலமாகும். அதில் கவனம் கொள்ளுதல் அவசியமாகும். கடன் வழங்குபவரை ஏமாற்றும் நோக்கத்தில் கடன் பெறுவது பெரும்பாவத்தின் வாயிலில் நம்மை நிறுத்திவிடும்.
சாட்சிகள் இல்லாமல் கடன் கொடுக்கல், வாங்கல் நடைபெறக்கூடாது. இதை திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. சாட்சியாளர்களின் நியமனத்தில் இருவருக்கும் தெளிவு வேண்டும். நியாயத்தின் நிழலில் நீதி வழங்கும் நீதிமான்களைத் தேர்வு செய்தல் வேண்டும். ஆண்களில் இரண்டு நபர்கள் நியமிக்கப்படுதல் கட்டாயம். அவ்வாறு இல்லாவிட்டால், ஆண் ஒருவரும், பெண்கள் இருவரும் இடம்பெற வேண்டும்.
கடன் வழங்கியவருக்கும், பெற்றவருக்கும் பிணக்கு ஏற்படுமாயின் சாட்சிக் கையொப்பமிட்டவர்கள் சாட்சிகூற மறுக்கக் கூடாது. நியாயத்தைக் கோடிட்டுக் காண்பிக்க வேண்டும். அதில், நீதி தவறும்போது அல்லாஹ்வின் பிடி கடுமையாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இக்கட்டான சூழ்நிலையில் பெற்றக் கடனை அதன் தவணைக்குள் செலுத்த வேண்டும். நிர்ப்பந்தமான சூழ்நிலையில் சரியான காரணம் தெரிவித்து கால நீட்டிப்பைப் கோரலாம். மன்னிப்பு இல்லா பாவங்களின் வரிசையில் கடன் இடம் பெறுவதால் கூடுதல் கவனம் செலுத்துவது கடமையாகும். கடனோடு மரணித்த ஒருவரின் ஜனாஸாவுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க மறுத்து விடுகின்றார்கள், உடனே அபூகதாதா (ரலி) பொறுப்பேற்றதும் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள் என்ற செய்தியை நபி மொழியில் காண முடிகின்றது. இதில் வாக்குறுதியை நிறைவேற்றுதல் அவசியமாகும்.
தவணைக்காலம் முடிந்த நிலையில் வழங்கிய கடனை வசூல் செய்வதில் கடுமை காட்டக்கூடாது. அவர்களின் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவகாசம் வழங்குவது நன்மை பயக்கும். மிகவும் ஏழ்மை நிலையைக் கண்டால் கடனை தள்ளுபடி செய்தல் சாலச் சிறந்தது என்பதை நபிமொழிகள் நமக்குக் போதிக்கின்றன.
"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு மனிதர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் மக்களிடம் கொடுக்கல்-வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும் போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்' என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது". (அறிவிப்பாளர்: ஹுதைபா (ரலி).
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு முடிந்தவரை கடன் என்ற அரக்கன் பிடியிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். கடனோடு மரணிப்பது சுவனத்தை விட்டு தூரமாக்கிவிடும். நாளை நம் சந்ததியினரைப் பாதித்து விடும். கடனில்லாத மரணத்தைச் சந்திக்கக் கடனில்லாமல் வாழப்பழகுவோம்.
"மூன்று குணங்களை விட்டு நீங்கியவராக யார் மரணிப்பாரோ அவர் கண்டிப்பாகச் சொர்க்கம் செல்வார். 1) பெருமை, 2) கடன், 3) மோசடி. (அறிவிப்பாளர்: சவ்பான் (ரலி), நூல்:திர்மிதி)
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது எப்பொழுதும் கடனிலிருந்து பாதுகாப்புத் தேடிக்கொண்டிருப்பார்கள். நாமும் அதுபோல கடன்களில் இருந்து ஏக இறைவனிடம் பாதுகாப்புத் தேடுவோம்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பணவரவு திருப்தி தரும் நாள். பாராட்டும், புகழும் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்திலுள்ள நெளிவு சுழிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள்.
ரிஷபம்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். நீங்கள் தேடிச்சென்று பார்க்க நினைத்த நண்பர்கள் ஒருவர் உங்களை தேடிவரலாம். உத்தியோக முயற்சி கைகூடும்.
மிதுனம்
யோகமான நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். வீடு, மனை வாங்க போட்ட திட்டங்கள் கைகூடலாம்.
கடகம்
உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிக்கும் நாள். உத்தியோக நலன் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
வருமானம் திருப்தி தரும் நாள். பயணங்கள் பலன் தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கன்னி
நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்துதவும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடு அகலும். வருமானம் திருப்தி தரும்.
துலாம்
பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்துகொள்வர்.
விருச்சிகம்
வளர்ச்சி கூடும் நாள். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். உத்தியோகத்தில் புதிய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
தனுசு
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய வாகனம் வாங்கும் யோகமுண்டு.
மகரம்
மனக்குழப்பம் அகலும் நாள். பொருளாதார விருத்தி ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கும்பம்
யோகமான நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.
மீனம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்பத்திலுள்ளவர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர்.
- ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நன்று.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-3 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி காலை 10.27 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : சுவாதி காலை 9.21 மணி வரை பிறகு விசாகம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ அமாவாசை ராமேசுவரம், திருவள்ளூர் கோவில்களில் தர்ப்பணம் செய்வது நன்று
இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். மது ராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம்.
திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், அன்னை ஸ்ரீ காந்திமதியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா. திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உததான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆசை
ரிஷபம்-பரிசு
மிதுனம்-வரவு
கடகம்-தாமதம்
சிம்மம்-நட்பு
கன்னி-தெளிவு
துலாம்- நற்சொல்
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- முயற்சி
மகரம்-சாந்தம்
கும்பம்-விவேகம்
மீனம்-பாசம்
- ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும் போது இல்லற துறவை மேற்கொள்கிறார்.
- பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலைமுறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
சாதாரண மனிதன் ஒருவன் அவன் செய்த கர்மவினையில் இருந்து மீள வேண்டுமானால், அவன் முதலில் அலைபாயும் நிலையில் இருந்து விடுபட வேண்டும்.
அதற்கு விரதம், அனுஷ்டானம், ஆச்சாரம், தர்மசிந்தனை, செயல்பாடுகள் வேண்டும். இவை இருந்தால் முக்தி கிடைக்கும். அது கிடைக்க ஒரே இறைவழிபாடு ஐயப்பனே.
ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும் போது இல்லற துறவை மேற்கொள்கிறார். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும்.
மாலை போட்ட பிறகு எல்லா ஐயப்ப மார்களும் ஒன்றே. அங்கே ஆத்மா ஒன்றே. வேறுபாடு கிடையாது. விருப்பு, வெறுப்பு கிடையாது.
ஐயப்பனுக்காக மாலை போட்டதும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். நான் எனது என்ற பற்று இங்கே அறுபடுகிறது. ஐயப்பனுக்கு விரதம் முக்கியம். 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு போக முடியாதவர்கள், 14 நாட்கள் விரதம் எடுத்து பக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி ஏற்று சென்று வணங்கி வரலாம்.
ஒருவன் பிரமச்சாரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும். அனைத்து தோஷங்களுக்கும், ராகு தோஷத்திற்கும் ஐயப்பன் தரிசனம் தான் பரிகாரமாகும்.
இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள். மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன் தான் ஐயப்பன்.
பிறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ, இறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ அப்படியே ஐயப்ப பக்தர்களிடம் உடையில் வேறுபாடு இல்லை. பாவத்தில், ரூபத்தில் வேறுபாடு இல்லாமல் வணங்கக் கூடிய ஒரே கடவுள் ஐயப்பன் தான்.
சபரிமலையில் உள்ள பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலைமுறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
அன்புடை யானை அரனைக்கூடல்
ஆலவாய் மேவியது என்கொல்என்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம்பெறப் போற்றி நலம் குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
இமையவர் ஏத்த இருப்பவர்தாமே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:- அனைத்து உயிர்களிடத்திலும் அன்புடையவனான சிவனை, கூடல் ஆலவாயில் எழுந்தருள என்ன காரணம் எனக் கேட்டு, பொன் போன்றவனாகவும், தலைவனாகவும் விளங்கும் திருநள்ளாற்று இறைவனை நயமாக போற்றி, செம்பொன் நிறைந்த மாட வீடுகளால் சூழப்பட்ட சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடுபவர்கள், தேவர்களெல்லாம் போற்றுமாறு திகழ்வர்.
- வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் சேவை.
- திருச்சானூர் பத்மாவதி தாயார் ரத உற்சவம்.
இந்த வார விசேஷங்கள்
18-ந் தேதி (செவ்வாய்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப் பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் சேவை.
* சமநோக்கு நாள்.
19-ந் தேதி (புதன்)
* அமாவாசை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
20-ந் தேதி (வியாழன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் பவனி.
* சமநோக்கு நாள்.
22-ந் தேதி (சனி)
* திருத்தணி கவுரி விரதம்.
* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
23-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந் தேதி (திங்கள்)
* திருச்சானூர் பத்மாவதி தாயார் ரத உற்சவம்.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் விழா தொடக்கம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
- குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மனுக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-2 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திரயோதசி காலை 8.31 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : சித்திரை காலை 6.59 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் அபிஷேகம்
இன்று மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம். குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மனுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-திடம்
மிதுனம்-வெற்றி
கடகம்-பக்தி
சிம்மம்-நன்மை
கன்னி-விருத்தி
துலாம்- செலவு
விருச்சிகம்-அமைதி
தனுசு- பண்பு
மகரம்-வரவு
கும்பம்-பெருமை
மீனம்-உயர்வு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோகமான நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷபம்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பக்கத்திலுள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உத்தியோக உயர்வு உண்டு.
மிதுனம்
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.
கடகம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் இடர்பாடுகள் ஏற்படும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.
சிம்மம்
நினைத்தது நிறைவேறும் நாள். தனவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கன்னி
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
துலாம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நாகரீகப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சிகம்
செல்வநிலை உயரும் நாள். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும்.
தனுசு
உள்ளம் மகிழும் நாள். உடன் இருப்பவர்களின் உதவி கிட்டும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
மகரம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அக்கம்பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கடன் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள்.
கும்பம்
வசதிகள் பெருகும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.
மீனம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு கூடலாம். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் வீண் பழிகள் வரலாம்.
- இரு சித்தர்களுமே சதுரகிரிக்கு சென்று வந்திருப்பதாக தகவல்கள் உள்ளது.
- அக்னி குண்டத்தில் போட்ட பொருட்கள் 2 பெண்களாக மாறி 2 முனிவர்களையும் சுற்றிச்சுற்றி வந்தது.
குப்பை மேட்டில் போட்ட விபூதியின் மகத்துவத்தால் 9 வயது நிறைந்த சிறுவனாக, அதுவும் தியானம் செய்த கோலத்தில் இருந்த சிறுவன் தான் 'கோரக்கர்'. கோரக்கர் மூலிகையால் பிறந்த இவரை தான் 'கோரக்க சித்தர்' என அழைப்பதாக பழமையான தமிழ் நூல் கூறுகிறது.
மேலும், தனது தாயே தன்னை குப்பை தொட்டியில் போட்டு விட்டதால், இத்தனை நாட்களில் அந்த குப்பை தொட்டியில் நாற்றத்தோடு கஷ்டப்பட்ட நான் இனி உன்னோடு இருக்க இஷ்டமில்லை. எனவே, இந்த சித்தருடன் என்னை அனுப்பிவிடு என்று கூறிய மகனின் பேச்சை கேட்டு அந்த சித்தருடன் கோரக்கரை அனுப்பி வைத்தார்.
நாலா திசைகளிலும் தன்னை மறந்து சென்ற கோரக்கர் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மனின் தொழிலை தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஆழ்ந்த சக்தியை பெறுவதற்காக பிரம்ம முனியுடன் இணைந்து யாகத்தை தொடங்கினார்.
இதனையடுத்து படைக்கும் தொழில் சித்தர்களின் கைக்கு போய்விட்டால், தமக்கு மதிப்பு இருக்காது என அஞ்சிய தேவர்கள் அக்னியையும், வருணனையும் அனுப்பி யாகத்தை அழிக்க வேலை செய்தனர். இதனை அடுத்து அக்னி குண்டத்தில் போட்ட பொருட்கள் 2 பெண்களாக மாறி 2 முனிவர்களையும் சுற்றிச்சுற்றி வந்தது. இருந்தாலும் பிரம்ம முனியும், கோரக்கரும் எங்கள் யாகத்தை அழிப்பதற்காக நீங்கள் பெண்களாக வந்தீர்களா? என்று கூறி நீரை தெளித்து அவர்களை செடிகளாக மாற்றி விட்டார்கள்.
அந்த செடிகள் தான் காயகல்ப செடிகள் என அழைக்கப்படுகிறது. மேலும், அதிகளவு கோபம் கொண்ட சித்தர்கள் தங்கள் பலத்தை இழந்த காரணத்தால் படைக்கும் தொழிலை செய்யக்கூடிய வித்தையை கற்றுக்கொள்ள முடியாமல் போனது. இதனை அடுத்து சிவபெருமானின் கட்டளைக்கு இணங்க காயகல்பத்தை கொண்டு உலக உயிர்கள் நோய்நொடி இல்லாமல் வாழ்வதற்கான மருந்தை தயாரிக்க கூடிய பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள்.
அந்த வகையில், இந்த இரு சித்தர்களுமே சதுரகிரிக்கு சென்று வந்திருப்பதாக தகவல்கள் உள்ளது. மேலும், சித்து வேலைகள் செய்து பல மக்களுக்கு வாழ்வளித்த கோரக்கர், பேரூரில் சித்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இவர் எழுதிய நூல்களில் மிக சிறப்பானதாக கோரக்கர் சந்திர ரேகை, கோரக்கர் நம நாச திறவுகோல், ரச மணிமேகலை போன்றவை முக்கியமான நூல்களாக கருதப்படுகிறது.
- கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகளை 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
- ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட அறைகள் ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவிலில் உள்ள ஆர்ஜித சேவைகளான சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
இந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை 20-ந்தேதி காலை 10 மணி வரை மின்னணு டிப் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யலாம். 20-ந் தேதி முதல் 22-ந் தேதி மதியம் 12 மணிக்கு முன் பணம் செலுத்தியவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகளை 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் மாலை 3 மணிக்கும் வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
பக்தர்கள் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் தொடங்கின.
- சபரிமலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிவது வழக்கம். 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு கார்த்திகை மாதம் இன்று பிறந்ததையொட்டி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இதற்காக, பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டார்கள்.

இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கின. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய நடை பந்தல், சிறிய நடை பந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.






