என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாவ கணக்கில் எதுவும் இல்லை என்று சித்திரகுப்தன் சொன்னது, எமதர்மனுக்கு அதிர்ச்சி அளித்தது.
    • வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது.

    முன்பொரு சமயம், வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். ஒரு முறை காட்டில் வேட்டையாட சென்றபோது, வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனவே விலங்குகளைத் தேடி நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றான். அவ்வேளையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறிப்போன வேடன், அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்தான். இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றி வந்தது. வேடன், எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளைப் பற்றியபடியே இருந்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் வேடன் வீடு திரும்பினான். பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயது முதிர்ச்சியால் இறந்தான்.

    அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது. பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாவ கணக்கில் எதுவும் இல்லை என்று சித்திரகுப்தன் சொன்னது, எமதர்மனுக்கு அதிர்ச்சி அளித்தது.

    வேடன் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க, முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்தது, வில்வமரம் ஆகும். அன்றைய தினம் மகா சிவராத்திரி. பயத்தில் கைகள் நடுங்க கிளைகளைப் பற்றி இருந்ததால், அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன. வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது.

    மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல், வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பதை எமதர்மனும், சித்திரகுப்தனும் அறிந்தனர்.

    • அம்மனுக்கு கண்மலர் வாங்கி சாற்றினால், கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்கிறார்கள்.
    • மிகவும் புனிதமானதாக கருதப்படும் இந்த தீர்த்தம், தீராத நோய்களையும் தீர்ப்பதாக நம்பப்படுகிறது.

    * சென்னையில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநின்றவூர். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் 'இருதயாலீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    * கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் இருக்கிறது. இங்குள்ள அன்னைக்கு பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து 'மண்டையப்பம்' எனும் நைவேத்தியம் செய்து படைத்தால் தீராத தலைவலியும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    * நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ளது, நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். இந்த அம்மனுக்கு கண்மலர் வாங்கி சாற்றினால், கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்கிறார்கள்.

    * திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் எனும் ஊரில் அமைந்துள்ளது, கங்கையம்மன் கோவில். இந்த அன்னைக்கு அபிஷேகம் செய்த தீர்த்தமானது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மிகவும் புனிதமானதாக கருதப்படும் இந்த தீர்த்தம், தீராத நோய்களையும் தீர்ப்பதாக நம்பப்படுகிறது.

    * தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் கோமதியம்மன் கோவிலில், அம்மன் சன்னிதி முன்பாக ஸ்ரீசக்கர பீடம் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் அதில் அமர்ந்து வழிபட்டு வந்தால் மன நல பிரச்சனைகள் குணமாகும் என்று கூறப்படுகிறது.

    * திருவள்ளூர் மாவட்டம் மணவூர் கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வயல்வெளிகளுக்கு இடையே அமைந்துள்ளது, ஆதி காமாட்சி அம்மன் சமேத கற்கடேஸ்வரர் திருக்கோவில். இத்தலத்தில் தொடர்ச்சியாக 9 திங்கட்கிழமைகள் வந்து, இறைவனுக்கு வெல்லம் படைத்து வழிபட்டால் புற்றுநோய் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

    • ஸ்ரீசைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி வரும் காட்சி.
    • திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-27 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : நவமி காலை 11.16 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : அனுஷம் நண்பகல் 12.09 மணி வரை பிறகு கேட்டை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை

    ஸ்ரீசைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி வரும் காட்சி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

    விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நம்பிக்கை

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-நலம்

    கடகம்-மேன்மை

    சிம்மம்-சாதனை

    கன்னி-மாற்றம்

    துலாம்- உழைப்பு

    விருச்சிகம்-தேர்ச்சி

    தனுசு- கீர்த்தி

    மகரம்-சிக்கினம்

    கும்பம்-வரவு

    மீனம்-நிம்மதி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். காரியத் தடை அதிகரிக்கும். வீண் விரயம் உண்டு. மறதியால் குடும்பத்தில் அவதி உருவாகும்.

    ரிஷபம்

    பாசம் மிக்கவர்களின் நேசம் கூடும் நாள். உங்கள் நிர்வாக திறமைக்கு பாராட்டும், புகழும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகழ்வீர்கள்.

    மிதுனம்

    கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவலொன்று வந்து சேரும்.

    கடகம்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    சிம்மம்

    அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தொல்லைகள் ஏற்படலாம்.

    கன்னி

    செல்வாக்கு உயரும் நாள். செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகளைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

    துலாம்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உறவினர்கள் ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரலாம்.

    விருச்சிகம்

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆரோக்கியம் சீராகும்.

    தனுசு

    பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்ப பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் தாமதப்பட்ட சம்பள உயர்வு கிடைக்கும்.

    மகரம்

    சிந்தனையில் வெற்றி கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு உயர் அதிகாரிகள் வியப்படைவர். வரன்கள் முடிவாகும்.

    கும்பம்

    யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபார போட்டிகள் அகலும்.

    மீனம்

    நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். நண்பர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர்.

    • முன்னொரு காலத்தில் இப்பகுதியை வல்லால மகாராஜன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.
    • கிழக்கு முகமாக அமைந்துள்ள இக்கோவிலில் மூலவரான குமாரசாமி, வள்ளி - தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது, தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில். மிகவும் பழமைவாய்ந்த இக்கோவிலில் முருகப்பெருமான், குமாரசாமி என்ற திருநாமத்துடன் வள்ளி - தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். இத்தலத்தில், தேவர்கள் இருப்பதை கண்ட முனிவர்கள், அவர்களை போற்றி வணங்கி உள்ளனர். இதனால் தேவர்களை கண்ட ஊர்' என்பதே பின்னாளில் மருவி 'தேவர் கண்ட நல்லூர்' என்றானது.

    முன்னொரு காலத்தில் இப்பகுதியை வல்லால மகாராஜன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை இம்மண்ணில் பிறந்தால் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்பதால், குழந்தையை அழிக்க வேண்டும் என தேவர்களும், முனிவர்களும் பார்வதி தேவியிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து, அந்த குழந்தையை அழிக்க பார்வதி தேவி மருத்துவச்சி வேடம் பூண்டு இங்கு வந்தார். அப்போது வல்லால மகாராஜன், அவரை அழைத்து தன் மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்டான். இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட மண்ணில் விழாமல் பார்வதி தேவி காத்தார். இதை அறிந்த மன்னன், பார்வதி தேவியை வாளால் வெட்ட முயன்றான்.

    இதனால் கோபமடைந்த பார்வதி தேவி, மன்னனின் தலையை வெட்டி எறிந்தார். பார்வதியின் ஆக்ரோஷத்தை போக்க, பெருமாள், ஈசன் மற்றும் தேவர்கள் முயற்சித்தனர். இருப்பினும் தேவியின் ஆக்ரோஷம் அடங்காத நிலையில், முருகன் நேரில் சென்று தாயின் ஆக்ரோஷத்தை தீர்த்ததால், பின்னாளில் இத்தலத்தில் குமரன் கோவில் அமைக்கப்பட்டது.

    கிழக்கு முகமாக அமைந்துள்ள இக்கோவிலில் மூலவரான குமாரசாமி, வள்ளி - தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இங்கு விநாயகரும் காணப்படுகிறார். கோவிலில் உள்ள விசாலமான மகாமண்டபத்தில் அமர்ந்து சுவாமியை தரிசனம் செய்யலாம். கோவிலின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது.

    திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு வேண்டுபவர்களுக்கு இக்கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    திருவாரூர் - மன்னார்குடி சாலையில் 8 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர்.
    • அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    கடையம்:

    கீழக்கடையம் 18 பட்டி நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கால்நாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் தினமும் காலை, மாலை தீபாராதனை, சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்று வருகிறது. விழாவில் கடந்த 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் வடக்கு உடையார் பிள்ளையார் கோவில் இருந்து 18 பட்டி தீர்த்தம் மேளதாளம், வானவேடிக்கையுடன் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு தேர் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்ஞகிழமை) இரவு மண்டப சிலைக்கு கண்திறப்பு, தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்று காலையில் 18 பட்டிகளுக்கு அம்மன் ஊர் விளையாடல், சப்பர ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் இன்று காலையில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சப்பர ஊர்வலம், மதியம் அல தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மதிய கொடை சிறப்பு வழிபாடு, அம்மன் ஊர்விளையாடல் நடைபெற்றது.

    தொடர்ந்து இரவு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு அல தீர்த்தம் கொண்டு வரப்பட்டு நையாண்டி மேளம் வானவேடிக்கையுடன் சாம கொடை, படைப்பு தீபாரதனை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதையடுத்து அதிகாலை 2 மணிக்கு அம்மன் பூம்பல்லக்கில் வீதி உலா வருதல், அதிகாலை 4 மணிக்கு பத்திரகாளியம்மன், முப்புடாதியம்மன் தேரில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மூலஸ்தான பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று படைப்பு தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து அன்னதானம் நடக்கிறது. 12-ந்தேதி முதல் 16 -ந்தேதி வரை இரவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 8-ம் பொங்கல் நிகழ்ச்சி, காப்பு களைந்து அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைவிழா நடத்தும் 7-ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள், கீழக்கடையம் வரிதாரர்கள் மற்றும் 18 பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • கோவில் விளங்கக் குடி விளங்கும் என்பர் சான்றோர்.
    • "குன்று தோராடும் குமரனின்" திருத்தலங்களில் கதித்தமலையும் ஒன்று.

    "ஆலயம் தொழுவது சாலவும் நன்று " என்பார் ஒளவையார்.

    "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் " என்கிறது பழமொழி.

    "கோவில் விளங்கக் குடி விளங்கும்" என்பர் சான்றோர்.

    அதேபோல் "பிறவா யாக்கை பெரியோன் கோவில்" எனச் சிவன் கோவிலையும், "நீலமேனி நெடியோன் கோவில்" எனத் திருமால் கோவிலையும்,

    "பாய் கலைப்பாவை கோவில்" எனச் சக்தி கோவிலையும்

    "வேல் கோட்டம்" என முருகன் கோவிலையும், வகைப்படுத்துவர் நம் முன்னோர்.

    அத்தகைய வரிசையில், "குன்று தோராடும் குமரனின்" திருத்தலங்களில் கதித்தமலையும் ஒன்று.

    "கதித்தமலைக்கு எதுத்த மலை இல்லை" என்ற கூற்று கதித்தமலையின் பெருமைகளை உலகுக்கு எடுத்துக் கூறவும், பாரோர்க்குப் படம் பிடித்துக்காட்டவும் அப்பகுதி மக்களால் உச்சரிக்கப்பட்ட ஒரு சொல்லே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    "பாடப்பாட வாய் மணக்கும்" தெய்வீகத் திருப்புகழை இவ்வுலகிற்கு தந்த அருளாளர் அருணகிரியார் தம் பழனி மலைத் திருப்புகழில் "பதியினில் மங்கை கதித்த மாமலையோடு சிலை குன்றில் தரித்து" என்ற வரிகள் மூலம் கதித்தமலையின் புகழை-பெருமையை இமயத்தின் உச்சிக்கே ஏற்றி வைத்திருக்கிறார் என்பது நாம் பெற்ற பெரும் பேறாகும்.

    • களக்காடு சக்திவாகீசுவரர் தெப்ப உற்சவம்.
    • வேதாரண்யம் சிவபெருமான் விழா தொடக்கம்.

    10-ந் தேதி (செவ்வாய்)

    * திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் தலங்களில் சிவபெருமான் விழா தொடக்கம்.

    * ராமேஸ்வரம் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பவனி.

    * களக்காடு சக்திவாகீசுவரர் தெப்ப உற்சவம்.

    * குரங்கணி முத்துமாலை அம்மன் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    11-ந் தேதி (புதன்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * ராமநாதபுரம் செட்டித் தெரு முத்தாலம்மன் பவனி.

    * திருமயம் ஆண்டாள் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    12-ந் தேதி (வியாழன்)

    * ராமேஸ்வரம் சுவாமி-அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.

    * வேதாரண்யம் சிவபெருமான் விழா தொடக்கம்.

    * திருக்கோகர்ணம், காளஹஸ்தி தலங்களில் சிவபெருமான் பவனி.

    * சமநோக்கு நாள்.

    13-ந் தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * சர்வ ஏகாதசி.

    * ஸ்ரீசைலம், வேதாரண்யம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் பவனி.

    * மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தலங்களில் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந் தேதி (சனி)

    * சனிப் பிரதோஷம்.

    * ராமேஸ்வரம் சுவாமி - அம்பாள் முத்தங்கி சேவை, இரவு தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    15-ந் தேதி (ஞாயிறு)

    * மகா சிவராத்திரி.

    * முகூர்த்த நாள்.

    * மூங்கிலணை காமாட்சி அம்மன் பெருந்திருவிழா.

    * திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவர் தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    16-ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.

    * நத்தம் மாரியம்மன் விழா தொடக்கம்.

    * திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், வேதாரண்யம் சிவபெருமான் தலங்களில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    • சுவாமி மலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • சம்கார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-27 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி காலை 9.09 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : விசாகம் காலை 9.35 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று திருக்கோகர்ணம், ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். குரங்கணி ஸ்ரீமுத்து மாலையம்மன் புறப்பாடு. சுவாமி மலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தசரினம், திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு. சம்கார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-மகிழ்ச்சி

    கடகம்-லாபம்

    சிம்மம்-நட்பு

    கன்னி-உதவி

    துலாம்- பெருமை

    விருச்சிகம்-நற்செயல்

    தனுசு- சாதனை

    மகரம்-நேர்மை

    கும்பம்-உயர்வு

    மீனம்-பணிவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வரவு வரும் முன்னே செலவு காத்திருக்கும் நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    ரிஷபம்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வங்கி சேமிப்பு உயரும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப்பணி நிரந்தரப் பணியாக அமையும்.

    மிதுனம்

    விரக்திகள் விலகும் நாள். வீடு வாங்கும் யோகம் கைகூடும். நண்பர்கள் ஆதரவோடு தடைகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.

    கடகம்

    நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். உத்தியோக பிரச்சனை அகலும்.

    சிம்மம்

    பற்றாக்குறை அகலும் நாள். குடும்பச்சுமை கூடும். தொழில் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். வீடு மாற்றங்களைப் பற்றி யோசிப்பீர்கள்.

    கன்னி

    துடிப்புடன் செயல்படும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    துலாம்

    தொல்லை தந்தவர்கள் விலகுவர். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    விருச்சிகம்

    மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    தனுசு

    சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும் நாள். வருங்காலத்திற்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

    மகரம்

    சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். உடன்பிறப்புகளின் ஆதரவால் உற்சாகமடைவீர்கள். பாகப்பிரிவினைகள் மூலம் நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம்

    நெருக்கடி நிலை அகலும் நாள். நிழல்போலத் தொடர்ந்த கடன்சுமை குறையும். இல்லம் தேடி நல்லவர்கள் வருவர். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    மீனம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தொழில் வளர்ச்சிக்கு புதிய பங்குதாரர்களை தேர்ந்தெடுப்பீர்கள்.

    • திதிகளில் சஷ்டி திதி வரும் நாட்களில் விரதம் இருப்பது திதி விரதமாகும்.
    • வேலை, திருமணம், குழந்தைப் பேறு, கடன், பண கஷ்டம், மனை மற்றும் வீடு தொடர்பான பிரச்சினைகள்.

    முருகப்பெருமானுக்கு 3 நாட்களில் கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். அவை வாரவிரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் ஆகியவை ஆகும். வாரந்தோறும் வரும் செவ்வாய் கிழமைகளில் இருப்பது வார விரதமாகும். மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திர நாட்களில் இருக்கும் விரதம் நட்சத்திர விரதம் ஆகும். திதிகளில் சஷ்டி திதி வரும் நாட்களில் விரதம் இருப்பது திதி விரதமாகும்.

    முருகன் மந்திரம்

    ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா, சிவசக்தி பாலகனே, சண்முகனே, சடோக்சரனே, என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க

    -அகத்தியர்

    மந்திர பாராயணத்தின் சிறப்பு

    தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானை அவருக்குரிய விரத நாட்களில் மனமுருகி பிரார்த்தனை செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். முருகனுக்குரிய விரத நாட்களில் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முகக் கவசம், கந்த புராணம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் போன்ற முருகனுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்வது முருகனின் மனதை குளிரச்செய்து, வேண்டிய வரங்களைப் பெற நமக்கு துணை செய்யும்.

    திருமுருகன் வழிபாடுகள்

    தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்களில் முருகப்பெருமானை வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என ஆன்மிகப் பெரியவர்களும் அனுபவ ரீதியாக உணர்ந்த பக்தர்கள் பலரும் சொல்கிறார்கள். வேலை, திருமணம், குழந்தைப் பேறு, கடன், பண கஷ்டம், மனை மற்றும் வீடு தொடர்பான பிரச்சினைகள். நோய்கள், காரிய வெற்றி என சகல நலன்களையும் தரக்கூடியவர் முருகப்பெருமான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    • போர் படைகளோடு முருகன்.
    • முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் நவவீரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

    "முருகா இந்த சக்திவேல், பஞ்சபூதங்களை வெல்லும் சக்தி படைத்தது. சகல உயிரினங்களையும் ஒன்று சேர தோற்கடிக்க வல்லது. பகைவரது வலிமைகளையும் அவர்கள் பெற்ற வரங்களையும் சிதைத்து உயிர்களை கவரும் ஆற்றல் கொண்டது. அனைத்து படைக்கலங்களையும் வெல்லும் ஒப்பற்ற சக்தி வாய்ந்தது".

    -கந்த புராணம்

    திருமுருக வேல்கள்

    அபய வேல், உக்கிர வேல், இலை வேல், எரி வேல், ஓங்கார வேல், கூர் வேல், கொடு வேல், சதுர் வேல், சின வேல், சுடர் வேல், சூர வேல், நல் வேல், நெடு வேல், படை வேல், புஷ்ப வேல், மந்திர வேல், முக்தி வேல், ருத்திர வேல், வஜ்ர வேல், வீர வேல், வளர் வேல், புனித வேல், துணை வேல், சீறும் வேல், சமர் வேல், கம்பீர வேல், எதிர் வேல், ஈர்க்கும் வேல், அன்பு வேல், நுண் வேல்.

    போர் படைகளோடு முருகன்

    சிவபெருமான் முருகனை அழைத்து ஒரு போர் படை அமைத்து தலைமை தாங்கி அசுரர்களை முற்றிலும் அழிக்கவும், தேவர்களை காக்கவும், கட்டளையிட்டார். முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் நவவீரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

    - கந்த புராணம்.

    திருமுருகனின் படைக்கலங்கள்

    அங்குசம், வில், சூலம், சங்கம், கலப்பை, தாமரை, தண்டம், குலிசம், ஜபமாலை, கேடயம், வச்சிரம், கமண்டலம், கோழி (குக்குடம்), அம்பு, கொடி, சக்கரம், கதை, மணி, உளி (டங்கம்), கரும்புவில், உலக்கை, நீலோத் பலம், மலரம்பு (வல்லி), பாசம், கத்தி.

    ×