என் மலர்
நீங்கள் தேடியது "பத்திரகாளி அம்மன் கோவில்"
- பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர்.
- அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
கடையம்:
கீழக்கடையம் 18 பட்டி நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கால்நாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் தினமும் காலை, மாலை தீபாராதனை, சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்று வருகிறது. விழாவில் கடந்த 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் வடக்கு உடையார் பிள்ளையார் கோவில் இருந்து 18 பட்டி தீர்த்தம் மேளதாளம், வானவேடிக்கையுடன் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு தேர் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்ஞகிழமை) இரவு மண்டப சிலைக்கு கண்திறப்பு, தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்று காலையில் 18 பட்டிகளுக்கு அம்மன் ஊர் விளையாடல், சப்பர ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் இன்று காலையில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சப்பர ஊர்வலம், மதியம் அல தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மதிய கொடை சிறப்பு வழிபாடு, அம்மன் ஊர்விளையாடல் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு அல தீர்த்தம் கொண்டு வரப்பட்டு நையாண்டி மேளம் வானவேடிக்கையுடன் சாம கொடை, படைப்பு தீபாரதனை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதையடுத்து அதிகாலை 2 மணிக்கு அம்மன் பூம்பல்லக்கில் வீதி உலா வருதல், அதிகாலை 4 மணிக்கு பத்திரகாளியம்மன், முப்புடாதியம்மன் தேரில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மூலஸ்தான பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று படைப்பு தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து அன்னதானம் நடக்கிறது. 12-ந்தேதி முதல் 16 -ந்தேதி வரை இரவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 8-ம் பொங்கல் நிகழ்ச்சி, காப்பு களைந்து அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைவிழா நடத்தும் 7-ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள், கீழக்கடையம் வரிதாரர்கள் மற்றும் 18 பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- ராமாயண ஞான வேள்வி கடந்த 12-ந் தேதி தொடங்கி 20-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிமூலை அம்மன் கோவில் சேவா அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் பம்மம் ஆதிமூலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி விழா மற்றும் ராமாயண ஞான வேள்வி நடைபெற்றது. பவுர்ணமி விழாவில் திருவிளக்கு பூஜை அம்மனுக்கு வளை காப்பு வைபவம், ஊஞ்சல் சேவை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமாயண ஞான வேள்வி கடந்த 12-ந் தேதி தொடங்கி 20-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெற்றது. இந்த ஞான வேள்வி தினசரி மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடை பெற்றது. நிகழ்ச்சியின் கடைசி நாளான சனிக்கிழமை ராமாயண பட்டாபிஷேகம் மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தர்ம ரட்சண சமிதி பொறுப்பா ளர்கள் சுதர்சனராஜ், ஜெகதீஷ், ஜெகன், சவுந்தள பாய் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி யில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைஆதிமூலை அம்மன் கோவில் சேவா அறக்கட்டளை தர்மகர்த்தா உத்தமன் குட்டி, தலைவர் வழக்கறிஞர் விஜயராகவன், கோவில் போற்றி இளங்கோ, சேவா அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.






