என் மலர்tooltip icon

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் 5.2.2026: இந்த ராசிக்காரர்களுக்கு வரவும், செலவும் சமமாகும்
    X

    இன்றைய ராசிபலன் 5.2.2026: இந்த ராசிக்காரர்களுக்கு வரவும், செலவும் சமமாகும்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கடன்கள் வசூலாகும்.

    ரிஷபம்

    பிரச்சனைகள் அகலும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மிதுனம்

    பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கடகம்

    வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். இடம் வாங்கும் யோகம் உண்டு.

    சிம்மம்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    கன்னி

    யோகமான நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.

    துலாம்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வீடு மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.

    விருச்சிகம்

    முன்னேற்றம் கூடும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

    தனுசு

    புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழில்ரீதியாக எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

    மகரம்

    வரவும், செலவும் சமமாகும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் உயரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

    கும்பம்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பயணங்களால் இடையூறுகள் ஏற்படும்.

    மீனம்

    உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். கல்யாண கனவுகள் நனவாகும்.

    Next Story
    ×