என் மலர்
ஆன்மிகம்
- சிவபெருமான் வேடனாக காட்சி தந்ததால், இத்தல இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுகிறார்.
- கோவிலில் தனித்தனி சன்னிதியில் அருகருகே மகாலட்சுமி தாயார் மற்றும் சரஸ்வதி தேவி உள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ளது, மிகவும் பழமை வாய்ந்த செண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீசுவரர் திருக்கோவில். தேவார வைப்புத் தலம், மகாலட்சுமி வழிபட்ட தலம், ராகு-கேது பரிகாரத் தலம், சிவன், அம்பாள், சண்முகர் ஆகிய மூவருக்கும் தனித் தனியாக கொடிமரம் அமைந்த தலம் என பல்வேறு சிறப்புகளை உடைய தலமாக இக்கோவில் விளங்குகிறது. இத்தலத்தின் இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்றும், இறைவி 'செண்பகாம்பிகை' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
தல வரலாறு
ஒரு சமயம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். பல தலங்களுக்கு சென்ற அர்ஜூனன், செண்பக காடு வழியாக வந்தபோது, வித்தியாசமான நிறத்தில் ஒரு பன்றி இருப்பதை கண்டான். அந்த பன்றியை வேட்டையாட எண்ணிய அர்ஜூனன், பன்றியின் மீது அம்பு எய்தான். அம்பு பாய்ந்த பன்றி, கீழே விழுந்து இறந்தது. அர்ஜூனன் அருகில் வந்து பார்த்தபோது, பன்றியின் உடலில் இரண்டு அம்புகள் இருந்தன.
அர்ஜூனன், 'இன்னொரு அம்பை யார் செலுத்தி இருப்பார்' என்று யோசித்தான். அந்த வேளையில் அங்கு வந்த வேடன் ஒருவன், "இந்த பன்றியை நான் தான் கொன்றேன். எனவே இது எனக்கு தான் சொந்தம்" என்றான். அர்ஜூனன், 'முதலில் அம்பு எய்தது நான் தான். என்னுடைய அம்புபட்டு தான் பன்றி வீழ்ந்தது. எனவே இந்த பன்றி எனக்கே சொந்தம்" என்றான். இதனால் கோபம் அடைந்த வேடன், தன்னுடைய அம்பை எடுத்து அர்ஜூனன் மீது குறிவைத்தான்.
உடனே சுதாரித்துக்கொண்ட அர்ஜூனன், வேகமாக வேடனின் தலையை குறி பார்த்து அம்பு எய்தான். அர்ஜூனன் எய்த அம்பு வேடனின் தலையில் பட்டு ரத்தம் வடிந்தது. அடுத்த நொடியே வேடன், சிவபெருமானாக தோன்றினார்.
இதையடுத்து அர்ஜூனன், 'தங்களையா நான் காயப்படுத்தினேன்' என்று கண்ணீருடன் வருந்தினான். சிவபெருமான், "கவலைப்படாதே அர்ஜூனா, நடப்பது அனைத்தும் ஒரு காரணத்திற்காக தான். அடுத்த பிறவியில் நீ கண்ணப்பனாக பிறந்து, என்னை வணங்கி புகழ் பெறுவாய்" என்று ஆசி வழங்கினார். சிவபெருமான் வேடனாக காட்சி தந்ததால், இத்தல இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு 'பார்த்த பிரகர லிங்கம்' என்ற பெயரும் உண்டு.
அடுத்த பிறவியில் அர்ஜூனன், கண்ணப்பன் எனும் வேடனாக பிறந்தான். மிகுந்த சிவ பக்தி கொண்டிருந்த கண்ணப்பன், சிவனுக்கு தன் கண்ணையே காணிக்கையாக கொடுத்து பரிகாரம் தேடிக்கொண்டான். மேலும் சிவன் அருளால் நாயனாராகவும் அந்தஸ்து பெற்றான். அர்ஜூனன் வழிபட்ட தலம் என்பதால் இங்கு கண்ணப்ப நாயனார் உற்சவராக இருக்கிறார்.
இக்கோவில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. காலப்போக்கில் இக்கோவில் முற்றிலும் அழிந்து, மூலவர் சிவலிங்கம் செண்பக மரங்களுக்கு இடையில் புதைந்து இருந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு ஒரு பசு தினமும் பால் சொரிந்து கொண்டிருந்துள்ளது. இதைப் பார்த்த ஊர் மக்கள், அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்தபோது, அங்கு சுயம்பு லிங்கம் இருந்துள்ளது. அந்த லிங்கத்தில் வெட்டு வடு இருந்ததால் இறைவன் 'திருவேட்டீசுவரர்' என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பின்பு இறைவனுக்கு கோவிலும் எழுப்பப்பட்டது.
கோவில் அமைப்பு
இந்த ஆலயம் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முக மண்டபத்தின் முன், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன. உள் பிரகாரத்தில் விநாயகர், வீரபத்திரர், பால முருகன், சமயக் குரவர்கள், சேக்கிழார் போன்றோர் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் விஸ்வநாதர், ராமலிங்கர், நவக்கிரகங்கள் காட்சி அளிக் கின்றன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

கோவில் தோற்றம் - சிவனை வழிபடும் மகாலட்சுமி
அம்பாள் செண்பகாம்பிகை தாயார், தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவர் சன்னிதி முன்பாக கொடிமரம் பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை இருக்கின்றன. மகாலட்சுமி, திருமாலை மணந்து கொள்வதற்காக இங்குள்ள சிவபெருமானை வணங்கியதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்குள்ள தூண் ஒன்றில் மகாலட்சுமி கைகளில் கலசத்தை வைத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தபடி காட்சி தருகிறார். மேலும் இங்குள்ள மண்டப தூண்களில் முனிவர்கள், ரிஷிகள் மற்றும் அனுமனின் பல்வேறு தோற்றத்தில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோவிலில் தனித்தனி சன்னிதியில் அருகருகே மகாலட்சுமி தாயார் மற்றும் சரஸ்வதி தேவி உள்ளனர். இங்குள்ள சரஸ்வதியிடம் வீணை கிடையாது. பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு ஒவ்வொரு சஷ்டியின் போதும் 6 மலர்கள், 6 நைவேத்தியங்கள், 6 வகையான பழங்கள் படைத்து பூஜை செய்யப்படுகிறது.
வழிபாடு
கோவிலில் தினமும் காலை பூஜையின்போது மூலவர் அருகில் ஸ்படிக லிங்கத்தையும், நவக்கிரகங்க ளுக்குரிய நவரத்தினத்தையும் வைக்கின்றனர். பின்பு, ஒவ்வொரு கிரகத்துக்குரிய தானியங்கள், மலர்களை கொண்டு பூஜை செய்யப்படுகிறது. சூரியனுக்கு வைத்த மலரை பிரகாரத்தில் காணப்படும் சூரியன் சிலை முன்பு வைத்து தீபாராதனை நடைபெறுகிறது. அதன்பின்பே மூலவருக்குரிய பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் 'ருத்ரதிரிசதி' எனப்படும் சிவபெரு மானுக்குரிய 300 திருநாமங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது. அவ்வேளையில் சிவபெருமானை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாக சிவன் கோவில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பள்ளியறை பூஜையின்போது சிவனின் பாதமே கொண்டு செல்லப்படும். ஆனால், இங்கு சிவபெரு மானே பள்ளியறைக்குள் செல்கிறார். இதற்காக அர்த்த மண்டபத்தில் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இங் குள்ள சிவபெருமானை இந்திரன் வழிபட்டதாக கூறப் படுகிறது. அதன் அடிப்படையில், புரட்டாசியில் இந்திர பூஜை நடைபெறுகிறது. அப்போது, சுவாமியின் சன்னிதி முழுவதும் காய்கறி, பழங்கள் மற்றும் இனிப்புகளால் அலங்கரிக்கப்படுகிறது.
ஆலயத்தில் சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், புரட்டாசி மகாளய அமாவாசை, மாசி மகத்தில் தீர்த்தவாரி, பங்குனி உத் திரம் போன்ற விழாக்கள் மிகவும் சிறப் பாக கொண்டாடப்படுகிறது. கோவில், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற் காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
சென்னை திருவல்லிக்கேணி தபால் நிலையம் பஸ் நிறுத்தத்திற்கு அருகிலேயே இக்கோவில் அமைந் துள்ளது. திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
- 15-21 நாட்களுக்கு ஒருமுறை கற்பூரத்தை மாற்றவும்.
- எரிவாயு அடுப்புக்கு அருகில் அல்லது சமையலறையின் ஒரு மூலையில் கற்பூரத் துண்டை வைக்கவும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர பல வழிகள் சொல்லப்படுகின்றன. வருமானம் பெருக, வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க, வேலை கிடைக்க, பல சுப பலன்கள் கிடைக்க சிறு விசயம் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள்.
வாஸ்து படி, கற்பூரம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இது எதிர்மறை சக்தியை எரித்து, நேர்மறை சக்தியைக் கொண்டு வந்து வீட்டில் லட்சுமி தேவியின் ஆசியை வழங்குகிறது. மேலும் பணம் உங்கள் வீட்டிற்குள் வந்து நிலைக்கவில்லை மற்றும் நீங்கள் நிதி சிக்கல்களை எதிர்கொண்டால் கற்பூரத்தை கொண்டு செய்ய வேண்டிய முறைகள் குறித்து பார்ப்போம்...
பூஜை அறையில் ஒரு துண்டு கற்பூரம்
பூஜை அறை ஒரு சக்தி நிறைந்த இடமாகும். இங்கு ஒரு சிறிய கற்பூரத்தை வைக்கவும் அல்லது தினமும் மாலையில் கற்பூரத்தை எரிக்கவும். இது எதிர்மறை சக்தியை நீக்கி வீடு முழுவதும் நேர்மறை ஆற்றலைப் பரப்புகிறது. பூஜை அறையில் கற்பூரத்தை வைத்திருப்பது தெய்வங்களை மகிழ்வித்து, வீட்டிற்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவருகிறது. தினமும் கற்பூரத்தை எரிப்பது வீட்டில் உள்ள காற்றை சுத்திகரிக்கிறது.
படுக்கையறையில் ஒரு துண்டு கற்பூரம்
கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்தால், படுக்கையறையின் தலைப்பகுதியிலோ அல்லது அலமாரியிலோ ஒரு சிறிய கற்பூரத்தை வைக்கவும். இது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. கற்பூரத்தின் வாசனை எதிர்மறையை நீக்கி, தம்பதியினரிடையே அன்பை அதிகரிக்கிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவருவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பெட்டியிலோ அல்லது அலமாரியிலோ கற்பூரம்
பெட்டியிலோ அல்லது அலமாரியின் கைப்பிடியின் உள்ளே அல்லது அதன் மீது ஒரு சிறிய கற்பூரத்தை வைக்கவும். கற்பூரம் செல்வத்தைப் பாதுகாக்கிறது மற்றும் தேவையற்ற செலவினங்களை தடுக்கிறது. இது உங்கள் வீட்டிற்குள் பணத்தை தொடர்ந்து செலுத்தி, உங்கள் நிதி நிலைமையை பலப்படுத்துகிறது. பகவான் குபேரனால் மகிழ்ச்சியடைந்த இது, செல்வ வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. 15-21 நாட்களுக்கு ஒருமுறை கற்பூரத்தை மாற்றவும்.
பிரதான நுழைவாயிலில் கற்பூரம்
ஒரு சிறிய கற்பூரத் துண்டைக் கட்டவும் அல்லது சிவப்புத் துணியிலும் புனித நூலிலும் சுற்றி பிரதான கதவின் தாழ்ப்பாள், கைப்பிடி அல்லது மூலையில் வைக்கவும். இது தீய கண், விரோதம் மற்றும் எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கிறது. நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைந்து, மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கிறது. இது வீட்டு பாதுகாப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சமையலறையில் கற்பூரம்
சமையலறை உணவு மற்றும் செழிப்பைக் குறிக்கிறது. எரிவாயு அடுப்புக்கு அருகில் அல்லது சமையலறையின் ஒரு மூலையில் கற்பூரத் துண்டை வைக்கவும். இது ஏராளமான உணவை உறுதி செய்கிறது. கற்பூரத்தின் வாசனை பூச்சிகளை விலக்கி வைக்கிறது மற்றும் சமையலறையில் நேர்மறை ஆற்றலைப் பராமரிக்கிறது.
கற்பூரத்தின் நன்மைகள்
வீட்டில் கற்பூரத்தை எரிப்பது அல்லது வைத்திருப்பது எதிர்மறை சக்தியை நீக்குகிறது, வாஸ்து குறைபாடுகளை நீக்குகிறது, செல்வத்தை அதிகரிக்கிறது, உறவுகளுக்கு இனிமையை தருகிறது, நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. தினமும் கற்பூரத்தை எரிப்பது வீட்டில் அமைதியைப் பேணுகிறது மற்றும் நிதி நிலைமையை பலப்படுத்துகிறது.
- காளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 13 நாட்கள் நடைபெற உள்ளது.
- நான்கு மாட வீதிகளில் இரண்டு தேர்களில் காளஹஸ்தீஷ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான 10-ந் தேதி பகல் 3 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து கோவில் அருகில் உள்ள கண்ணப்பர் மலை மீது உள்ள கண்ணப்பர் கோவில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் மகாசிவராத்திரி விழா தொடங்குகிறது.
11-ந் தேதி சிறப்பு வழிபாடு, அம்பாரிகளில் காலை, மாலையில் சாமி, அம்மையார்கள் ஊர்வலம் மற்றும் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடைபெறும். 12-ந் தேதி காலை 10 மணி முதல் சூர்ய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். இரவு 9 மணி முதல் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெறும்.
13-ந் தேதி காலை 10 மணி முதல் அன்ன வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு 9 மணிக்கு ராவண வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதி உலா நடக்கிறது.
14-ந் தேதி காலையில் ஹம்சம், மயில் வாகனத்திலும், இரவு 9 மணி முதல் சேஷ, யாளி வாகனத்திலும், 15-ந் தேதி காலை 11 மணிக்கு இந்திர விமானம், சப்பரத்திலும், இரவு 11 மணி முதல் சிவபெருமானுக்கு உகந்த வாகனமான நந்தி வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் நள்ளிரவு வரை வீதி உலா வருகின்றனர்.
16-ந் தேதி காலை 11 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. நான்கு மாட வீதிகளில் இரண்டு தேர்களில் காளஹஸ்தீஷ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இரவு 9 மணி முதல் கோவில் அருகில் உள்ள நாரதர் குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
8-ம் நாளான 17-ந் தேதி காலை 10 மணிக்கு அதிகார நந்தி, காமதேனு வாகனத்திலும், இரவு 10 மணி முதல் யானை, சிம்ம வாகனத்திலும் சாமி மற்றும் அம்மையார் திருக்கல்யாண அலங்காரத்தில் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து தேவஸ்தான திருமண மண்டபம் வரை சென்று அங்கு அதிகாலை 3 மணி முதல் சாமி, அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
18-ந் தேதி காலை 11 மணிக்கு புதுமண தம்பதிகளாக காளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோர் வெவ்வேறு ருத்ராட்ச அம்பாரிகளில் தேவஸ்தான திருமண மண்டபத்தில் இருந்து கோவில் வரை புதுமண தம்பதிகளாக ஊர்வலமாக கோவிலை சென்றடைவார்கள். 19-ந் தேதி காலை 8 மணி முதல் ஜனதா அம்பாரிகளில் கைலாச கிரிவலம் நடைபெறும். இரவு குதிரை வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
20-ந் தேதி கொடி இறக்குதல், காலை 9 மணி முதல் கேடிக வாகனங்களிலும், இரவு 9 மணி முதல் சிம்மாசன, காமதேனு வாகனங்களிலும், 21-ந் தேதி இரவு 9 மணி முதல் நான்கு மாட வீதிகளில் பல்லக்கு சேவை உற்சவம் நடைபெறும். மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 22-ந் தேதி இரவு 9 மணிக்கு மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை சன்னதி எதிரில் உள்ள பள்ளியறையில் ஏகாந்த சேவை நடைபெறும்.
மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்த நிலையில் மறுநாள் 23-ந் தேதி கோவிலில் சாந்தி அபிஷேகங்கள் நடைபெறும். மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவிலும், சாமி, அம்மையார் ஊர்வலத்திலும் தெரிந்தோ தெரியாமலோ கோவில் அர்ச்சகர்கள், வேதப்பண்டிதர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யாராயினும் செய்த பிழைகளை போக்கும் வகையில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்த பின்னர் இந்த சாந்தி அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் கூடும். தொழில் முன்னேற்றமுண்டு.
ரிஷபம்
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சியிலிருந்த தடை அகலும். வாங்கல் கொடுக்கல்கள் சீராகும்.
மிதுனம்
கோரிக்கைகள் நிறைவேறும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் கைகூடும்.
கடகம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வீடு மாற்றம், பற்றிச் சிந்திப்பீர்கள். எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்.
கன்னி
செல்வாக்கு உயரும் நாள். மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுவதால் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
துலாம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
தனுசு
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
கும்பம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உடன் பிறப்புகள் வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். தடைப்பட்ட வருமானம் தானாக வந்து சேரும்.
மீனம்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.
- வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமி திருவீதியுலா.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-21 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை பின்னிரவு 2.50 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : பூரம் நள்ளிரவு 12.49 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை
திருமயம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமி திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-ஆதாயம்
மிதுனம்-போட்டி
கடகம்-புகழ்
சிம்மம்-லாபம்
கன்னி-தாமதம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- வெற்றி
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-உயர்வு
மீனம்-உவகை
- கருப்புக் கல்லால் ஆன ஸ்ரீதேவி - பூதேவியுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் சிலை உள்ளது.
- கருவறையை பார்த்தபடி, தனிச் சன்னிதியில் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது, மகாலட்சுமி கோவில். இந்த கோவில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இக்கோவில் 'இரண்டாவது கோலாப்பூர்' என்றும் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவராக மகாலட்சுமி தாயார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மகாலட்சுமி தேவியின் தீவிர பக்தர் ஒருவர் இருந்தார். ஒரு சமயம் அந்த பக்தர் ஆழ்ந்த பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து மகிழ்ந்த மகாலட்சுமி, சுயம்புவாக தோன்றி பக்தருக்கு காட்சி அளித்தார். இதையடுத்து அப்பகுதியில் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கிய சிறிய வரவேற்பு வளைவு உள்ளது. அதில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த நிலையில் மகாலட்சுமி தாயார் காட்சி தருகிறார். கருவறையின் வாசலில் துவாரபாலகிகள் மற்றும் அஷ்டலட்சுமிகளின் உருவங்கள் தங்க முலாம் பூசப்பட்டிருக்கின்றன.
கிழக்கு நோக்கிய கருவறையில் மகாலட்சுமி தாயார் அருள் வழங்குகிறார். அவர் அருகில் கருப்புக் கல்லால் ஆன ஸ்ரீதேவி - பூதேவியுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் சிலை உள்ளது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை நிலத்தில் சிக்கிக் கொண்டது. அந்த இடத்தை தோண்டும்போது, அதில் வெங்கடேசப் பெருமாள் சிலை கிடைத்தது. அந்த சிலையே கருவறையில் மகாலட்சுமியின் அருகில் காணப்படுகிறது. கருவறையை பார்த்தபடி, தனிச் சன்னிதியில் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. இருப்பினும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். நவராத்திரி விழா இக்கோவிலில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் மகாலட்சுமி தேவியை வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும், வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இக்கோவில், ராய்ச்சூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
3-ந் தேதி (செவ்வாய்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (புதன்)
* திருமயம் ஆண்டாள் புறப்பாடு.
* வைத்தீசுவரன் கோவில் செல்வமுத்து குமாரசுவாமி திருவீதி உலா.
* திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
5-ந் தேதி (வியாழன்)
* சங்கடகர சதுர்த்தி.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தெப்ப உற்சவம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
7-ந் தேதி (சனி)
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் லட்சதீபம் உற்சவம் ஆரம்பம்.
* திருமயம் ஆண்டாள் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
8-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி உற்சவம் ஆரம்பம்.
* ராமநாதபுரம் செட்டித் தெரு அன்னை முத்தாலம்மன் விழா தொடக்கம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
9-ந் தேதி (திங்கள்)
* ராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கடன் சுமை குறையும். மாற்றினத்தவர்கள் கை கொடுத்துதவுவர். ஏட்டிக்குப் போட்டியாகச் செயல்பட்டவர்கள் இனி விலகுவர்.
ரிஷபம்
பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். தொழில் தொடங்கும் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
மிதுனம்
குடும்பச்சுமை கூடும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். இடம், பூமியால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
கடகம்
தொடரும் வெற்றிகளால் துணிவு கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரும்.
சிம்மம்
பகல் இரவாகப் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
கன்னி
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் பகை நீடிக்கும்.
துலாம்
தடைகள் அகலும் நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம்
வரன்கள் வாயில் தேடி வரும். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தொழில் வளர்ச்சி உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
தனுசு
எதிரிகள் விலகும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்தைப் பெறுவீர்கள்.
மகரம்
வழிபாட்டின் மூலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். சிக்கனமாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.
கும்பம்
நெருக்கடி நிலையைச் சமாளிக்க நிதியுதவி கிடைக்கும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் கை கூடும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
மீனம்
கடமையில் இருந்த தொய்வு அகலும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் வேலையைப் பகிரந்து கொள்வர்.
- ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-20 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை பின்னிரவு 2.59 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : மகம் நள்ளிரவு 12.24 மணி வரை பிறகு பூரம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சென்னை ஸ்ரீ சிங்காரவேலவர், திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் கோவில்களில் தெப்ப உற்சவம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆரோக்கியம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-அமைதி
கடகம்-செலவு
சிம்மம்-வரவு
கன்னி-கடமை
துலாம்- தாமதம்
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- ஆதரவு
மகரம்-வெற்றி
கும்பம்-ஆக்கம்
மீனம்-சுபம்
- பராசக்தி பீடங்களுள் ஒன்றான கமலாம்பிகை கோவிலின் மேற்கு மூலையில் 'அக்சர' பீடம் உள்ளது.
- துறவற வாழ்க்கையை விரும்பும் பக்தர்களுக்கு யோகாசனத்தில் வீற்றிருக்கும் கமலாம்பிகை அருள்பாலிக்கிறார்.
பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது. 'திருவாரூர் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரத்தில் புகழ்ந்து பாடியுள்ளார். திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் உலக அளவில் பிரபலமான, பிரமாண்டமான தேராகும். 'ஆழி' என்பதற்கு பரந்து விரிந்த அளவிட முடியாத என்பது பொருள். இதனால் கடலுக்கு 'ஆழி' என பெயர் வந்தது. இதில் அளவில் பெரியதும், புராணம், வரலாற்று சிறப்புடையதுமான தேர் என்பதால் திருவாரூர் தேருக்கு 'ஆழித்தேர்' என பெயர் வந்தது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு என்று பல சிறப்பம்சங்கள் உள்ளன. அன்னை பராசக்தி இத்தலத்தில் வீற்றிருக்கும் திருக்கோலங்களுக்கு என்று தனி மகத்துவம் உண்டு. இங்கு அன்னை பராசக்தி கமலாம்பிகையாகவும், நீலோத்பலாம்பாளாகவும் இருவேறு திருக்கோலங்களில் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கிறார். திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது கமலாம்பிகையின் தனிக்கோவில். இங்கு அம்பிகை தனது தலையில் ஈசனைப் போன்று கங்கையையும், பிறையையும் தரித்து யோகாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
பராசக்தி பீடங்களுள் ஒன்றான கமலாம்பிகை கோவிலின் மேற்கு மூலையில் 'அக்சர' பீடம் உள்ளது. இதில் பீடமும், 51 எழுத்துகள் எழுதப்பட்ட திருவாசியும் உள்ளன. இங்கு வந்தால் சில நிமிடங்கள் நின்று தியானித்து செல்ல வேண்டும். கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் நீலோத்பலாம்பாளுக்கு தனிக்கோவில் உள்ளது. அங்கு நின்ற கோலத்தில் அருள்புரியும் நீலோத்பலாம்பாள் திருக்கரத்தில் கருங்குவளை மலர் ஏந்தி உள்ளார்.
இந்த அம்பிகையின் அருகே தோழி ஒருத்தி தமது தோள் மீது பாலமுருகனை சுமந்திருக்க முருகனின் சுட்டு விரலை தனது இடது கரத்தால் பற்றி நிற்கிறார் அம்பிகை. வேறு எந்த தலத்திலும் அம்பிகையின் இந்த அற்புத கோலத்தை தரிசிக்க முடியாது. நீலோத்பலாம்பிகை தன் இளைய பிள்ளையோடு எழுந்தருளி உள்ள காட்சியானது இல்லற வாழ்வின் மாண்பை உணர்த்துகிறது. இந்த அன்னை, இல்லற வாழ்வு அமைதியாக, ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அருள்புரிகிறார்.
அதேபோல துறவற வாழ்க்கையை விரும்பும் பக்தர்களுக்கு யோகாசனத்தில் வீற்றிருக்கும் கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். தனிக்கோவிலில் தவக்கோலத்தில் காட்சி தரும் கமலாம்பிகை பாசம், தாமரை, அபயம் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். திருவாரூரில் அன்னை பராசக்தி இருவேறு திருக்கோலங்களில் காட்சி தருவதற்கு காரணம் உண்டு.
குழந்தை பாலமுருகனுடன் காட்சி தரும் நீலோத்பலாம்பாள் இம்மை வாழ்க்கையின் தத்துவ விளக்கமாகும். கமலாம்பிகை தவத்திருக்கோலத்தில் காணப்படுவது மறுமைக்கு வழிகாட்டும் தத்துவமாகும். இம்மைக்கும், மறுமைக்கும் அருளதிகாரியாக அன்னை பராசக்தி திகழ்கிறாள் என்ற தத்துவ விளக்கமாகவே அன்னை பராசக்தி திருவாரூரில் இருவித கோலங்களுடன் எழுந்தருளி காட்சி தருவதாக ஐதீகம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-19 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை பின்னிரவு 3.37 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : ஆயில்யம் நள்ளிரவு 12.29 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் காலையில் சோமவார அபிஷேகம், அலங்காரம்
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சப்தாவர்ணம். சென்னை ஸ்ரீ சிங்கார வேலவர் தெப்பம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அரளாகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-சிறப்பு
மிதுனம்-சுகம்
கடகம்-உயர்வு
சிம்மம்-நட்பு
கன்னி-அமைதி
துலாம்- புகழ்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- பெருமை
மகரம்-சுபம்
கும்பம்-வரவு
மீனம்-போட்டி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பிரச்சனை அகலும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் சம்பந்தமாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
ரிஷபம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். பண வரவு திருப்தி தரும்.
மிதுனம்
மனக்குழப்பம் அகலும் நாள். செயல்பாடுகளில் கடைசி நேரத்தில் வெற்றி கிடைக்கும். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும்.
கடகம்
ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். நினைத்த காரியத்தை உடனடியாக செய்து முடிப்பீர்கள். உற்சாகம் உடலில் குடிகொள்ளும்.
சிம்மம்
திடீர் பயணங்களால் திசை திருப்பங்கள் ஏற்படும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்வீர்கள்.
கன்னி
அலைபேசி வழித் தகவலால் ஆச்சரியமளிக்கும் நாள். நேற்றைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும்.
துலாம்
எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். உறவினர் பகையால் நல்ல காரியம் ஒன்று தடைபடலாம். உடல் நலனில் கவனம் தேவை.
மகரம்
வரவைவிட செலவு கூடும் நாள். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உறவினர் பகை உண்டு. விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
கும்பம்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதாரத் தடை அகலும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும்.
மீனம்
வம்பு வழக்குகள் விலகி வளர்ச்சி காணும் நாள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.






